Home Blog Page 301

ஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை

0
ஓர்பிஷ் கரை

ஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை

கடலின் ஆழமான பகுதியில் வசிக்கும் மீன் இனம் ஓர்பிஷ் (oarfish). கடலுக்குள் ஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பதை முன்கூடியே உணரக்கூடிய மீன் இனம் இது.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது இந்தவகை மீன்கள் கரை ஒதுங்கின. தற்பொழுது மீண்டும் ஜப்பான் நாட்டில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீண்டும் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடு முழுவதும் மக்கள் நம்பிவிட்டனர்.

ஆனால், இதுவரை சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடப்படவில்லை. உண்மையில் கடலுக்குள் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ உள்ளதா? அல்லது வழி தவறி ஓர்பிஷ் மீன்கள் கரை ஒதுங்கியதா? எனத் தெரியவில்லை.

ஆனால் அதற்குள் இந்த உலகம் அழியப்போகிறது என ஜப்பான் மக்கள் இடையே  வதந்திகள் பரவிவிட்டன.

3

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணமல்போன முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணமல்போன முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் இறந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என முகிலன் என்ற சமூக ஆர்வலர் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பு முடிந்த அன்று இரவு மதுரை செல்ல எழும்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறினார்.

10:30 மணியளவில் நண்பர்களுடன் பேசியுள்ளார். அதன்பிறகே முகிலன் மாயமாகியுள்ளார். அவரைப் போலீசார் அல்லது ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கடத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

ரயிலில் ஏறிய முகிலன் பாதி வழியிலேயே மாயமானதாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து, சுதா ராமலிங்கம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்பிக்கள் உடனே விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு, தமிழக டிஜிபி ராஜேந்திரன் மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே, விரைவில் முகிலன் குறித்த தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது

0
சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது

ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது.

இன்னும் பனிக்காலம் முழுவையாக முடியவில்லை. அதற்குள் சுட்டெரிக்கும் வெயில் காலம் துவங்கிவிட்டது.

சூரியனை யாரோ இழுத்துக்கொண்டு பூமிக்கு அருகில் கொண்டுவந்து விட்டதுபோல் அதன் உக்கிர தாண்டவத்தை உணர முடிகிறது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 102 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 12 மணி முதல் 3 மணி வரை வெயில் உச்சகட்டமாக கொளுத்தி எடுக்கிறது.

வெயில்காலம் துவங்கிவிட்டதை அடுத்து  தமிழகம் முழுவதும் ஏசி விற்பனைகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் 102,  தர்மபுரியில் 101, திருத்தணியில் 100 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

3

ஆப்பிள் ஐஃபோனை மிஞ்சிய சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்

0
ஆப்பிள்

ஆப்பிள் ஐஃபோனை மிஞ்சிய சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்

தொலைபேசிகளின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே சாம்சங் நிறுவனத்திற்கும் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கும் இடையே பயங்கர போட்டி நிலவி வருகிறது.

என்ன நடந்தாலும் ஐபோன்களின் தரம் ஒரு படி உயர்வாகத்தான் இருக்கும். ஆனால் தற்பொழுது சாம்சங் வெளியிட்டிருக்கும் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் ஐபோனிற்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிறது.

ஒரு பக்கம் ஐபோன்களின் விலை குறைந்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் சாம்சங் நிறுவனம் ஒரு லட்சத்து 40ஆயிரம் மதிப்புள்ள கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டு மிரட்டுகிறது.

சாம்சங் கேலக்ஸி போல்டின் சிறப்பு அம்சங்கள்

பார்க்கும் பொழுது 11.6 செ.மீ. விரித்தால் 18.5 செ.மீ. ஸ்மார்ட்போன். எளிதில் மடித்து விரித்துக்கொள்ளலாம். 4ஜி‌, 5ஜி இரண்டும் நெட்வொர்க்கும் கொண்டுள்ளது.

10 மெகாபிக்ஸல் கொண்ட சிறந்த கேமரா, 12ஜி‌பி ராம் மற்றும் 512 ஜி‌பி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ளது சிறந்த அம்சமாகும்.

ஒரே நேர்த்தில் 3 செயலிகளை பயன்படுத்தும் வசதி, இதற்கு ஏற்றாற்போல் 4,380mAh திறன் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

செல்போனை கையில் பிடிக்கும் பொழுது, நமது கை ஸ்கேன் செய்யப்படுகிறது. செல்போனின் விளிம்பில் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1,41,000 என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

3

நிஜ வாழ்க்கையில் தனி ஒருவன்: புல்வாமா தாக்குதல்

0
நிஜ வாழ்க்கையில்

நிஜ வாழ்க்கையில் தனி ஒருவன்: புல்வாமா தாக்குதல்

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீவிரவாதிகளால் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதை அறிந்த 26 வயதான அமெரிக்க வாழ் இந்தியர் விவேக் படேல் தனி ஒருவராக இதுவரை 8 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் நிதி திரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக பேஸ்புக் பேஜ் ஒன்றை புதிதாக ஓபன் செய்து விபத்து நடந்த நாளில் இருந்தே நிதி திரட்ட ஆரம்பித்து விட்டார்.

இன்று வரை $1,018,252 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி உள்ளார். ஆனால் இன்னும் இது பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடையவில்லை.

இந்தப் பணம் மொத்தமாக நேர்மையான முறையில் இந்திய அரசிடம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார் விவேக்.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திடம் நேரடியாகவே இப்பணத்தை அளிக்க முடிவு செய்துள்ளாராம்.

தன்னுடைய நல்ல எண்ணங்கள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு பேஸ்புக்கில் நிதி திரட்டிய விவேக் படேலை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

3

எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாம் – அன்புமணி விளக்கம்!

0
எல்லோரும் ஒரு குட்டையில்

எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாம் – அன்புமணி விளக்கம்!

பாமக எம்.பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக-பாமக கூட்டணி குறித்து சரமாரிக் கேள்விகள் கேட்டகப்பட்டது.

அதற்கு அன்புமணியின் பதில் பின்வருமாறு, அதிமுகவை பாமக கடுமையாக விமர்சித்தது உண்மை தான்.

தவறு செய்தவர்களை விமர்சிப்பதில் தவறில்லை. பாமக என்றுமே தவறுகளைச் சுட்டிக்காட்டும்.

அதற்காக விமர்ச்சித்தவர்களுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று இல்லை. மக்களுக்கு நன்மை தேடித்தர எந்த அணியுடனும் பாமக இணையத்தயார்.

இது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி. சட்டமன்றத்தேர்தல் வரும்போது முடிவுகள் வேறுவிதமாகக் கூட எடுக்கப்படும்.

இந்தியா முழுவதுமே அனேகக்கட்சிகள் விமர்சனம் செய்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். திமுகவும் கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைத் திமுக கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு மீண்டும் அவர்களுடனே கூட்டணி வைத்துக்கொண்டது. எனவே, நாங்கள் செய்ததில் ஒன்றும் தவறில்லை எனக் கூறியுள்ளார்.

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என அன்புமணி ராமதாஸ் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

3

மனிதன் ஒரு சர்வாதிகாரி? விலங்குகள் உனக்கு அடிமையா?

0
மனிதன் ஒரு சர்வாதிகாரி

மனிதன் ஒரு சர்வாதிகாரி? விலங்குகள் உனக்கு அடிமையா?

இவ்வுலகு மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல. அறிவியல் கோட்பாட்டின்படி எடுத்துக்கொண்டால் இவ்வுலகில் கடைசியாகத் தோன்றிய இனம் மனித இனம்.

ஒரு குடும்பத்தின் கடைக்குட்டியே எப்பொழுதும் செல்லப்பிள்ளையாக இடம்பெறுவது வழக்கம். அதே போல் பூமிக்கு மனிதன் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான்.

மனிதன் என்ன தவறு செய்தாலும் அதை இந்த பூமாதேவி கண்டுகொள்வதில்லை. ஒரு மனித இனத்தில் சந்தோசத்திற்காக ஏனைய உயிரினங்கள் சுதந்திரத்தை தொலைத்துவிட்டது.

சுதந்திரப்பறவை எனப் பெயரெடுத்த பறவை இனங்கள் கூட இன்று சுதந்திரமாக பறக்கமுடிவதில்லை. செல்போன் கோபுரங்களின் மீது மோதி உயிரிழக்கின்றது.

வற்றாத ஜீவா நதி எனப்பெயர்பெற்ற அத்தனை நதியும் தமிழகத்தில் வற்றிவிட்டது. மனிதனே குடிநீருக்கு ஏங்கும்போது விலங்குகள் எப்படி இருக்கும்?

காய்ந்த சருகுகளால் தமிழகத்தின் சில பகுதிகளில் காட்டுத்தீ. மறுபுறம் தண்ணீர் இன்றி யானைகள் பலி.

உண்ண உணவும் இல்லை. குடிக்க தண்ணீரும் இல்லை. பெண் யானை ஒன்று பாறை மீது மோதி உயிரிழந்து உள்ளது.

மனிதன் தன் பிரச்சனையை மட்டுமே பார்க்கிறான். ஒருபோதும் மற்ற உயிரனங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

அப்படியே யாராவது சிந்தித்தால் அவர்களைப் பைத்தியக்காரர் என முத்திரை குத்திவிடுகிறது இந்த உலகம். மற்ற உயிரினங்களும் சுதந்திரமாக வாழ வழிவகை செய்வதே ஆகச்சிறந்தது.

3

விமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

0
விமானத்தைக்

விமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

வங்கதேசம் தலைநகர் டாக்கா விமானநிலையத்தில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டு இருந்த பிமன் ஏர்லைன்ஸ் BG147 ரக விமானத்தை துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கடத்தினான்.

இதனால் விமானம் சிட்டாகாங் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 148 பயணிகள், விமானப் பணிப்பெண்களை வெளியில் செல்ல அனுமதித்த அந்த மர்மநபர் விமானிகளை மட்டும் பணையக்கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டான்.

கடத்தல் நபரை பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனத் தெரிய வந்தது.

இதனால் விமானத்திற்குள் நுழைந்து கடத்தல் நபரை சுட்டு விமானியை மீட்டனர் வங்கதேச ராணுவத்தினர்.

குண்டுக்காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கடத்தல்காரன் உயிரிழந்தான்.

3

ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ

0
ஏற்காடு

ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ

சேலம் மாவட்டம் உள்ள ஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டுப் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, காப்புக் காட்டில் வசித்த 55-ற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளார்.

தீ விபத்து காரணமாக, சேலம்-ஏற்காடு மலைவழி சாலையின் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று நீலகிரி வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகின. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

ஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்

0
ஜாலியன்வாலா பாக்

ஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்

1919-ம் வருடம் ஏப்ரல் 13-ம் தேதி சீக்கிய புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாள். இதைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஜாலியன்வாலா பாக் என்ற பகுதியில் கூடினர்.

அப்போது, ஆங்கிலேய அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர் என முட்டாள்தனமாக முடிவு செய்த கர்னல் ரெஜினால்டு டயர் என்பவர் அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தினார்.

1000-ற்கும் மேற்பட்ட குண்டுகள் சீறிப்பாய்ந்தன. பாதிப்பேர் குண்டு துளைத்து உயிரிழந்தனர். மீதிப்பேர் உயிர் பயத்தில் அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் காயம் பட்டு, மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தப் படுகொலை அரங்கேறி 100 ஆண்டுகள் நிறைவடைவந்துள்ளது. இதற்காக அமிர்தரசரஸ் பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து வந்து நினைவுத் தூண் கட்டப்பட உள்ளது. ஏப்ரல் 13-ம் தேதிக்குள் பணிகளை முடித்து நினைவிடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3