புதுமுகங்கள் அதிகம் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் உறியடி. அடிதடி, விறுவிறுப்புகளுக்குப் பஞ்சமே இல்லாத படம்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதை சூரியாவின் 2d எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய்குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பிரவீன்குமார். எடிட்டிங் லினு. விஸ்மாயா, சுதாகர் மேலும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்பொழுது இப்படத்தின் ப்ரமோ பாடல் வெளியாகியுள்ளது. வா வா பெண்ணே எனத் தொடங்கும் அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயங்கரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையா? பொய்யா?
சர்வதேச ஊடகங்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளது. ஆனால் இந்திய ஊடங்கள் 300 பேர் இறந்ததாகக் தெரிவித்துள்ளது.
இதில் எது உண்மை? என மத்திய அரசு தெளிவு படுத்தவேண்டும். புல்வாமா தாக்குதல் நடந்தவுடனும் சரி, அதற்கு இந்தியா பதிலடி தந்தவுடனும் சரி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் ஏன் கூட்டவே இல்லை?
உரி, பதான்கோட்டில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தபோது ஏன் பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை?
அப்படியாயின் இது அரசியலுக்காக நடந்தப்பட்ட பதில் தாக்குதலா? என பல சந்தேகக் கேள்விகளை எழுப்பி மம்தா பேசினார்.
ஒரு செய்தி அதிகம் பேசப்படும்போது அந்த செய்தியைப் பற்றிய அதிக போலிச் செய்திகளும் சமூகவலைதளங்களில் பரப்படும்.
சமீபத்தில் பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானி அபினந்தன் வர்த்தமன் மனைவி என்று வேறு நபர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
மேலே உள்ள மூன்று புகைப்படங்களும் கடந்த சில தினங்களாக அபினந்தன் மனைவி என பகிரப்பட்டு வருகின்றது.
முதல் படம்
முதல் படத்தில் இருப்பவர் ஒரு ராணுவ வீரரின் மனைவி. அவர் அபினந்தனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவரது குடும்ப உறுப்பினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இரண்டாவது படம்
இரண்டாவதாக இருப்பவர் டாக்டர் ஃபரிஹா புக்தி. இவர் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலை செய்பவர்.
இவர் தான் அபினந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இந்த இருவரின் புகைப்படங்களும் அபினந்தனின் மனைவி என சமூக வலைதளங்களில் தவறாகப் பகிரப்பட்டு வருகின்றன.
மூன்றாவது படம்
கடைசியாக உள்ள புகைப்படம் அபினந்தன் மனைவி மகன்கள் என பகிரப்பட்டு உள்ளது. சில மீடியாக்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
உண்மையான அபினந்தன் மனைவி இவரா? இந்தப் புகைப்படமும் சந்தேகத்தை எழுப்பும் விதமாகவே உள்ளது.
அபினந்தன் இப்போது உள்ள அதே தோற்றத்தில் புகைப்படத்தில் உள்ளார். மேலும் இந்த புகைப்படம் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டது போன்றும் இல்லை.
மிகவும் பழைய புகைப்படத்தில் அபினந்தன் அதே தோற்றத்துடன் இருப்பது சாத்தியமில்லை.
மேலும் அவரது மனைவி தமிழகத்தைச் சேர்ந்தவர் போன்றே இல்லை. அபினந்தனைவிட வயதில் மூத்தவர் போன்றும் காட்சியளிக்கிறார்.
அபினந்தனுக்கு இரு குழந்தைகள் உள்ளது. ஆனால் புகைப்படத்தில் ஒரு குழந்தையே உள்ளது. எனவே இது போட்டோஷாப் செய்த புகைப்படம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அபினந்தன் சொந்த ஊர் திருவண்ணாமலை அருகில் உள்ளது. அவருக்கு இரு குழந்தைகள். மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
அவருடைய பெற்றோர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர் என்பது மட்டுமே வெளியுலக்கு தெரிந்த செய்தி.
ஹவாய் நிறுவன சிஇஒ ‘மேங் வான்ஸோ’ பெயிலில் வெளியே வந்தார்.
கனடா ஜெயிலில் இருந்த சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிஇஓ மேங் வான்ஸோ பெயிலில் வெளியே வந்தாலும் அவரால் சொந்த நாடு திரும்ப இயலாது.
இறுதிக் கட்ட வழக்குகள் அவருக்கு இன்னும் இருப்பதால் தற்போது கனடாவில் வேன்கூவர் நகரத்தில் மேங் வான்ஸோ தங்கி இருக்கிறார்.
ஹவாய் நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகளை அமெரிக்க நாடு தொடுத்துள்ளது.அவை பின்வருமாறு வங்கி ஊழல், சட்டம் ஒழுங்கு மீறல் (obstruction of justice) மற்றும் தொழில்நுட்பம் திருடுதல் போன்ற பல்வேறு குற்றங்களை முன் வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி, ஈரான் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஹவாய் செய்துவிட்டதாக, மேங் வான்சோவை கைது செய்ததாக அமெரிக்கா கூறியது.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் மேங் வான்ஷோ அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சீன வர்த்தகப்போர்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடுமையான வர்த்தகப்போர் நடைபெற்று வருகின்றது. சீன நிறுவனங்களின் வளர்ச்சி, அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.
எனவே சீனத் தயாரிப்புகளை, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலை நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஹவாய்யின் பங்குகளை அமெரிக்காவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்தே அமெரிக்கா இந்த வழக்கை இழுத்தடிக்கிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.
வலைப் பயிற்சியின்போது தோனி நீண்ட நேரம் பயிற்சி செய்ததால் எதிர்பாராத விதமாக ஒரு பந்து அவரது முழங்கையில் பலமாகப்பட்டது.
பெரிய காயம் எதுவும் ஆகவில்லை என்றாலும் மருத்துவக்குழு அவரை முழுதும் குணம் அடைந்த பின்னரே விளையாட அனுமதிப்பதாக கூறியுள்ளது.
மாற்று கீப்பர்கள் ஏற்கனவே ரிசப் பாண்ட், ராகுல் மற்றும் ராயுடு உள்ளனர். இதனால் தோனியின் இழப்பு இந்தியாவைப் பெரிதும் பாதிக்காது. ரிசப் பாண்ட் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாட உள்ளார்
ஏற்கனவே டி20 தொடரில் தோற்றதால் ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்லேடன் மகனைப்பற்றி தகவல் கூறினால் 1 மில்லியன் டாலர்கள்: அமெரிக்கா
அல்கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனைப் பற்றித் துப்புக் கொடுத்தால் 1 மில்லியன் டாலர்கள் பரிசளிப்பதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.
ஹம்சா பின்லேடன் தற்போது எங்கு இருக்கிறார் என்று சரியாக யாருக்கும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
ஒசாமாபின்லேடன் இறந்த பிறகு ஹம்சா தன்னுடைய தாயுடன் சில காலம் கழித்து விட்டு தற்போது அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக வளர்ந்து வருவதாக அமெரிக்கா நம்புகிறது.
தன் தந்தையை கொன்றவர்களைப் பழி வாங்கும் எண்ணத்தோடு தீவிரவாத அமைப்பை மேலும் வலுப்படுத்த முயல்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான 2015-ல் இவர் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதில் அனைத்து தீவிரவாதிகளும் சிரியாவில் ஒன்று கூடுவோம் என்று கூறியுள்ளார்.
ஹம்சா பின்லேடன் முகமது அட்டாவின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்றும், முகமது அட்டா செப்டம்பர் 11, 2001 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
WANTED. Up to $1 million for information on Hamza bin Laden, an emerging al-Qa'ida leader. Hamza is son of Usama bin Laden and has threatened attacks against the United States and allies. Relocation possible. Submit a tip, get paid. https://t.co/LtBVhsrwTc#RFJpic.twitter.com/gmx5hkoSzQ
LKG Movie Review | எல்கேஜி திரைவிமர்சனம் – நவீன அமைதிப்படை
ஆர்.ஜே.பாலாஜி 120 ரூபாய் ரிவியூ என்கிற தலைப்பில் வானொலியில் செய்த திரைவிமர்சனம் மூலம் தமிழகம் முழுவதும் பாப்புலராக மாறினார்.
பல திரைப்பிரபலங்கள் இவரால் கண்கலங்காத நாளே இல்லை. அஞ்சான் படத்தை மரண ஓட்டு ஓட்டினார்.
இதனால் இவருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. தனஞ்செயன் மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றார்.
அதன்பிறகு ஆர்.ஜே. பாலாஜி ரிவியூ செய்யும் வேலையைவிட்டு விட்டு காமெடி நடிகராக வலம் வந்தார்.
எல்.கே.ஜி. படம் மூலம் நடிகராக உருவெடுத்துவிட்டார். அமைதிப்படை படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த நக்கல் அரசியல் படம் என்ற மகுடத்தை எல்கேஜி படத்திற்கு கொடுக்கலாம்.
இந்த காலத்தின் நவீன அரசியல் எப்படி நடிக்கிறது என்பதை முற்றிலும் வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது இப்படம்.
மீம் கிரியேட்டர்கள் எப்படி விலை போகின்றனர்? கார்பரேட் நிறுவனங்களின் தேர்தல் களப்பணி, நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் இப்படி பல நிகழ்வுகள் இந்த படத்தின் மூலம் வெட்டவெளிச்சமாக மாறியுள்ளது.
நாங்கள் புத்திசாலி என நினைத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலர் இன்னும் முட்டாள் தனமாகவே முடிவு எடுக்கின்றனர் என்பதற்கு படத்தின் கிளைமேக்சே சான்று.
அரசியல் செய்ய நல்லவனா இருக்கணும் அவசியம் இல்ல. நல்லா பேச தெரிந்தால் போதும் என்னும்போது இங்க எவனும் யோக்கியம் இல்ல என நெத்தி அடியாகப் படம் முடிகிறது.
ஒட்டுமொத்தப் படத்தின் வெற்றியும் அந்த ஒற்றை கிளைமேக்ஸில் உள்ளது. நாளைக்கே ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நின்றால் நல்லவன் என ஓட்டுப்போடும் இந்த உலகம்.
படத்திற்கு இசை, ஒளிப்பதிவு மிகமுக்கிய பக்கபலம். சுமாரான சீன்களையும் சூப்பரான சீன்களாக மாற்றிவிடுகிறது இக்கூட்டணி.
இயக்கம் புதுமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு. இது ஒரு அறிமுக இயக்குனர் படம் என எங்குமே தோன்றவில்லை.
அரசியல் நேரத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அரசியல் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய படமும் கூட.
அபிநந்தனை வைத்து அரசியல் செய்யவேண்டாம்; ராணுவ வீரரின் மனைவி எச்சரிக்கை வீடியோ
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவீரவாத முகாம்களைத் தாக்கியது.
நம்முடைய ஒரு ஜெட் விமானம் ஒன்று தாக்கப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து ராணுவ வீரரின் மனைவி ஒருவர் வீடியோவில் கூறியதாவது
அனைவருக்கும் வணக்கம், நான் ராணுவ வீரர் மனைவி பேசுகிறேன். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
கணவன், மகன், தந்தை என ஒவ்வொரு குடும்பமும் இழந்து தவிக்கிற இந்த நிலைமையை அரசியல்வாதிகளே உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம்.
ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகத்தை வைத்து நீங்கள் தயவு செய்து ஆதாயம் தேடாதீர்கள். என்னுடைய கணவன் (அபிநந்தன்) இல்லாத இந்த நிலைமையில் நாங்கள் அனுபவிக்கும் கஷ்டமும் வலியும் உங்களுக்குத் தெரியாது.
வீரர்களின் தியாகத்தை வைத்து பேரணி, கட்சி கூட்டம் போன்றவை நடத்த உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை.
பிஜேபி கட்சியே குறிப்பாக உங்களை தான் சொல்கிறேன் வீரர்களின் தியாகத்தை வைத்து உங்கள் அரசியலை செய்யாதீர்கள்.