Home Blog Page 305

அதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!

0
அதித்யா வர்மா

அதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!

ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால், அப்படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று.

அதே படம், மொழி புரியாத மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துவிட்டால் அதை ரீமேக் செய்ய அசாத்திய தைரியம் வேண்டும்.

த்ரிஷ்யம், ப்ரேமம், அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் இவ்வரிசையில் அடங்கும். மலையாளத் திரைப்படமான ப்ரேமம் சென்னையில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

இதன்பிறகும் அப்படத்தை இன்னொரு ஹீரோவை வைத்து எடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அப்படி எடுப்பதாக இருந்தால், அதைவிட இரண்டு மடங்கு சிறப்பானதாக இருந்தால் மட்டுமே ரசிகர் ஏற்றுக்கொள்வார்கள்.

இல்லையெனில், அப்படம் படுதோல்வியில் முடியும் அல்லது எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தராது.

அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழ் எடுக்க முடிவு செய்தபோதே, அப்படத்தை ‘டப்’ செய்தாலே படம் நன்றாக ஓடும் எனக் கருத்துக்கள் நிலவியது.

அதையும் மீறி வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துரூவ்வை கதாநாயகனாக வைத்து இயக்குனர் பாலா ரீமேக் செய்தார். ஆனால் படம் வெளிவரும் முன்பே அதைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எரிந்துவிட்டனர்.

காரணம், படத்தை கேவலமாக எடுத்துள்ளார் பாலா. மேலும் அர்ஜுன் ரெட்டி அளவு இந்தப் படம் இல்லை என விக்ரம் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

இதனால் பாலாவைப் படத்தில் இருந்து தூக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து இயக்குவது என முடிவு செய்யப்பட்டு விட்டது.

அதன்படி, இப்படத்திற்கு ஆதித்யா வர்மா எனத் தலைப்பு வைத்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தை இயக்க உள்ளார்.

ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

தற்பொழுது ஆதித்யா வர்மாவின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. பர்ஸ்ட் லுக் மிகவும் மிரட்டலாக உள்ளது.

பர்ஸ்ட்லுக்கை பார்த்த சிலர் பாலாவுக்கு பல்பு தான் எனக் கமெண்ட் செய்துள்ளனர்.

3

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு; மதுரைக்கிளை ஆலோசனை

0
தை மாதம்

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு; மதுரைக்கிளை ஆலோசனை

வரும் 25-ம் தேதி மதுரை பழங்காநத்தத் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத்தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்ததாவது,

தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.

வருடம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தினால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் எழுகிறது.

எனவே தை மாதம் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

3

இதுல யாரு ஒரிஜினல் பிரியங்கா சோப்ரா?

0
இதுல யாரு

இதுல யாரு ஒரிஜினல் பிரியங்கா சோப்ரா?

நியூயார்க் நகரில் உள்ள மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகம் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் கனவுக்கன்னியுமான நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை ஒன்று வைத்துள்ளது.

2016-ம் ஆண்டில் ஒரு விருது வழங்கும் நிகழ்வில் சிவப்புநிற ஆடையில் தோன்றினார். அதே வடிவில் தற்பொழுது அவருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

நிச்சயதார்த்தத்தின் போது நிக்ஜோனஸ், பிரியங்காவிற்கு அணிவித்த வைர மோதிர வடிவவும் அதில் இடம்பெற்று உள்ளது.

இந்த மெழுகுச் சிலையை நேரில் பார்வையிட்டு, அதனுடன் கைகோர்த்தவாறு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஒரிஜினல் எது? போலி எது? எனத் தெரியாத அளவுக்கு தத்ரூபாக இருந்தது அந்த மெழுகுச்சிலை.

3

பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!

0
பள்ளியின் பூட்டை

பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!

விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து 3 கணிப்பொறி, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ 5000 பணத்தையும் திருடிச்சென்று விட்டனர்.

பள்ளி வளாகத்தில் நின்று இருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் அந்த மர்ம நபர்கள்.

இன்று காலையில் வழக்கம்போல் பள்ளி திறப்பதற்காக வந்த ஆசிரியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

உடனே விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

அதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு

0
அதிமுகவுடன் பாமக

அதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்து உள்ளது.

அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி வருகிறது. பாமகவுடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸும் அதிமுக தலைவர்களும் நாளை சந்திக்கவுள்ளதாகவும், இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் தேர்தல் வரும் கடைசி நிமிடம் எப்படி வேண்டுமானாலும் கூட்டணிக் கட்சிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

3

புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது ராணுவம்: முழுநீள வீடியோ

0
புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது ராணுவம்: முழுநீள வீடியோ

புல்வாமா தாக்குதல் நடந்ததாக வெளியான வீடியோவை முதலில் பார்க்கவும்: பதிலடி கொடுத்த வீடியோ கடைசியாக இணைக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு-காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு, சிஆர்பிஎப் வீரர்கள் சென்றபோது, தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஆளானார்கள்

இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தாக்குதல் நடந்த வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ போலி என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காஷ்மீர் மாநில போலீசார், 55 ராஷ்ட்ரிய ராணுவ ரைஃபிள் பிரிவினரும் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தனர்.

இறுதியாக, ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இருவரில் கம்ரான் என்ற நபர் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் ஆசாரின் நெருங்கிய கூட்டாளியுமாவார்.

ஹிலால் அகமது, கம்ரான் ஆகிய இருவரும் தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஜீநியூஸ் வெளியிட்டுள்ளது.

3

ரௌடி பேடி: ஒரிஜினல் பாடலை மிஞ்சிய இளம்ஜோடி

0
ரௌடி பேடி

ரௌடி பேடி: ஒரிஜினல் பாடலை மிஞ்சிய இளம்ஜோடி.

ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பிறகு தனுஷின் ரௌடி பேபி பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

தற்பொழுது ரௌடி பேபி பாட்டுக்கு பல்வேறு ரசிகர்கள் தங்கள் பாணியில் நடனம் ஆடி அசத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.

அந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

3

திருடப்பட்ட பைக்: 100 கிமீ விரட்டி சென்று பிடித்தனர்

0
திருடப்பட்ட பைக்

திருடப்பட்ட பைக்: 100 கிமீ விரட்டி சென்று பிடித்தனர்

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மேடவாக்கம் சாலையில் வசிப்பவர் புஷ்பராஜ். இவருடைய இருசக்கர வாகனம் காணமல் போய் உள்ளது.

திருடுபோனால் கண்டறிவதற்கு ஏதுவாக இவருடைய பைக்கில் ஜி.பி.எஸ். கருவியை முன்னெச்சரிகையாக பொருத்தியுள்ளார்.

இதனால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே காவலர்கள் ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் திருடப்பட்ட பைக்கை பின் தொடந்து சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே அந்த பைக்கையும் அதைத் திருடியவர்களையும் மடக்கிப்பிடித்தனர்.

சுமார் நூறு கிலோமீட்டர் தூரம்வரை விரட்டி சென்று திருடர்களைப் போலீசார் பிடித்துள்ளனர். பைக்கை திருடிய மேக சூர்யா, வினோத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

3

டிக்டாக் செயலிக்கு முற்றிலும் தடை: அமைச்சர் உறுதி

0
டிக்டாக்

டிக்டாக் செயலிக்கு முற்றிலும் தடை: அமைச்சர் உறுதி

ப்ளூவேல் என்ற நீலத்திமிங்கல விளையாட்டைத் தடை செய்ததுபோல, டிக்டாக் செயலியையும் விரைவில் தடை செய்வோம் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம்  புதியதாக 9 பேருந்துகளை அமைச்சர் மணிகண்டன் துவங்கிவைத்தார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இளைஞர்களை காவு வாங்கிய ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்தது போல, தமிழகத்தில் டிக்டாக் செயலியையும் தடை செய்வோம்.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிரவாதத் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான சம்பவம் கண்டனத்திற்கு உரியது.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. மத்திய அரசு மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்கவேண்டும்” எனக் கூறினார்.

3

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச்சென்று 3 பேர் பலி

0
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச்சென்று 3 பேர் பலி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.

இன்று அவர் பாண்டிச்சேரி சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக பாண்டிச்சேரி வரை சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் சென்றனர்.

பாதுகாப்பு பணி முடிந்து, சி.ஆர்.பி.எப் வீரர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, விழுப்புரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். சைக்கிளில் ஒருவர் குறுக்கே சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

3