Home Blog Page 307

கருஞ்சிறுத்தை முதல் முறையாக கேமராவில் சிக்கியது

0
கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தை முதல் முறையாக கேமராவில் சிக்கியது

சிறுத்தையை அநேக மிருகக்காட்சி சாலையில் பார்த்திருக்க முடியும். ஆனால், ப்ளாக் பேந்தர் என்ற கருஞ்சிறுத்தை இனத்தை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.

அப்படி யார் கண்ணிலும் சிக்காத இந்த அரியவகை விலங்கை வில் பர்ராட் என்ற புகைப்பட கலைஞர் படம் பிடித்துள்ளார்.

இதற்குமுன் இதை யார் படம் பிடித்தார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கடந்த நூறு வருடங்களில் கருஞ்சிறுத்தை படம் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.

ஒரு சிறுத்தையின் காலடி தடத்தை பின் தொடர்ந்து சென்று நான்கு நாட்கள் காத்திருந்து இந்த கருச்சிறுத்தையைப் படம் பிடித்துள்ளார்.

3

தாக்குதலில் அரசியல் சதி உள்ளதா?: சி.ஆர்.பி.எப் செய்தி தொடர்பாளர் அதிர்ச்சி தகவல்!

0
தாக்குதலில்

தாக்குதலில் அரசியல் சதி உள்ளதா?: சி.ஆர்.பி.எப் செய்தி தொடர்பாளர் அதிர்ச்சி தகவல்!

ஜம்மு-காஷ்மீரில் 78 வாகனங்களில், 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஸ்ரீநகரை நோக்கி அதிவேகமாகக் சென்றனர்.

முகாமை அடைய 30 கிலோமீட்டர் இருந்தபோது, 350 கிலோ எடையுடன் வெடிபொருட்களை ஏற்றி வந்த கார் ஒன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது.

புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதுவரை இந்த தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் ஏகப்பட்ட செக்போஸ்டுகள் உள்ளன. அதையும் மீறி ஒருவர் 350 கிலோ வெடிமருந்துடன் உள்ளே நுழைந்துள்ளார்.

இதில் எதோ சதி உள்ளது. இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என சி.ஆர்.பி.எப். ஆஷிஸ் குமார் ஜா கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தில் அதிக அளவு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதியில், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

மேலும், சில இடங்களில் இணைய வேகம் 2ஜி-யாக குறைக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூகவலைதளங்களில் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.

3

நிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்

0
நிர்மலா தேவியை

நிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

அவர் அந்த ஆடியோவில் ஆளுநர் தாத்தா எனக்குறிப்பிட்டார். இப்போது வரை அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலாதேவி நீதிமன்றதிற்கு செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மறைமுகமாகப் பதிலளித்தார்.

மீண்டும் நிர்மலா தேவி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்பொழுது போலீஸ் நிர்மலாதேவியைச் சுற்றி வளைத்து பாதுகாப்பு அளித்து கூடிச்சென்றது.

அதையும் மீறி நிர்மலா தேவியிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களைப் போலீசார் கீழே தள்ளிவிட்டனர்.

இதனால் பத்திரிகையாளர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

3

மோடிக்கு ஆப்பு வைக்கும் ட்விட்டர்: அதிர்ச்சியில் பாஜக

0
மோடிக்கு ஆப்பு

மோடிக்கு ஆப்பு வைக்கும் ட்விட்டர்: அதிர்ச்சியில் பாஜக

சில தினங்களாக ட்விட்டர் அதிகாரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வந்தது.

பேஸ்புக்கிற்கு ஏற்கனவே பாஜக கடிவாளம் போட்டு விட்டது. அதேபோல் டிவிட்டருக்கும் கடிவாளம் போட பாஜக முயற்சித்து வருகிறது.

காரணம் ட்விட்டர் கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு எதிராக உள்ளது. மேலும் பாஜகவுக்கு எதிரான ஹாஸ்டாக்குகள் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

#gobackmodi என்ற ஹாஸ்டாக் பாஜகவிற்கு மிகவும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹேஸ்டாக் மோடி எங்கு சென்றாலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் மோடிக்கு ஆதரவான சில ஊடகங்கள் டிவிட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு எதிராகவே உள்ளது.

தேர்தலுக்கு முன் ட்விட்டரை எப்படியாவது மடக்கி பெருமை பேசவைக்க வேண்டும் என பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

ஆனால் ட்விட்டர் நிதிமன்றத்தையும், மோடி அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் ட்விட்டர் கருத்துக்கணிப்புகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளது.

3

ஓய்வு பெறுவதற்கு முன்பே தோனியை சிறப்பித்த ராஞ்சி

0
ஓய்வு பெறுவதற்கு

ஓய்வு பெறுவதற்கு முன்பே தோனியை சிறப்பித்த ராஞ்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் தோனியின் பெயர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பெவிலியனுக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த வருடம் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கான மைதானம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது. இந்த மைதானத்தில் தெற்குப் பகுதிக்கு (South stand) எம்.எஸ்.தோனி பெவிலியன் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐ‌.சி‌.சி.யின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்ற பெருமை அவரை மட்டுமே சேரும். இதை அறிந்த தோனியின் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பொதுவாக கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பெயர்கள் அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் மைதானங்களில் அவர்களின் பெயர் சூட்டுவது வழக்கம்.

சச்சினின் பெயர் மும்பை வான்கடே மைதானத்திலும் கங்குலி பெயர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சூட்டப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

3

இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நடிகர் சூர்யா தான்

0
இந்த வருடத்

இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நடிகர் சூர்யா தான்

நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசை உள்ளதால் அரசியல் படம் எடுக்கின்றனர் என பொதுவான கருத்து ஒன்று நிலவி வருகிறது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள என்.ஜி.கே. படம் முழுக்க முழுக்க அரசியலும், விவசாயமும் சார்ந்துள்ளது.

படத்தின் டீசர் வெளியான உடன் இந்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. வரும் தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ இல்லையோ, சூர்யா-செல்வராகவன் கூட்டணி ஜெயிக்கும்.

டீசருக்கு பலத்த வரவேற்பு உள்ளது. சிலர் தியேட்டரில் டீசர் வெளியானதும் சட்டையைக் கழற்றி ஆடியுள்ளனர்.

செல்வராகவனுக்காக நாங்க எவ்ளோ நாள் வேணுனாலும் வைட் பண்ணுவோம் என அவரது ரசிகர்கள் கர்ஜித்துள்ளனர்.

3

காதலர் தினத்தில் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் -வீடியோ

0
காதலர் தினத்தில்

காதலர் தினத்தில் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராகுல்காந்தி நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாடில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு சில பெண்கள் மாலை அணிவித்தனர்.

அப்போது ஒரு பெண் ராகுல் காந்தியை வளைத்துப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கன்னத்தை தடவி தடவி மகிழ்ந்தார்.

சில நாட்கள் முன் மோடி முன்னிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

தற்பொழுது இந்த சம்பவத்தை, காதலர் தினத்தில் பெண், ராகுல் காந்திக்கு ப்ரப்போஸ் செய்ததாக பாஜகவினர் கேலி செய்து வருகின்றனர்.

3

மோடியை விரட்ட உயிரை விடவும் தயார் – மம்தா

0
மோடியை விரட்ட

மோடியை விரட்ட உயிரை விடவும் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று கூடியது. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு மேலும் பலர் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசும்போது, பாஜக அரசையும், மோடியையும் மிகவும் ஆவேசமாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசியதாவது ‘கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்ய, சி.பி.ஐ. அதிகாரிகளை ஏவிய இப்படி ஒரு கீழ்த்தரமான அரசை நான் பார்த்ததே இல்லை.

ஜனநாயகம் இப்போது மோடி நாயகமாக மாறிவிட்டது. மோடியை விரட்டவும், நாட்டின் நலனுக்காவும் எனது கட்சியையும், உயிரையும் தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன்.

மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமையாத வண்ணம் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ஒற்றுமையாகப் பாடுபடுவோம் எனப் பேசினார்.

3

ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு!

0
ராஜ்பவனில்

ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு!

சென்னையில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.

முதல்வர் பழனிச்சாமி, விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிலை திறந்தவைத்து பழனிச்சாமி பேசியதாவது, 1893ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், விவேகானந்தர் நிகழ்த்திய உரையே அவரை உலகப்புகழ் பெறச் செய்தது.

நம் நாட்டின் சமய கொள்கைகளை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பங்கேற்க காரணம் தமிழ் மன்னர்.

சிகாகோ உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை விவேகனந்தருக்கு அளித்தவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி.

உலகிற்கு இந்து மதத்தின் புகழைப் பரப்பியபின், இலங்கை வழியாக 1897-ல் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துக்கல் பகுதிக்கு வந்தார் விவேகானந்தர்.

அப்போது தடபுடலாக வரவேற்பு அளித்தார் மன்னர் பாஸ்கர சேதுபதி. அப்போது விவேகானந்தர், தன்னை உலகறிந்த ஞானியாக மாற்றிய சேதுபதி மன்னரை பாராட்டினர். இவ்வாறு பழனிச்சாமி பேசிமுடித்தார்.

3

உங்கள் காதலை சொல்வது எப்படி? – Love Tips Tamil

0
உங்கள் காதலை சொல்வது எப்படி? - Love Tips Tamil. how to propose love a girl or a boy in tamil. ப்ரபோஸ் செய்வது எப்படி? காதலிப்பது எப்படி?

உங்கள் காதலை சொல்வது எப்படி? – Love Tips Tamil. how to propose love a girl or a boy in tamil. ப்ரபோஸ் செய்வது எப்படி? காதலிப்பது எப்படி?

காதலை வெளிப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை வெளிப்படுத்த தெரியாமல் ஏகப்பட்ட காதல்கள் தோல்வியில் முடிகின்றன.

கேரி ஜாப்மன் (gary chapman) எழுதிய தி ஃபைவ் லவ் லாங்குவெஜேஸ் (The Five Love Languages) நாவலின் படி காதலை உங்கள் இணையிடம் வெளிப்படுத்தும் முறை:

நன்றி (Gratitude)

ஒவ்வொரு சிறு நிகழ்விலும் நன்றியை வெளிப்படுத்தும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். நல்லதோ, கேட்டதோ நன்றி கூறுவதால் நாம் குறைந்து போவதில்லை. நன்றி கூறுவதால் இருவரிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும்.

பரிசு அளியுங்கள்

எதிர்பாராத நேரங்களில் பரிசு அளித்து அசத்துங்கள். இதன் மூலம் நீங்கள் இருவரும் அளவு காணாத மகிழ்ச்சியை அடையலாம்.

உதவி அல்லது பணிவிடை

முடிந்தவரை சிறு சிறு உதவிகளை செய்ய முயலுங்கள். சமைத்துக் குடுப்பது அல்லது சமைக்க உதவுவது. பிற நிகழ்வுகளில் உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

நேரத்தை செலவிடுவது

உங்கள் இணைக்கு அல்லது ஜோடிக்கு தேவையான அளவிற்கு நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு இருக்கும் நேரங்களிலும் உங்கள் காதலுக்கான நேரத்தை ஒதுக்கி உங்கள் ஜோடியுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

நெருக்கம்

உங்கள் காதலியை அணைப்பது, கை கோர்ப்பது மற்றும் நெற்றியல் முத்தம் பரிமாறிக்கொள்வது போன்ற செயல்கள் மேலும் அவசியம்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான எண்ணங்களும் செயல்களும் கொண்டுள்ளோம். ஒருவர் மற்றொவரின் மொழியைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

கேரி ஜாப்மன் நாவலின் ஒரு சிறிய விளக்கம் மட்டுமே இது நீங்கள் முழுமையாக காதலை வெளிப்படுத்தும் முறையை அறிந்து கொள்ள நாவலை இணையத்தில் வாங்கிப் படியுங்கள்.

உங்களுடைய காதல் டிப்ஸ் கமெண்ட் பண்ணுங்க

உங்கள் காதலை சொல்வது எப்படி? – Love Tips Tamil. how to propose love a girl or a boy in tamil. ப்ரபோஸ் செய்வது எப்படி? காதலிப்பது எப்படி?

இதுபோன்ற கேள்விகளுக்கு இதைவிட சிறந்த பதில்கள் உங்களிடம் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும். மற்றவர்களுக்கு இது உதவும்.

3