Home Blog Page 294

போதை தலைக்கேறிய விமல்; சக நடிகரை அடித்துத் துவைத்தார்

0
போதை தலைக்கேறிய விமல்

போதை தலைக்கேறிய விமல்; சக நடிகரை அடித்துத் துவைத்தார்

கன்னட சினிமா நடிகர் அபிஷேக் என்பவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

இரவு வாசலில் அமர்ந்து போன் பேசியுள்ளார். அப்போது அங்கு நடிகர் விமல் தன் நண்பர்களுடன் வந்துள்ளார்.

5 பேரும் நன்கு குடித்துவிட்டு புல் போதையில் விடுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிசேக்கிடம் ரூம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகர் அபிஷேக், நான் இங்கு வேலை செய்யவில்லை எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

வேலை செய்யவில்லை என்றால் இங்கு என்ன உனக்கு வேலை என அவரை புரட்டி எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அபிஷேக் காயமடைந்துள்ளார்.

ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விமல் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ன நடந்தது என விசாரணை செய்து வருகின்றனர்.

3

வில் ஸ்மித்தின் புர்ஜ் கலிஃபா வீடியோ: இன்ஸ்டாகிரம்

0
வில் ஸ்மித்தின்

வில் ஸ்மித்தின் புர்ஜ் கலிஃபா வீடியோ: இன்ஸ்டாகிரம்

50 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ 7 மில்லியன் பார்வைகளும் 1.7 மில்லியன் லைக்குகளும் 26000 கமெண்ட்டுகளும் பெற்றுள்ளது.

இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு முன் நடிகர் ராக், நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர்.

ஹாலிவுட் ஒவ்வொரு மாதமும் மோஸ்ட் ஃபேமஸ் டி‌வி பிரபலங்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இந்த மாதம் வெளியிட்ட பட்டியலில் வில் ஸ்மித் 10ஆவது இடத்தில் இருந்து முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஒரு நபரின் முழு ஈடுபாடு மற்றும் வரவேற்பை பொறுத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.

வில் ஸ்மித் நடித்த ‘பக்கெட் லிஸ்ட்’ என்ற இணைய தொடரின் டிரைலர் பேஸ்புக் தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து வில் ஸ்மித் அலாவுதீன், பேட் பாய்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அலாவுதீன் படம் படிப்பிடிப்புகள் முடிந்ததால் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.8 ஆகப் பதிவு

0
அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.8 ஆகப் பதிவு

வங்காளவிரிகுடா கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கடலின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை வரை அதன் தாக்கம் உணரப்பட்டது.

தற்பொழுது  அந்தமான் நிகோபார் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 எனப் பதிவாகியுள்ளது.

அந்தமான் தீவு அருகில் 78 கி.மீ. தொலைவில் 6.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நில அதிர்வால் அங்கு வசித்த மக்கள் முதலில் பீதி அடைந்தனர். லேசான நிலநடுக்கம் என்பதால் சற்று நிம்மதி அடைந்தனர்.

3

ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை: எதியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிப்பு

0
ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை

ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை: எதியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிப்பு

எதியோபியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் இன்று காலை எதியோபியா நாட்டின் தலைநகரம் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு நைரோபி கென்யா சென்ற விமானம் பாதி வழியில் வெடித்தது.

விமானம் புறப்பட்டு வெறும் 6 நிமிடத்தில் விமானம் வெடித்தது. இந்த விமானம் புதிய  Boeing 737 MAX 8 மாடல்  வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கியதாம்.

காலை 8.38 மணிக்கு புறப்பட்ட விமானம் 8.44 மணிக்கு சிக்னலை இழந்தது. குழப்பத்தில் இருந்த நிர்வாகம் சிறிது நேரத்தில் தேடலை ஆரம்பித்தது.

எதியோபியா தலைநகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் வெறும் 62km தொலைவில் விமானம் வெடித்தது தெரிய வந்தது.

149 பயணிகளுடன் 8 விமான ஊழியர்களும் உயிரிழந்தனர். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் வெடித்ததற்கு சரியான காரணம் தெரியவில்லை.

டெக்னிகல் பிரச்சனையாக இருக்கலாம் என்றும் விமானம் ஆபத்தான கோணத்தில் பறந்ததாகவும் புதிய ஃபிரண்ட் 737max இல் சாஃப்ட்வேர் பிரச்சனை இருக்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எதியோபியன் நாட்டின் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவித்திருந்தார்.

3

வைரலாகும் சர்ஃப் எக்ஸல் விளம்பரம்: மதத்தை இழிவு படுத்துகிறதா?

0
வைரலாகும் சர்ஃப் எக்ஸல்

வைரலாகும் சர்ஃப் எக்ஸல் விளம்பரம்: மதத்தை இழிவு படுத்துகிறதா?

நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான சர்ஃப் எக்ஸல் சோப்பு பவுடர் சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது ட்விட்டரில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

யூனிலீவர் நிறுவனத் தயாரிப்பான சர்ஃப் எக்ஸல் சோப்புத்தூள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்து முஸ்லிம் மத ஒற்றுமை பற்றிய ஒரு சிறப்பு விளம்பரம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டது.

இந்த விளம்பரத்தில் ஒரு நகரத்தின் தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீதியில் வருவோர் போவோர்கள் மீது ஹோலி வண்ணங்களால் அடித்து விளையாடுகின்றனர்.

அப்போது அந்த வழியில் வெள்ளை ஆடை அணிந்து வந்த ஒரு இந்துச் சிறுமியின் மீது வழக்கம் போல் தொடர்ச்சியாக வண்ண நீர் பந்துகளை அடித்தனர். அந்தச் சிறுமி நீண்ட நேரம் சைக்கிளில் அதே பாதையில் உலாவிக் கொண்டிருந்தார்.

மற்ற சிறுவர்களிடம் இருந்த ஹோலி வண்ணங்கள் தீர்ந்தவுடன் அங்கு மறைந்திருந்த தன்னுடைய வெள்ளை ஆடை அணிந்த முஸ்லிம் நண்பரை அழைத்துச் சென்று மசூதியில் இறக்கி விட்டார்.

மதம் கடந்து தன்னுடைய நண்பருக்கு உதவியது பார்ப்பதற்கு ஆரோக்கியான ஒன்றாக இருந்தது. மேலும் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆனால் மற்றொரு பக்கம் விளம்பரத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

உங்களுடைய ஆதாயத்திற்காக விளம்பரத்தில் மதத்தை இழுக்க வேண்டாம் என்று #BoycottSurfExcel ஹஷ்டக் வைத்து சிலர் ட்வீட் போட்டு வருகின்றனர்.

3

Sai Pallavi Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது சாய் பல்லவியா? – Fact Check

0
Sai Pallavi Leaks

Sai Pallavi Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது சாய் பல்லவியா? – Fact Check

ஒரு நடிகை பிரபலம் ஆகிவிட்டால் அவருடைய முகத்தை வேறு ஒருவர் உடலுடன் மார்பிங் செய்து அதை இணையத்தில் பதிவேற்றி ஒரு கூட்டம் பணம் சம்பாதிக்கிறது.

எப்பொழுதும் ஆபாச இணையதளங்களில் இருக்கும் ஒரு கூட்டம் ஏதேனும் பிரபலங்களில் முகச்சாயலில் வீடியோ இருந்தால், அது அந்த நடிகை தான் என வீடியோவை வைரல் செய்துவிடுவார்கள்.

இதில் சிக்காதா தமிழ் நடிகைகள் வெகுசிலரே. தற்பொழுது அந்த குரூப்பிடம் சிக்கியிருக்கும் நடிகை சாய் பல்லவி.

மல்லுவுட், கோலிவுட் என ப்ரேமம் படம் மூலம் பிரபலம் அடைந்தவர். அவரின் அந்தரங்க வீடியோ வெளியாகி விட்டதாக சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேச்சுஅடிபட்டு வருகிறது.

அது எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்ததில். அவரைப்போலவே உருவம் கொண்டவரின் வீடியோவை சாய் பல்லவி வீடியோ என வாட்ஸ்ஆப்பில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து சாய் பல்லவியை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் அவர் இது குறித்து கருத்துச்சொல்ல மறுத்துவிட்டார்.

சாய் பல்லவியின் முழு வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இந்த வீடியோவை பார்க்கவும். வீடியோவின் இறுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.

3

மல்லையாவுக்கு அருகிலேயே நீரவ் மோடி; மருவைத்த மாறுவேட மோடி

0
மல்லையாவுக்கு

மல்லையாவுக்கு அருகிலேயே நீரவ் மோடி; மருவைத்த மாறுவேட மோடி

மல்லையாவை இந்தியா கொண்டுவர அனைத்து ஒப்புதலும் கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.

இருப்பினும் மல்லையாவை இந்தியா கொண்டுவர இந்திய அரசு தாமதப்படுத்திக்கொண்டே உள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மல்லையாவை இந்தியா கொண்டுவர மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நீரவ் மோடியும் அதே லண்டன் நகரில் தான் வசித்து வருகிறாராம். அங்கு ஒரு பெரிய வைரக் கடை துவங்கியுள்ளார்.

அதுவும் அவர் பெயரில் பல மாதங்களாக நடந்து வருகிறதாம். கிளீன் சேவ் உடன் இந்தியாவை விட்டு சென்றார் நீரவ் மோடி.

அங்கு முறுக்கு மீசை, தாடி வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றி வருகிறார். அவரை ஒரு பத்திரிக்கை கண்டு பிடித்துள்ளது.

அதன் பிறகே போலீசாருக்கும் மத்திய அரசுக்கும் தெரிய வந்துள்ளதாம். எம்.ஜி.ஆர். காலத்தில் மருவைத்துக் கொண்டாலே மாறுவேடம் எனக்கூறுவர்.

அதே போல் ஆகிவிட்டது நீரவ் மோடியின் மாறுவேடம். இதுநாள் வரை அரசு கண்களுக்குப் புலப்படாமல் இருந்தது.

3

Boomerang Movie Review: பூமராங் திரைவிமர்சனம்

0
Boomerang Movie Review

Boomerang Movie Review: பூமராங் திரைவிமர்சனம்

ஐ.டி. கம்பெனியில் வேலை பறிபோகிறது. இதனால் நாயகன் அதர்வா ஊரில் விவசாயம் செய்ய முடிவு செய்கிறார்.

ஆனால் ஊரில் தண்ணீர் இல்லை. இதனால் அருகில் உள்ள ஆற்றில் இருக்கும் தண்ணீரை, ஏரி வெட்டி ஊருக்கு கொண்டுவர முடிவு செய்கிறார்.

அங்கு ஒரு கார்பரேட் முதலாளி அங்குள்ள நிலத்தை வாங்க முயற்சி செய்கிறார். இதற்கு அதர்வா முட்டுக்கடையாக இருக்கிறார்.

அவரை தீர்த்துக்கட்டுகின்றனர். அவருடைய முகத்தை வேறு ஒரு நபருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

மீண்டும் அதர்வா உருவாகிறார். தனக்கு முகம் கொடுத்த அந்த நபரின் ஊருக்குச் சென்று வில்லன்களைப் பழிவாங்குகிறார்.

இந்தக் கதை ‘கத்தி’ என்று பெயரில் ஏற்கனவே வந்துவிட்டு. கத்தி படம் என்னுடைய கதை என பலர் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்படி ஒரு கதையை தான் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். கதை காப்பி எனத் தெரியக்கூடாது என பட்டி டிங்கரிங் பார்த்துள்ளார்.

படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள்

முகமாற்று அறுவை சிகிச்சை

ஒருவரின் முகத்தை இன்னொருவருக்கு பொருத்துகின்றனர். அச்சு அசலாக அதே முகத்தில் வருகிறார். சரி இதைக்கூட சினிமாடிக் எனக்கூறிவிடலாம். அதே குரல் எப்படி இரண்டு நபருக்கும் வந்தது?

ஏதோ மலைக்குகையை குடையும் போது அதில் பாம் வைத்தால் மண்சரிவு ஏற்பட்டு இறப்பது சகஜம். சாதாரணமான ஒரு ஓடை வெட்டுவதில் மண்சரிவு ஏற்பட்டு இறந்தனர் என்பது கற்பனையையும் மிஞ்சிய காட்சி.

பூமராங்

நதிநீர் இணைப்பைப் பற்றி இந்த் படம் பேசுகிறது என ரஜினிகாந்தை வைத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடினர்.

ஒரு ——– இந்த படத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசவில்லை. விவசாயம் பற்றி பேசுகிறேன் என ஒரு வறண்ட கண்மாய்க்குள் இரண்டாம் பாதியை எடுத்து முடித்துவிட்டனர்.

இவர்கள் எடுக்கும் படம் ஓட வேண்டும் என்பதற்கு விவசாயி தான் கிடைத்தானா? நதிஇணைப்பு பற்றிய படம் என ஓடி வந்து பார்த்த விவசாயி ஏமாற்றப்பட்டு உள்ளான்.

இதுவே இந்த படத்திற்கு நெகடிவ் பப்ளிசிட்டியாக அமைந்துவிட்டது. இந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகும் என்பது மட்டும் உறுதி.

3

பரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?

0
பரிசு மழையில்

பரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

200 நாட்களைத் தாண்டியும் அவருக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் மீடியா முன்பு வாய்திறந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று சிறைச்சாலையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு உள்ளது. இதில் நிர்மலா தேவியும் கலந்துகொண்டுள்ளார்.

பேச்சுப்போட்டி உட்பட பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். சிறையில் நிர்மலா தேவி மிகவும் சந்தோசமாகவே உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3

நிலவில் தண்ணீர் நகர்வை கண்டறிந்த நாசா

0
moon

நிலவில் தண்ணீர் நகர்வை கண்டறிந்த நாசா

நாசாவின் லூனார் ரிகனாய்சன்ஸ் ஆர்பிட்டார் (LRO) என்ற செயற்கைகோள் மூலம் சந்திரனில் பகல் நேரங்களில் நீர் மூலக்கூறுகள் நகர்வதை கண்டறிந்துள்ளனர்.

சந்திரனில் தண்ணீர் உள்ளதா? என நீண்ட காலமாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.  நிலா எப்பொழுதும் மிகவும் வறண்ட நிலப்பகுதியாகவே காணப்பட்டது.

இதனால் அங்கு தண்ணீர் இருந்தாலும் அதைக்கண்டறிய இயலுமா? என்ற குழப்பத்துடனே விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

லைமன் ஆல்ஃபா மேப்பிங் ப்ராஜக்ட் (Lyman Alpha Mapping Project)

இந்த ப்ராஜக்ட் மூலம் எல்‌ஆர்‌ஓ விண்கலத்தின் உதவியுடன் தற்காலிகமாக நிலவில் புதைந்திருந்த தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிந்தனர்.

ஒரு நாளில் நடக்கும் மூலக்கூறுகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டனர். நீண்ட கால முயற்சியின் இறுதியில் தண்ணீரை கண்டறிந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த அப்போலோ விண்வெளிப் பயணத்தின்போது செய்த சோதனையில் நிலவின் நிலப்பரப்பில் இருந்து நீரைப் பிரித்தெடுப்பது கடினம் என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்காலங்களில் நிகழ இருக்கும் நிலவுப் பயணத்திற்கு இந்த தண்ணீர் கண்டுபிடிப்பு மிகுந்த உதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில் நிலவில் எடுக்கப்படும் நீர், எரிபொருள் தயாரிப்புக்கும், வெப்பநிலையை சீர் செய்யவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர் அமான்டா ஹென்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

3