Home Blog Page 303

அதிதி எனக்கு வேற வழி தெரில; அதான் வீடியோவ லீக் பண்ணிட்டேன் – நடிகரின் கதறல்

0
அதிதி

அதிதி எனக்கு வேற வழி தெரில; அதான் வீடியோவ லீக் பண்ணிட்டேன் – நடிகரின் கதறல்

பட்டதாரி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமானவர்கள் அபிசரவணன்-அதிதிமேனன் ஜோடி.

பிறகு அதிதி மேனன் ஒன்று இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். எந்த படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

நான்கு வருடங்களாக இவர்கள் நடித்த படங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டது. நெடுநெல்வாடை படத்தில் நடிக்கும்போது அந்த இயக்குனருடன் தகராறு ஏற்பட்டது.

அப்போதே அதிதி மேனனும், அபிசரவணனும் மருத்துமனையில் உடல்நலம் சரியில்லாதது போன்று நாடகம் ஆடினார்.

தற்பொழுது உலகுக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடமாகக் குடும்பம் நடத்தியதும் அம்பலமாகிவிட்டது.

சமூக சேவை என்கிற பெயரில் அபிசரவணன் பலரிடம் நிதி உதவி பெற்று கஜாபுயல், கேரள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவியுள்ளார்.

இந்த பணத்தை எல்லாம் தன் பெயரைப் பயன்படுத்தியே வாங்கினார் என அதிதிமேனன், அபிக்குச் சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளின் டாக்குமெண்டுகளை திருடிக்கொண்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதனால் வேறுவழி தெரியாமல் ஒவ்வொன்றாக நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஆதாரத்துடன் வெளியில் கசியவிட்டு வருகிறார் அபிசரவணன்.

அதிதிமேனன் ஸ்டெம்செல் ஊசியை அடிக்கடி போட்டு கொண்டு இளமையுடன் இருக்க முயன்றார். அதற்காக அவருக்கு ஒரு ஊசிக்கு 20,000 வரை செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு திருமணம் ஆனா புகைப்படங்களை வெளியில் கசியவிட்டார். அது எல்லாம் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்டது என அதிதி மறுத்தார்.

தற்பொழுது அவரை பூட்டிய அறைக்குள் வைத்து திருமணம் செய்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.

இதன் பிறகும் மறுத்தால் முதலிரவு நடந்த வீடியோவைத்தான் வெளியிட வேண்டும் என நெருக்கமானவர்களிடம் அழுது புலம்பி வருகிறாராம் அபிசரவணன்.

3

தேன் கூடா? புலியா? என்ன மாதிரி படம் இது…

0
தேன் கூடா

தேன் கூடா? புலியா? என்ன மாதிரி படம் இது…

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

ட்ரைலரில் தேன் கூடு, ரெண்டு சொட்டு தேனு போன்ற நிறைய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் இந்த வார்த்தைகள் இரட்டை அர்த்தத்தை கொடுக்கின்றது. மேலும் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளன.

இது என்ன மாதிரி படம் என்பதே கணிக்க முடியாதபடி ஒரு புதுவிதமான ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் படம் சூதுகவ்வும், ஆரண்ய காண்டம் போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

38 தொகுதியில் அமமுக போட்டி: 2 தொகுதி யாருக்கு? குழப்பிவிடும் தினகரன்

0
38 தொகுதியில்

38 தொகுதியில் அமமுக போட்டி: 2 தொகுதி யாருக்கு? குழப்பிவிடும் தினகரன்

அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என ஒரு பக்கம் இழுபறி நிலையில் கூட்டணி நிலவரம்  உள்ளது.

இன்னொரு புறம் அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் தனித்துப்போட்டி என அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.

நாம்தமிழர் சீமான் நாங்கள் தான் அரசியலில் சீனியர். எனவே கமல் தான் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளாராம்.

அதேவேளை அமமுக கட்சியின் தலைவர் தினகரன் 38 தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மீதம் உள்ள இரண்டு தொகுதி யாருக்கு ஒதுக்கி உள்ளார் எனத் தெரியவில்லை. தனித்துப்போட்டி எனக் கூறிவிட்டு இரண்டு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் மக்களைக் குழப்பிவிட்டுள்ளார்.

தேமுதிகவுடன் அமமுக கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியதா? என்ற கேள்விக்கு தினகரன் தரப்பில் இருந்து இல்லை என்றே பதில் வந்துள்ளது.

ஆனால், இறுதி நிமிடம் வரை தமிழக தேர்தல் வரலாற்றில் பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது.

டி.டி.வி.தினகரன் கட்சி, திமுகவுடன் இணைத்து போட்டியிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும் தினகரனின் பலம் என்ன என்பதைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

எனவே, அவர் தனித்து நின்றால் மட்டுமே சரியான வாக்கு வங்கியைத் துல்லியமாகக் காட்டமுடியும். ஆனால் இரண்டு தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை எனத் தெரியவில்லை.

3

ஐ‌பி‌எல் விழா ரத்து; பணத்தை சிஆர்பிஎப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு

0
ஐ‌பி‌எல் விழா ரத்து

ஐ‌பி‌எல் விழா ரத்து; பணத்தை சிஆர்பிஎப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு

ஒவ்வொரு வருடமும் ஐ‌பி‌எல் போட்டிகள் தொடக்க விழாவுடனே நடக்கும். இம்முறை ஐ‌பி‌எல் தொடக்க விழா நடத்தப்போவதில்லை என்று பி‌சி‌சி‌ஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என பி‌சி‌சி‌ஐ கடந்த வாரம் போட்டி அட்டவணை வெளியிட்டது.

பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.22) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர்.

தொடக்க விழாவை நடத்துவதற்கு ஆகும் செலவை புல்வாமா தாக்குதலில் இறந்த சி‌ஆர்‌பி‌எப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ  முடிவு செய்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது பிசிசிஐ.

மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

தொடக்கப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

3

திமுகவின் கனவைச் சிதைத்த பாமக; விஜயகாந்திடம் சரண்டர் ஆனார் ஸ்டாலின்

0
திமுகவின்

திமுகவின் கனவைச் சிதைத்த பாமக; விஜயகாந்திடம் சரண்டர் ஆனார் ஸ்டாலின்

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தை கதாநாயகனாக மாற்றி உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.

கடந்த இரண்டு தேர்தலிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்மேக்கராக இருந்தார் என்றால் மிகை ஆகாது.

இந்த முறை விஜயகாந்த் மேடையில் தோன்றியாவது பேசுவாரா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பி வந்த விஜயகாந்த் இன்னும் ஒரு வார்த்தை கூட யாருடனும் பேசவில்லை.

ஆனால் அவர் தயவை நாடி மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

இதற்கு காரணம் பாமக தலைவர் ராமதாஸ். ராமதாஸ் எப்பொழுது காரியவாதி என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

காங்கிரஸ் கூட்டணி வலுவில்லை என்பதால் மத்தியில் அவர்கள் செல்வாக்கை நிலைநாட்ட பாஜகவே சிறந்த இடம் என கனக்கச்சிதமாக ஒரு ராஜ்யசாபா சீட்டை வாங்கிவிட்டார்.

பாமகவின் வாக்குவங்கியை நம்பி இருந்த ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றம். எஞ்சி உள்ள தேமுதிகவும் அந்தப்பக்கம் சென்றுவிட்டால் திமுக அந்திரத்தில் ஊசலாடும் கத்தியாக மாறிவிடும்.

ரஜினி-விஜயகாந்த் சந்திப்பு ஸ்டாலினுக்கு மேலும் பீதியைக் கிளப்பிவிட்டது. தேமுதிக பாஜகவில் இணைந்துவிடுமோ  என ஸ்டாலினும் திடீர் சந்திப்பை நிகழ்த்திவிட்டார்.

எது எப்படியோ இந்தத் தேர்தல் ஆட்டத்தில் நம்மைச் சேர்த்துக்கொள்வார்களா என சிலவாரங்கள் வரை திகிலுடன் இருந்த தேமுதிகவின் மவுசை உயர்த்திவிட்ட பெருமை பாமகவையே சேரும்.

இந்த முறையும் திமுக மீது சாணியை கரைத்து ஊற்றப்போகிறார்களா? வண்ணப்பொடியைத் தூவி வரவேற்க போகிறார்களா? தேமுதிகவினர் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தேமுதிக முடிவு இறுதிநொடி வரை திகிலுடனே தமிழக தேர்தலை இழுத்துச்செல்லும் என்பது மட்டும் உறுதி.

3

2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம்; மீண்டும் அரசு மருத்துவமனை அலட்சியம்

0
2 வயது குழந்தைக்கு

2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம்; மீண்டும் அரசு மருத்துவமனை அலட்சியம்

சமீபத்தில் தான் கர்ப்பிணி ஒருவருக்கு சாத்தூர் மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. நோயால் பாதித்தவரின் ரத்தம் ஏற்றப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டு வயதுக் குழந்தை ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-சித்ரா என்ற தம்பதியருக்கு 2 வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

அதில் ஒரு குழந்தைக்கு 6 மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதயக் கோளாறு ஏற்பட்டு உள்ளதாக சிகிச்சை அளித்துள்ளனர். அப்பொழுது குழந்தையின் உடலில் ரத்தம் குறைவாக உள்ளது என ரத்தம் ஏற்றியுள்ளனர்.

இதன் பிறகு அந்தக்குழந்தைக்கு உடல் முழுவதும் கட்டிகளும், தடுப்புகளும் ஏற்பட்டு உள்ளது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது அந்தக்குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. தாய், தந்தை இருவருக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை.

அந்தக் குழந்தையுடன் பிறந்த மற்றொரு குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. எப்படி இந்தக் குழந்தைக்கு மட்டும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது என குழம்பிவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு ரத்தம் ஏற்றியதன் மூலமே ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதாக நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர்.

ஆனால் இவ்விசயத்தை வெளியில் சொல்லக்கூடாது என தம்பதியரை, மருத்துவமனை நிர்வாகத்தினர் மிரட்டி உள்ளனர்.

இதனால், விஸ்வநாதன்-சித்ரா தம்பதியினர் கோவைக் கலெக்டரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

இந்த சம்வத்தைத் தொடர்ந்து சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3

வேகமான வளர்ச்சி; ஜியோவைத் தொடக்கூட முடியாமல் தவிக்கும் ஏர்டெல்

0
வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி; ஜியோவைத் தொடக்கூட முடியாமல் தவிக்கும் ஏர்டெல்

4ஜி தொழில்நுட்பத்துடன் மட்டுமே களத்தில் இறங்கிய ஜியோ தொடர்ந்து அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

வோடாபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக்கொண்டே உள்ளன.

ட்ராய் அறிக்கையின்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே ஜியோ நிறுவனத்தில் 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

ஜியோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 0.36 என்று வாடிக்கையாளர் வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  117.01 கோடியைத் தாண்டி உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் 41.87 கோடியும்,  ஏர்டெல் நிறுவனம் 34.03 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

3

பாண்ட்யா நாட் பிட்; ஜடேஜா ஹேப்பி அண்ணாச்சி!

0
பாண்ட்யா

பாண்ட்யா நாட் பிட்; ஜடேஜா ஹேப்பி அண்ணாச்சி!

ஹார்த்திக் பாண்ட்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் பற்றித் தவறாகப் பேசியதால் ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

உலகக்கோப்பை போட்டி நெருங்குவதால் பாண்ட்யா அணியில் இடம்பெற கேப்டன் கோலி மீண்டும் உதவினார்.

நியூசிலாந்து தொடரில் பாண்ட்யா மீண்டும் சேர்க்கப்பட்டார். பண்ட்யாவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.

மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து பாண்ட்யா விலகியுள்ளார்.

அவருக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டு உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்திருப்பதால் ஜடேஜா ஹேப்பியாக உள்ளார்.

3

தற்கொலைப்படைத் தாக்குதல்: தீவிரவாதத் தலைவனின் துணிச்சல் பேச்சு

0
தற்கொலைப்படைத் தாக்குதல்

தற்கொலைப்படைத் தாக்குதல்: தீவிரவாதத் தலைவனின் துணிச்சல் பேச்சு

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் இன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளான்.

அதில் அவன் பேசியுள்ளதாவது, “இந்த தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்பே. காஷ்மீரை சேர்ந்த இளைஞனே நிகழ்த்தியுள்ளான்.

இது பாகிஸ்தான் எல்லையில் நிகழ்ந்தது அல்ல. இந்தியாவிற்குள் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் எப்படி காரணம் ஆக முடியும்.

காஷ்மீரில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு காஷ்மீர் இளைஞர்களே தண்டனை வழங்கி உள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாக மோடி கூறியது பொய் என நிரூபணம் ஆகிவிட்டது.

பாகிஸ்தான் மீது பழியைப்போட்டு மோடி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். பாகிஸ்தான் இதற்கு அடிபணியக்கூடாது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும்” இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளான்.

3

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி

0
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் திடீரென உள்ளே புகுந்தான்.

அந்த சூப்பர் மார்கெட்டில் மேலாளராக கோவர்தன் ரெட்டி (வயது 48) என்ற இந்தியர் ஒருவர் வேலை செய்து வந்தார்.

உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர் கோவர்தன் ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.

இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் குண்டுகள் கோவர்தன் ரெட்டியின் உடலை துளைத்து எடுத்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம ஆசாமி அங்கிருத்து உடனடியாகத் தப்பிவிட்டான். அமெரிக்கப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கோவர்தன் ரெட்டி தெலுங்கானா மாநிலம், புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைசெய்து வந்துள்ளார். அவரின் உடலை இந்தியா கொண்டுவர தெலுங்கு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றது.

3