Home Blog Page 291

‘டியர் காம்ரேட்’ படத்தின் டீசர் வெளியானது: விஜய் தேவரக்கொண்டா

0

‘டியர் காம்ரேட்’ படத்தின் டீசர் வெளியானது: விஜய் தேவரக்கொண்டா

விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் டியர் காம்ரேட்(Dear Comrade) ஆகும்.

ஒரு நிமிடம் 7 வினாடிகள் கொண்ட டீசரில் ஆரம்பத்தில் விஜய் வெறித்தனமாக ஒருவரை தாக்குவது போலவும், இறுதியில் நடிகையுடன் ஒரு முத்தக் காட்சியுடன் முடிக்கின்றனர்.

இதன் இறுதியில் உன்னுடைய தேவைக்காக நீ போராடி ஆக வேண்டும் என்றும் கட்டாயம் போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கும்.

கம்மியூனிசமை மையமாக வைத்து கதை இருக்கும் போல் தெரிகிறது. கம்மியுனிசத்தையும் அரசியலையும் எடுத்துரைக்கும் ஒரு மாணவனாக விஜய் நடித்துள்ளார்.

விஜய் தேவரக்கொண்டாவின் ஒவ்வொரு படத்திலும் முத்தக் காட்சிகள் இருப்பதால் இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனங்கள் எழுந்தது.

ரசிகர்களின் கருத்துகள் 

இதுவரை இயக்குனர்கள் எதற்கு தேவையில்லாத முத்தக் காட்சிகளை படத்தில் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு படம் சிறப்பாக இருக்கும் பொழுது அதற்கு முத்தக் காட்சிகள் அவசியம் இல்லை. அதே நேரம் ஒரு படம் சிறப்பாக அமையாத பொழுது முத்தக் காட்சிகள் அந்தப் படத்திற்கு எந்த விதத்திலும் உதவாது.

எதார்த்தமாக நடியுங்கள் விஜய். ரசிகர்கள் அனைவரும் உங்களிடம் இருந்து முத்தக் காட்சிகளை எதிர்பார்ப்பதில்லை.

 

3

திரைவிமர்சனம் – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் #IRIR

0
திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் #IRIR

என் காதல் ரொம்ப மெச்சூர் லவ் எனப் பலரும் சொல்லுவார்கள். காதலி பிரிந்து செல்லும் போதுதான் அவர்கள் எந்த அளவு மெச்சூர் எனத் தெரியும்.

அப்படி ஒரு விசயத்தை இப்படம் சொல்லுகிறது. கொஞ்சம் ராவாக எடுத்து உள்ளனர். ஒரு காதலை ஒரு ஆண் எப்படி புரிந்துள்ளான், பெண் எப்படி புரிந்துள்ளாள் என்பதை மிகவும் டீட்டைலாக கொடுத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

சில்பா மஞ்சு புதுமுக நடிகை. பொதுவாக புது நடிகைகளை மனதிற்குள் பதிய வைக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

இந்தப் படத்தில் இந்த நடிகையின் உதட்டு மேல் உள்ள மச்சம் மட்டுமே மனதில் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு முகச் சாயலில் தோன்றுகிறார்.

இந்த மூச்சிலாம் ஹீரோயினா? என நாம் சலித்துக்கொள்ளும்போது அடுத்த காட்சியில் வேறு ஒரு ஹேர்ஸ்டைல், வேறுவித மேக்கப். இதல்லவோ ஹீரோயின் எனவும் நினைக்கவைக்கிறார்.

இதுபோன்ற கதைகள் பழசு என்றாலும், எடுத்துள்ள விதம் புதிது. இனிவரும் நாட்களில் இதுபோன்ற மேக்கிங் ஸ்டைல் தான் ட்ரெண்டாக மாறும்.

இருப்பினும் இதை அனைவரும் ரசிக்க முடியாது. இன்னும் நிறைய நாட்கள் உருண்டோட வேண்டும். இதுவே ஒரு மைனசாகிவிட்டது.

குறிப்பாக இந்தப் படம் காதலித்து சண்டையிட்டு பிரிந்து செல்பவர்களையே அதிகம் கவரும். மற்றவர்களுக்கு, என்ன இலவுடா இது…. இப்டி வந்து சிக்கிட்டமே! என்று சலிப்பு தட்டும்.

முதல் பாதி மிகவும் அருமை. காமெடி கலாட்டா, ஆக்சன், லவ், கில்மா என போன வேகமே தெரியவில்லை.

இரண்டாம் பாதியில் காதல், பிரிவு, சண்டை இப்படியே மாறி மாறிச் செல்கிறது. முதலில் லேசாக சலிப்பு தட்டியது.

பின்பு ஓகே சரியான காட்சிகள் தான். தேவையான காட்சிகள் தான் என மனது இயக்குனரின் கருத்தோடு ஒன்றுகிறது.

ஆனால் அதுவே கிளைமேக்ஸ் வரை தொடரும்போது செம்ம காண்டாகிறது. மேலும் கஞ்சா, காதல் என முடிகிறது.

ப்ரேமம் படத்தில் ஆரம்பித்து அர்ஜுன் ரெட்டி படம் வரை இதுவரை வந்த காதல் படங்களின் கோர்வையில் எடுத்துவைத்துள்ளனர்.

அந்த படங்களில் வரும் காட்சிகளை அப்படியே எடுத்துவிடக்கூடாது என மாற்றங்கள் செய்துள்ளனர். இருப்பினும் கிளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டியை மட்டுமே மனதில் நிறுத்துகிறது.

இந்த படத்தின் பலவீனம் கிளைமேக்ஸ். கடைசி அரைமணி நேரத்தை வேறுவிதமாகக் கூறியிருந்தால் இதை ஒரு அருமையான படம் என்றே சொல்லலாம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

ஹரிஷ் கல்யாண் சிடுசிடு நடிப்பு அருமை. மற்ற ரியாக்சன்களில் மந்தமான நடிப்பு தான். மாகாபா ஹீரோவாக என்ட்ரி ஆகி தற்பொழுது சைட் ரோல், ஹெஸ்ட் ரோல் என நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மொத்தத்தில் இப்படம் 2கே கிட்ஸ் பார்த்து ரசிக்கும் படம். அதுவும் காதலித்தால் மட்டுமே.

3

Tamil Rockers: அமேசான் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த இந்திய அரசு

0
tamil rockers

Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இணையத்தால் அமேசான் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த இந்திய அரசு

அமேசான் நிறுவனம் வெறும் ஷாப்பிங் வெப்சைட் மட்டும் நடத்தும் நிறுவனம் அல்ல. வெப்ஹஸ்டிங் உட்பட பல இணையச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானது அலெக்சா.காம் இணையதளம். இந்த இணைய தளம் அனைத்து இணையதளத்திற்கும் ரேங்க் அளித்து வருகிறது.

ஒவ்வொரு இணையதளத்தையும் எத்தனை பேர் பார்க்கின்றனர். எந்த நாட்டில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது என துல்லியமாக கணித்துச் சொல்லும்.

இப்படி ஒரு இணையதளம் இந்திய அரசால் இன்று முடக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நல்ல இணையதளத்தை ஏன் முடக்க வேண்டும் எனக் கேள்வி எழலாம்.

நீண்ட நாட்களாக பைரசி இணையத்தளத்தை முடக்கவேண்டும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் குரல் கொடுத்து வருகிறார்.

அரசு உதவி இல்லாமல் இணையத்தளங்களை முடக்க முடியாது என தமிழக அரசு, இந்திய அரசிடம் நேரடியாக புகார் கொடுத்தார்.

இந்நிலையில், இந்திய அரசு சமீப காலமாக இணையப் பைரசி மற்றும் ஆபாச இணையதளங்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எக்ஸ் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது. பெரிய இணையதளங்கள் முடக்கப்பட்டாலும், சிறிய இணையதளங்கள் வேகமாக முளைத்து வருகிறது. எனவே ஒவ்வொன்றையும் ‘டோட்’ தேடித்தேடி முடிக்க சிரமாகி வருகிறது.

அலெக்சா நிறுவனம் போன்ற சில இணையதளங்களின் புதிய இணைய முகவரியை வெளியிட்டு வருகிறது.

அதாவது அலெக்சா.காம் இணையத்தில் ஆபாச அல்லது பைரசி இணையதளம் பற்றி தேடினால் அந்த இணையதளம் சம்பந்தமான புதிய டொமைன்கள், ரிலேட்டட் டொமைன்களைக் காட்டிவருகிறது.

இந்த இணையதளங்கள் மூலம் பலரும் எளிதாக புதிய இணையத்தளங்களின் முகவரியைப் பெற்றுவிடுகின்றனர்.

இதன் காரணமாகவே அலெக்சா போன்ற பைரசி இணையதள முகவரியை வெளியிடும் பல இணையதளங்களை இந்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அதிக அளவில் பைரசி இணையதளங்களை மக்கள் பார்ப்பதை தடுக்க முடியும் என இந்திய அரசு நம்புகிறது.

3

கல்பனா சாவ்லா பிறந்த நாள்: இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

0

கல்பனா சாவ்லா பிறந்த நாள்: இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

முதல் பெண்மணியாக விண்வெளிக்குச் சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய திருமதி கல்பனா சாவ்லா பிறந்த நாள் இன்று.

1962-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் பனார்சி லால் சாவ்லா, சான்யோகிதா தேவி தம்பதிகளுக்கு மகளாக பிறந்த இவர், சிறு வயதில் இருந்து விண்வெளி பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தொடக்க கல்வி அரசுப் பள்ளியிலும் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பல்வேறும் தடைகளைத் தாண்டி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஜூன் பியாரி ஹாரிசன் என்ற அமெரிக்க விண்வெளிப் பயிற்சி ஆசிரியரைத் திருமணம் செய்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.

கல்பனா விண்வெளி பற்றிய ஆய்வில் சிறப்பாக செயல்பட்டதால் 1994-ஆம் ஆண்டு நாசா தன்னுடைய ஆய்வு மையத்திற்கு தேர்வு செய்தது. மேலும் அங்கு பவர் லிப்ட் கம்புடேசனல் போன்ற கடினமான படிப்பை முடித்தார்.

இதன் மூலம் நாசாவின் 15 பேர் கொண்ட குழுவில் தேர்வு செய்யப்பட்டார். கொலம்பியா விண்வோடத்தில் 1996-ஆம் ஆண்டு முதல் முறை 6 வீரர்களில் ஒருவராக விண்வெளிக்குப் பயணம் செய்தார்.

இந்தியாவின் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். மேலும் ராகேஷ் வர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இந்தியர் ஆவார்.

ஜனவரி 16, 2003-ஆம் ஆண்டு கொலம்பியா விண்வோடத்திலிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்பினார்.

16 நாள் பயணம் முடித்து பிப்ரவரி 1-ம் தேதி பூமியில் தரை இறங்குவதற்கு சில நிடங்கள் முன் அவர் வந்த விண்வோடம் வானில் வெடித்துச் சிதறியது.

விண்வெளிக்காக தான் வாழ்வையே அர்ப்பணித்த இந்தியப் பெண்மணியின் பிறந்த நாள் இன்று. மார்ச் 17.

3

பத்ம ஸ்ரீ விருது பெற்ற மரங்களின் தாய் சாலுமரத திம்மக்கா

0
பத்ம ஸ்ரீ

பத்ம ஸ்ரீ விருது பெற்ற மரங்களின் தாய் சாலுமரத திம்மக்கா.

8000 மரங்களுக்கு மேல் வளர்த்த 106 வயது பாட்டி திம்மக்காவுக்கு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட பாட்டி குடியரசுத் தலைவரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார். இந்தக் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ்வித்தது.

கர்நாடக மாநிலம் ஹுலிகல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா கடந்த 65 ஆண்டுகளாக மரம் வளர்க்கும் பணியை செய்து வருகிறார். இதுவரையில் 8000க்கும் மேற்பட்ட மரத்தை நட்டுள்ளார்.

திம்மக்காவை விட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 33 வயது இளையவர் இதனால் அவரை பாட்டி ஆசிர்வாதம் செய்த காட்சி பார்ப்போர் மனதை நெகிழ்வித்தது.

இந்த நிகழ்வைக் கண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கரஓசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திம்மக்கா அவர்கள் மரங்களை வளர்ப்பதற்கு காரணம் அவரின் குழந்தைகளே 40 வயதில் தன்னுடைய குழந்தைகளை வளர்க்க இயலாததால் தற்கொலை செய்ய முயன்றவர்.

இதைத்தொடர்ந்து மரங்களை தன்னுடைய குழந்தைகளாக வளர்க்க ஆரம்பித்து விட்டாராம். மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற சில நேரம் நான்கு கிலோமீட்டர் தூரம் கூட நடந்து செல்வாராம்.

3

கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் – ஏ‌பி‌டி

0
கோலியை அவுட்

கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் : ஏ‌பி‌டி

இன்றைய காலக்கட்டத்தில் உலகத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோலி ஆவார். அவர் தொடர்ச்சியாக ரன் அடிக்கும் திறனால் அவருக்கு ரன் மெஷின் என்ற பெயரும் உண்டு.

விராத் கோலியும் ஏ‌பிடியும் ராயல் சேலஞ் பெங்களூர் அணியில் ஒன்றாக ஆடி வருகின்றனர். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏ‌பி‌டி ஐ‌பி‌எல் போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளார்.

இருவரும் இணைந்து பல போட்டிகளில் ரன் வேட்டை நடத்தியுள்ளனர். தோனி கோலி போல இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

இது குறித்து ஏ‌பி‌டி கூறுகையில் 

நாங்கள் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்வதை விரும்புவோம். அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல இறுதிவரை போராடுவோம் தோல்வியை விரும்ப மாட்டோம்.

வரும் உலகக் கோப்பையில் கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பது தான் உண்மை.

வரும் உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் ஏதாவது ஒன்று தான் உலகக் கோப்பை வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

3

ஐ‌பி‌எல் டிக்கெட் விற்பனை: விடிய விடிய தூங்காத ரசிகர்கள்

0
ஐ‌பி‌எல்

ஐ‌பி‌எல் டிக்கெட் விற்பனை: விடிய விடிய தூங்காத ரசிகர்கள்

இன்று காலை 11 மணிக்கு ஐ‌பி‌எல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று இரவில் இருந்தே தூங்காமல் விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்.

ஐ‌பி‌எல் 2019-ஆம் ஆண்டின் முதல்போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகளை வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த வருடம் ஐ‌பி‌எல் தொடக்க விழா கிடையாது. அதற்கு ஆகும் பணத்தை புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு செய்துள்ளது.

வருகிற 23-ஆம் தேதி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ் பெங்களூர் அணியும் மோதவிருக்கின்றன.

ஏப்ரல் 5-ம் தேதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் தங்கள் சொந்த ஊர்களில் விளையாட உள்ளனர்.

அதேபோல சென்னையில் நடக்கும் இரண்டாவது போட்டி வருகின்ற 31-ம் தேதி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

விரைவில் மற்ற போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த வருடமும் இல்லாத அதிகமான ப்ரோமோ விளம்பரங்கள் இந்த வருடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

கடந்த வருடம் காவேரி பிரச்சனையால் சென்னை மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடக்காத காரணத்தினால் இந்த வருடம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஆனது.

3

அழிக்கப்பட்ட 1000 வீடியோக்களை மீட்டுவிட்டது சிபிஐ; முக்கியப்புள்ளி சிக்குகிறார்!

0
அழிக்கப்பட்ட 1000 வீடியோக்களை
கோப்புப்படம்

அழிக்கப்பட்ட 1000 வீடியோக்களை மீட்டுவிட்டது சிபிஐ; முக்கியப்புள்ளி சிக்குகிறார்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கும்பல் செய்த செயலால் தமிழகமே கொந்தளித்து உள்ளது.

அவர்களைத் தோண்டத்தோண்ட பல பெண்களின் வாழ்க்கை சிரழிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு தற்பொழுது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

சிபிஐயின் முதல் நடவடிக்கையாக திருநாவுக்கரசு செல்போன், லேப்டாப்களில்  அழிக்கப்பட்ட வீடியோக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

அப்படி மீட்கப்பட்டு உள்ள வீடியோக்களில் முக்கிய புள்ளி ஒருவரின் வீடியோவும் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிபிஐ நேர்மையாக விசாரணை செய்தால் நிச்சயம் முக்கியப்புள்ளி சிக்கிக்கொள்வார் என போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.

3

உலக தூக்க தினம்(World Sleep Day): ஆழ்ந்த தூக்கத்தின் பயன்கள்

0

உலக தூக்க தினம் (World Sleep Day): ஆழ்ந்த தூக்கத்தின் பயன்கள்

இன்றைய காலக் கட்டத்தில் நாம் யாருமே ஆழ்ந்த உறக்கம் என்பதை அடைந்ததே இல்லை. மன அழுத்தம், நேரமின்மை ஆகிய காரணங்களினால் நாம் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒவ்வொரு வருடம் மார்ச் 15ஆம் தேதி உலக தூக்க தினமாக கொண்டாடப்படும். அதாவது தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதைப்பற்றி விழிப்புணர்வையும் எடுத்துக் கூறுவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

பெற்றோர்கள் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு செயலும் படிப்பாகட்டும் விளையாட்டாகட்டும் அது அவர்கள் எடுக்கும் ஓய்வை பொறுத்தது.

ஆரோக்கியமான உறக்கம் இல்லையென்றால் ஹார்ட் ஸ்ட்ரோக், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு கூட ஏற்படலாம்.

தூக்கமின்மை பசியை தூண்டும், அதாவது பசியை தூண்டும் கிரேலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களை தூண்டுகிறது.

சரியான தூக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகப்படியான அளவு சாப்பிடுகின்றனர்.

ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் லெப்டின் ஹார்மோன் குறைந்து கெர்லின் தூண்டப்படும். இதனால் பசியாக உணர்ந்தாலும் குறைவாக சாப்பிடுவீர்கள்.

தூங்குவதற்கு  முன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலரும் டிவி அல்லது திரைப்படம், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரையாவது தினமும் தூங்க வேண்டும். பெற்றோர்கள் தூங்கும் நேரத்தில் கண்டிப்பாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.

3

பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய சேலம் பெண்; விசாரணையில் அம்பலம்

0
பொள்ளாச்சி
கோப்புப்படம்

பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய சேலம் பெண்; விசாரணையில் அம்பலம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு உதவியாக சேலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் செயல்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் தன்னுடன் கல்லூரியில், விடுதியில் பயின்ற மாணவிகளை ஆபாசமாகப் படம் பிடித்து அதை திருநாவுக்கரசு கும்பலுக்கு அனுப்பிவிடுவாராம்.

மேலும் அம்மாணவிகளின் தொலைப்பேசி நம்பர், பெற்றோர்களின் தொலைப்பேசி நம்பர் ஆகியவற்றையும் சேகரித்து அனுப்பிவிடுவாராம்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து பொள்ளாச்சி பாலியல் கும்பல் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணிற்கு ஆபாச வீடியோவை அனுப்புவார்களாம்.

அப்பெண் பயப்பட ஆரம்பித்தால் அதை தங்களுக்குச் சாதகமாகக் பயன்படுத்திக்கொண்டு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வார்களாம்.

மேலும் அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் கறக்க முடியுமோ மிரட்டியே கறந்துவிடுவார்களாம். பணம் கொடுக்க இயலாத பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு ஆபாச வீடியோ கொடுத்து உதவிய அந்த இளம் பெண் தான் திருநாவுக்கரசு ஆந்திராவில் தலைமறைவாக இருக்கவும் உதவியுள்ளார்.

தற்பொழுது இந்த வழக்கில் சமந்தப்பட்ட அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்களாம்.

3