Home Blog Page 32

மலேசியா, பிரான்ஸில் மீண்டும் வெளியான தல அஜித்தின் விஸ்வாசம்!

0
Viswasam Rerelease in Malaysia

Viswasam; மலேசியா, பிரான்ஸில் மீண்டும் வெளியான தல அஜித்தின் விஸ்வாசம்! தல அஜித் நடிப்பில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த விஸ்வாசம் படம் மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தல அஜித்தின் விஸ்வாசம் படம் மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.

குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தல அஜித் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

இந்தப் படமும் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று மீண்டும் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாகியுள்ளது.

இதே போன்று கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினிகாந்தின் தர்பார் படமும் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, சதீஷ், கீர்த்தி சுரேஷ், சூரி, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

நான் ஒரு போஸ்ட் மேன்: வைரலாகும் ரைசா வீடியோ!

0
Raiza Post Man Video

Raiza Post Man Video; நான் ஒரு போஸ்ட் மேன்: வைரலாகும் ரைசா வீடியோ! நான் ஒரு போஸ்ட் மேன் என்று கூறும் ரைசாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரைசாவின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

இவர், தனது பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதலை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் திருமணத்திற்கு முன்னதான காதல் காம உணர்வை மையப்படுத்தியது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாகவே இருக்கும் ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

உங்களது நெருங்கியவர்களுக்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து அல்லது ஏதாவது செய்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் என்னிடம் சொல்லுங்கள்.

நான் உங்களது மெசேஞ்சராக Messenger மாறி அந்த மெசேஜ்ஜை உரியவர்களுக்கு அனுப்பி உங்களை சேர்த்து வைக்கிறேன். இதை செய்வதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

மேலும், உங்களது மெசேஜ்களை பார்ப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறேன். இதன் மூலம் நான் போஸ்ட் மேனாக இருப்பேன் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன், த்ரிஷா, ரைசா என்று சினிமா பிரபலங்கள் பலரும் டிக் டாக்கில் இணைந்திருந்தனர். டிக் டாக்கில் நிறைய வீடியோக்களை அவர்கள் பதிவிட்டு வந்தனர். இண்ட நிலையில், 59 Appsகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ரைசா வில்சன் கடைசியாக டிக் டாக்கிற்கு குட்பை சொல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

அருவிக்கு அருகில் போட்டோஷூட்: வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் அழகான புகைப்படங்கள்!

0

Iswarya Menon Waterfall Photoshoot; அருவிக்கு அருகில் போட்டோஷூட்: வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் அழகான புகைப்படங்கள்! நடிகை ஐஸ்வர்யா மேனன் அருவிக்கு அருகில் இருந்து கொண்டு போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனனின் அழகான போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த ஐஸ்வர்யா மேனன், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். யுனிவெர்சிட்டியில் பிடெக் படித்துள்ளார்.

ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அம்மா, மகள் உறவை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.

ஆனால், இந்தப் படம் வருவதற்கு முன்னதாகவே தீயா வேலை செய்யனும் குமாரு படம் வெளியாகியுள்ளது. ஆதலால், ஐஸ்வர்யா மேனனின் முதல் படமாக இது கருதப்படுகிறது.

தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் அறிமுகமாகியுள்ளார். வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எந்தப் படத்திலும் ஐஸ்வர்யா மேனன் கமிட் ஆகவில்லை. ஆனால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆம், அருவிக்கு அருகில் இருந்தபடி, இவர் செய்துள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், டுவிட்டரில் ஐஸ்வர்யா மேனனின் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Iswarya Menon WaterFall Photoshoot

3

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பொது மக்களுள் ஒருவர் உட்பட இருவர் பலி

நடந்த தீவிரவாத தாக்குதலில்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஒருவரும் மற்றும் பொது மக்களில் ஒருவரும் புதன்கிழமை கொல்லப்பட்டனர், மேலும் இரண்டு காவல் படை அதிகாரிகள் காயமுற்றனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் என்ற இடத்தில் தாக்குதல்

தீவிரவாதிகளால் பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் ஒரு பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது.

காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

3

#சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்!

0
Rajinikanth Sathankulam Issue

Rajinikanth; #சத்தியமா_விடவே_கூடாது: கோபத்தில் கொந்தளித்த ரஜினிகாந்த்! சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் கோபமாக பதிவிட்ட பதிவு டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

#சத்தியமா_விடவே_கூடாது என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக நேற்று சிசிடிவி கேமரா ஆதாரம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ரஜினிகாந்த், அண்மையில், ஜெயராஜ் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தற்போது டுவிட்டரில், #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக் உடன், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும்,

காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, #சத்தியமா_விடவே_கூடாது என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

3

59 Appகளுக்கு தடை: மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி!

0
Sakshi Agarwal

Sakshi Agarwal; 59 Appகளுக்கு தடை: மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி! டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்பட 59 Appகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகை சாக்‌ஷி அகர்வால் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நடிகை சாக்‌ஷி அகர்வால் நன்றி கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிக் டாக்கிலிருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்தப் போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மத்திய அரசு, ஹலோ, டிக் டாக், ஷேர்-இட், லைக்கீ, நியூஸ்டாக் உள்ளிட்ட 59 Appகளுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தற்போது சாக்‌ஷி அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும், இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வைரலாகும் ஸ்ருதி ஹாசன் குழந்தை பருவ புகைப்படம்!

0
Shruti Haasan Childhood Photo

வைரலாகும் ஸ்ருதி ஹாசன் குழந்தை பருவ புகைப்படம்! கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசனின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், எஸ்ஐ3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் சேதுபதி உடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி ஹாசன், தண்ணீருக்குள் இருந்தபடியே டான்ஸ் ஆடி போட்டோஷூட் செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்மையில், இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பள்ளி சீருடையில் சிரித்தபடியே இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிறந்தநாள் ஸ்பெஷல்: ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் ரகிட ரகிட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Jagame Thandhiram First Single

Jagame Thandhiram First Single; ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் ரகிட ரகிட ரிலீஸ் தேதி அறிவிப்பு! தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரகிட ரகிட பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் டிரீட் கொடுக்கும் வகையில், வரும் ஜூலை 28 ஆம் தேதி ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம்

0
நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம்

நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கான இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி: ஊரடங்கு தளர்வு 2.0 குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது “நம் நாடு கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த தருணத்தில் பருவமழைக் காலமும் தொடங்கி விட்டது. இந்த கால கட்டத்தில் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

தற்போது பொது முடக்கத்தின் 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு 2.0 துவங்கி விட்டது. நாம் சரியான நேரத்தில் பொது முடக்கத்தை செயல்படுத்தினோம். இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்ட போதிலும் மக்கள் சிலர் அதை பொருட்டாக எண்ணாமல் இருந்துவருகின்றனர்.

இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தற்போது பொது முடக்க தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. சிறிய தவறை நாம் செய்து விட்டாலும், அதற்காக மிகப்பெரும் விலையை கொடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

பொது முடக்க காலத்தில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நேரடியாக மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

மேலும் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 90 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் பலன் பெறுவார்கள்”. இவ்வாறு நேற்று மாலை மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

 

3

பென்சீமிடசோல் வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து இருவர் இறப்பு மற்றும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி: விசாகப்பட்டிணம்

வாயுக்கசிவு

விசாகப்பட்டிணம்: செவ்வாய் கிழமை காலை ‘பாராவாட’ என்னும் இடத்திற்கு அருகில் உள்ள சைனார் லைப் சைன்ஸஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பென்சீமிடசோல்(benzimidazole) எனப்படும் வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து இருவர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டனர்.

பென்சீமிடசோல் வாயுவை 6 பேர் சுவாசித்துள்ளனர்

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை 30 பணியாளர்கள் அங்கு வேலை செய்து வந்துள்ளனர். அபோது அங்கு வெளியேரிய பென்சீமிடசோல் வாயுவை 6 பேர் சுவாசித்துள்ளனர்.

மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

இறந்தவர்களின் பெயர்கள் நரேந்திரா மற்றும் கவுரி சங்கர் என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காரணம் தெரியவில்லை

வாயு கசிவு ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருமாதத்திற்கு முன் ஏற்பட்ட ஸ்டிரீன் வாயு கசிவில் 12 பேர் இறந்தனர்

ஏற்கனவே விசாகப்பட்டிணத்தில் உள்ள எள்.ஜீ. பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் ஒருமாதத்திற்கு முன் ஏற்பட்ட ஸ்டிரீன் வாயு கசிவில் 12 பேர் இறந்தனர் மற்றும் 500 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் அது போன்ற வாயு கசிவால் மக்களிடையே அதிர்ச்சி நிலவுகிறது.

3