Home Blog Page 293

போயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா

0

போயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா

எதியோபியாவில் இந்த ரக விமானங்களைக் கொண்டு ஏற்பட்ட விபத்தால் 157 பேர் உயிரிழந்தனர். இதனால் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் உலக நாடுகள் புறக்கணித்தது.

விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8′ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, இந்த ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது.

இந்த ரக விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம் என அமெரிக்கா விமானங்களைத் தரை இறக்கியதை தொடர்ந்து இந்தியாவும் தரை இறக்கியது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை இந்த ரக விமானங்களைக் கூடுதல் பாதுகாப்பு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் பயணிகள் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உலக விமான உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் 13-றும்  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 5-தும் வைத்துள்ளது.

விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போய்ஸ் நிறுவனம் எத்தியோப்பியா விமான விபத்து குறித்து விசாரணையைத் துவங்கி உள்ளதாகவும், தொடக்க நிலையில் விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

3

யுடியூப் மியூசிக் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகிள்

0
யுடியூப் மியூசிக்

யுடியூப் மியூசிக் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகிள்

இந்தியாவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் தொடர்பான நிறைய செயலிகள் வந்துவிட்டதால் கூகிளுக்குச் சொந்தமான யுடியூப் நிறுவனம் ‘யுடியூப் மியூசிக்’ செயலியை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் கடந்த மாதம் வெளிவந்த ஸ்போட்டிஃபை செயலிக்கு பிறகு வெளிவந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் ஆஃப் இதுவாகும்.

இதன் விளம்பரங்கள் கொண்ட சேவை இலவசமாகவும், மியூசிக் பிரிமியம் மாதம் 99 கட்டியும் பெற்றுக்கொள்ளலாம்.

மற்றொரு பக்கம் இந்தியாவில் இருக்கும் யுடியூப் சேனல்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் விரைவில் மியூசிக் ஆஃப் அறிமுகமானதற்கு இதுவே காரணமாகும்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து விதமான பாடல்களைச் சிறந்த முறையில் உகந்த ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் முதல் வேலை என்று இதன் மேலாளர் ல்யோர் சொகேன் கூறியுள்ளார்.

முதல் முறை மட்டும் மெம்பர்ஷிப்காக ரூபாய் 129 செலுத்த வேண்டும் பிறகு மாதம் மாதம் ரூபாய் 99 செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த சேவையை 4 மாதத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

யுடியூப் நிறுவனத்தின் இந்த முயற்சியால் சாவன், கானா, அமேசான்மியூசிக், ஆப்பிள்மியூசிக் மற்றும் ஸ்போட்டிஃபை போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3

இந்தியா ஆஸ்திரேலியா வாழ்வா சாவா இறுதி ஒரு நாள் போட்டி

0
இந்தியா

இந்தியா ஆஸ்திரேலியா INDvsAUS வாழ்வா சாவா இறுதி ஒரு நாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. கோலி தலைமையில் முதல் முறையாக இந்திய அணி தொடரை இந்திய மண்ணில் தோற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு நாள் போட்டியில் நல்ல தொடக்கம் கொடுத்த இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை அசத்தலாக வென்றது. மூன்றாவது போட்டியில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலியா அணி முதல் வெற்றியயைப் பெற்றது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி நான்காவது போட்டியிலும் 354 ரன்களை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது.

நான்காவது போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதில் தோனி, சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

தோனி இல்லாததால் தான் ஸ்பின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட வில்லை என்று பலர் கூறுகின்றனர்.

மேலும் பாண்ட் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்கை தவற விட்டது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இறுதி ஒரு நாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. தொடரைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் முனைப்புடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்

0
கூகிள் அல்லோ

கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்

2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த செயலி வாட்ஸ்ஆஃப், டெலிகிராம் போன்ற உடனடித் தகவல் அனுப்பும் ஒரு மெசேஜ்ஜிங் ஆஃப் ஆகும்.

கூகிள்அல்லோ, கூகிள்டுயோ ஆகிய இரண்டு செயலிகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. கூகிள் டுயோ ஒரு வீடியோ காலிங் ஆஃப் ஆகும்.

போதிய அளவு பயனாளர்கள் இல்லாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் கூகிள் அல்லோ (Google Allow) செயலியின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தப்போவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்தது.

இறுதியில் கூகிள் இன்றைக்குத் தான் இந்த செயலியின் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் இதன் பயனாளர்கள் அனைவரின் தகவல்களும் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த பேக் அப்களும் முழுமையாக அழிந்து விடும் என கூகிள் தெரிவித்துள்ளது.

மார்ச் 12-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாக அனைத்தும் அழிந்து விடும் அதற்கு முன் வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய மெனுவில் சென்று உங்களுடைய மெசேஜ்-யை மட்டும் பேக் அப் செய்துகொள்ளலாம்.

மேலும் கூகிள் மெசேஜ்ஜிங் ஆஃப் ஹேங்க் அவுட்ஸ் (Hangouts) மீது மட்டுமே முழுக் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் கூகிள் பிளஸ் செயலியின் செயல்பாடும் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஏற்கனவே கூகிள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3

தேர்தலில் ஜெயித்தால் இந்தியன் 2; தோற்றால் தேவர் மகன் 2

0
தேர்தலில் ஜெயித்தால்

தேர்தலில் ஜெயித்தால் இந்தியன் 2; தோற்றால் தேவர் மகன் 2

நடிகர் கமல், ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.

பர்ஸ்ட் லுக் காட்சிகள் எல்லாம் வெளியான நிலையில் திடிரென படப்பிடிப்பு நின்று போனது. அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் எனக் கூறப்பட்டது.

ஷங்கர் இந்தப் படத்தின் பட்ஜெட் தொகையை இத்தனை கோடிகளுக்குள் முடிப்பேன் என எந்த வாக்குறுதியையும் லைகா நிறுவனத்திடம் கொடுக்கவில்லை.

இதனால் உஷாரான லைகா படத்தின் பட்ஜெட் தொகையைக் கூறிவிட்டு படத்தை துவங்கலாம் எனக் கூறிவிட்டது.

இதனால் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. கமல்ஹாசனும் தேர்தல் பணிகளைப் பார்க்கத் துவங்கிவிட்டார்.

இந்தியன் 2 விற்காக போடப்பட்ட செட்டுக்கு நாள் ஒன்றுக்கு வாடகை மட்டுமே 50000 ஆயிரம் செலவு ஆகின்றதாம்.

இதனால் லைகா ஒரு முடிவு செய்துள்ளது. கமல் இந்த தேர்தலில் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற்று அரசியலில் வரவேற்பு பெற்றால் இந்தியன் 2 துவங்கலாம் என முடிவு செய்துள்ளது.

கமல் ஒரு பக்கம் தேர்தல் பணிகளை கவனித்து வந்தாலும் மறுபக்கம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே காய் நகர்த்தத் துவங்கிவிட்டார்.

தென் தமிழகத்தில் உள்ள தேவர் சமூக ஓட்டுக்களைப் பெற தேவர் மகன் 2 படத்தில் நடப்பது என ஒரு முடுவும் எடுத்துள்ளாராம்.

இதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற உதவும் என இந்த முடிவை எடுத்துள்ளார்.

தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வாங்கி கிடைத்தால் இந்தியன் 2. சரியாக வாக்குகள் கிடைவில்லை எனில் தேவர் மகன் 2 படத்தில் கமல் நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3

பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு: இத்தனை அமைச்சர்களுக்குத் தொடர்பா?

0
பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு

பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு: இத்தனை அமைச்சர்களுக்குத் தொடர்பா?

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சியும் சிக்காத அளவிற்கு அதிமுக ஆட்சியில் பாலியல் குற்ற வழக்குகள் அதிகமாக வெளிவந்துள்ளது.

தோண்டத் தோண்ட பலரின் முகங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில் இன்று  தான் ஜாமீன் கிடைத்துள்ளது.

ஆளுநர் முதல் பல உயரதிகாரிகள் பெயர்கள் இந்த வழக்கில் அடிபட்டது. தற்பொழுது தமிழகத்தின் துணை சபாநாயகர், அவருடைய மகன்கள் பெயர்கள் முக்கியமாக அடிபட்டு உள்ளது.

யுத்தம் செய் படத்தில் வருது போன்ற ஒரு பெரிய நெட்வொர்க்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளது.

கீழ்மட்டத்தில் உதவிய சில நபர்கள் யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்து ரசித்த வீடியோக்களே இவர்கள் சிக்குவதற்கு காரணம்.

சிலர் மட்டும் இச்செயலில் ஈடுபடவில்லை. பல அரசியல் தலைவர்களுக்கு, ‘இளம் பெண்கள் கற்பு’ சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

பெண்களை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட அதே வீடியோவே அவர்களை கட்டிக்கொடுத்துள்ளது.

ஆனால் இன்னும் எத்தனை நகரங்களில் எத்தனை இளம்பெண்கள் சூறையாடப்பட்டு உள்ளனர்?

பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொன்னால் மட்டுமே தெரியவரும் இதுபோன்ற அரக்கர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கையில், உயர்நீதிமன்றம் மாநில அரசின் கையில். இவர்கள் கட்சியினர் சம்பந்தப்படும் வழக்குகள் மட்டும் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

நீதித்துறை சுதந்திரமாக இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே புலம்பித் தீர்த்துவிட்டனர். இப்படி ஒரு ஆட்சி நமக்குத் தேவை தானா?

கடந்த கால திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாகிவிட்டது என இவர்களைத் தேர்ந்தெடுத்தால், இவர்கள் உழல்+பாலியல் என சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளனர்.

3

கூகிள் டூடுல்: உலகளாவிய வலையின் (World Wide Web) 30ஆம் ஆண்டு

0

கூகிள் டூடுல்: உலகளாவிய வலையின் (World Wide Web) 30ஆம் ஆண்டு

உலகளாவிய வலையின் (World Wide Web) 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).

1989ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டிம் பெர்னார் லீ ஐரோப்பாவில் இருக்கும் செர்ன்(CERN) என்ற ஆய்வகத்தில் ஒரு புதிய கருத்தை முன் வைக்கிறார்.

அதில் அவர் அதிகப்படியான ஐபர்டெக்ஸ்ட் டேட்டாக்களை சேமிக்கலாம் என்றும் ஒன்றன் பின் ஒன்றாக அதைப் பயன்படுத்தலாம் என்றும் விவரித்தார்.

மேலும் அவர் ஒரு பக்கதிற்கான கோட் வோர்ட்டை கிளிக் செய்தால் அதற்கு உகந்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் விளக்குகிறார்.

இதுவே அனைத்து இணைய தளத்திற்கும் ஒரு முன்னோடி ஆக இருக்கும் உலகளாவிய இணையின் (World Wide Web) கண்டுபிடிப்பாகும்.நாம் இன்று பயன்படுத்தி வரும் 2 பில்லியன் இணயதளங்களின் தொடக்கம் இதுவாகும்.

அவருடைய மேல் அதிகாரி அவருக்கு போதிய நேரம் அளித்து டிம் பெர்னர் லீயை எச்‌டி‌டி‌பி மாடேல், எச்‌டி‌எம்‌எல் லாங்குவேஜ் போன்றைவையை பற்றி மேலும் விளக்கக் கூறினார்.

இன்றைய கூகிள் டூடில் இதை கொண்டாடுவதற்காக முன் காலத்தில் குறைந்த வேகத்தைக் கொண்ட இணையத்தில் நாம் பயன்படுத்திய கணினியை டிசைன்  செய்து பெருமைப்படுத்தியுள்ளது.

இணையத்தையும் இணயதளத்தையும் குழப்ப வேண்டாம். இணையமானது 1960ஆம் ஆண்டே கண்டறியப்பட்டு விட்டது.

 

3

Movie Review Sathru: சத்ரு திரைவிமர்சனம்

0
Movie Review Sathru

Movie Review Sathru: சத்ரு திரைவிமர்சனம்

வழக்கமான ஒரு போலீஸ் கதை தான். கிட்னாப்பிங் கும்பலை கண்டறிந்து போலீஸ் கதிர் எப்படி கொள்கின்றார் என்பதே கதை.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். கெத்தான வில்லன் என காட்டிவிட்டு அடுத்த சீனிலேயே போலீஸ் அருகில் வந்தால் வில்லன் உச்சா போகின்றார்.

ரஜினிக்கு பேட்ட படத்தில் போட்ட தீம் மியூசிக் இந்த படத்தின் வில்லன் வரும்போதெல்லாம் மியூசிக் டைரக்டர் தீட்டு தீட்டு என தீட்டுகிறார்.

வில்லன் மேல் அப்படி என்ன அலாதி பிரியம் எனத் தெரியவில்லை.  போலீஸ் கதிர் அவரு சாதாரண போலீஸ் இல்ல.

பொறக்கும்போதே அப்டி. இப்டி என ஓவர் பில்டப். ஆனால் அவருக்கோ போலீஸ் பிட்னஸ் உடல் இல்லை.

குறுக்குல இருக்க சதை தெரியக்கூடாது என சட்டையை டிக்கியில் இழுத்துவிட்டு மறைத்துள்ளார்.

போலீஸ் ட்ரஸ் போட்ட மட்டும் பத்தாது அதுக்கான பாடி லாங்குவேஜ் இருக்கணும். ஆனா இவருக்கு பாடி மட்டும் தான் பெருத்து போயிருக்கு.

ஒளிப்பதிவாளர் குறைகள் தெரியக்கூடாது என டிஐ பண்ணி உள்ளனர். படத்தில் இரவுக் காட்சி எது பகல் காட்சி எது என்றே தெரியவில்லை.

நல்ல இருக்குயா உங்க ஒளிப்பதிவு. மொத்ததுல டிரைக்டர் தன்னோட கற்பனை வளத்தை எல்லாம் கொட்டி மிகவும் மோசம் இல்லாமல் ஒரு படத்தை எடுத்துட்டாப்லா.

ஆனா நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் அரத்த பழசு என்பதால் பெரிய விசயமாக தோன்றவில்லை.

மொத்ததுல சத்ரு சப்ப குரு

3

மேட்ச் பிக்ஸிங் கொலையை விட மிகப் பெரிய குற்றம்: தோனி

0

மேட்ச் பிக்ஸிங் கொலையை விட மிகப் பெரிய குற்றம்: தோனி

இந்தியாவின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி மேட்ச் பிக்ஸிங்க் மிகப் பெரிய குற்றம் என்று ரோர் ஆஃப் தி லயன் டிரைலரில் கூறியுள்ளார்.

2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வருட தடையையும் ரசிகர்கள் அணியின் மீது வைத்திருந்த அன்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் ரோர் ஆஃப் தி லயன் (Roar of the Lion) ஆகும்.

ரோர் ஆஃப் தி லயன் (Roar of the Lion)

45 நொடிகள் கொண்ட டிரைலரில் ‘அணியின் மீது மேட்ச் பிக்ஸிங்க் குற்றம் சாற்றப்படும் பொழுது என் மீதும் குற்றம் சாற்றப்பட்டது. அப்போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமான காலம்.

இதில் இருந்து மீண்டு வார நாங்கள் சிரமப்பட்டோம். மீண்டு வந்தது மிகவும் உணர்ச்சிப் பூர்வமான ஒரு நிகழ்வாகும்.

மேட்ச் பிக்ஸிங்க் கொலையை விட மிகப் பெரிய குற்றமாகும்’ என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

வருகிற மார்ச் 20ஆம் தேதி ரோர் ஆஃப் தி லயன் முழுப் படமும் ஹாட்ஸ்டர் இணையத்தில் வெளியாகும் என்று ஸ்டார் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

3

நிர்மலா தேவி: அதிரவைக்கும் உண்மைகளை நீதிபதியிடம் கூற உள்ளார்

0
நிர்மலா தேவி

நிர்மலா தேவி: அதிரவைக்கும் உண்மைகளை நீதிபதியிடம் கூற உள்ளார்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட  நிர்மலா தேவி நீண்ட நாட்களாக ஜாமீன் கிடைமால் அலைந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிறையில் மகளிர் தினம் கொண்டாடியதாகவும், கும்மி போட்டியில் பரிசு வென்றதாகவும் மீடியாக்களிடம் சிறை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் அது சுத்தப்பொய் என நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் நிர்மலா தேவி நீதிபதியை சந்தித்து உண்மைகளைக் கூற முற்படும்போது போலீசார் அருகிலேயே நின்றுகொள்கின்றனர்.

இதனால் நாளை உண்மைகளைத் தைரியமாகக் கூற வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். தனிமையில் அவரிடம் விசாரிக்க உள்ளார்.

நாளைய விசாரணையின்போது நிர்மலாதேவி பல திடுக்கிடும் தகவலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

3