Home Blog Page 299

அஜித்துடன் ஜான்வி; நடிகையுடன் பாம்பே பறக்கும் போனி கபூர்!

0
அஜித்துடன் ஜான்வி

அஜித்துடன் ஜான்வி; நடிகையுடன் பாம்பே பறக்கும் போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். இவர் தற்பொழுது நடிகர் அஜித்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்க உள்ளார்.

இவருடைய மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் போனிகபூரின் மகள் பாலிவுட்டில் போணியாகவில்லை.

இதனால் அவரைத் தமிழ் படத்தில் அறிமுகம் செய்வது என முடிவு செய்துவிட்டார். ஜான்வி, நடிகர் அஜித்தின் மகளாக பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்று கூடத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கோலிவுட்டில் ஒரு நடிகையை பாலிவுட் பக்கம் அழைத்துச்செல்ல போனிகபூர் முடிவு செய்துள்ளார்.

அவருடைய தயாரிப்பில் பாலிவுட் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் என்ன தான் சிறப்பாக நடித்தாலும், ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்தும் வசூல் ரீதியாக தோல்விப்படங்களாக மாறியது.

இதனால் அவர் ராசியில்லா நடிகை என தமிழ் சினிமாவில் முத்திரையும் குத்திவிட்டனர். இந்நிலையில் அவரைப் பாலிவுட்டில் அறிமுகம் செய்ய உள்ளார் போனிகபூர்.

3

சோம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

0
சோம்பு

சோம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இந்தியர்களின் உணவில் சோம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நம்முடைய மசாலா பட்டியலில் இது கண்டிப்பாக இடம்பெறும்.

நம்மில் பெரும்பாலோனோர் உணவிற்குப்பின் புத்துணர்ச்சிக்காகவும் செரிமானத்திற்காகவும் சோம்புவை சாப்பிடுவதுண்டு.

சோம்பின் நன்மைகள்

நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்ற திடமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் பொழுது செரிமானத்திற்காக சோம்புவை உணவிற்குப்பின் சாப்பிடுவது நல்லது.

வெயில்காலங்களில் நம்முடைய உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல் சூட்டை தணிக்கும் தன்மையும் கொண்டது.

வழக்கத்திற்கு மாறான வயிற்று வலி ஏற்படும் பொழுது சோம்புவை எடுத்துக்கொள்வது உடலுக்கு மிக நல்லது. இது சமயங்களில் வலி நிவாரணியாக செயல்படும் தன்மையும் கொண்டது.

நாம் தொடர்ச்சியாக சோம்புவை உணவில் எடுத்துக்கொண்டால் மூட்டு வலி தசை வலிகள் ஏற்படுதலை குறைக்கும் என ஆய்வு கூறுகிறது.

நீரிழிவு நோய் கொண்டோருக்கு சோம்புவை கொதிக்க வைத்து அறுந்தச்செய்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

டீ, காபிக்கு பதிலாக சோம்பு டீ தினமும் எடுத்துக்கொள்வது உடலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

குழந்தைப் பெற்ற பெண்களுக்குத் தாய் பால் சுரத்தலில் பிரச்சனை இருந்தால் சோம்புவை உண்பதால் பால் நன்றாக சுரக்கும்.

கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் கொண்டோர் சோம்புவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

3

வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் – தேர்தல் ஆணையம்

0
தேர்தல் ஆணையம்

வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் – தேர்தல் ஆணையம்

கடந்த சில தேர்தல்களில் இருந்து புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குச்சாவடி சீட்டுகள் இருந்தாலே வாக்குப்பதிவு செய்துகொள்ள வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனுமதித்து வந்தனர்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி சீட்டை மட்டும் வைத்து வாக்களிக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடி சீட்டுடன், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை ஏதாவது ஒன்றை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

3

கட்சியும் வேண்டாம், சின்னமும் வேண்டாம்: சுயேட்சையாக போட்டியிடுவோம்!

0
கட்சியும் வேண்டாம்

கட்சியும் வேண்டாம், சின்னமும் வேண்டாம்: சுயேட்சையாக போட்டியிடுவோம்!

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் எடப்பாடி அணிக்கே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

தேவைப்பட்டால் அனைத்து தொகுதியிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

3

இந்தியாவை அடித்து துவைத்த மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியா வெற்றி

0

இந்தியாவை அடித்து துவைத்த மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியா வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தொடரை சமன் செய்யுமா என்று அனைவரும் எதிர்பார்த்தோம்.

முதலில் பேட் செய்த இந்திய அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிரடியாக ஆடிய கோலி 72, ராகுல் 47 ரன்களும் சேர்த்தனர். போன ஆட்டத்தில் சொதப்பிய தோனி இந்த ஆட்டத்தில் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார்.

பின்னர் கலம் இறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் தடுமாறினாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தில் எளிதாக இலக்கை எட்டியது.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இதில் 9 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை டி20 தொடரில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய மண்ணில் கேப்டன் கோலி முதல்முறையாக தொடரை இழந்தார்.

40 மாதங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை இழந்தது இந்திய அணி. மேலும் சர்வதேச டி20 போட்டியில் 50 சிக்ஸெர்கள் அடித்த பட்டியலில் கோலி மற்றும் தோனி இடம் பெற்றுள்ளனர்.

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 350 சிக்சர்களுடன் தோனி முதல் இடம் பிடித்துள்ளார்.

3

விமானியை விடுவித்தது பாகிஸ்தான்: அபிநந்தன் பற்றிய தகவல்

0
விமானியை

விமானியை விடுவித்தது பாகிஸ்தான்: அபிநந்தன் பற்றிய தகவல்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முற்பட்டபோது தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பவர் பாகிஸ்தானில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்திய முன்னாள் விமானப்படைத்தளபதி  டிப்னிஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நசிகேதா என்ற விமானி கார்கில் போரின்போது விமானத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாகிஸ்தான் பகுதியில் குதித்தார்.

சிறிது காலம் பாகிஸ்தான் வசம் இருந்த அவர் போர் முடிவுக்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதுபோல் அபிநந்தனும் பாகிஸ்தான் இராணுவத்திடம் பிடிபட்டது உண்மையானால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3

அண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?

0
அண்ணியுடன்

அண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?

நடிகர் சூர்யா, ஜோதிகாவை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிவகுமாருக்கு காதல் என்றாலே சுத்தமாக ஆகாது. செல்பி எடுப்பதைப் போன்று.

ஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் மீண்டும் ஜோதிகா நடிக்கக் கூடாது என்ற கண்டிசனுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சில வருடம் குடும்பப் பணிகளை கவனித்து வந்தார் ஜோதிகா. இருகுழந்தைகளையும் மிகுந்த அன்போடு கவனித்து வந்தார்.

வீட்டிற்குள்ளேயே முடங்க ஜோதிகாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்தார். சூர்யாவிடமும் நைசாகப்பேசி சம்மதம் வாங்கிவிட்டார்.

வீட்டிற்குள் மிகவும் பழக்கப்பட்ட முகம் சூர்யா. அதனால் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை என முடிவு செய்து தனியாகவே நடித்து வந்தார். சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் புதிய படம் ஒன்றில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

கொழுந்தனுடன் ஜோதிகா நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு கணவரை மட்டும் ஒதுக்கியே வைத்துள்ளார் நடிப்பதில்.

மீண்டும் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் ஒரு படம் வெளிவர வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஒப்புக்கொள்வாரா ஜோதிகா?

3

50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்

0

50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்

இன்றைய ஸ்மார்ட்ஃபோன்களில் அனைவருக்கும் பிடிக்காத ஒரு விஷயம் அதில் சார்ஜ் விரைவில் இறங்குவதே. அதற்கு எல்லாம் முட்டுக்கட்டை வைக்குமாறு எனெர்ஜிஸெர் என்ற புதிய மொபைல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த  ஆவெனிர் டெலிகாம் என்ற நிறுவனம் எனெர்ஜிஸெர் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. தோற்றத்தில் ஸ்மார்ட்ஃபோன் ரொம்ப தடிமனாக தெரிகிறது.

18,000mAh சக்தி கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் ஃபோன் மிகவும் பெரிதாக தோற்றமளிக்கிறது. தொடர்ந்து 50 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது.

செல்போனின் மற்ற அம்சங்களைப் பார்க்கையில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்பக்க கேமரா என்று நவீன ஸ்மார்ட்போன்கள் போல் இருக்கிறது.

இதன் பேட்டரி இரண்டு நாட்கள் தொடர்ந்து வீடியோ பார்க்கும் அளவுக்கு திறனும் கால் மட்டும் பேசினால் நான்கு நாட்கள் கூட நிற்கும் தன்மை கொண்டுள்ளது.

அதிக விலையுள்ள ஐபோன், சாம்சங் போன்களுக்கு நிகரான தொழில்நுட்பங்கள் இதில் கிடையாது.

இதை விட நான்கு மடங்கு குறைவாக பேட்டரி திறன் கொண்ட ஐபோன், சியோமி நிறுவனத் தயாரிப்புகள் 14 முதல் 16 மணி நேரம் வீடியோ பார்க்கும் தன்மை கொண்டுள்ளவை.

50 மணி நேரம் தரமாக சார்ஜ் நிற்கும் என்பதை நிறுவனம் உறுதியாக கூறுகிறது. நீண்ட நேரம் சார்ஜ் தேவைப்படுபவர்கள் இந்த எனெர்ஜிஸெர் போனை வாங்கலாம்.

3

சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா பாண்டிராஜ்?

0
சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம்

சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா பாண்டிராஜ்?

தமிழ் சினிமாவின் கேரண்டி இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ். இவருடைய படங்கள் அனைத்தும் நஷ்டம் இல்லாமல் தப்பித்துக்கொள்ளும்.

பசங்க படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார் பாண்டிராஜ். தன்னுடைய மூன்றாவது படம் மெரினாவில் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் மீண்டும் ஹீரோவாக நடித்தார். அதற்கு அடுத்தும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க பாண்டிராஜ் முடிவு செய்தார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின்போதே இதற்காக ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால் அதன்பிறகு சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்துவிட்டது.

இதனால் கோடியில் சம்பளம் வேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்க பாண்டிராஜ் முடியாது எனக்கூறிவிட்டார்.

அறிமுகப்படுத்திய இயக்குனர் என்றுகூடப் பாராமல் சிவகார்த்திகேயனும் முடியாது எனக் கூறிவிட்டார்.

இதனால் அக்ரிமெண்டை கிழித்துவிட்டு, இனிமேல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கமாட்டேன் என சில வருடங்கள் முன்பு பாண்டிராஜ் கூறினார்.

அதற்கு அடுத்து பாண்டிராஜுக்கு வாய்ப்பளித்தவர் நடிகர் சூர்யா. பசங்க 2 படத்தை சூர்யாவும், பாண்டிராஜும் இணைந்தே தயாரித்தனர்.

மீண்டும் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா-பாண்டிராஜ் இணைந்தனர். இதையடுத்து சூர்யாவிடம் ஒரு கதை சொல்லியுள்ளார்.

சூர்யா பிஸியாக நடித்துக்கொண்டு இருப்பதால் தம்பி கார்த்தியை வைத்தே மீண்டும் படம் இயக்க கூறியுள்ளார்.

இதற்கு இடையில் சன்பிக்சரிடம் சிவகார்த்திகேயன் கால்சீட் உள்ளது. சிவாகார்த்திகேயனை வைத்து இயக்க பாண்டிராஜுக்கு ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டு உள்ளது.

உடனே பழைய பகையை மறந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார் பாண்டிராஜ்.

கார்த்தி, சூர்யா இதனால் பாண்டிராஜ் மீது செம்ம கடுப்பில் உள்ளனர் எனத் தகவல் வெளியானது. ஆனால், உண்மையில் கார்த்திக் நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மணிரத்ணமும் கார்த்தியிடம் அதிக நாள் கால்சீட் கேட்டுள்ளார். எனவே இப்படங்கள் முடிந்தவுடன் பண்டிராஜ்-கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய உள்ளனராம்.

3

டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா: ஆமை வேக தோனி

0
டி20 தொடரை

டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா: ஆமை வேக தோனி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இறுதி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

முதல் போட்டியில் இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக தல தோனி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தோனி 37 பந்துகளைச் சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஸ்ட்ரைக் ரேட் 78.38 மட்டுமே ஆகும். நாளுக்கு நாள் மோசமான சாதனைகளை தோனி செய்து வருகிறார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ராகுல் அரைச்சதம் அடித்தார்.

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

தோனியின் தடுமாற்றத்தைப் பார்த்து அவரது ரசிகர்களே தயவு செய்து ஓய்வு பெறுங்கள் தோனி என்று ட்வீட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

தோனியின் மந்தமான ஆட்டம் இந்தியா அணியின் மிடில் ஆர்டரை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

உலகக் கோப்பைக்கு சில மாதங்களே உள்ளன இந்த நேரத்தில் தோனி சொதப்புவது ரசிகர்களுக்கு மேலும் வருத்தம் அளித்துள்ளது.

தோனியின் ஒரு சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் அவரைப்பற்றி விமர்சனம் எழும்பொழுதும் அவர் சிறப்பாக செயல்படுவார். இந்த முறை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

3