Home Blog Page 296

இன்றைய கூகிள் டூடுல்: ஆல்கா லேடிசென்ஸ்கயா

0

இன்றைய கூகிள் டூடுல்: ஆல்கா லேடிசென்ஸ்கயா

ரஷ்யாவைச் சேர்ந்த கணித மேதையான ஆல்கா லேடிசென்ஸ்கயாவின் 97வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).

பகுதி வகையீட்டு சமன்பாடுகள் (partial differential equations) மற்றும் திரவ இயக்கவியல் (fluid dynamics) ஆகிய பிரிவுகளில் இவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.

இன்றைய கூகிள் டூடுல் நீள்வட்ட வடிவிலும் அதில் இவரின்  நேரியல் மற்றும் வினையுயிர் நீள்வட்ட சமன்பாடுகளை குறிப்பிட்டு இவரை பெருமைப்படுத்தியுள்ளது.

இவரது தந்தையும் கணித ஆசிரியர் ஆவார். ரஷ்யாவின் சோவியத் யூனியனால் இவரது தந்தை துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைத்து கொல்லப்பட்டார்.

அப்போது ஆல்காவுக்கு 15 வயது தான் ஆகும். கணிதத்தில் சிறந்து விளங்கினாலும் இவருடைய தந்தையின் அவப்பெயரால் இவருக்கு ரஷ்யாவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பின் இவருக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பல்வேறு சாதனைகளை கணிதத்தில் செய்து விட்டு ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டில் தனது 81வது வயதில் ஆல்கா லேடிசென்ஸ்கயா இறந்து விட்டார்.

கணித மேதையான ஐவன் பெட்ரோவ்ஸ்கி அவர்களின் மாணவி ஆல்கா லேடிசென்ஸ்கயா என்பது குறிப்பிடத்தக்கது.

3

மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய டி.ராஜேந்தர்; ஏப்ரல் 26 கல்யாணம்

0
மகனின் காதலுக்கு

மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய டி.ராஜேந்தர்; ஏப்ரல் 26 கல்யாணம்

பொதுவாக திரைப்பிரபலங்கள், பணக்காரர்கள் வயதில் மூத்த பிள்ளைகளுக்குத்தான் முதலில் திருமணம் செய்துவைப்பார்கள்.

ஆனால் இயக்குனர் டி.ராஜேந்தர் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரிவர்சில் திருமணம் செய்துவைத்து வருகிறார்.

சில வருடங்கள் முன்பு டி.ஆர் மகள் இலக்கியாவின் திருமணத்தை நடத்தி வைத்தார். தற்பொழுது இரண்டாவது மகன் குறளரசனுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் காதலிக்காக குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி சிம்பிளாக திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போ சிம்புவுக்கு எப்போ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் சிம்பு-ஹன்சிகா மீண்டும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது.

லண்டன் சென்ற போதுதான் சிம்பு, நயன்தாராவைப் பிரிந்தார். தற்பொழுது அதே லண்டனில் ஹன்சிகாவுடன் இணைந்துள்ளார்.

ஏற்கனவே பிரிந்து, மீண்டும் இணைந்துள்ளனர். எனவே, இந்த முறை நங்கூரம் போல் நச்சென்று ஒட்டிக்கொண்டுள்ளனராம்.

கூடிய விரைவில் சிம்புவின் திருமணச் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காதல் தோல்வி செய்தி வந்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல…

3

அடிமாட்டு விலைக்குச் சென்றுவிட்டது தேமுதிக பேரம்

0
தேமுதிக பேரம்

அடிமாட்டு விலைக்குச் சென்றுவிட்டது தேமுதிக பேரம்

தமிழக தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி முன்னிலையில் கூட்டணித் தலைவர்களை மேடையில் அறிமுகம் செய்ய அதிமுகவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. பாமகவை விட அதிக சீட்டுக்கள் கொடுத்தால் தான் கூட்டணி என உடும்புப்பிடியாக உள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த  அதிமுக பொதுக்கூட்ட மேடையில் இருந்த விஜயகாந்த் படத்தை அகற்றிவிட்டது.

இதனால் தேமுதிக கட்சியின் சுதீஷ் திமுக கட்சியின் துரைமுருகனிடம் போனில் பேசியுள்ளார்.

அங்கும் துரைமுருகன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டன இனி யாருக்கும் சீட் இல்லை எனக் கறாராகக் கூறிவிட்டார்.

அந்த ஆடியோவையும் எதிர்க் கட்சியினருக்கு அனுப்பிவிட்டார். இதனால் பொதுக்கூட்டம் ஆரம்பம் ஆவதற்குள் கூட்டணியை உறுதி செய்தால் தேமுதிகவிற்கு சீட் வழங்க முடிவு செய்துள்ளனர்.

தற்போதைய நிலையை தேமுதிக தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் அடிமாட்டு விலையைவிட மோசமாக பேரம் பேசவேண்டிய நிலை ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

3

டாக்டர் ப்ரீத்தி ரெட்டியின் பிணம் சூட்கேசில்; காதலன் காரில் மோதி பலி

0
டாக்டர் ப்ரீத்தி

டாக்டர் ப்ரீத்தி ரெட்டியின் பிணம் சூட்கேசில்; காதலன் காரில் மோதி பலி

இந்திய வம்சாவளியான டாக்டர் ப்ரீத்தி ரெட்டி ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

பல் மருத்துவரான இவர் கடந்த ஞாயிறு அன்று சிட்னியில் நடந்த மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்டார்.

இதற்காக அருகில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். அவருடன் அவருடைய காதலர் ஒருவரும் தங்கியுள்ளார்.

அவரும் ப்ரீத்தியுடன் பணிபுரியும் மருத்துவர் ஆவர். இருவரும் மாநாடு முடிந்து தங்களுடைய அறைக்குச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு நீண்ட நேரமாகியும் இருவரைப்பற்றியும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் போலீசார் அவர்களைத் தேடினர்.

அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமாரக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.  அதன் பிறகு ப்ரீத்தியின் சடலம் அவருடைய கார் டிக்கியில் ஒரு சூட்கேசில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவருடன் தங்கியிருந்த அவருடைய காதலர் இந்தக்கொலையை செய்திருப்பாரோ என முதலில் சந்தேகித்து அவரை ட்ராக் செய்தனர்.

ஆனால் ப்ரீத்தி இறந்த சில மணி நேரத்திலேயே அவருடைய் காதலர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரில் வந்த காரில் மோதி பலியாகியுள்ளார்.

இதனால் போலீசாருக்கும் மேலும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் மர்மாக இருவர் மரணமடைந்து உள்ளனர்.

அதுவும் மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இது நடந்துள்ளது. இதில் ஏதும் சதிச்செயல் உள்ளதா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8 டிரைலர் வெளியானது

0
கேம் ஆஃப் த்ரோன்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8 டிரைலர் வெளியானது.

உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரே இணைய சீரியல் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones) ஆகும். இதுவரை 7 சீசன்கள் வெளியாகியுள்ளது. இதில் 7வது சீசன் மட்டும் 7 எபிசோட்களும் மற்ற 6 சீசன்களும் 10 எபிசோட்கள் கொண்டுள்ளது.

ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இறுதி சீசன் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என இதன் தயாரிப்பு நிறுவனம் எச்‌பி‌ஓ தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று 2 நிமிட டிரைலர் மட்டும் வெளியானது.

நம் எதிர்பார்ப்புக்கு மாறாக தான் இதன் முடிவு இருக்கும் என்று இதில் நடித்துள்ள சில நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

66 வயதான ஜார்ஜ் ஆர்‌ஆர் மார்டின்(George RR Martin) எழுதிய சாங்க்ஸ் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (Songs of Ice and Fire) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட ஒரு தொடர் ஆகும்.

3000 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் மிகப்பழமையான இரண்டு கண்டங்கள் மட்டுமே தொடரில் வரும். ஒன்று வெஸ்டோரோஸ் (Westeros) மற்றும் எஸ்சோஸ் (Essos) ஆகும்.

இதில் வெஸ்டோரோஷில் இருக்கும் கிங்க்ஸ் லண்டிங் (kingslanding) தான் அனைத்துக்கும் தலைநகரம் ஆகும்.

கிங்க்ஸ் லண்டிங்கில் உள்ள அயர்ன் த்ரோன்(Iron Throne) என்ற அரியணையை கைப்பற்ற ஒன்பது அரச குடும்பங்கள் போட்டியிடுவதை மையமாக கொண்டதுதான் இதன் கதைச்சுருக்கம்.

3

தோனி: முடிந்தால் பிடித்துப்பார் ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி

0
தோனி

தோனி: முடிந்தால் பிடித்துப்பார் ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பொழுது ஃபீல்டிங் செய்ய களம் இறங்கிய தோனியைக் கட்டிப்பிடிக்க ஓடி வந்த ரசிகரிடம் சிக்காமல் தோனி ஓட ஆரம்பித்து இறுதியில் கட்டியணைத்து ரசிகரை மகிழ்வித்தார்.

நாக்பூர் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 250 ரன்களில் ஆட்டம் இழந்தது. சிறப்பாக விளையாடிய கோலி தன்னுடைய 40ஆவது சதத்தை பதிவு செய்தார்.

ஃபீல்டிங் செய்ய இந்திய அணி வரும் பொழுது செக்யூரிட்டிகளை மீறி வழக்கம் போல் தோனி ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்தார்.

இதை அறிந்த தோனி, ரசிகரிடம் சிக்காமல் ஓட்டம் பிடித்தது பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. இறுதியில் ரசிகரிடம் சரணடைந்ததால் ரசிகர் தோனியை கட்டிப்பிடித்து விட்டு சென்று விட்டார்.

இந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுபோன்று தோனியை தொட பலமுறை அவரது ரசிகர்கள் மைதானத்தில் நுழைவது பழகிப்போன ஒன்று.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

3

ஜக்கி வாசுதேவ், காஜல் அகர்வால் முத்தம் – Fact Check

0
ஜக்கி வாசுதேவ் காஜல் அகர்வால் முத்தம் Jakki vasudev Kajal agarwal kiss video

ஜக்கி வாசுதேவ், காஜல் அகர்வால் முத்தம். Jakki vasudev Kajal agarwal kiss video – Fact Check. மஹா சிவராத்திரி ஈசா யோகா மையம் 2019.

ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டப்படும்.

ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நிலம். ஜக்கி வாசுதேவ் ஒரு போலிச் சாமியார். இப்படி பல சர்ச்சைகள் ஜக்கி வாசுதேவைச் சுற்றி உள்ளது.

அதேவேளை மிகப்பெரிய ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடியே நேரில் வருகை தந்து திறந்து வைத்தார்.

இந்த வருடமும் ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு முக்கிய விருந்தினராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

மேலும் சினிமா நடிகைகளான தமன்னா, கஜல் அகர்வாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

பாடகர் கார்த்தி இந்த விழாவில் கலந்துகொண்டு பாடினார். அதற்கு ஏற்றவாறு ஜக்கி வாசுதேவ் ஆடினார்.

அவருடன் சேர்ந்து தமன்னா, காஜல் அகர்வால் இருவரும் ஆடினார். அப்போது காஜல் அருகில் சென்று ஜக்கிவாசுதேவ் ஏதோ கூறினார்.

காஜல் அகர்வாலுக்கு சரியாக காதில் விழவில்லை என்பதால் அவர் அருகில் சென்று என்ன என்று காதை ஜக்கியின் வாயருகில் கொண்டு சென்றார்.

காஜல் அகர்வாலின் காதில் வித்தியாசமாக கம்மல் இருந்ததால் அதைப்பற்றியே ஜக்கிவாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதை மட்டும் போட்டோ எடுத்து கஜல் அகர்வாலை ஜக்கிவாசுதேவ் முத்தம் கொடுத்துவிட்டதாகக் கூறி வதந்திகள் பரவிவிட்டனர். உண்மையில் நடந்தது இது தான்.

3

சிம்புவை மயக்கிய ஹன்சிகா; மீண்டும் பற்றிக்கொண்டது காதல்!

0
சிம்புவை மயக்கிய ஹன்சிகா

சிம்புவை மயக்கிய ஹன்சிகா; மீண்டும் பற்றிக்கொண்டது காதல்!

சிம்புவிற்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம். எத்தனை முறை எத்தனை பேரைக் காதலித்தாலும் கடைசியில் என்னவோ ப்ரேக்அப் தான்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பிரேக்அப். நயன்தாராவுடன் ப்ரேக்அப். ஹன்சிகாவுடன் பிரேக் அப். தெரிந்து இத்தனை, தெரியாமல் எத்தனையோ?

ஹன்சிகாவிற்குப் பிறகு சிம்பு மீண்டும் யாருடனும் கிசுகிசுக்கப் படவோ, யாரையும் காதலிக்கவோ இல்லை.

இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைந்துள்ளனர். இந்த இணைப்பே காதலுக்காகத்தான் எனப் பேச்சு அடிபட்டுள்ளது.

மஹா திரைப்படத்தில் கஞ்சா சாமியாராக ஹன்சிகா நடித்தார். ஆனால் இப்படம் போனி ஆகவில்லை.

இதனால் முன்னாள் காதலர் சிம்புவிற்கு போன் செய்து இந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் காதலி உதவி கேட்டதும் சிம்பு மறுக்காமல் நடித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

சிம்புவின் பெருந்தன்மையைப் பார்த்தவுடன் ஹன்சிகாவிற்கு மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாம். இருவரும் மீண்டும் லவ் பேட்ஸ் ஆக மாறியுள்ளனர்.

இதேபோன்றே ‘இது நம்மாளு’ படத்தில் நயன்தாரா-சிம்பு மீண்டும் இணைந்து நடித்தனர். மீண்டும் இருவரும் காதலிப்பதாக தகவல் கசிந்தது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

அதேவேளை படம் தாறுமாறாக ஓடி ஹிட் அடித்தது. அதேபோன்று மஹா படத்தை ஓடவைக்க சிம்புவை வைத்து ஹன்சிகா கேம் ஆடினாலும் ஆடுவர் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ சிம்புவிற்கு காதல் கைகூடி ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக கன்னி கழிந்தால் சரி தான்.

3

Thadam Movie Review | தடம் திரைவிமர்சனம்

0
Thadam Movie Review

Thadam Movie Review | தடம் விமர்சனம்

ஓவ்வொரு முறையும் பார்த்து அலுத்துப்போன கதைகளையே மீண்டும் பார்க்கும்போது இனி தியேட்டர் பக்கம் வர்றது வேஸ்ட் என ரசிகர்கள் முடிவு கட்டிவிடுவர்.

அப்படி தியேட்டர் பக்கம் வராத தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோடர்களைக்கூட தியேட்டருக்குக் கூடிக்கொண்டு வருவது தடம் போன்ற படங்கள்.

தடையறத்தாக்க கூட்டணிக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்த அருண்விஜய்-மகிழ்திருமேனி கம்போஹிட் படம் தடம்.

இதுவரை எங்கோ ஒரு மூளையில் இயக்குனர்-நடிகர் என முத்திரை பதித்து வைத்திருந்த இருவரும் ஓவர் நைட்டில் தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகிவிட்டனர்.

மகிழ்திருமேனியை முதிர்ந்த முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றுவிட்டது இப்படம்.

டைட்டிலில் வரும் இசையைக் கேட்டதும் கொஞ்சம் கசப்பான கஷாயம் குடித்தது போன்று இருந்தது. டைட்டில் முடிந்ததும் இசையால் நம்மைக் கட்டிப்போட்டுவிட்டார் அருண் ராஜ்.

ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். நிறைய ஷாட்டுகள் டி.ஐ. பண்ணாமல் சிறப்பாக நேர்த்தியாக எடுத்திருந்தனர்.

பல காட்சிகள் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட படம் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அந்த அளவிற்கு செயற்கைக் காட்சிகள் குறைக்கப்பட்டு இருந்தது.

அருண் விஜய்யிடம் என் பெயர் தெரியுமா எனக் காதலி கேட்கும் காட்சியில் ஏதோ ஒரு உணர்ச்சியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. அதேபோன்று படத்தில் நிறையக்காட்சிகள் உள்ளது.

இரட்டை வேடம் என்றால் கூடுதல் மெனக்கெட வேண்டும். அதிலும் ஒரு ஆக்ரோசமான பைட் காட்சிகள் வேறு உள்ளது. அருண் விஜய் மிகவும் சிரத்தையுடன் நடித்துள்ளார்.

எடிட்டிங், கிராப்பிக்ஸ் பணிகளும் சிறப்பாக இருந்தது. எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

வித்யா பிரதீப் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஓவர் குளோசப்பில் பார்த்தால் உதட்டுக்கு மேல் சின்ன மச்சம்.

நயன்தாராவை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறார். ரெண்டு பெரும் கேரளா என்பதாலோ என்னவோ ‘நான் ஐடன்டிக்கள் டிவின்ஸ்’ போன்று உள்ளனர்.

இரண்டு நாயகிகள். ஆனால், ஹீரோயினுக்கான தோற்றம் இல்லாமல், சாதாரண பெண்களைப் போன்றே தோன்றினர். அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.

அதிலும் தன்யா ஹோப், பெமினா மிஸ் இந்தியா வென்றுள்ளார். இருந்தாலும் இவர்கள் தமிழ் சினிமாவிற்கு ஏற்ற முகங்களாகத் தோன்றவில்லை.

சோனியா அகர்வாலின் சென்டிமென்ட் காட்சி ஏதோ ஸ்பீட் பிரேக்கர் போல் உள்ளது. உருக்கமாக அழும் காட்சியை சற்று குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் தடம் தரமான படம்

3

அபினிச்செடிகளை அழிக்கும் பச்சைக் கிளிகள்

0

அபினிச்செடிகளை அழிக்கும் பச்சைக் கிளிகள்

‘ஒரு புறம் மழை வரையறை இல்லாமல் பெய்கிறது, மற்றொரு புறம் பச்சைக்கிளிகள் எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது’ என்று அபினிச்செடி அல்லது கசகசாச்செடி உற்பத்தி செய்வோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும் பறவைகளை விரட்ட அதிகமாக சத்தம் கேட்கும் கருவிகளை பொறுத்த வேண்டும், அல்லது வெடிச்சத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இதை செய்தாலும் கிளிகளை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்கான எந்த உதவியும் அரசாங்கம் செய்து தரவில்லை யாரிடம் நாங்கள் முறையிடுவது என்று மத்தியப்பிரதேச மாநில விவசாயிகள் வருத்தப்படுகிறனர்.

நாங்கள் அனைத்து பயிர்களையும் அறுவடை செய்த பின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவோம். அதற்கான உரிமமும் எங்களிடம் உள்ளது.

அபினிச்செடிகளை ஒரு முறை கிளி சாப்பிடும் பொழுது இதற்கு அடிமையாகி விடுகிறது. இதனால் மீண்டும் மீண்டும் வர தொடங்கிவிடுகிறது என்று அபினிச்செடிகளின் வல்லுநர் டாக்டர் ஆர்‌எஸ் சுந்தவத் தெரிவித்துள்ளார்.

அபின் எனப்படும் போதைப்பொருள் அபினிச்செடிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த அபின் மருத்துவத்துறைகளில் வலிநீக்கியாகவும், மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் கசகசாவக பயன்படுத்தப்படுகிறது.

அபினியை உற்பத்தி செய்வதற்கு முழு அரசாங்க உரிமம் பெற்றிருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்தால் கடுமையான சிறை தண்டனை அளிக்கப்படும்.

 

3