Home Blog Page 300

போயஸ் கார்டனில் வீடா? ஜெயம் ரவி மறுப்பு

0
போயஸ் கார்டனில் வீடா

போயஸ் கார்டனில் வீடா? ஜெயம் ரவி மறுப்பு

தடம், சண்டக்கோழி 2, நீயா ஆகிய படங்களை ஸ்கீரின்சீன் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்திற்கு ‘ஜெயம் ரவி’ தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளருக்குப் போயஸ்கார்டனில் வீடு உள்ளது. அதை எழுதி வாங்கிக்கொள்ளவே ஜெயம் ரவி தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியது.

இச்செய்தி கடந்த மூன்று நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. ஜெயம் ரவி இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காததால், நம்முடைய இணையதளத்திலும் “ஜெயா, ஜெயம் பெயர் ராசி ஓகே” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இதைத்தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘ஜெயம் ரவி’ இந்தச் செய்தியை மறுத்து ட்வீட் செய்துள்ளார்.

இது வெறும் வதந்தி அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூறி ரசிகர் ஒருவரின் ட்வீட்டை, ரீடுவீட் செய்துள்ளார்.

செய்திகள் வந்தவுடனே மறுப்பு செய்தி வெளியிட்டால் சமந்தப்பட்ட செய்தி வைரலாக மாறாது. தொடர்ந்து அமைதிக்காத்தால் மௌனமே சம்மதம் என்று ஆகிவிடும்.

3

கமலை ஒதுக்கும் தமிழக கட்சிகள்; கூட்டணி என்ன ஆனது?

0
கமலை

கமலை ஒதுக்கும் தமிழக கட்சிகள்; கூட்டணி என்ன ஆனது?

கமல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே, ஏதாவது ஒரு தேசியக்கட்சியில் இணைவது என்று முனைப்புக் காட்டினார்.

ஆனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சி வரை நடிகர் கமலை ஆதரிக்க முன்வரவில்லை.

அதன்பிறகு தனிக்கட்சி துவங்கினார். அப்போதும் ஏதாவது ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டணி வைத்து ஒரு பரபரப்பை உருவாக்க முயன்றார்.

அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டது. டெல்லி கம்யூனிஸ்ட் தலைவர், கேரள முதல்வர் பினராயி இவர்களிடம் பேசியும் தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள் கமலை ஆதரிக்க தயாராக இல்லை.

இதனால் கூட்டணியா? தனித்துப்போட்டியா எனும் நிலையான முடிவைக்கூட இன்னும் எடுக்கவில்லை.

ஐ.ஜே.கே. கட்சித்தலைவர் பச்சமுத்துவையும் சந்தித்துப்பேசினார். ஆனால் அவர் அதிமுக, திமுக கூட்டணியில் இணையவே முனைப்புக்காட்டி வருகிறார்.

தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதை பொறுத்தே கமலின் அடுத்த முடிவு இருக்கும். எந்த கூட்டணிக்கு சென்றாலும் கமலுக்கு 1 சீட் கொடுக்கவே தயாராக உள்ளது.

இது கமலுக்கு பெரும் பின்னடைவே ஏற்படுத்தும். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற கமல் விரும்புகின்றார் எனவே தனித்தே நிற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

5 விமானநிலையங்கள்: அதானியிடம் கொடுத்துவிட்டார் மோடி

0
5 விமானநிலையங்கள்

5 விமானநிலையங்கள்: அதானியிடம் கொடுத்துவிட்டார் மோடி

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையதின் கட்டுப்பாடு, இயக்கப் பணிக்காக டெண்டர் நடைபெற்றது.

அந்த டெண்டரில் ஒரு பயணிக்கு அதானி ரூ.168 எனவும், கேரள அரசு ரூ.135 எனவும், ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் ரூ.63 எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து 5 விமான நிலையங்களை 50 வருடம் இயக்கும் பொறுப்பு அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துவிட்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது குறித்து பினராயி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருவனந்தபுரம் விமானநிலையம் உட்பட ஐந்து விமான நிலையங்கள் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐந்து விமான நிலையங்களின் கட்டுப்பாடு, இயக்கப் பணிகள் அதானி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒரு நபருக்கு ஐந்து விமானநிலையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அதானிக்கு விமானங்களை எப்படி இயக்குவது என்பது பற்றித் தெரியாது.

ஆனால், நரேந்திர மோடிக்கு அதானியைப் பற்றி நன்கு தெரியும்  என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் எம்பி சசிதரூர் கூறியதாவது, அதானிக்கு விமான சேவையைக் கொடுத்தால் பாதிப்பு ஏதும் இருக்காது.

அதிக விமானப் போக்குவரத்து ஏற்படும். விமான நிலையங்கள் வளர்ச்சி பெரும் எனக் கூறினார்.

3

தொழில் போட்டி: பெண்ணை அடித்து துவைத்த திமுக கட்சியினர்

0
தொழில் போட்டி

தொழில் போட்டி: பெண்ணை அடித்து துவைத்த திமுக கட்சியினர்

திருமயம் பகுதியில் உள்ள ஒரு கோவில் வாசல் அருகிலேயே வாசுகி என்ற பெண் 30  வருடங்களுக்கு மேலாக பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கோவிலில் பூஜை செய்யத் தேவையான தேங்காய், வாழைப்பழம் இதர பூஜை சாமான் விற்பனை செய்து வந்துள்ளார்.

அப்பெண்ணின் கடைக்கு எதிரில், திருமயம் திமுக கட்சியின் ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பரின் அண்ணன் சிவராமன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சிவராமன் கடைக்கு கூட்டமே வருவதில்லை. வருபவர்கள் அனைவரும் வாசுகியின் கடையிலேயே பொருட்கள் வாங்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிவராமன் தம்பி சரவணனிடம் முறையிட்டுள்ளார். வாசுகியை மிரட்டி கடையைக் காலி செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து வாசுகி கடையை நடத்தி வந்ததால், கடைக்குள் புகுந்து பொருட்களை வெளியில் வீசி எறிந்துள்ளனர்.

மேலும் கடையில் வாசுகியையும், தங்கை கவுரியையும் அடித்து உதைத்துள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் மீது போலீசார் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

3

ஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!

0
ஹீரோ

ஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இவர்களுக்கு அடுத்ததாக பேசப்பட்ட விக்ரம்-சூர்யா மற்றும் சிம்பு-தனுஷ் இந்த ஜோடிகளை தூக்கி சாப்பிட்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

உண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் மகுடம் சூட்டிக்கொண்டாடும் நடிகர் என சிவகார்த்திகேயன் உருவெடுத்துவிட்டார்.

சீமராஜா படம் சற்று சறுக்கினாலும் கனா படத்தின் மூலம் உடனே எழுந்துவிட்டார். அவர் அடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் sk14, பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் sk15, சிவா இயக்கத்தில் sk16 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் sk17 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

இதில் பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு ‘ஹீரோ’ எனப் பெயரிடப்பட்டு உள்ளதாம்.

இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கின்றார். இந்த படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என வேறு ஒரு தயாரிப்பாளரிடம் சண்டையிட்டு டைட்டிலை பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு. அர்ஜுன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ரெமோ, வேலைக்காரன், சீமதுரை ஆகிய மூன்று படங்களை ஆர்.டி.ராஜா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

எனை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு பதில் டப்பிங் பேசிய கௌதம்மேனன்

0
எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு பதில் டப்பிங் பேசிய கௌதம்மேனன்

கெளதம் வாசுதேவ் மேனன் மின்னலே படம் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமானவர். அவருக்கென தனி முத்திரை பதித்தவர்.

ஆனால் 2015-க்கு பிறகு அவருக்கு நேரம் சரியில்லை. வச்ச குறை, தொட்ட குறையாக சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கினார்.

சிம்புவின் கிரகம் கவுதம் மேனனைத் தொற்றிக்கொண்டதோ என்னவோ? சிம்பு தற்பொழுது அனைத்துப் படங்களிலும் சரியாக நடித்து, சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால், கவுதம் மேனன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அவருக்கே தெரிவதில்லை. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு சம்பள பாக்கி.

இதனால் பாக்கி ஒன்றைக்கோடி சம்பளத்தை திருப்பிக்கொடுத்தால் தான் படத்திற்கு டப்பிங் பேசிக்கொடுப்பேன் என தனுஷ் கறாராக உள்ளாராம்.

இதனால் கவுதம் மேனன் படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்காக தனுஷிற்கு பதில் அவரே டப்பிங் பேசி உள்ளார்.

அந்தக் காப்பியை வைத்து சென்சார் அதிகாரிகளை கரெக்ட் செய்து படத்திற்கு சென்சார்  சர்ட்டிபிக்கேட்டும் வாங்கி ரிலீசுக்கு தயாராகிவிட்டார்.

ஆனால் அவருடைய வாய்ஸ் படத்தில் வந்தால் நன்றாக இருக்காதல்லவா? அதனால் தனுஷை எப்படியாவது சமாதனம் செய்து டப்பிங் பேசவைக்கும் முனைப்பில் உள்ளாராம்.

3

கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கொடுக்கத் தயாராக உள்ள கமல்

0
கட்சியில்

கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கொடுக்கத் தயாராக உள்ள கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைகிறதா? அல்லது தனித்துப் போட்டியிடுகிறதா? என்ற நிலையான முடிவை இன்னும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்களைவைத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் விருப்பமனுவை நாளை மறுதினம் கட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 7-ல் இருந்து சென்னையிலும் பொள்ளாச்சியிலும் உள்ள அலுவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இதுவரை இணையாமல் உள்ளவர்களும் போட்டியிட விருப்பம் எனில் விண்ணபிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3

போயஸ் கார்டன் வீட்டைக் கைப்பற்றிய ஜெயம் ரவி

0
போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் வீட்டைக் கைப்பற்றிய ஜெயம் ரவி

சென்னைக்குள் உள்ள ஹைகிளாஸ் ஏரியாவில் ஒன்று போயஸ்கார்டன். இங்கு நிலம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் இல்லம் இந்தப்பகுதியில் தான் உள்ளது. அவர் வீட்டின் அருகேயே நடிகர் ரஜினிகாந்தின் வீடும் உள்ளது.

ஜெயலலிதா இருக்கும் வரை இந்தப்பகுதிக்கு பிரபலங்கள் அதிகம் நிலம் வாங்க விரும்புவதில்லை.

உள்ளே நுழையும்போதும், வெளியில் வரும்போதும் அடிக்கடி ஜெக்கிங் நடைபெறும். அவ்வளவு எளிதாக புதுமுக ஆட்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது.

தற்பொழுது ஜெயலலிதா மறைந்துவிட்டார். இதனால் அப்பகுதியில் சற்று பாதுகாப்பு அம்சங்கள் தளர்த்தப்பட்டுவிட்டது.

இதனால் திரைப்பிரபலங்கள் அப்பகுதியில் நிலம் வாங்க முனைப்புக்காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்கினர்.

அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் போயஸ்கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்கி உள்ளார். கால்சீட் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிக்கொண்டார்.

தடம், சண்டக்கோழி 2, நீயா ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் ஸ்கீரின்சீன். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயம் ரவியிடம் கால்சீட் கேட்டுள்ளார்.

தயாரிப்பாளருக்கு போயஸ்கார்டனில் வீடு இருப்பதைத் தெரிந்துகொண்ட ஜெயம் ரவி எனக்கு படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து மூன்று படத்தில் சம்பளம் இல்லாமல் நடித்துக்கொடுக்கிறேன். அதற்கு பதில், போயஸ்கார்டனில் உள்ள வீட்டை எனக்கு எழுதிக்கொடுத்து விடுங்கள் எனக்கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் வீட்டை எழுதிக்கொடுத்து டீலிங்கை முடித்துவிட்டாராம். ‘ஜெயா’ ‘ஜெயம்’ பெயர் ராசி கூட இடத்திற்கு ஏற்றார்போல் அமைந்துள்ளது.

3

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய வாகனத்தின் ஓனர் கண்டுபிடிப்பு

0
புல்வாமா

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய வாகனத்தின் ஒனர் கண்டுபிடிப்பு

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீவிரவாத தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி‌.ஆர்‌.பி‌.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் 78 வாகனங்களில், 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஸ்ரீநகரை நோக்கி அதிவேகமாகச் சென்றனர்.

முகாமை அடைய 30 கிலோமீட்டர் இருந்தபோது, 350 கிலோ எடையுடன் வெடிபொருட்களை ஏற்றி வந்த கார் ஒன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது.

வெடிபொருள் நிரப்பப்பட அந்த வாகனத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டார். ஆனத்னக் பிஜிபேர நகரத்தைச் சேர்ந்த 19 வயதான சஜாத் பாட் என்பவர் விபத்து நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் வாகனத்தை வாங்கியுள்ளார்.

இவரும் ஜெய் ஈஸ் மொஹம்மத் கூட்டத்தின் ஒருவர் என்று கருதப்படுகிறது. விபத்து நடந்த நாளில் இருந்தே தலைமறைவாகி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய வாகனம் அனைத்தையும் சேர்த்து நேஷனல் இன்வேஷ்டிகேசன் ஏஜன்சி (National Investigation Agency) நடத்திய ஆய்வில் வாகனம் எண் இல்லாமல் ஒட்டி வரப்பட்டுள்ளது.

எக்கோ வேன் மாருதி சுசூக்கி என்றும் இதற்கு முன் 7 நபர்களிடம் கை மாறி இறுதியாக சஜாத் கைக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சிரஜ் அல் அலூம் என்ற பள்ளியில் பயின்று வந்த 19 வயது மாணவன் சஜாத் பாட் ஆவான். இந்த தாக்குதலில் வெடிபொருள் கொண்ட வாகனத்தை ஒட்டி சென்ற அதில் அகமேத் தார் 19 வயதுடையவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

சினிமா பெண் இயக்குனர் நயனா மர்ம மரணம்

0
சினிமா பெண் இயக்குனர்

சினிமா பெண் இயக்குனர் மர்ம மரணம்

மலையாள சினிமாவின் இளம் வயது பெண் இயக்குனர் என்ற சிறப்பை பெற்றவர் நயனா சூரியன். வயது 28.

இவர் மகரமஞ்சு என்ற படத்தில் இயக்குனர் லெனின் ராஜேந்திரன் மூலம் உதவி இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டவர்.

இவர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

நயனா சூரியன் தனியாகவே வடிக்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நயனாவை நேற்று காலை அவருடைய தோழிகள் போனில் தொடர்புகொண்டுள்ளனர்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் அவர் பேனை எடுக்கவே இல்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் திருவனந்தபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் நயனாவின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் இறந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.

பின்னர் நயனாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இயக்குனர் நயனா சூரியன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

3