Home Blog Page 306

இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பையில் மோதக்கூடாது – சிசிஐ

0
இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பையில் மோதக்கூடாது – சிசிஐ

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடே கடும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கிறது.

இந்த நிலைமையில் இது நடப்பதற்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று மும்பையில் இருக்கும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா பி‌சி‌சி‌ஐயை வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் செயலாளர் சுரேஷ் பாஃப்னா நிருபர்களிடம் கூறுகையில்,

புல்வாமாவில் நமது ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். சிசிஐ அமைப்பு விளையாட்டோடு தொடர்புடையதாக இருந்தாலும், தேசத்திற்கே முதலிடம், அதன்பின்பே விளையாட்டு.

பாகிஸ்தான் பிரதமர் இந்த நிகழ்வைப் பற்றி வாயைத் திறக்காமல் இருப்பது மேலும் இந்தியர்களை ஆத்திரமூட்டுகிறது. அவர் எதையோ மூடி மறைப்பது போல் தெரிகிறது.

உலகக்கோப்பைப் போட்டியில் வரும் மே 30ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராபோர்ட் நகரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.

3

புல்வாமா தாக்குதல்: உண்மையான வீடியோ வெளியானது

0
புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்: உண்மையான வீடியோ வெளியானது

உண்மையான வீடியோவா?

புல்வாமா தாக்குதல் சிசிடிவி வீடியோ என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அது புல்வாமா தாக்குதல் வீடியோ இல்லை.

அந்த வீடியோவை நன்கு உற்றுக்கவனித்தாலே தெரியும், அது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்று.

இந்தியாவில் வாகனம் வலது ஓரமாகச் செல்லும். ஆனால் இந்த வீடியோவில் வாகனங்கள் இடது ஓரமாகச் செல்கிறது.

அதாவது இந்த வீடியோவில் வலதுபுறம் வாகனம் செல்கிறது. இடதுபுறம் வாகனம் வருகிறது. இந்தியாவில் இடதுபுறமே வாகனம் செல்லும்.

அது ஈராக் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வு. ஆனால் புல்வாமா தாக்குதலும் கிட்டத்தட்ட இப்படி ஒரு நிகழ்வே.

இன்டர்நெட் சேவை முடக்கம்

இந்த தாக்குதல் பற்றி எந்த ஒரு வீடியோவும் இதுவரை கிடைக்கவில்லை. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகக்கூடாது என தாக்குதல் நடந்த பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது.

மீடியாக்களுக்கு தெரியும் முன்பே அப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

தீவிரவாதிக்கு எப்படி தெரியும்?

சி.ஆர்.பி.எப். வாகனம் சரியாக அந்த நேரத்தில் அங்கு வரும் என்பது தீவிரவாதிக்கு எப்படி தெரியும்?

இப்பயணம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குள் முடிவு செய்த ஒன்றாகவே இருக்க முடியும்.

350 கிலோ வெடி மருந்தை இந்தியப் பாதுகாப்பு பகுதிக்குள் கொண்டு வந்தது எப்படி? காஷ்மீர் என்பது முழுக்க முழுக்க ஆபத்தான பகுதி.

எப்பொழுதுமே ராணுவ கண்காணிப்பில் இருக்கும் பகுதி. இப்படி ஒரு பகுதியில் 350 கிலோ வெடி மருந்துடன் செல்வது என்பது அதிர்ச்சியான ஒன்று.

அதுவும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வரும் நேரத்தில் மிகச்சரியாக வெடிக்க வைத்திருப்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ராணுவத்திற்குள் கருப்பு ஆடு உள்ளதா?

ராணுவத்திற்குள் உள்ள ஒரு நபர் துப்புக்கொடுக்காமல் இப்படி ஒரு தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்த வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.

இறந்தவர்களை அடக்கம் செய்வது, அவர்கள் குடும்பத்திற்கு உதவுவது, வீர வணக்கம் செலுத்துவது இப்படியே இரண்டு நாட்களைக் கழித்துவிட்டோம்.

இது இதோடு முடிந்துவிடுமா? நாளை மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் வெடிமருந்துடன் வாகனம் வருவதை கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்படாமல் ராணுவ வீரர்கள் வாகனம் உள்ளது என்பது வேதனையான ஒன்று.

3

கெல்மெட் வடிவில் மாணவிகள்; உலக சாதனை முயற்சி

0
கெல்மெட் வடிவில் மாணவிகள்

கெல்மெட் வடிவில் மாணவிகள்; உலக சாதனை முயற்சி

30-தாவது சாலைப் பாதுகாப்பு வார விழா, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரிசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மகளிருக்கான தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது மாபெரும் உலகசாதனை நிகழ்ச்சியாக மாறியது.

பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் அமைந்துள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில், 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றுகூடி, கெல்மெட் வடிவில் அணிவகுத்து நின்றனர்.

சேலம் மாவட்ட காவல் ஆணையர் சங்கர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தை வேலு ஆகிய இருவரும் இந்த சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இருசக்கர வாகனங்கள் வைத்துள்ள பெண்கள் அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி சதீஷ், போக்குவரத்து காவல் அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

3

போர் பயற்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர்

0
போர் பயற்சியில்

போர் பயற்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் அணுகுண்டு சோதனை செய்த பகுதியில்  வாயு சக்தி போர் சாகசப்பயிற்சி நடைபெற்றது.

இந்திய விமானப்படையின் வலிமையையும், இந்திய அணு ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

விமானப்படையினர், போர் விமானங்களை மின்னல் வேகத்தில் செலுத்தி சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

இந்த சாகச நிகழ்ச்சியை விமானப்படை தளபதி தனோவா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

3

உயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்

0
உயிரிழந்த வீரர்களின்

உயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பச்செலவுகளை  ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த வீரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க ரிலையன்ஸ் குழும மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக கூறியுள்ளது.

3

நடிகை யாஷிகா தற்கொலை; மோகன் பாபு கைது

0
நடிகை யாஷிகா

நடிகை யாஷிகா தற்கொலை; மோகன் பாபு கைது

தமிழ் சினிமாவில் மன்னர் வகையறா மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா (21).

இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். வெள்ளித்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும், பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

இருவருக்கும் சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. யாஷிகா வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் மோகன் அந்த அளவிற்கு எனக்கு வசதி இல்லை என யாஷிகாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த யாஷிகா தற்கொலை செய்துகொண்டார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் பாவுவை கைது செய்துள்ளனர்.

3

காஷ்மீர் இந்தியாவுக்கே: போருக்குத் தயாராகிவிட்டார் மோடி!

0
காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே: போருக்குத் தயாராகிவிட்டார் மோடி!

புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதியை பாகிஸ்தான் ஊடகங்கள், போராட்ட வீரன் எனப் பாராட்டியுள்ளது.

மும்பையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில் மறியலில் ஈட்டுபட்டு அதிருப்தியை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் (John Bolton) தீவிரவாதிகளை ஒழிக்க தேவையான உதவிகளைச் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ராணுவ மேஜர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதே போன்று ஈரானில் சில நாட்களுக்குமுன் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானே காரணம் என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனவே, விரைவில் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம்; நாடு திரும்ப விருப்பம்

0
ஐஎஸ் அமைப்பில்

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம்; நாடு திரும்ப விருப்பம்

ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்வதற்காக 2015- ஆம் ஆண்டு லண்டனில் இருந்து, பதினைந்து வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் தப்பிச்சென்றனர்.

கிரீன் அகாடமி பள்ளியில் பயின்ற ஷமீமா பேகம், அமீரா அபேஸ் கதீசா சுல்தானா ஆகிய மூவரும் துருக்கியின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிரியா சென்றனர்.

சிரியாவில் உள்ள ரக்கா நகரில் புதிய மணப்பெண்கள் என உள்ள வீட்டில் மூவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு, ஷமீமா நெதர்லாந்து நாட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 27 வயதான இளைஞரை மணந்துகொண்டார்.

அவரது கணவர் இராணுவத்திடம் சரணடைந்துவிட்டார். ஷமீமா 40 ஆயிரம் பேர் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறார்.

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக தற்பொழுதும் துளி அளவு கூட வருத்தப்படவில்லை எனத் ஷமீமா தெரிவித்துள்ளார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இறந்துவிட்டது.

தற்பொழுது அவர் கர்ப்பமாக உள்ளார். எனவே அவர் மீண்டும் பிரிட்டன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.

அங்கு சென்றால் குழந்தைக்குப் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஒரு அமைதியான வாழ்கையை வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

3

கோலியைக் கதறவிட்ட ரசிகர்கள்!

0
கோலியைக் கதறவிட்ட

கோலியைக் கதறவிட்ட ரசிகர்கள்!

தீவிரவாதத் தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் நகரில் 45 சி‌ஆர்‌பி‌எஃப் ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடே சோகத்திலும் அதிருப்தியிலும் உள்ளது.

இதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விராட் கோலி வேறு ஏதோ சம்பந்தம் இல்லாத ட்வீட்  போட்டதால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை பேருந்து மீது மோதி வெடிக்கச் செய்ததில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

38-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

45 சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், சேவாக், முகமது கைப் போன்றவர்களும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தீவிரவாதத் தாக்குதல் குறித்து எந்தவிதமான கண்டன அறிக்கையும் பதிவிடாமல் அதற்குப் பதிலாக,

இந்திய விளையாட்டு வீரர்களுக்கான விருது குறித்த பதிவையும், வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் வாக்களிக்கக் கோரி இருந்தார்.

ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளியிட்டதால் சிறிது நேரத்தில் சூழ்நிலையை புரிந்து மறுபடி சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்களுக்கு இரங்கல்கள் கேட்கும் வகையில் ட்வீட் செய்தார்.

3

அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிவிட்டது இந்தியா?

0
அடுத்த கார்கில் போருக்குத்

அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிவிட்டது இந்தியா?

ஜம்மு-காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுத்துள்ளது.

எப்படி இந்த தாக்குதல் நடந்தது என சி.ஆர்.பி.எப் படையே குழம்பிப்போய் விட்டது. இருப்பினும் இதற்கு தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுக்கொண்டது.

அந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்தது. பாகிஸ்தானுக்கும் இதில் பங்கு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இதில் சமந்தபட்டவர்கள் அனைவரும் தக்க விலை கொடுக்க நேரிடும். அவர்கள் அனைவரும் தவறு செய்துவிட்டார்கள். இதில் சமந்தப்பட்டவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பொறுத்தது போதும், இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த ஜவான் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பாஜக நெருங்கிய வட்டாரங்கள் கருத்துகள் அனைத்தையும் ஒப்பிட்டால் இந்தியா அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிக்கொண்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

3