Home Blog Page 295

இரட்டையர்கள்: ஐடெண்டிகள்-பிரடெர்னல் ட்வின்ஸ்

0
இரட்டையர்கள்

இரட்டையர்கள்: ஐடெண்டிகள்-பிரடெர்னல் ட்வின்ஸ் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?

ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் இரட்டையர்கள் (Twins) எனப்படுவர். பார்ப்பதற்கு ஒரே முகத்தோற்றத்துடன் இருப்பார்கள்.

இவர்கள் ஒரே பாலினத்தையும் அல்லது வெவ்வேறு பாலினத்தையும் கொண்டிருக்கலாம். இரட்டைக்குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் அண்டவிடுப்பின் போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக இரண்டு கருமுட்டைகள் உருவாவதே.

பொதுவாக இது உணவுப் பழக்கத்தினால் ஏற்படலாம் அல்லது சிலர் இரட்டைக்குழந்தைகள் வேண்டும் என்றே சில மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் இரட்டையர்கள் மற்றொன்று பிரடெர்னல் அல்லது டைசைகாட்டிக்

ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் (Identical or Monozygotic)

மூன்றில் ஒரு இரட்டையர்கள் இந்த வகையாகும். இந்த வகையில் கருவுற்றபின் முட்டை தானாகவே இரண்டு முட்டையாகப் பிரிந்துவிடும். பிரிந்த இரண்டு கருமுட்டைகள் இரண்டு குழந்தையாக வளரும்.

இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே மரபுப் பண்பு (DNA) மற்றும் ஒரே வகைப் பாலினத்தை மட்டுமே கொண்டிருப்பார்கள்.

ஐடெண்டிகள் இரட்டையர்கள் ஒருவர் மற்றொருவரின் கண்ணாடிப் படம் போல் இருப்பார்கள். அதாவது ஒருவரின் வலது பக்க முகமும், மற்றொருவரின் இடது பக்க முகமும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு கருமுட்டையில் ஒரு விந்தணுவால் கருவுற்று இரண்டு குழந்தைகளாக பிரிவதே ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் இரட்டையர்கள் ஆவார்கள்.

பிரடெர்னல் அல்லது டைசைகாட்டிக் (Fraternal or Dizygotic)

மூன்றில் இரண்டு மடங்கு பிரடெர்னல் இரட்டையர்களாக இருப்பார்கள். இரண்டு கருமுட்டையில் இரண்டு விந்தணுக்களால் கருவுற்று இரண்டு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும்.

ஒரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தைக் கொண்டிருக்கலாம். இவர்கள் வெவ்வேறு மரபணுப் பண்பை கொண்டிருப்பார்கள். முகத்தில் ஓரளவு ஒரே தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

மூன்றாம் வகை 

சில ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவதாக ஒரு இரட்டையர் வகை இருக்கலாம் என நம்புகின்றனர். ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தவகையில் கருமுட்டை கருத்தரிக்கும் முன்பே இரண்டாகப் பிரிந்து, இரண்டு விந்தணுக்களால் கருவுறும்.

இந்த வகையில் பிறப்பவர்கள்  பிரடெர்னல் இரட்டையர்கள், ஐடெண்டிகள் இரட்டையர்கள் போன்ற தோற்றத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரட்டையர்களை அடையாளம் காண்பது எப்படி?

பிறந்த குழந்தை எந்த வகை இரட்டையர் என்பதையும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

கருவுற்ற பின் ஏன் கருமுட்டை இரண்டாகப் பிரிகின்றது என்பதையும் இதுவரை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேலும் எந்தவகை இரட்டையர்கள் என்பதைக் கண்டறிய டி.என்.ஏ சோதனையே உதவுகிறது.

ஒரே மாதிரி டி.என்.ஏ, கொண்டால் ஐடெண்டிக்கள் எனவும், வேறு வேறு டி.என்.ஏ. இருந்தால் பிரடெர்னல் எனவும் வகைப்படுத்தப் படுகின்றனர்.

ஐடெண்டிகள் டிவின்ஸ்யை கைரேகை கொண்டே தனித்தனியாக அடையாளம் காண முடியும். மற்றபடி ஒருவர் இன்னொருவரின் ஜெராக்ஸ் போன்றே இருப்பார்கள்.

3

Google Doodle: பிலிப்பைனின் பாரம்பரிய நடனம்; பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா

0
Google Doodle
Google Doodle: பிலிப்பைனின் பாரம்பரிய நடனம்; பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா (Francisca Reyes-Aquino).
பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா என்ற பெண்மணி பிலிப்பைன் நாட்டின் பாரம்பரிய நடனம், பாடல் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்க அயராது உழைத்தவர்.
இவர் பிலிப்பைன் நாட்டின் போல்க் நடனக் கலைஞர் ஆவர். மேலும் பிலிப்பைன் நடனங்களின் தாய் என்று பிரான்சிஸ்கா ரெயிஸ் அகினா அழைக்கப்படுகிறார்.
1899-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த இவர் பிலிப்பைன் பாரம்பரியங்களை மீட்டெடுக்க 7000-ற்கும் அதிகமான தீவுகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார விளையாட்டு, நடனம்,  பாடல்கள் போன்ற அனைத்தையும் பற்றி அறிந்தார்.
யுனிவர்சிட்டி ஆஃப் பிலிப்பைனில் பட்டப்படிப்பை முடித்த இவர் தான் பாதுகாத்த அனைத்தையும் பயனுள்ளதாக மாற்ற அடுத்த தலைமுறைக்கு அதை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
1954-ஆம் ஆண்டு ரிபப்ளிக் அவார்ட் ஆஃப் மெரிட் விருதும் 1973-ஆம் ஆண்டு நேஷனல் ஆர்டிஸ்ட் என்ற விருதும் வழங்கப்பட்டது.
இவரது 120ஆவது பிறந்த நாளான இன்று கூகிள் டூடுல் (Google Doodle) டிசைனில் காரிநோச, சிங்கில், பண்டாங்கோ, ஷா இலா மற்றும் பிரபலமான டிநிக்லிங்க் நடனங்கள் இடம் பெற்றுள்ளது.
3

பெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்

0

பெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாட சமயல் அறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்து விட்டார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

நம் வாழ்நாளில் நேரம் காலம் பார்க்காமல் நமக்குச் சமைத்துக் கொடுத்த நம் அம்மாவிற்கு நாம் ஒரு முறையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் நான் ‘பைங்கண் பார்த்தா’ டிஷை சமைக்கப்போகிறேன். சமைத்த பிறகு இந்த உணவை என் அம்மா, அஞ்சலி மற்றும் சாரா ஆகிய மூவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

நான் செய்து முடித்ததும் முதலில் என் அம்மா ருசி பார்த்த பிறகே மனைவியும் மகளும் பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

இதற்கிடையில் காய்கறி நறுக்கும் பொழுது கையில் வெட்டுப்பட்டது போன்ற வேடிக்கையாக நடிக்கவும் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டுள்ளார்.

இறுதியில் அம்மா சச்சின் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து பாராட்டிய பிறகு சச்சின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

45 வயதான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் சச்சின் தான் முதலிடம்.

3

முகிலன் குறித்து தோண்டித் துருவிய சிபிசிஐடி; வெட்ட வெளிச்சமாக்கியது சிசிடிவி காட்சிகள்

0
முகிலன்
சிசிடிவி கோப்புக்காட்சி

முகிலன் குறித்து தோண்டித் துருவிய சிபிசிஐடி; வெட்ட வெளிச்சமாக்கியது சிசிடிவி காட்சிகள்

ஸ்டெர்லைட் போராட்டக் கலவரம் காவலர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார் முகிலன்.

அன்றைய தினமே மதுரைக்குச் செல்ல சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார்.

முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் செல்லும் சிசிடிவி காட்சி கிடைத்தாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அவர்கள் தோண்டித் துருவி விசாரணை செய்ததில் அவர் வெளியில் சென்றது உண்மை தான் என முதலில் கண்டறிந்தனர்.

பிறகு அவர் 11 மணி அளவில் மீண்டும் ரயில் நிலையத்திற்குள் வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் ரயில் ஏறிய பின்புதான் மயமாகி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்த முகிலனின் வழக்கில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது அறுதல் அளிக்கிறது.

முகிலனுக்கு என்ன ஆனது என தமிழகமே கூர்ந்து கவனித்து வருகிறது. இது தேர்தல் நேரம் என்பதால் மேலும் இந்த வழக்கு பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

3

ராணுவத் தொப்பியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி

0

ராணுவத் தொப்பியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவத் தொப்பியை அணிந்து விளையாடுகிறது.

மேலும் கேப்டன் கோலி இந்த போட்டிக்கான சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் உயிரழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம் எனக்கூறினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்று இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைபற்றும் முனைப்புடன் இந்தியாவும் எப்படியாவது முதல் வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலியாவும் களம் இறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தது. களம் இறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

3

இன்றைய கூகிள் டூடுல்: சர்வதேச பெண்கள் தினம்

0

இன்றைய கூகிள் டூடுல்: சர்வதேச பெண்கள் தினம்

இன்று கூகிள் டூடில் (Google Doodle) சாதனை புரிந்த பெண் முன்னோடிகளின் பொன் மொழிகளை வைத்து 11 மொழிகளில் கட்டம் கட்டமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

உலகில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழி தெரிந்த பெண் வழிகாட்டிகளை எடுத்துக்கொண்டனர். இதில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் ஜப்பான் எழுத்தாளர் யோகோ ஒன் வரை அடங்கும்.

அவர்களின் சொற்களையும் கருத்துக்களையும் 11 கட்டமாக 11 மொழிகளில் டிசைன் செய்யப்பட்டு காட்சி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கூகிள் டூடில் இருக்கும் இமேஜை கிளிக் செய்தல் ஒவ்வொன்றாக 13 நபரின் பொன்மொழிகள் வரும்.

முதல் இரண்டு இடங்களில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மே ஜெமிசன், மேக்ஸிகன் கலைஞர் பிரைடா காலோ ஆகியோர் உள்ளனர்.

இதில் 11 மொழிகளில் இந்தியாவின் ஹிந்தி, பெங்காலி மொழிகள் அடங்கும், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய தூதர் பெனோ ஜிபின் ஆகியோர் கருத்துகள் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாறு

1909-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் முறையாக பெண்கள் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணம் 1908-ஆம் ஆண்டு பெண் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 150 பெண்கள் உயிரிழந்தனர்.

பெண்களின் பாதுகாப்பு கோரி பேரணி நடத்தினர். இதுவே பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

1917-ஆம் ஆண்டு சோவியத் ரஸ்சியாவின் பெண்கள் ஓட்டுரிமை பெற்றதும் மார்ச் 8-ஆம் தேதி முதல் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

யுனைடெட் நேஷன்ஸ்(UN) 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

3

அஜித்தை விளம்பரத்தில் நடிக்க வைக்க ஜான்சி ராணி முயற்சி

0
அஜித்தை விளம்பரத்தில்

அஜித்தை விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி: சம்மதிப்பாரா?

மதுரையில் வசிக்கும் ஜான்சி ராணி, மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அம்மனுவில், “போலியோ நோயை ஒழிக்க வருடத்திற்குப் பலகோடிகள் அரசு சார்பாக செலவிடப்பட்டு வருகிறது.

ஆனால் சமீப காலமாக போலியோ சொட்டு மருந்து முகாம் சரியாக நடைபெறுவதில்லை. போலியோ நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைந்துவிட்டது.

எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அரசுத்தரப்பில் வரும் 10-ம் தேதி சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனக் கூறினர்.

ஆனால், போதுமான விளம்பரங்கள் செய்யவில்லை. இதனால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறைந்துவிட்டது என நீதிபதியிடம் முறையிட்டார்.

இதனைக் கருத்தில்கொண்ட நீதிபதிகள், தமிழின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

நடிகர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் மக்களிடம் சென்று சேரும் எனக்கூறி வழக்கை மூன்று வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சூர்யா ஏற்கனவே நிறைய விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துள்ளார். விஜய்யும் விளம்பரங்களில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அஜித் கடைசியாக சன்ரைஸ் விளம்பரத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த ஒரு விளம்பரத்திலும் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். எனவே அஜித் இதற்குச் சம்மதிப்பாரா என்பது சந்தேகமே?

3

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு – வீடியோ

0
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது.

இந்த அதிர்வலையில் இருந்தே இந்தியா இன்னும் மீளவில்லை. இந்நிலையில் மீண்டும் காஷ்மீர் மாநிலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஜம்மு நகரில் உள்ள ஒரு பேருந்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது போன்றே தகவல்கள் கிடைத்துள்ளது.

இருப்பினும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உயிர்பலி ஏற்பட்டுள்ளதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

3

ரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…

0
ரசிகர்கள் அன்புத்தொல்லை

ரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…

சமீபத்தில் விஜய் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அவருடைய காரை ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இதனால் கார் ட்ரைவர் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். அப்பொழுதும் ரசிகர் விடவில்லை. பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தி கூச்சலுடனே சென்றுள்ளனர்.

அதற்கு மேல் பொறுமை இழந்த விஜய், ரசிகர்களின் ஆர்வமிகுதியால் ஏதேனும் விபத்து அரங்கேறிவிடப்போகிறது என கார் கண்ணாடியைத் திறந்தார்.

ரசிகர்களை அங்கிருந்து போகச்சொல்லி சைகை காட்டினர். அப்பொழுதும் ரசிகர்கள் விடுவதாய் இல்லை.

இதேபோன்று அஜித் ரசிகர்களும் சில நேரங்களில் அஜித்தின் காரை விரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

ஒருநாள் இரவு நேரத்தில் ரசிகர் ஒருவர் அஜித்தின் காரைப் பின்தொடர்ந்தார். உடனே கரை நிறுத்திய அஜித் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அவருக்கு அறிவுரை கூறினார்.

அதேபோன்று அஜித் பைக் ரைடு செல்லும்போது சேலம் மாவட்டம் காட்டுக்கொட்டை கிராமம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் திடீரென ஒரு டீக்கடைக்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

உடனே அவருடைய ரசிகர்கள் நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போதும் அவர்களுக்கு அஜித் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

ரசிகர்களும் நடிகர்களை இப்படி விரட்டுவது நல்லதல்ல?  ஒருவரைப் பார்த்து மேலும் பலர் இதேபோன்று காரைப் பின்தொடர  நேரிடும்.

3

கெத்துக்காட்டிய தேமுதிக; கெஞ்சல் தேமுதிகவாக மாறியுள்ளது

0
கெத்துக்காட்டிய தேமுதிக

கெத்துக்காட்டிய தேமுதிக; கெஞ்சல் தேமுதிகவாக மாறியுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, நம்மை கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் தேமுதிக தலைவர்களுக்கே இருந்தது.

அப்போதே காங்கிரஸ் கட்சி மூலம் திமுகவிற்கு தூது அனுப்பி வந்தனர். ஆனால், அப்போது கூட தேமுதிகவை பெரிய அளவில் திமுக நினைக்கவில்லை.

ஆனால் பாமக-அதிமுக கூட்டணி உருவாகியதும் தமிழக அரசியல் தலைகீழான ஒரு மாற்றத்தைச் சந்தித்தது.

தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டால் திமுக கூட்டணியைவிட ஒருபடி மேலே சென்றுவிடலாம் என அதிமுக பேச்சுவார்த்தையை துவங்கியது.

அவ்வளவு தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மாறிப்போனது தேமுதிகவின் நிலைப்பாடு.

இந்தத் தேர்தலில் முடிந்த அளவு வாரிச் சுருட்டிக்கொள்ளலாம் என பேராசையுடன் காய் நகர்த்தியுள்ளனர்.

கூட்டணி மேடைக்கு வருகிறோம் என பாஜகவுடன் பேரம் பேசிவிட்டு, அடுத்த நொடியே திமுக துரைமுருகனுக்கு போன் போட்டு உங்க கட்சிக்கு வரவா எனவும் பேசியுள்ளார் சுதீஷ்.

சீட்டும் இல்ல தலைவரும் இல்ல எனக் கறாராகக் கூறிவிட்டார் துரைமுருகன். உடனே மீடியாக்களை அழைத்த சுதீஷ் நாங்கள் நிச்சயம் பாஜக கூட்டணியில் இடம்பெறுவோம் என கூற ஆரம்பித்துவிட்டார்.

அதுவரை கூட்டணி பற்றி வாய் திறக்காதவர் உடனே பாஜக கூட்டணி எனக்கூறி விட்டார். காரணம் இரண்டும் பக்கம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டனர்.

தற்பொழுது இரண்டு பக்கமும் கொஞ்சிக்கொண்டு இருக்கிறது தேமுதிக கட்சி. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும்.

3