Home Blog Page 302

பேஸ்புக் ஆப்: அன்இன்ஸ்டால் செய்தாலும் தப்ப முடியாது

0
பேஸ்புக் ஆப்

பேஸ்புக் ஆப்: அன்இன்ஸ்டால் செய்தாலும் தப்ப முடியாது

ஏற்கனவே பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் பார்ட்டியிடம் விற்றதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு வந்தது. இதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

2018-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி பேஸ்புக் ஒரு மாதத்திற்கு 2.32 பில்லியன் வாடிக்கையான பயனாளர்களைக் கொண்ட ஒரு சமூக வலைத்தளமாகும்.

இதில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவ்வப்போது தேவையற்ற சர்சைகளிலும் சிக்கிக்கொள்கிறது.

பேஸ்புக் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் கூறியதாவது, 

பொதுவாக நம்மில் பலபேர் உடல்நிலை, உடற்பயிற்சி, மாதவிடாய், கர்ப்பம் தொடர்பான செயலிகளைப் பயன்படுத்துவோம்.

அதில் தங்கள் மாதவிடாய் நாட்கள் பற்றி பெண்கள் குறித்து வைப்பது வழக்கம். அந்த செயலி ரிமைண்டர் மூலம் அவர்களுக்கு மாதவிடாய் நாட்களை நினைவு படுத்தும்.

இதேபோல் கர்ப்பம், ஹெல்த் தொடர்பான செயலிகளையும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களுக்கு பயன்படுத்தும் செயலிகளை கண்காணிப்பது என்பது தவறான செயலாகும்.

இவ்வாறு நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளின் தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகின்றது என்பது தெரிய வந்துள்ளது.

நாம் பேஸ்புக் யூசர் இல்லாவிட்டாலும் நாம் என்ன சாப்பிட்டோம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் அனைத்தையும் கண்காணித்து வருகின்றது. .

பேஸ்புக் நிறுவனம் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு தனி நபரின் செயல்களையும் கண்காணிக்கின்றதாம்.

மூன்றாம் பார்ட்டி செயலிகளில் ஆஃப் ஈவெண்ட்ஸ் (app events) என்ற கருவியை செயல்படுத்துகின்றனர்.

இந்த ஆப் ஈவெண்ட்ஸ் கருவி பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர அல்கொரிதமுடன் (advertisement algorithm) இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் இணையத்தில் நம்முடைய செயலுக்கு ஏற்றவாறு விளம்பரங்களை நமக்கு பேஸ்புக் மூலம் காட்டப்படுகிறது.

மொபைல் விளம்பரங்களைக் செயலாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என்றும் பேஸ்புக் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு தனி நபரும் அவர்கள் இணையத் தொடர்பில் இருக்கும் பொழுது கண்காணிப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் நிறுவனம் கருத்து பின்வருமாறு, இவ்வாறு மூன்றாம் பார்ட்டி செயலிகள் தகவல்களை அனுப்புவதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பேஸ்புக் நிறுவனம் கையை விரித்துள்ளது.

3

கோவையைச் சேர்ந்தவரின் கதைக்கு ஆஸ்கர் விருதா?

0
கோவையைச்

கோவையைச் சேர்ந்தவரின் கதைக்கு ஆஸ்கர் விருதா?

ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது விழா நடக்கும்போது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்து விடாதா? என ஓவ்வொரு ரசிகரின் கண்களிலும் ஏக்கம் தெரியும்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றாலும் அந்தப் படம் இந்தியத் தயாரிப்பு இல்லை.

இன்னும் சில மணி நேரங்களில் 91-வது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி அதிகாலை இந்த விழா துவங்கும். தி ஃபேவரைட், ரோமா ஆகிய இரண்டு படங்களும் தலா 10 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளித்திரை படங்களுடன், ‘பீரியட்: எண்ட் ஆப் சென்டென்ஸ்’ என்ற ஆவணப்படமும் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஏழைப் பெண்களுக்காக மலிவுவிலை நாப்கின் தயாரித்த உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே கதை, அக்ஷய் குமார் நடிப்பில் பேட்மேன் (padman) என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

3

காற்று மாசில் இருந்து விடுபட சுவாசப்பயிற்சி

0
காற்று

காற்று மாசில் இருந்து விடுபட சுவாசப்பயிற்சி

இன்றையக் காலக்கட்டதில் காற்று மாசுபாடு என்பது பழகிப்போன ஒன்றாகி விட்டது. எங்கு சென்றாலும் புகை, தூசு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளின் துர்நாற்றம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.

சுத்தமான காற்று காசு கொடுத்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்துமா, எரிச்சலுடன் கூடிய இருமல் போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சுவாசப்பயிற்சியின் பலன்கள்

அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலை சென்றடைவதற்கு சுவாசப்பயிற்சி உதவி செய்கிறது. ஆக்ஸிஜன் மட்டுமே செல்வதால் எரிச்சல் இல்லாமல் சுவாசிக்கலாம்.

மாசற்ற காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு ஒரு எளிய வழியாக அமைகிறது. நுரையீரலில் இருக்கும் மாசுள்ள கார்பன்டை ஆக்சைடு முழுவதையும் வெளியேற்ற உதவுகிறது.

சுவாசப்பயிற்சி செய்யும் முறை

வழக்கம்போல் சம்மணம் கட்டி உட்கார்ந்து கைகளை முழங்காலில் படும்படி வைத்துக்கொள்ளவும். அதாவது முனிவர் தவம் செய்யும் பொழுது உட்காருவது போல.

பிறகு, மூக்கு வழியாக காற்றை உள்ளே இழுத்து வாய் வழியாக காற்றை வெளியே விடவும். காற்றை மிகவும் மெதுவாக வெளியே விடவும். அதாவது நுரையீரல் உள்ளே இருக்கும் காற்று முழுவதுமாக வெளியேறும்படி.

உடலின் உள்ளே எந்த விதக் காற்றும் இல்லை என்று நீங்கள் உணரும் வரை ஹ.. ஹ… என்று மெதுவாகக் காற்றை வெளியேற்றவும்.

காற்றை உள்ளிழுக்கும் பொழுது 6 வினாடிகள் நிறுத்தி வைத்து பிறகே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலில் உள்ளே இருக்கும் மாசுள்ள காற்றை வெளியேற்றி தூய்மைப்படுத்தலாம்.

3

முதல் டி20 இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

0

முதல் டி20 இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடக்கவுள்ளது. நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி படைத்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு விளையாட வந்துள்ளது.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விசாகப்பட்டிணத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இடைக்காலத் தடையில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பாதது அவர்களுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.

இத்தொடரின் வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே உலகக் கோப்பை அணி தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால், இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ஊடகங்களிடம் பேட்டி அளித்த கேப்டன் விராத் கோலி, புல்வாமா தாக்குதலில் உயிரழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டி பி‌சி‌சி‌ஐ மற்றும் மத்திய அரசு சொல்வதை பொறுத்தே விளையாட முடிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

3

வெள்ளை வேஷ்டி, சட்டை, துண்டு: கோவிந்தா போட்ட ராகுல்காந்தி

0
வெள்ளை வேஷ்டி

வெள்ளை வேஷ்டி, சட்டை, துண்டு: கோவிந்தா போட்ட ராகுல்காந்தி

இத்தனை வருடம் எந்த திசையில் இருந்தனர் என்றுகூட சில தலவைர்களைப் பற்றி தெரியாமல் இருக்கும்.

ஆனால், தேர்தல் வந்தால்போதும் தலைவர்களின் குணங்கள் முற்றிலும் மாறிவிடும். வீடு வீடாகச் சென்று காலில் விழுந்துகூட ஓட்டுச்சேகரிப்பார்கள்.

இதில் எந்தக்கட்சித் தலைவர்களும் விதிவிலக்கு அல்ல. தற்பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதிக்குச் சென்று கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

வழக்கமாகச் செல்வது போன்று இல்லாமல், ஆந்திரா ஸ்டைலில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சென்றுள்ளார்.

வேட்டியை யாரவது புதிதாகக் கட்டினால் நடப்பதற்கு சிரமப்படுவார்கள். அந்த அவஸ்தையை ராகுல் அனுபவித்துள்ளார்.

காலை கிந்தி கிந்தி நடப்பதும், வேட்டியை தூக்கிப்பிடித்தும் நடந்துள்ளார். இதைக் கிண்டல் செய்து பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்துக்களின் பாரம்பரிய உடையக்கூட ராகுல்காந்தியால் அணியமுடியவில்லை. இவர், எப்படி நாட்டைக் காப்பாற்றுவார் எனக் கேலி செய்துள்ளனர்.

ராகுல் காந்தியின் கோவிந்தா கோஷம் காங்கிரஸ் கட்சிகா? பாஜக கட்சிக்கா? எனவும் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கும் விவாதம் நடந்து வருகிறது.

3

ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

0
ஆசிரியை ரம்யா

ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

ரம்யா, அவருடைய ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை நீண்ட வருடமாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாகக் பழகியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்பு ரம்யா, ராஜசேகரை திருமணம் செய்ய விரும்புவதாகக் பெற்றோரிடம் கூறியுள்ளார். இருவரும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

எனவே, ராஜசேகரிடம் எடுத்துக்கூறி தன்னை மறந்துவிடும்படி ரம்யா வலியுறுத்தி உள்ளார். மேலும் ராஜசேகருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், ரம்யா பணிபுரியும் பள்ளிக்குச் சென்று அவர் தனியாக இருக்கும் நேரத்தில் அவருடைய கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜசேகரை தேடிவந்தனர்.

நான் தற்கொலை செய்துகொள்கிறேன் எனக்கூறி தங்கையின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் ராஜசேகர்.

அந்த எஸ்.எம்.எஸ் திருநாவலூர் காட்டுப்பகுதி அருகில் உள்ள டவ்வரில் இருந்து வந்ததால் அங்கு சென்று போலீசார் ராஜசேகரைத் தேடியுள்ளனர்.

அதற்குள் ராஜசேகர் அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் போலீசார்.

3

மோடியே மறந்துபோன தூய்மை இந்தியா; கமல் மறக்கவில்லை!

0
மோடியே

மோடியே மறந்துபோன தூய்மை இந்தியா; கமல் மறக்கவில்லை!

மோடி பெற்றெடுத்த புதிய இந்தியாக்களில் ஒன்று தூய்மை இந்தியா. தூய்மை இந்தியா திட்டம் வந்தபோது கமல் அதை வரவேற்றார்.

அவருடைய நற்பணி மன்றம் மூலம் பல இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டார்.

தற்பொழுது அவருடைய கட்சிப் பொதுக்கூட்டம் நடந்து முடிந்ததும் அங்கு உள்ள ஒரு குப்பைகளைக் கூட விடாமல் சுத்தம் செய்துவிட்டே நிர்வாகிகள் களைந்து செல்கின்றனராம்.

மோடிக்கு முன்பே சுத்தம் என்பது நமக்கு என்ற பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு அடுத்து கமல், ஐ.ஜே.கே. கட்சித் தலைவர் பாரிவேந்தரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அனேகமாக இது கூட்டணிப்பேச்சு வார்த்தை என்றே கருத்து நிலவி வருகிறது.

3

தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவுகிறது – ராகுல் சாடல்

0
தொழிலதிபர்களுக்கு

தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவுகிறது – ராகுல் சாடல்

மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.

நம் நாட்டின் வலம் அனைத்தும் சில தனி நபர்களின் பிடியில் உள்ளது. கோடிகோடியாய் வங்கியை ஏமாற்றியவர்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆனால் மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். விவசாயிகள் கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தால் கல்விக்கான நிதியை அதிகரிக்கும்.

சீனாவில் 24 மணி நேரத்தில் 50000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வெறும் 500 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு டெல்லியில் மாணவர்கள் முன்னிலையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.

3

விமானத்தைக் கடத்தப்போவதாக அச்சுறுத்தல்

0
விமானத்தைக்

விமானத்தைக் கடத்தப்போவதாக அச்சுறுத்தல்

ஏர் இந்திய விமான நிறுவனத்துக்கு, இன்று ஒரு போன் கால் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னும் சில மணி நேரத்தில் கடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் விமானங்கள் புறப்படும் முன் 8 வித பாதுகாப்பு விஷயங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது. வாகனங்களை தீவிரமாகச் சோதனை செய்யவேண்டும்.

நுழைவு வாயிலிலேயே அனைத்து பயணிகளையும் நன்கு சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

3

இந்தியாவிலேயே அதிக ஆண்டு சிறையிலிருந்த என்னை விடுதலை செய்யுங்கள் – நளினி உருக்கம்

0
இந்தியாவிலேயே

இந்தியாவிலேயே அதிக ஆண்டு சிறையிலிருந்த என்னை விடுதலை செய்யுங்கள் என  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நளினி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக முருகன்-நளினி தம்பதிகள் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர்.

நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் உள்ளார். இந்தியாவிலேயே அதிக நாள் சிறையில் இருந்த நபராக நளினி மாறியுள்ளார்.

இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும் உரிமை தமிழக ஆளுநருக்கு உண்டு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

சிறையில் ஏழுபேரும் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தும் எந்த ஒரு பலனும் இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் செவிசாய்க்கவில்லை.

இதனால் நளினி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் 7 பேரையும் விடுதலை செய்து நற்பெயர் பெறலாம் என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.

3