Home Blog Page 304

மூன்றாவது அணியில் இந்தக் கட்சிகள் கூட்டணியா?

0
மூன்றாவது அணியில்

மூன்றாவது அணியில் இந்தக் கட்சிகள் கூட்டணியா?

நாடளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக கட்சிகளின் கூட்டணி முடிவுகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுக, பாஜக, பாமக என மூவர் கூட்டணியை முதலில் அறிவித்து தமிழக தேர்தல் களத்தில் டெரர் காட்டியுள்ளனர்.

திமுக கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சீட் ஒதுக்கி உள்ளது. இன்னும் திமுகவால் நிலையான முடிவை எடுக்க முடியவில்லை.

மேலும் சில முக்கியக் கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க திமுக முயற்சித்து வருகிறது. பாமக கட்சி அதிமுகவுடன் இணைந்ததில் திமுக கொஞ்சம் கடுப்பிலேயே உள்ளதாம்.

இரண்டு முக்கியக் கட்சிகள் இந்த முறை கிங் மேக்கர் கட்சியாக உருவெடுக்க உள்ளது. தேமுதிகவும், அமமுகவும் தான்.

அதிமுகவின் கணிசமான ஓட்டு வங்கியை அமமுக கட்சி தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவும் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது.

இதனால் இந்த இருகட்சிகளும் யார் பக்கம் இருக்கின்றனரோ அவர்களே தமிழகத்தில் வெற்றி பெரும் அணியாக மாறுவார்கள்.

அதேவேளை இந்த இரு கட்சிகளும் தனித்து நின்றால் அது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சற்று சறுக்கலை ஏற்படுத்தும்.

மூன்று அணிகளுமே சம பலத்தில் அமைந்துவிடும். இதனால் எந்தக் கட்சி வெற்றி பெரும் என்பது தேர்தலுக்குப் பின்பே இறுதி முடிவு கிடைக்கும்.

அதிமுகவில் சீட் குறைவாக உள்ளது என தேமுதிக இணைவதற்கு யோசனை செய்து வருகிறது. திமுகவில் இணைவது என்பதும் சந்தேகமே.

இதனால் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாவது அணி உருவானால் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மநீம ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறலாம் என பேச்சு அடிபடுகிறது.

3

சாலை, ரயில் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

0

சாலை, ரயில் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

இன்று காலை மும்பை தானே நகரின் அருகே உள்ள காஷ்மிரா சாலையில் ஒரு திறன் குறைந்த குண்டுவெடித்தது.

அடுத்த சிலமணி நேரங்களில் கான்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் கழிவறையில் திறன் குறைந்த குண்டு வெடித்துள்ளது.

கான்பூர் – பிவானி வழித்தடத்தில் இயங்கும் கலிந்தி எக்ஸ்பிரஸ் இன்று இரவு ஏழு மணியளவில் பரஜ்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயில் கழிவறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

திறன் குறைந்த குண்டு என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கழிப்பறை மட்டும் சேதமடைந்தது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாம் ஸ்குவாடுகளால் முற்றிலும் ரயில் தீவிர சோதனை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

3

ராஜாவுக்கு சீட்டா? தமிழிசை-எச்.ராஜா மோதல்!

0
ராஜாவுக்கு சீட்டா

ராஜாவுக்கு சீட்டா? தமிழிசை-எச்.ராஜா மோதல்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு, அதிமுக கட்சி 5 சீட் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அந்த ஐந்து சீட்டில் போட்டியிட பாஜக கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டு உள்ளனர்.

எச்.ராஜா தரப்பு சீட் குடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றனராம். ஆனால் தமிழிசைக்கு அதில் விருப்பம் இல்லை.

எச்.ராஜா பண்ணிய வேலைக்கு சீட் கொடுத்தால் நோட்டவைக்கூட முந்த முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் எச்.ராஜா தரப்பு தமிழிசைக்கு சீட் தரக்கூடாது எனப் பிடிவாதமாக உள்ளனர். இதனால் பாஜகவிற்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

3

பாகிஸ்தான் ஃபைனல் வந்தா கப்பு போயிடுமே? – குழம்பிய பி‌சி‌சி‌ஐ

0
பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஃபைனல் வந்தா கப்பு போயிடுமே? – குழம்பிய பி‌சி‌சி‌ஐ

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இந்தியத் துணை ராணுவப்படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் குளறுபடி காரணமாக இருநாட்டு அணிகளுமே கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக பங்கேற்பது இல்லை.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் உலகக்கோப்பையில் விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என  மும்பையில் இருக்கும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா பி‌சி‌சி‌ஐயை வலியுறுத்தியது.

பிசிசிஐ இன்று கூறுகையில், ‘உலகக்கோப்பைப் போட்டி நெருங்கி வருகிறது. போட்டி அட்டவணையை மாற்றமுடியாது என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

உலகக்கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால் நாங்கள் விளையாட மாட்டோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் விளையாடாமல் போனால் நமக்குரிய புள்ளிகளை இழக்க நேரிடும்.

ஒருவேளை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட நேரிட்டு, போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் மோதி முதல் போட்டியிலேயே ரிவிட் அடித்து அனுப்ப வேண்டும் என ரசிர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3

புல்வாமா தாக்குதல்: துணிச்சலாக களத்தில் குதித்த பாகிஸ்தான் பெண்

0
புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்: துணிச்சலாக களத்தில் குதித்த பாகிஸ்தான் பெண்

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் மீது இந்திய மக்களுக்கு கூடுதல் வெறுப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானியர்கள் பலர் இந்த தாக்குதலை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் செஹிர் மிர்ஸா என்ற பெண் #AntiHateChallenge என்ற ஹேஸ்டாக்கை உருவாக்கியுள்ளார்.

அந்த ஹேஸ்டாக்கில், ‘நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன்’ என்று எழுதிய பதாகையுடன் ட்விட் செய்துள்ளார்.

மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack போன்ற ஹேஸ்டாக்குகளை உருவாக்கி இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பாகிஸ்தானியப் பெண்கள் பலர் அதேபோன்று பதாகைகளுடன் ட்விட் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானியர்கள் பலர் தாக்குதலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக தாக்குதலை எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

போன் ஹேக்: ஹன்ஷிகாவைத் தொடர்ந்து நடிகை பூஜா தேவரியா!

0
போன் ஹேக்

போன் ஹேக்: ஹன்ஷிகாவைத் தொடர்ந்து நடிகை பூஜா தேவரியா!

குற்றமே தண்டனை, இறைவி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா தேவரியா. தற்பொழுது வெப் சீரியஸில் நடித்துக்கொண்டு உள்ளார்.

தற்பொழுது அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மொபைலை ஹேக் செய்து வாட்ஸ்ஆப்பை யாரோ வேகு பார்த்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் டிவிட்டில் தெரிவித்ததாவது, என்னுடைய வாஸ்ட்ஆப் ஆகவுண்டைப் பயன்படுத்தி  குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.

யாரும் என் நம்பரில் இருந்து வரும் மெசேஜுக்கு பதிலளிக்க வேண்டாம். என்னுடைய நம்பரை ப்ளாக் செய்யவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5-க்கும் மேற்பட்ட நடிகைகள் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் சில கவர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகின. அதை ‘நான் வெளியிடவில்லை. என் மொபைலை மர்ம நபர்கள் ஹேக் செய்து வெளியிட்டுள்ளனர்’ என ஹன்சிகா தெரிவித்தார்.

இப்படி தொடர்ந்து நடிகைகள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு நடிகரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

3

நடிகர் விஜய்யின் பயோபிக்: மகன் அப்பாவாக நடிப்பாரா?

0
நடிகர் விஜய்யின் பயோபிக்

நடிகர் விஜய்யின் பயோபிக்: மகன் அப்பாவாக நடிப்பாரா?

சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.எல்.விஜய்யிடம் நடிகர் விஜய்யின் பயோபிக் படத்தை இயக்குவீர்களா எனக் கேட்கப்பட்டது.

அதற்கு இயக்குனர் விஜய், “விஜய்யின் பயோபிக்கில் விஜய்யை போன்றே இருக்கும் அவருடைய மகனை வைத்து இயக்க ஆசை” எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக அறிமுகமாக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் மகன் துரூவ்வை வைத்து ஷங்கர் இயக்கவேண்டும் என விக்ரம் கோரிக்கை வைத்துள்ளார்.

எனவே ஷங்கரின் அடுத்த படத்தில் சஞ்சய், துரூவ் ஆகிய இருவரும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

வில் ஸ்மித் பாராட்டிய ரன்வீரின் ‘கல்லி பாய்’

0
வில் ஸ்மித்

வில் ஸ்மித் பாராட்டிய ரன்வீரின் ‘கல்லி பாய்’

கல்லி பாய் என்ற ஹிந்தி படத்தின் மூலம் மீண்டும் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

ரன்வீர் சிங், ஆலியா பாட் நடிப்பில் வெளிவந்த கல்லி பாய் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

பாலிவுட் மட்டும் இல்லாமல் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் ‘கல்லி பாய்’ படத்தைப் புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வில்ஸ்மித் பாராட்டு

“யோ ரன்வீர். வாழ்த்துகள். நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்தது. நான் அந்தக் கால ஹிப்ஹாப் முதல் உலகில் இருக்கும் அனைத்து விதமான ஹிப்ஹாப்பையும் கேட்டுள்ளேன்.

நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வென்று காட்டுங்கள்” என்று வில் ஸ்மித் பேசியுள்ளார். மேலும் ‘கல்லி பாய்’ படத்தின் ‘அப்னா டைம் ஆயேகா’ பாடலும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ராப்பர்களான விவியன் ஃபெர்னான்டஸ் மற்றும் நவீத் ஷேக் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கல்லி பாய் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் பதில் ட்வீட் 

“அசல் ராப்பர் நடிகரிடமிருந்து பாராட்டு. உங்களுக்கு என் மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

3

நடிகையின் மகிழ்ச்சிக்கு காரணமான கனவுக்கண்ணன்

0
நடிகையின்

நடிகையின் மகிழ்ச்சிக்கு காரணமான கனவுக்கண்ணன்

ஒவ்வொரு வருடமும் கனவுக்கன்னியாக வலம்வர வேண்டும் என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருக்கும்.

அதேவேளை பெண்களின் மனதை கவரும் சாக்லேட் பாய் ஹீரோ வெகு சிலரே. எல்லா நடிகர்களுக்கும் பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது.

ஒரு சில நடிகர்கள் மட்டுமே கனவுக்கண்ணனாக திகழ்வார்கள். அப்படி திகழ்ந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.

மாப்பிளை எப்படி இருக்கவேண்டும் என்று 80, 90-களில் பெண்களைக் கேட்டால் அரவிந்த்சாமி போன்று என பதில் சொல்வார்கள்.

அந்த அளவிற்கு ஆணழகனாகத் திகழ்ந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சிலகாலம் தலை வலுகையாகி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

தனி ஒருவன் படம் மூலம் முரடுத்தனமான வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். வழுக்கைத் தலையை சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்துவிட்டார்.

ராஜபாண்டி இயக்கத்தில்  ‘கள்ளபார்ட்’ என்ற படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். நாயகியாக ரெஜினா நடித்துள்ளார்.

அரவிந்த்சாமியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என படத்தின் நாயகி ரெஜினா கசான்ட்ரா தெரிவித்துள்ளார்.

3

ஐ‌பி‌எல் போட்டி: கோலியும், தோனியும் மோதல்

0
ஐ‌பி‌எல் போட்டி

ஐ‌பி‌எல் போட்டி: கோலியும், தோனியும் மோதல்

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ‌பி‌எல் போட்டி அட்டவணைகள் முதல் 2 வாரத்திற்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் வருவதால் முதல் 2 வாரம் மட்டுமே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதியைப் பொருத்து அறிவிக்கப்படும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐ‌பி‌எல் போட்டிகள் உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே லீக்போட்டி ஆகும்.

அட்டவணை வெளியிடப்பட்டதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலெஞ்ஜெர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை மைதானத்தில் ஒரு போட்டி மட்டுமே நடந்தது, இருந்தாலும் சென்னை அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது.

மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதி அறிவித்த பிறகே அறிவிக்கப்படுவதாக ஐ‌பி‌எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருடம் உள்ளூர் வெளியூர் அணி போட்டிகள் என நடத்துவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதால் போதிய பாதுகாப்பு கொடுப்பது கடினம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

3