Home Blog Page 292

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

0
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

பங்களாதேஷ் வீரர்கள் நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் என்ற இடத்தில் மசூதியில் தொழுகச் செல்லும் பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பார்த்து தலைதெறித்து ஓடினர்.

இந்த நிகழ்வு நடக்கும் பொழுது பெரும்பாலான வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் மசூதியில் தான் இருந்தனர் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தலைவர் ஜலால் யூனுஸ் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அடியும் படவில்லை. இருந்தாலும் வீரர்கள் அனைவரும் மன உளைச்சலில் இருக்கின்றனர் எனவும் யுனுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் தொடக்க வீரர் தமீம் இக்பால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம், பயங்கரமான ஒரு அனுபவம் இது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஸ்தஃபிகர் ரஹிம் ‘அந்த அல்லா தான் எங்களை காப்பாற்றினார். இதுபோல் நிகழ்வுகள் மீண்டும் பார்க்க நாங்கள் விரும்பவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு திரும்பியதை உறுதிப்படுத்தி பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு ட்வீட் செய்துள்ளது.

எதற்காக திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததென்று தெரியவில்லை. இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஓரிரு உயிர்கள் போய்விட்டது.

இதில் சந்தேகத்திற்கு இடமாக நான்கு பேரை கைது செய்துள்ள நியூசிலாந்து போலீஸ் அதில் ஒரு பெண் பயங்கரவாதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பேரில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. ஆனால் அங்கு உண்மையான நிலவரம் இதுவரை என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

அனைத்துத் தகவல்களும் சி‌என்‌என்(CNN) பத்திரிக்கையின் கருத்துகளைப் பொறுத்து எழுதப்பட்டுள்ளது.

3

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியானது

0
avengers end game

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியானது

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும்  ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

2.26 நிமிடங்கள் கொண்ட டிரைலரில் தற்போது ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் கேப்டன் மார்வலின் பங்கு இந்த படத்தில் இருக்கும் என்பது டிரைலர் பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த டிரைலருக்கு முன் டிஸ்னி இரண்டு சிறிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருந்தது.

மேலும் இதனுடன் ஒரு மோஷன் பிக்சரையும் வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் மார்வேல் இடம் பெற்றுள்ளார்.

அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்காவின் கடந்த காலத்தை நினைவு படுத்தும் விதமாகவும், அயர்ன் மேன் வீடு திரும்புவது போல காட்சிகளும் உள்ளன.

எண்ட் கேமில் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. டிரைலரில் வரும் ‘whatever it takes’ டயலாக் தமிழ் பட வசனங்கள் போல மரண மாஸ் ஆக இருக்கிறது.

தற்போது திரை அரங்குளில் வசூலை அள்ளி குவிக்கும் கேப்டன் மார்வேல் ஓடி முடிப்பதற்குள் ஏப்ரல் 26ஆம் தேதி எண்ட் கேம் திரைப்படம் ரிலீஸ் ஆகி விடும்.

3

ராட்சசி ஜோதிகா: இயக்குனர் ராஜ் சொல்வது என்ன?

0
ராட்சசி ஜோதிகா

ராட்சசி ஜோதிகா: இயக்குனர் ராஜ் சொல்வது என்ன?

சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் சக்கைபோடு போட்டது. இதைத் தொடர்ந்து ராட்சசி என்ற தலைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அழகிய ராட்சசியாக ஒரு நேரத்தில் வலம் வந்தவர் ஜோதிகா. சந்திரமுகி படத்திற்கு பிறகு ஜோதிகாவைப் பார்த்து பயப்படாத குழந்தைகளே இல்லை.

தற்பொழுது நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யராஜ், ஹரிஷ் பெரடி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.

இப்படத்தில்  ஜோதிகா ஆசிரியையாக நடித்துள்ளார். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவது. மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவது போன்ற விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகின்றது.

இந்தப் படத்திற்கு ‘ராட்சசி’ எனத் தலைப்பு வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆசிரியையாக நடித்த ஜோதிகாவுக்கு இந்த தலைப்பு ஒத்து வருமா?

ராட்சசி எனத் தலைப்பிடும் அளவிற்கு படத்தில் அப்படி என்ன உள்ளது? இயக்குனர் ராஜ் சொல்லவரும் கருத்து என்ன? என இப்பொழுதே இந்தப்படத்திற்கான ஆவலை எகிற வைத்துள்ளது.

3

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையப் பாலம் இடிந்து 4 பேர் பலி

0
மும்பை சத்ரபதி சிவாஜி

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையப் பாலம் இடிந்து 4 பேர் பலி

ரயில் போக்குவரத்து மும்பையின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டால் மும்பையே ஸ்தம்பித்துவிடும்.

மும்பையின் அனைத்து ரயில் நிலையங்களுமே எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கும்.

மும்பை நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். நேற்று மாலை 8 மணியளவில் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது.

முதலாம் நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்திற்கு வெளியே செல்லும் பாலம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கி 20-ற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த பாலம் வெளியில் உள்ள சாலையிலும் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

3

பொள்ளாச்சி பயங்கரம்: நக்கீரன் கோபாலை கைது செய்ய முயற்சி

0
பொள்ளாச்சி பயங்கரம்

பொள்ளாச்சி பயங்கரம்: நக்கீரன் கோபாலை கைது செய்ய முயற்சி

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமாகத் தாக்கி, பலவந்தமாகக் கூட்டுக் கற்பழிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த நிகழ்வை முதன் முதலில் வெளியில் கொண்டு வந்தவர்கள் விகடன் பத்திரிக்கை. அதன்பிறகு நக்கீரன் கோபால் சமந்தப்பட்டவர்களை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டார்.

பொள்ளாச்சி பயங்கரம், பாலியல் வன்கொடுமையில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் என பகிரங்கமாக உண்மைகளை வெளியிட்டார் நக்கீரன் கோபால்.

இதன் பிறகே போலீசாருக்கும், தமிழக அரசிற்கும் இந்த வழக்கின் தீவிரம் புரிந்தது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் துணிச்சலாக புகார் கொடுத்த பெண்ணின் முழுப்பெயர் மற்றும் முகவரியை அரசாணையில் வெளியிட்டு பகிரங்கமாக மிரட்டியது தமிழக அரசு.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளிவந்து புகார் அளிக்கப் பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தன்மீது அவதூறு பரப்பியதாக நக்கீரன் கோபால் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.

இதனால் நக்கீரன் கோபால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

3

கங்குலி மீண்டும் கால்பதித்த ஐ‌பி‌எல் அணி எதுவென்று தெரியுமா?

0
கங்குலி

கங்குலி மீண்டும் கால்பதித்த ஐ‌பி‌எல் அணி எதுவென்று தெரியுமா?

இது வரை டெல்லி டேர்டெவில்ஸ் என்று அழைக்கப்பட்ட டெல்லி அணி இனிமேல் டெல்லி கேபிட்டல்ஸ் என பெயரை மாற்றி 2019ஆம் ஆண்டு ஐ‌பி‌எல் இல் களம் இறங்க உள்ளது.

இதன் ஆலோசகராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். சென்ற வருடம் இளம் வீரர்களை மட்டும் வைத்து அசத்திய டெல்லி அணி இந்த வருடமும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரிசப் பாண்ட் சென்ற வருடம் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை தட்டிச் சென்றார். அதே ஃபார்முடன் இந்த வருடமும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் தவான் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார். தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தொடர்ந்து பயிற்சியாளர் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளார்.

முன்னொரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் பாண்டிங்-கங்குலி. 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில். கங்குலியின் தலைமையிலான இந்திய அணி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் தோற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

சிறந்த யுத்திகள் கொண்ட இருவரும் சிறப்பாக செயல்பட்டால் கண்டிப்பாக டெல்லி அணி கோப்பை வெல்லும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை.

3

இந்தியா தொடர் தோல்விக்கு காரணம் வேற யாரும் இல்ல இவங்கதான்

0
india

இந்தியா தொடர் தோல்விக்கு காரணம் வேற யாரும் இல்ல இவங்கதான்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கிலும் வென்றது.

இதுவரை சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி திடீரென தொடர்ச்சியாக இரண்டு தொடரை தோற்றதற்கு காரணம் யார் என்ற கேள்வி எழுந்தது.

ஆஸ்திரேலியா அணி அனுபவ வீரர்களான ஸ்மித், வார்னர் இல்லாத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து வந்தது.

ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா அணி அனைத்து தொடரையும் கைப்பற்றி விட்டு தன் சொந்த மண்ணில் தோற்றதற்கு காரணம் என்ன?

பொதுவாக ஒரு அணிக்கு 11 வீரர்களும் 5 மாற்று வீரர்களும் தேவை. இந்த தொடரில் இந்திய அணியில் 11 வீரர்கள் தேர்வு செய்வதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

உலகக் கோப்பைக்கு சிறந்த அணி தேர்வு செய்கிறோம் என்ற பெயரில் இஷ்டத்திற்கு வீரர்களை மாற்றி மாற்றி எடுத்து இடத்தை மாற்றி இறக்கி பெரிய சிக்கலை ஏற்படுத்தினர்.

கடைசி இரண்டு போட்டிகளில் எதற்கு தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிசப் பாண்ட் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே தோனி மிகக் குறைந்த சர்வதேச போட்டிகளே ஆடி வருகிறார்.

நான்காவ்து போட்டியில் தோனி இல்லாததால் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். விஜய் சங்கரை எந்த இடத்தில் இறக்குவது என்ற குழப்பம் இன்னும் இருந்து வருகிறது.

தவான் முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் ராயுடு சரியாக விளையாடாததால் நான்காவது போட்டியில் கழற்றிவிடப்பட்டார்.

மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடிய கார்த்திக் ஏன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் என்பதற்கான பதில் யாருமே கூறவில்லை. அவரும் தோனியும் இருந்தால் மிடில் ஆர்டர் இன்னும் பலமாக இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர்களான புவி, பும்ரா, சமி ஆகியோரை எடுப்பதிலும் பிரச்சனை. யாரை எந்த போட்டியில் களம் இறக்குவது என தெரியாமல் மாற்றி மாற்றி இறக்கினர்.

விராத் கோலியும் ரவி சாஸ்த்ரியும் சரியாக அணியை தேர்வு செய்யாததே அணியின் இந்தத் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனக் கூறலாம்.

கடந்த 4-5 மாதங்களாக உலகக் கோப்பைக்கு அணித் தேர்வு செய்கிறோம் என்று இவர்கள் செய்த மாற்றங்கள் தான் இன்று உலகக் கோப்பைக்கு முன் நாம் சந்தித்த தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

3

பை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்

0
பை(π)

பை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்

பை(Pi) என்பது ஒரு முடிவில்லாத எண் ஆகும். தற்போது பை ஆனது 22,459,257,718,361 இலக்கங்கள் வரை கண்டறியப்பட்டுள்ளது.

பை ஆனது பைலிஷ் எனப்படும் தனித்துவமான எழுத்து வடிவம் கொண்டுள்ளது. பை(π)யின் மதிப்பை எளிதாக ஒரு காம்பஸ், ப்ரோடெக்டர்  வைத்து கண்டறிய இயலும்.

ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்னர் பாபிலோனியா இன மக்களால் முதல் முறையாக பை(π) ஆனது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் லேரி ஷா என்பவர் முதல் முறையாக பை(π) தினத்தை 1988ஆம் ஆண்டு சன் பிரான்சிகோவில்  கொண்டாடினார்.

இதனால் இவர் பையின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இதே நாளில் தான் உலகப் புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாளும், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்தநாளும் ஆகும்.

பை(π)யின் குறியானது கிரேக்க எழுத்தின் முதல் வார்த்தையின் குறியாகும். கிரேக்கத்தின் முதல் வார்த்தை பெரிமீட்டர் அல்லது பெரிபெரி ஆகும்.

பை(π)யின் துல்லியமான மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை நம்மால் கண்டறியவும் இயலாது.

2015-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா என்பவர் பையின் அதிகபட்ச இலக்க மதிப்பை அதாவது 70000 இலக்கங்கள் வரை நினைவில் வைத்துள்ளார்.

3

சிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை

0
சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை

தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் ஏனென்றால் அதிகமாக நீரை பருகி சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரகத்தில் கல் உருவாவது தடுக்கப்படும்.

முடிந்த வரை உப்பைக் குறைத்து பயன்படுத்தவும், சோடியம் அதிகமாக இருக்கும் எந்த ஒரு உணவையும் பயன்படுத்த வேண்டாம். அதிக உப்பு கல் உருவாவதற்கு காரணம்.

அதிக கால்சியம் சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் தொடர்பான கல் உருவாவதை குறைக்கலாம்.

ஆக்சலேட் அல்லது ஆக்சாலிக் ஆசிட் கொண்ட ஸ்பினாச், ஸ்ட்ராபெரி, வீட் பிரான், டீ, சாக்கலேட் போன்ற உணவுகளை தவிர்ப்பது மேலும் நல்லது. இதன் மூலம் சிறுநீரில் ஆக்சலேட்டை குறைக்க இயலும்.

நாம் எடுத்துக்கொள்ளும் விட்டமின் சியை நம் உடல் ஆக்சலேட் ஆக மாற்றும். இதனால் கல் உருவாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிகமாக விட்டமின், மினேர்ல்ஸ்  எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

சர்க்கரையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் அதுவும் கால்சியம் அல்லது ஆக்சலேட் கற்களை உண்டாக்கும். இதனால் சர்க்கரையையும் குறைத்து பயன்படுத்துவது நல்லது.

முடிந்த அளவு உடலில் சோடியம், கால்சியமைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை எளிதாகக் குறைக்கலாம்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக இந்த கட்டுரை எழிதியுள்ளோம்.

3

வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்

0
வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்

வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசிடம் சிக்கி உள்ளது.

சென்னையில் உள்ள ஒரு டாக்டரிடம் லெஸ்பியன் செக்ஸில் ஈடுபடலாம் என பெண் போல் நடித்து வலையில் வீழ்த்தி உள்ளனர்.

அந்தப் பெண் டாக்டர் சேட்டிங் செய்த அனைத்தையும் வீடியோவாக எடுத்து டாக்டரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் வரை வாங்கியுள்ளனர்.

அதன் பிறகும் வெறி அடங்காத கும்பல், மீண்டும் மீண்டும் மிரட்டி உள்ளனர். பொறுமை இழந்த பெண் டாக்டர் போலீசில் புகார் கொடுத்து விட்டார்.

அப்போதே போலீஸ் பிடியில் சிக்கிய இந்த பாலியல் வன்கொடுமைக் கும்பல் முறையாக விசாரிக்கப்படாமல் தப்பி உள்ளனர்.

திருநாவுக்கரசின் தாய் தொடர்ந்து தன் மகன் குற்றமற்றவன். அவன் ஒரு நோயாளி, சிகிச்சை பெற்று வருகிறான் என மீடியா முன்பு கூறியுள்ளார்.

ஆனால், திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் 100-க்கும் மேற்பட்ட காண்டங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு ஒன்றும் பண்ணவில்லை எனில் எப்படி அங்கு இவ்வளவு காண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களைக் காதலிப்பதாகக் கூறி திருமணம் வரை சென்று தாலி கட்டும் நேரத்தில் அந்த பெண்கள் வேண்டாம் என திருநாவுக்கரசு நிராகரித்துள்ளான்.

இவை அனைத்தும் எனக்கு தெரிந்தே நடந்தது என அவனின் தாய் வீடியோவில் கூறி உள்ளார். அதை நியாப்படுத்துகிறார்.

தொடர்ந்து திருநாவுக்கரசு நல்லவன் என அவன் தாய் கூறி வருகிறார். திருநாவுக்கரசு மட்டுமே முக்கிய குற்றவாளி என போலீஸ் அவனைத் தாண்டி எந்த ஒரு நபரையும் விசாரணை செய்யவில்லை.

3