Home Blog Page 33

இந்தியா டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன ஆன்ட்ராய்ட் செயலிகளை தடை செய்தது

59 சீன ஆன்ட்ராய்ட் செயலிகளை
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 82

இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இந்தியா தற்போது பிரபல டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன ஆன்ட்ராய்ட் செயலிகளை தொலைபேசியில் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த செயலிகளின் விவரங்கள் பின்வருமாறு

01. TikTok(டிக்-டாக்)
02. Shareit(சேர்இட்)
03. Kwai(க்வாய்)
04. UC Browser(யூசி-இணைய உலாவி)
05. Baidu map(பாய்டூ வரைபடம்)
06. Shein(செய்ய்ன்)
07. Clash of Kings(க்லாஷ் ஒஃப் கிங்க்ஸ்)
08. DU battery saver(டி யூ மின்கல சேமிப்பான்)
09. Helo(ஹலோ)
10. Likee(லைக்கீ)
11. YouCam makeup(யூகேம் மேக்கப்)
12. Mi Community(மீ கம்யூனிட்டி)
13. CM Browers(சி எம் இணைய உலாவி)
14. Virus Cleaner(வைரஸ் க்ளீனர்)
15. APUS Browser(ஆபஸ் இணைய உலாவி)
16. ROMWE(ரோம்வி)
17. Club Factory(க்ளப் ஃபேக்டரி)
18. Newsdog(நியூஸ்டாக்)
19. Beutry Plus(பியூட்ரி ப்ளஸ்)
20. WeChat(வீ சாட்)
21. UC News(யூசி செய்திகள்)
22. QQ Mail(க்யூ க்யூ)
23. Weibo(வெய்போ)
24. Xender(செண்டர்)
25. QQ Music(க்யூ க்யூ மியூசிக்)
26. QQ Newsfeed(க்யூ க்யூ நியூஸ் ஃபீட்)
27. Bigo Live(பிகோ லைவ்)
28. SelfieCity(செல்பீ சிட்டி)
29. Mail Master(மெயில் மாஸ்டர்)
30. Parallel Space(பாரெலெல் ஸ்பேஸ்)
31. Mi Video Call — Xiaomi(மீ விடியோ கால்- ஷியோமி)
32. WeSync(வீ சிங்க்)
33. ES File Explorer(ஈ எஸ் எக்ஸ்ப்ளோரர்)
34. Viva Video — QU Video Inc(விவா வீடியோ)
35. Meitu(மெய்டூ)
36. Vigo Video(விகோ வீடியோ)
37. New Video Status(நியூ வீடியோ ஸ்டேடஸ்)
38. DU Recorder(டீயூ ரெக்கார்டர்)
39. Vault- Hide(வால்ட்- ஹைட்)
40. Cache Cleaner DU App studio(கேச்சீ க்ளீனர்)
41. DU Cleaner(டி யூ க்ளீனர்)
42. DU Browser(டி யூ ப்ரவுசர்)
43. Hago Play With New Friends(ஹாகோ ப்ளே வித் நியூ ஃப்ரெண்ட்ஸ்)
44. Cam Scanner(கேம் ஸ்கேனர்)
45. Clean Master – Cheetah Mobile(க்ளீன் மாஸ்டர்)
46. Wonder Camera(வொண்டர் கேமரா)
47. Photo Wonder(போட்டோ வொண்டர்)
48. QQ Player(க்யூ க்யூ ப்ளேயர்)
49. We Meet(வி மீட்)
50. Sweet Selfie(ஸ்வீட் செல்பீ)
51. Baidu Translate(பாய்டூ ட்ரான்ஸ்லேட்)
52. Vmate(வீமேட்)
53. QQ International(க்யூ க்யூ இண்டர்நேஷ்னல்)
54. QQ Security Center(க்யூ க்யூ செக்யூரிட்டி செண்டர்)
55. QQ Launcher(க்யூ க்யூ லாஞ்சர்)
56. U Video(யூ வீடியோ)
57. V fly Status Video(வீ ஃப்ளை ஸ்டேடஸ்)
58. Mobile Legends(மொபைல் லிஜண்ட்ஸ்)
59. DU Privacy(டியூ ப்ரைவேசி)

3

புருஷன் வேண்டும்…என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: பீட்டர் பால் மனைவி புகார்!

0
Peter Paul Wife Elizabeth Helen

Peter Paul Wife; என் புருஷன் வேண்டும்…என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: பீட்டர் பால் மனைவி புகார்! எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், என் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பீட்டர் பாலின் மனைவி பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.

எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், என் குழந்தைக்கு அப்பா வேண்டும் என்றும் பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து எலிசபெத் ஹெலன் கூறுகையில், பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக இரு முறை போதை மீட்பு மையத்தில் அவரை சேர்த்திருந்தோம்.

இதற்கு முன்னதாக பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். சரியான வருமானமும் இருக்காது.

தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட நினைத்துவிட்டார். அவருக்கு இது பத்தோடு பதினொன்னு போலத்தான் என்று கூறியுள்ளார்.

மேலும், எனது மகனின் படிப்புக்காகதான் நான் அவரை விட்டு விலகினேன். அதன் பிறகு எனது அம்மா வீட்டில் இருந்தேன். தற்போது பீட்டர் பால் திருமணம் குறித்து அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.

இப்போது எனது மகள் அப்பா இல்லையே என்று வருத்தப்படுகிறாள். எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், எனது குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வேஷம் கலைஞ்சுபோச்சி – பா.ரஞ்சித் வெளியிட்ட கூத்துக்கலைஞர்களின் ஆவணப்படம்!

0
Pa Ranjith

Pa Ranjtih; வேஷம் கலைஞ்சுபோச்சி – பா.ரஞ்சித் வெளியிட்ட கூத்துக்கலைஞர்களின் ஆவணப்படம்! கொரோனா காலத்தில் அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்படும் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்கள் குறிப்பாக கூத்துக்கலைஞர்களின் பயணத்தை பற்றிய படம் தான் இந்த வேஷம் கலைஞ்சுபோச்சி என்ற ஆவணப்படம்.

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார்.

தகப்பன்சாமி படத்தில் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்தியின் மெட்ராஸ் படத்தை கொடுத்தார்.

இப்படம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக பேசப்பட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.

ஆம், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார். உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு, வசூல் கொடுக்கவே மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தை கொடுத்தார்.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நீலம் புரோடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

அதன் பிரகு, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்துள்ளார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பாக்ஸராக ஆர்யா நடிக்கிறார். அதற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் காவிய பிருந்தா இயக்கத்தில் ரஞ்சித் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட குறும்படம் வேஷம் கலைஞ்சுபோச்சி.

கொரோனா லாக்டவுனில், அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்கள் குறிப்பாக கூத்துக்கலைஞர்களின் பயணத்தை குறிப்பிடும் வகையில், இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கூத்தும், கூத்துக் கலைஞர்களின் வாழ்வும்… நெருக்கடிக் காலத்தில் ஓர் பயணம்…  ‘வேஷம் கலஞ்சுபோச்சி’ என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஹலோவில் ரஞ்சித்தின் புதிய ஆவணப்படம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

தண்ணீருக்குள் டான்ஸ் ஆடி போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசன்!

0
Shruti Haasan

Shruti Haasan Photoshoot; தண்ணீருக்குள் டான்ஸ் ஆடி போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசன்! தண்ணீருக்குள் டான்ஸ் ஆடி போட்டோஷூட் செய்த ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசனின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், எஸ்ஐ3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் சேதுபதி உடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி ஹாசன், தண்ணீருக்குள் இருந்தபடியே டான்ஸ் ஆடி போட்டோஷூட் செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்திற்கும் ஒரு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, அமைதி, நாளைக்கு வந்தடையும், என்னால் எங்கும் டான்ஸ் ஆடமுடியும், என்னால் எங்கும் செல்ல முடியும், மிதக்கிறேன் – என் கால்கள் ஒரு போதும் தரையை எட்டாது, வாட்டர் பேபி என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ஃப்ரண்ட் லவ் மேட்டர் புகழ் டேனியல் அன்னி போப்!

0
Daniel Annie Pope

Daniel Annie Pope Blessed With Baby Boy; குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ஃப்ரண்ட் லவ் மேட்டர் புகழ் டேனியல் அன்னி போப்! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஃப்ரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ல என்ற வசனத்தை பேசும் டேனியல் அன்னி போப்பிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

டேனியல் அன்னி போப் – டெனிஷா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன் படத்தின் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் டேனியல் அன்னி போப். இந்தப் படத்தைத் தொடர்ந்து, பையா, ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,

கவலை வேண்டாம், மாஸ் என்கிற மாசிலாமணி, ரங்கூன், உரு, மரகத நாணயம், திரி, ஆயிரத்தில் இருவர், சக்க போடு போடு ராஜா, காத்தாடி, ஜருகண்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் ஃப்ரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ல என்ற வசனத்தை பேசி பிரபலமாகியுள்ளார்.

சினிமாவைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் போது தனது காதலி டெனிஷாவை அறிமுகப்படுத்திய டேனியல், இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது டேனியல் – டெனிஷா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து டேனியில் கூறியிருப்பதாவது:

மிக அருமையான பரிசாக நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, டேனியல் அன்னி போப் மற்றும் டெனிஷா தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம்: வைரலாகும் வீடியோ!

0
Amala Paul Kiss Video

Amala Paul Kiss Video; அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம்: வைரலாகும் வீடியோ! நடிகை அமலா பால் தன் ரசிகருக்கு சர்ப்ரைஸ் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகருக்கு முத்தம் கொடுத்த அமலா பாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, விஐபி 2, ராட்சசன், ஆடை என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அமலா பால், தனது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவருக்கு பச்சக் என்று முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது சிறந்த நடிகை அமலா பால் என்று ரசிகர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரே எதிர்பாராத வகையில், அவருக்கு சர்ப்ரைஸ் முத்தம் ஒன்றை அவரது கன்னத்தில் கொடுத்துள்ளார்.

ஆனால், அது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை. காரணம், அந்த ரசிகர் அமலா பால் உடன் இணைந்து விஐபி 2 படம் பார்க்க இருப்பதாக கூறுவது போன்று அந்த வீடியோ இருக்கிறது.

அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

3

68 பேர் புதிய கொரோனா பாதிப்பு, மொத்த கொரோனா பாதிப்பு 528: கோவை

46 பேர்

கோவை: 90 வயது கொரோனா பாதித்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை 68 பேர் கோவையில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கோவையில் மொத்த கொரோனா பாதிப்பு 528 ஆக உள்ளது.

பீலமேட்டு பெரியார் காலணியில் அதிக கொரோனா தொற்று

பீலமேட்டில் உள்ள பெரியார் காலணியிலிருந்து அதிக பட்ச கொரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

90 வயது முதியவருக்கு  மூச்சுதினரல்

தெலுங்குபாளையத்தை சேர்ந்த 90 வயது முதியவர் மூச்சுதினரல் ஏற்பட்டதால் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவரை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள் அவர் இறந்துவிட்ட்தாகவும், வழியிலேயே இறந்திருக்கக்கூடும் என தெரிவித்தனர். அந்த 90 வயது முதியவரின் இறப்பை கொரோனா இறப்பாக கருதப்படவில்ல.

திருப்பூரில் 10 புதிய கொரோனா தொற்றுகள் . ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

3

ஞாயிற்று கிழமை 5,493 புதிய கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா தொற்று 1,64,626: மராட்டியம்

புதிய கொரோனா தொற்றுகள்

மராட்டியம்: ஞாயிற்று கிழமை 5,493 புதிய கொரோனா தொற்றுகள் மராட்டியத்தில் உறுதி செய்யப்பட்டன. இதுவரை மராட்டிய மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று 1,64,626 ஆக உள்ளது.

குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 86,575 பேர் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் 70,607.

மும்பையில் அதிக கொரோனா தொற்று

மராட்டிய தலைநகர் மும்பை இந்தியா மற்றும் அம்மாநில தொற்றில் அதிக கொரோனா தொற்றாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இன்று மட்டும் 1,287 புதிய தொற்றுகள் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டன, மும்பையின் மொத்த கொரோனா தொற்று 75,539. இங்கு இன்று புதிதாக 23 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர்.

மும்பையின் மொத்த கொரோனா இறப்பு 4,371

மும்பையின் மொத்த இறப்பு 4,371 ஆக உள்ளது. மும்பையில் 28,006 பேர் சிகிச்சையிலும் 43,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர்.

3

Sathankulam Issue: SK அரசுக்கு வேண்டுகோள்: வைரலாகும் டுவீட்!

0
SK அரசுக்கு வேண்டுகோள்

Sivakarthikeyan: SK அரசுக்கு வேண்டுகோள்: வைரலாகும் டுவீட்! சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் அரசுக்கு வேண்டுகோள் வைத்து பதிவிட்டு டுவிட்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SK டுவீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டினர். மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் சாத்தான்குளம் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் கொடூர சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குற்றத்தின் பின்னணியில் உள்ள மிருகத்தனமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இது போன்ற குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்காத வகையில், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை இருக்க வேண்டும்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு கிடைக்கும் நீதி நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

உங்க வேலையை மட்டும் பாருங்க: லட்சுமி ராமகிருஷ்ணனை விளாசிய வனிதா!

0
Vanitha Peter Paul Wedding

Vanitha Peter Paul; தனது 3ஆவது திருமணம் மற்றும் பீட்டர் பால் முதல் மனைவியின் புகார் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

டுவிட்டரில் மோதிக்கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா ஆகியோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனிதா

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

வனிதா பீட்டர் பால் திருமணம் 

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பீட்டர் பால் முதல் மனைவி புகார்

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

புகார் குறித்து வனிதா பதில்

இந்த நிலையில், இந்த புகார் குறித்து மிகவும் கூலாக வனிதா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரால் நான் என்னவோ ஏமாந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். நான் ஒன்றும் ஏமாறவில்லை.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே தனது மனைவியை பீட்டர் பால் பிரிந்துவிட்டார். அவரைப் பற்றி முழுமையாக எனக்கு தெரியும். இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்சனையை எங்களது வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எலிசபெத் ஹெலன் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்த புகார் காரணமாக எனது திருமண வாழ்க்கையில், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பணம் பறிப்பதற்காகச் இப்படி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்

இது ஒருபுறம் இருக்க வனிதாவின் திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே அவர் திருமணம் ஆனவர்.

2 குழந்தைகள் இருக்கிறது. கணவன் மனைவி இருவருமே பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து பெறவில்லை. கல்வியும், வெளிப்பாடும் உள்ள ஒருவர் எப்படி இப்படியொரு தவறு செய்ய முடியும்? அதிர்ச்சியாக இருக்கிறது.

ஏன் வனிதா பீட்டர் பால் திருமணம் நடக்கும் வரை அவரது முதல் மனைவி காத்துக் கொண்டிருந்தார்? ஏன் அவர் தடுத்து நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வனிதா பல கடினமான சூழல்களை எதிர்கொண்டவர். அவற்றை வெளிப்படையாகவும் பேசியுள்ளார். இந்த உறவில் நன்றாக இருப்பார் என்று நான் நினைத்தேன். அனைவருமே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால், அவர் இந்த பிரச்சனையை கவனிக்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா கண்டனம்

தனது திருமண வாழ்க்கை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வனிதா கூறியிருப்பதாவது: உங்களது வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள். நீங்கள் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ, குடும்பத்தை கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை.

நான், நன்றாக படித்தவர். சட்டரீதியாக அறிவு கொண்டவர். யாருடைய ஆதரவும் இல்லாமல் என்னால், என் வாழ்க்கையை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். என்னுடைய முடிவுக்கு, உங்களது ஆதரவோ, அங்கீகாரமோ எனக்கு தேவையில்லை.

இது பொது பிரச்சனையோ உங்களது நிகழ்ச்சியோ கிடையாது. இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்

இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், வனிதா பீட்டர் பால் திருமணம் பற்றி விவாதிப்பதை நிறுத்த முடியுமா?

சட்டப்பூர்வமாக விவாகரத்து இல்லாமல், மறுமணம் செய்வதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதால் தான் டுவீட் செய்தேன்.

துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, தந்தை மற்றும் மகனின் மரணம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை நான் கூறும் போது அதற்கு எதிராக பதில் வருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3