Home Blog Page 31

வீட்டு பூஜையறையில் ஜூலி புகைப்படம்: இப்படியொரு வெறித்தனமான ரசிகரா?

0
Bigg Boss Julie

Bigg Boss Julie Photo; வீட்டு பூஜையறையில் ஜூலி புகைப்படம்: இப்படியொரு வெறித்தனமான ரசிகரா? பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலியின் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து ரசிகர் ஒருவர் தெய்வமாக வழிபட்டு வருகிறார்.

வீட்டு பூஜையறையில் வைக்கப்பட்டுள்ள ஜூலியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் ஜூலி. அதற்கு கிடைத்த பரிசு தான் பிக் பாஸ்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் அப்பாவியாக இருந்த ஜூலி அதன் பிறகு தனது சுயரூபத்தை காட்டி ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றார்.

ஆம், இவரது அடுக்கடுக்கான பொய், காயத்ரி ரகுராம் உடன் இணைந்து அடித்த லூட்டிகள் , ஓவியாவுக்கு எதிராக ஜூலி செய்த வன்மங்கள் ஆகிவற்றால் ரசிகர்களின் வெறுப்பை பெற்றார்.

இதையடுத்து, போட்டியிலிருந்து வெளியேறிய ஜூலி, கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்தார்.

தற்போது அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஜூலியின் அழகான புகைப்படத்தை தனது வீட்டு பூஜையறையில் வைத்து ரசிகர் ஒருவர் தெய்வமாக வழிபட்டு வருகிறார். அந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

மாஸ்டரில் நான் கொடூரமான வில்லன்: விஜய் சேதுபதி!

0
Vijay Sethupathi Master Video

Vijay Sethupathi Master Video; மாஸ்டரில் நான் கொடூரமான வில்லன்: விஜய் சேதுபதி! தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நான் கொடூரமான வில்லன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

நான் கொடூரமான வில்லன் என்று விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும், சாந்தனு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, பிரேம், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

இதைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி வெளியாகவில்லை.

இதே போன்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மேலும், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக மாஸ்டர் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு கொடூரமான வில்லன். கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, டுவிட்டரில் விஜய் சேதுபதி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

அரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!

0
Navya Swamy Corona Virus

Navya Swamy; அரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று! அரண்மனைக் கிளி சீரியலில் நடித்து வரும் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவ்யா சாமி தமிழில் வாணி ராணி, அரண்மனைக் கிளி ஆகிய சீரியலில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

அண்மையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு பாசிட்டிவ் என்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை.

சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய்யை தொடர்ந்து பாசமான பிள்ளைகளுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

0
SA Chandrasekar Birthday

S.A. Chandrasekar; விஜய்யை தொடர்ந்து பாசமான பிள்ளைகளுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்! இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

மகன் விஜய்யைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். தனது மகன் தளபதி விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தவரும் இவரே.

அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, சாதிக்கொரு நீதி, நெஞ்சில் துணிவிருந்தால், சாட்சி, குடும்பம், நீதியின் மறுபக்கம் என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 70 படங்கள் வரை இயக்கியுள்ளார். இதில், பெரும்பாலான படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். மேலும், படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் நாளை தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக, ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு செல்வீர்கள்.

ஆனால் இந்த ஆண்டு கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது.

அனைவருமே கஷ்டத்தில் இருக்கிறோம். ஆகையால், உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஆதலால், இந்த வருடம் யாரும் வர வேண்டாம். உங்களது குடும்பத்தினருக்கு நீங்கள் ரொம்பவே முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

போச்சா? பின்வாங்கிய அண்ணாத்த: ரிலீஸ் தேதி மாற்றம்?

0
Annatthe Shooting Postponed

Annaatthe; போச்சா? பின்வாங்கிய அண்ணாத்த: ரிலீஸ் தேதி மாற்றம்? ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

குடும்ப கதையை மையப்படுத்திய படமாக அண்ணாத்த உருவாக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த படக்குழுவினரின் பாதுகாப்பு கருதி, படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடியும் என்ற நிலையில், இருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த அண்ணாத்த படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தல அஜித் தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டுவிட்டரில் டிரெண்டாகும் #ஒரேதலைவன்_விஜய் ஹேஷ்டேக்!

0
ஒரேதலைவன்_விஜய்

Thalapathy Vijay; டுவிட்டரில் டிரெண்டாகும் #ஒரேதலைவன்_விஜய் ஹேஷ்டேக்! ஒரேதலைவன்_விஜய் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் திடிரென்று டுவிட்டர் டிரெண்டாகி வருகிறது.

#ஒரேதலைவன்_விஜய் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றிருப்பவர் தளபதி விஜய். ரஜினி, கமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும், சாம்ராட் என்றும், கோலிவுட் கிங் என்றும் சோஷியல் மீடியா கிங் என்றும், டிஆர்பி கிங் என்றும் அழைக்கின்றனர்.

விஜய் என்றால், மாஸ், க்யூட், அமைதியான கதாபாத்திரம், வசூல் மன்னன், ரசிகர்களுக்கு நல்லவொரு சகோதரர், தனது அழகான முகத்தை வைத்துக் கொண்டு எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அண்ணனாக இருக்கிறார். எப்போது, அண்ணா அண்ணா என்றே ரசிகர்கள் தளபதி விஜய்யை அழைக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், ரசிகர்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார்.

தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்றும் அழைக்கின்றனர்.

அண்மையில், விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், அப்போது, தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டும்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுகொண்டார். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட தளபதி விஜய்யை #ஒரேதலைவன்_விஜய் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, #தளபதி_நாளைய_அதிபதி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், தளபதி விஜய் ரசிகர்கள் கேரளா போன்று நேர்மையாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும் தமிழ்நாடு செய்து,

தமிழகம் அதேபோல் அமைய வாங்கய்யா வாத்தியாரய்யா…வரவேற்க வந்தோம் ஐயா, உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா என்று வசனம் எழுதி போஸ்டர் அடித்து சுவரெங்கும் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் அப்போது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் திரையரங்குகள் திறந்த பிறகு வெளிவரும் என்று தெரிகிறது. மாஸ்டர் டிரைலர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேதலைவன்_விஜய்

3

நில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை வெடிவிபத்து 6 பேர் பலி: நெய்வேலி

அனல் மின்நிலையத்தில்

சென்னை: நெய்வேலி நில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலி மற்றும் 17 பேர் காயம் அடைந்தனர்.

அனைத்து உதவிகளையும் வழங்க தயார்: அமித் ஷா

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு நெய்வேலி நிலசுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என தெரிவித்தார்.

“காயம்பட்டவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என அமித் ஷா மேலும் தெரிவித்திருந்தார்.

வேதனைப்படுவதாக இரயில்வே அமைச்சர் தெரிவிப்பு

இந்த சம்பவம் குறித்து இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ,வெடிவிபத்து சம்பவம் குறித்து தான் மிகவும் வேதனைப்படுவதாக தெரிவித்தார்.

அவர் ”அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன், என் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே உள்ளது,” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

3

சியானின் கோப்ரா வெளியீடு எப்போது?

0
Chiyaan Vikram Cobra Release Date

Cobra Release Date; சியானின் கோப்ரா வெளியீடு எப்போது? சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் வெளியீடு வரும் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சியான் விக்ரமின் கோப்ரா படத்தை கிறிஸ்துமஸ் 2020 அல்லது பொங்கல் 2021 பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஓடிடியில் வெளிவரும் ராகவா லாரன்ஸின் லட்சுமி பாம்!

0
Laxmmi Bomb Release On OTT

Laxmmi Bomb OTT Release; ஓடிடியில் வெளிவரும் ராகவா லாரன்ஸின் லட்சுமி பாம்! ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் லட்சுமி பாம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்கி நடித்து ஹிட் கொடுப்பதில் ராகவா லாரன்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

தொடர்ந்து முனி, முனி 2 (காஞ்சனா), முனி 3 (காஞ்சனா 2), முனி 4 (காஞ்சனா 3) என்று வரிசையாக பேய் படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், முனி 2 (காஞ்சனா) படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படம் பாலிவுட்டில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். அக்‌ஷய் குமார் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

மேலும், கீரா அத்வானி, துஷார் கபூர், தருண் அரோரா, முஷ்கான் குப்சந்தனி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில், லட்சுமி பாம் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், டேனி, காக்டெய்ல், லாக்கப் ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காக்டெய்ல் வரும் ஜூலை 10 ஆம் தேதியும், டேனி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் வெளியாகிறது.

3

சீனாவில் மற்றொறு வைரஸ் ஆன ஹெச்1என்1(G4 EA H1N1) என்னும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்

G4 EA H1N1 பன்றிக்காய்சல் வைரஸ்

ஹாங்காங்க்: சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டி படைத்துவரும் நிலையில், அங்குள்ள பன்றி பண்ணைகளில் இருந்து தற்போது ஹெச்1என்1(G4 EA H1N1) என்னும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வந்துள்ளது.

2009 பரவிய பன்றிக்காய்ச்சலுக்கு  2,85,000 பேர் பலி

இந்த செய்தி உலக மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 2009 பரவிய பன்றிக்காய்ச்சலால் 2,85,000 பேர் கொல்லப்பட்டனர்.

G4 EA H1N1 என்று அழைக்கப்படும் பன்றி காய்ச்சல் வைரஸ்

இப்போது சீனாவில் பரவி வரும் இந்த வைரஸ் ஆனது G4 EA H1N1 என்று அழைக்கப்படுகிறது. இது 2016 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் பன்றி பண்ணைகளில் பொதுவாக காணப்படும் ஒரு வைரஸ் ஆக கருதப்படுகிறது.

சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

இந்த ஹெச்1என்1(H1N1) வைரஸ் மனிதர்களின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்த வைரஸ் பாதித்தால் சில பேருக்கு எந்த விதமான அறிகுறியும் விரைவில் தெரியாது எனவும் கூறப்படுகிறது.

மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் இது விரைவாக பரவக்கூடும் என்பதால் விஞ்ஞானிகள் இந்த வைரஸை முடிந்த வரை விரைவாக தடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

3