Home Blog Page 297

அஜித்தின் தீராக் கோபத்திற்கு ஆளான இயக்குனர்கள்!

0
அஜித்தின்

அஜித்தின் தீராக் கோபத்திற்கு ஆளான இயக்குனர்கள்!

அஜித்தின் திரையுலக பயணம் என்றுமே ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்படும். விண்ணை முட்டும் வெற்றியடைந்த படங்களும் உண்டு. படுதோல்வி அடைந்த படங்களும் உண்டு.

ஆஞ்சநேயா, ஜீ, பரமசிவம், ஆழ்வார் என படுதோல்வி படங்களை கொடுத்துக்கொண்டும் சுமார் வெற்றிப்படங்கள் சிலவற்றை கொடுத்துகொண்டிருந்த நேரம் அது.

அப்படியே டாப் கியர் போட்டு அவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் பில்லா. அடுத்து ராக்கெட் வேகத்தில் மேலே தூக்கிய படம் மங்காத்தா. இருபடங்களும் அஜித்தின் கேரியரை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற படங்கள்.

அஜித்தை வைத்து படமே இயக்கமாட்டேன் எனக்கூறிய கெளதம்மேனன் கேட்டதுமே வாய்ப்புக்கொடுத்தவர் அஜித்.

ஆனால் வெங்கட்பிரபுவும்,  விஷ்ணுவர்தனும் காலைப்பிடித்து கெஞ்சாத குறையாக வாய்ப்புக்கேட்டும் தொடர்ந்து வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறார் அஜித்.

இவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்காகவே சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்துள்ளார்.

பில்லா வெற்றிக்குக் காரணமே நான் தான் என விஷ்ணுவர்தன் மிகவும் தலைக்கணத்துடன் நடந்துகொண்டுள்ளார்.

மங்காத்தா படம் வெற்றி அடைந்தவுடன் அஜித்தே வெங்கட் பிரபுவிடம் நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாம் எனக் கேட்டுள்ளார்.

ஆனால் வெங்கட்பிரபு முடியாது என மறுத்துவிட்டு கார்த்தியை வைத்து பிரியாணி படம் இயக்கச் சென்றார். படம் ப்ளாப்.

அதேபோன்று தெய்வத்திருமகன் படம் பார்த்துவிட்டு ஏ.எல்.விஜய்க்கு போன் செய்துள்ளார். அவரும் முடியாது எனக் கூறிவிட்டு தாண்டவம் படம் இயக்கச் சென்றுவிட்டார். படம் ப்ளாப்.

பலா தன் படத்தில் இருந்து அஜித்தை நீக்கினர். இன்று அவரையே ஒரு தயாரிப்பாளர் தூக்கி வீசிவிட்டார்.

ஏதோ ஒரு வகையில் மனதைக் காயப்படுத்தியவர்களிடம் மீண்டும் கூட்டணி சேர்வதில்லை என அஜித் கொள்கை முடிவாகவே வைத்துள்ளாராம்.

3

நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்

0

நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய விமானப்பயணி அபிநந்தனை விடுவித்து இந்தியாவிற்கு அனுப்பி இரு நாட்டின் குழப்பத்தை தீர்த்தார்.

இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் “#NobelPeacePrizeForImranKhan என்ற ஹஸ்டாக் பரவி வந்தது.

இதற்கிடையே இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பாவட் சௌத்ரி, பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது, பிரதமர் இம்ரான்கானிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இம்ரான்கான் இன்று செய்த ட்வீட்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெரும் தகுதி எனக்கு இல்லை.

உண்மையில் யார் காஷ்மீர் மக்களின் தேவை அறிந்து அதை சரி செய்கிறார்களோ? அங்கு அமைதியையும் மனித நேயத்தையும் வளர்ப்பவர்களே இதைப் பெறுவதற்கான தகுதியுடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற நாட்டுத் தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாகவும் குறிப்பாக அமெரிக்க பிரதமர் டிரம்ப், வேண்டுகோளின் படியும் விமானி அபிநந்தனை விடுதலை செய்து இந்தியா அனுப்பினார்.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி‌.ஆர்‌.பி‌.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவீரவாத முகாம்களைத் தாக்கியது.

நம்முடைய ஒரு ஜெட் விமானம் ஒன்று தாக்கப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய்யுடன் சேர்ந்து கட்சி துவங்க திட்டமா?- வரலட்சுமி அதிரடி

0
விஜய்யுடன்

விஜய்யுடன் சேர்ந்து கட்சி துவங்க திட்டமா? விஜய்யின் புரட்சியே தேவை; சரத்குமார் கட்சியுடன் தொடர்பில்லை என வரலட்சுமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தைரியமாக நடித்துவரும் நடிகை.

சர்கார் படம் மூலம் அரசியல் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். தந்தை சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகளிர் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் கலந்துகொண்டார். அப்போது அவரின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது, அரசியல் படங்களில் நடித்துள்ளேன். அரசியலைப் பற்றியும் நன்கு கற்று வருகிறேன்.

அரசியல் ஒன்றும் கெட்ட வார்த்தையல்ல. மிகச் சரியான நேரத்தில் அரசியலுக்கு நிச்சயம் வருவேன்.

அதேவேளை அப்பாவின் கட்சி, அவரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு ஒரு விரல் புரட்சியே தேவை எனக்கூறினார்.

ஒரு விரல் புரட்சி என்பது சர்கார் படத்தில் விஜய் செய்யும் புரட்சி ஆகும். அதுதான் தமிழகத்திற்கு தேவை எனவும் கூறியுள்ளார்.

சரத்குமாரின் அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் விஜய் கட்சி துவங்கினால் அதில் இணைய வரலட்சுமி முடிவு செய்துள்ளாரோ?

3

ஜடேஜா மனைவி ரிவாபா பாஜகவில் இணைந்தார்

0
ஜடேஜா மனைவி ரிவாபா

ஜடேஜா மனைவி ரிவாபா பாஜகவில் இணைந்தார்

ரவீந்திர ஜடேஜா, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்பவர். ஜடேஜாவும் ரிவாபாவும் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் நேற்று பாஜக கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூணம் மாடம் முன்னிலையில் ரிவாபா பாஜக கட்சியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ரிவாபாவை காவித்துண்டு அணிவித்து கட்சியில் சேர்த்துக் கொண்டனர்.

கடந்த வருடம் சாலையில் சென்ற போலீசார் ஒருவரை ரிவாபா ஓங்கி அடித்ததாக சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

3

புதுப்பேட்டை 2: என் பேரு கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா?

0

புதுப்பேட்டை 2: என் பேரு கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா?

2006 ஆம் ஆண்டு Selvaraghavan இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்பேட்டை. தமிழில் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவி.

பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாது. அதேவேளை காலம் காலமாகப் பேசப்படும் படமாக அமையும்.

புதுப்பேட்டை படமும் அப்படித்தான் செல்வராகவன் மதிப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உயர்த்திய படம்.

அதன்பிறகு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் செல்வராகவனுக்கு மிகப்பெரிய பிம்பத்தைக் கொடுத்தது.

இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பதே ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்து வந்தது.

வை ராஜா வை படத்திலும் என் பேரு கொமாரு, கொக்கி குமாரு கேள்வி பட்டுருக்கியா? என வசனம் பேசி அசத்துவார்.

ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க விருப்பம் உள்ளது என செல்வராகவன் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட தனுசிடம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் புதுப்பேட்டை 2 படம் வெளியாகும் என பதிலளித்தார்.

3

ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிக்கும்: சேட்ஸ் ஆஃப் சாஹோ 2

0
ஸ்ரதா கபூர்

ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிக்கும்: சேட்ஸ் ஆஃப் சாஹோ 2

சாஹோ திரைப்படத்தில் வெளியான மேக்கிங் வீடியோவில் ஸ்ரதா கபூர் போலீஸ் ஆக நடிப்பது தெரிகிறது. இயக்குனர் சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகும் திரைப்படம் தான் இதுவாகும்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் 2017ஆம் ஆண்டே துவங்கியது. 300 கோடி செலவில் எடுக்கப்படும் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆகும்.

நடிகர் பிரபாஸ் பிறந்த நாளான 23 அக்டோபர் 2017ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர். அடுத்த பிறந்த நாளுக்கு அதவாது 23 அக்டோபர் 2018க்கு முதல் ஜப்டர் வெளியிட்டனர்.

இப்போது ஸ்ரதா பிறந்த நாளுக்கு இரண்டாவது ஜப்டர் வெளியிட்டுள்ளனர். இதில் கையில் துப்பாக்கியுடன் ஸ்ரதா இருப்பது தெரிகிறது. நேர்மையான போலீஸ் ஆக ஸ்ரதா நடித்துள்ளார் என்று தெரிகிறது.

ஹாலிவுட் ஆக்சன் டைரக்டர் கென்னி பேட்ஸை வைத்து அனைத்து சண்டைக்காட்சிகளும் எடுக்கப்படுகின்றன. அபு தாபியில் சண்டைக்காட்சிகள் மட்டுமே தோராயமாக 90 கோடி வரை செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் காட்சிகளுமே ரியல் ஆக எடுப்பதற்காக 37 கார்கள், 5 பெரிய டிரக்குகள் என சண்டைக்கு பயன்படுத்தி நாசம் செய்து இருக்கின்றனர்.

சாஹோ திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுவதாகவும் ஐதராபாத், மும்பை, அபு தாபி, துபாய் மற்றும் ரோமானியா நகரங்களில் படமாக்கி வருகின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜாக்கி ஷேரோப், நெயில் நிதின், மந்திரா பேடி மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளனர்.

3

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ‘ஐசிசி முழுநேர உறுப்பினர்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது

0
இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஐசிசி முழுநேர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது

இண்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சிலில் மொத்தம் 12 நாடுகள் மட்டுமே முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். 105 நாடுகள் இணை உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

முழுநேர உறுப்பினர்கள் அந்தஸ்து கொண்ட நாடுகள் மட்டுமே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்.

105 நாடுகளுக்குச் சென்ற வருடம் T20 போட்டிகள் விளையாட சர்வதேச அந்தஸ்தை ஐசிசி வழங்கியது. ஆனால் ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சர்வதேச அளவில் விளையாட முடியாது.

முழுநேர உறுப்பினர்களைக் கொண்ட 12 நாடுகள் மட்டுமே அனைத்துப் போட்டிகளையும் சர்வதேச அளவில் விளையாடத் தகுதி வாய்ந்தவர்கள்.

இந்த 12 பேர் பட்டியலில் இருந்து சில காரணங்களுக்காக இலங்கை அணி நீக்கப்பட்டது. தற்பொழுது 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 12 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், சவுத் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முழுநேர உறுப்பினர்கள் ஆவர்.

3

எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்

0
எலோன்

எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னுடைய முன்னாள் மனைவி அம்பர் ஹியர்ட் பிசினஸ்மேன் எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படங்களில் நடித்த பேர் போன ஒரு நடிகர் ஜாக் ஸ்பரோ என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் தெரியும்.

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜானி, ஹியர்ட் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சில மாதங்களிலே ஜானி படம் நடிக்க வெளிநாடு சென்று விட்டார்.

ஜானி இல்லாத நேரத்தில் ஹியர்ட் எலோன் மஸ்கை இரவு பார்ட்டிக்கு அழைக்க இருவரும் ஜானியின் சொகுசு பங்களாவில் இரவு முழுவதும் இருந்தனர்.

காலையில் தான் எலோன் மஸ்க் திரும்ப சென்றார் என்று பங்களாவின் செக்யூரிட்டிகள் கூறியுள்ளனர். இதை அறிந்த ஜானி டெப் நஷ்ட ஈடாக 50 மில்லியன் யு‌எஸ் டாலர்கள் கேட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டே இருவருக்கும் விவாகரத்து ஆனாலும் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஏற்கனவே ஹியர்ட், ஜானி தன்னை துன்புறுத்தியதாகவும் அடித்ததாகவும் கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஜானி விவாகரத்தின்போது அமைதிகாத்தார் தன்மீது குற்றம் இல்லை என்று நிரூபித்தார்.

தற்போது எலோன் மஸ்க், ஹியர்ட் ரகசிய தொடர்பு இருப்பதையும் வெளியீட்டு நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

3

மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்

0
மும்பை இந்தியன்ஸின்

மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்

ஐ‌பி‌எல் தொடரில் மூன்று கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் 8 எபிசோட்கள் கொண்ட டாக்குமெண்டரி தொடர் நெட்ப்லிக்ஸில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ப்லிக்ஸ் நிறுவனம் இந்தியத் தயாரிப்புகளில் முதலீடு செய்ய மிகவும் ஆவலாக இருக்கிறது. மார்ச் மாதத்திலயே மூன்று இந்தியத் தயாரிப்பு தொடர்கள் வெளியாகின்றன.

முக்கிய கதாப்பாத்திரங்களாக கேப்டன் ரோஹித் சர்மா, லேஜெண்ட் சச்சின் டெண்டுல்கர், தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே காட்டப்படுகின்றனர்.

அம்பானி குரூப்க்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படக் காரணம், அணியின் வெற்றிப்பாதை, மூன்று முறை சாம்பியன் வென்றவை இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் எடுக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் டாக்குமெண்டரி இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவது ஐ‌பி‌எல் போட்டிகளிலேயே இந்தியா பாகிஸ்தான் போல மிகவும் பரபரப்பான ஒரு போட்டி ஆகும்.

வருகிற 23-ஆம் தேதி ஐ‌பி‌எல் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

3

முதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்

0
முதல் ஒரு நாள் போட்டி

முதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி மந்தமான தொடக்கத்தையே கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 50 ரன்களும் மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் சமி, குல்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின் ஆடிய இந்தியா அணி 0 ரன்னில் தவான் ஆட்டமிழந்தார். கோலி மற்றும் ரோஹித் நிலைத்து ஆடினார். 80 ரன் இருக்கும் பொழுது கோலி ஆட்டமிழக்க, வரிசையாக ரோஹித்தும், ராயுடும் கிளம்பினர்.

பிறகு தோனி மற்றும் கேதார் நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தனர். இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

3