Home Blog Page 34

Thumbi Thullal: கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: தும்பி துள்ளல் பாடல் வெளியீடு!

0
Thumbi Thullal First Single From Cobra

Cobra First Single; கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: தும்பி துள்ளல் பாடல் வெளியீடு!  சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கோப்ரா தும்பி துள்ளல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா. வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிச்சயதார்த்தத்தின் போது இந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த அழைப்பிதழ் ஒன்று அண்மையில் வைரலானது.

இந்த அழைப்பிதழில், சியான் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் மணக்கோளத்தில் இருக்கின்றனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆம், மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும், பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியும் நடிக்கின்றனர். மதியழகன் மற்றும் பாவனா மேனன் திருமண நிச்சயதார்த்தம் என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தும்பி துள்ளல் பாடல் வெளியாவதற்கு முன்னதாகவே பாடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மதியழகனாக வரும் விக்ரமுக்கும், பாவனா மேனனாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அப்போது வரும் பாடல் தான் தும்பி துள்ளல். இந்தப் பாடலின் புகைப்படங்கள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thumbi Thullal Invitation

3

ஓடிடியில் வெளிவரும் வாணி போஜன் படம்!

0
Lockup Release On Zee5

Vani Bhojan Lockup Movie; ஓடிடியில் வெளிவரும் வாணி போஜன் படம்! ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது படங்களைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள லாக்கப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்த லாக்கப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் லாக்கப்.

மேலும், இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஷ்வேத் புரோடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் நிதின் சத்யா தயாரித்துள்ளார்.

ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக நேரடியாக இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வரும் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் லாக்கப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை.

இதற்கு முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் டேனி படமும், யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்டெய்ல் வரும் ஜூலை 10 ஆம் தேதியும், டேனி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய், அஜித் பட கவர்ச்சி நடிகை மந்த்ரா பர்த்டே டுடே!

0
HBD Mantra

Mantra Birthday Today; விஜய், அஜித் பட நடிகை மந்த்ரா பர்த்டே டுடே! விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த நடிகை மந்த்ரா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை மந்த்ராவின் 40ஆவது பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மந்த்ரா. இவர், விஜயா மற்றும் ராசி என்றும் அழைக்கப்படுகிறார்.

தேவையானி உடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு வந்த எல்லாமே என் தங்கச்சி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் லவ் டுடே படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது,

ரெட்டை ஜடை வயசு, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம், ராஜா, ஆளுக்கொரு ஆசை, சுயேட்சை எம்.எல்.ஏ., ஒன்பதுல குரு, வாலு, கவலை வேண்டாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை மந்த்ரா இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மந்த்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில், HBD மந்த்ரா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இந்திய இரயில்வே முடிவு, பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு

பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில்

இந்திய இரயில்வே துறை தற்போது 230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இருக்கிறது. அதற்கான பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் இன்று முதல் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம்

நாளை முதல் ஓடத் துவங்கும் இந்த சிறப்பு தொடர்வண்டிகளில் பயணம் செய்ய பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இரயில் சேவை 30/06/2020 முதல் துவங்கப்படும்

மத்திய இரயில்வேயின் மூத்த அதிகாரி ட்விட்டரில் “30/06/2020 முதல் துவங்கப்படும் சிறப்பு இரயில் சேவையில் பயணம் செய்ய 29/6/2020 முதல் தட்கால் முறையில் பயணச்சீட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.

சிறப்பு இரயில் சேவை

கோவிட் பரவலால் இந்திய இரயில்வேதுறை தனது சேவைகளை மார்ச் 25 முதல் நிறுத்திவைத்திருந்தது. அதன் பிறகு தற்போது தனது சிறப்பு இரயில் சேவைகளை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு காலம் 120 நாட்களாக உயர்த்தப்பட்டது

இந்திய இரயில்வே துறை ஏற்கனவே 30 நாட்களாக உள்ள முன்பதிவு காலத்தை 120 நாட்களாக உயர்த்தியுள்ளது.

3

லட்சுமி ராமகிருஷ்ணனின் வனிதா ட்வீட்: வைரலாகும் சரமாரி கேள்வி!

0
Vanitha Peter Paul Wedding

Lakshmi Ramakrishnan Tweet; லட்சுமி ராமகிருஷ்ணனின் வனிதா ட்வீட்: வைரலாகும் சரமாரி கேள்வி! வனிதா திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

வனிதாவின் 3ஆவது திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த புகார் குறித்து மிகவும் கூலாக வனிதா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரால் நான் என்னவோ ஏமாந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். நான் ஒன்றும் ஏமாறவில்லை.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே தனது மனைவியை பீட்டர் பால் பிரிந்துவிட்டார். அவரைப் பற்றி முழுமையாக எனக்கு தெரியும்.

இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்சனையை எங்களது வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எலிசபெத் ஹெலன் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்த புகார் காரணமாக எனது திருமண வாழ்க்கையில், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பணம் பறிப்பதற்காகச் இப்படி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க வனிதாவின் திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே அவர் திருமணம் ஆனவர். 2 குழந்தைகள் இருக்கிறது. கணவன் மனைவி இருவருமே பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து பெறவில்லை.

கல்வியும், வெளிப்பாடும் உள்ள ஒருவர் எப்படி இப்படியொரு தவறு செய்ய முடியும்? அதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் வனிதா பீட்டர் பால் திருமணம் நடக்கும் வரை அவரது முதல் மனைவி காத்துக் கொண்டிருந்தார்? ஏன் அவர் தடுத்து நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவள் இந்த உறவில் நன்றாக இருப்பாள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இதுவரை பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். அனைவருமே அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால், அவர் இதனை கவனிக்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா பீட்டர் பால் திருமணம் பற்றி விவாதிப்பதை நிறுத்த முடியுமா? சட்டப்பூர்வமாக விவாகரத்து இல்லாமல், மறுமணம் செய்வதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதால் தான் டுவீட் செய்தேன்.

துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, தந்தை மற்றும் மகனின் மரணம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை நான் கூறும் போது அதற்கு போதுமான அளவு பதில் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

#தளபதி_நாளைய_அதிபதி: விஜய்யை வாழ்த்தி டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

0
Thalapathy Vijay Twitter Trending

Thalapathy Vijay; #தளபதி_நாளைய_அதிபதி: விஜய்யை வாழ்த்தி டுவிட்டர் டிரெண்டாகும் ஹேஷ்டேக்! தளபதி விஜய்யை வாழ்த்தி டுவிட்டரில், தளபதி நாளைய அதிபதி என்ற வித்தியாசமான ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

தளபதி விஜய்யை வாழ்த்தி ரசிகர்கள் தளபதி நாளைய அதிபதி என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றிருப்பவர் தளபதி விஜய். ரஜினி, கமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும், சாம்ராட் என்றும், கோலிவுட் கிங் என்றும் சோஷியல் மீடியா கிங் என்றும், டிஆர்பி கிங் என்றும் அழைக்கின்றனர்.

விஜய் என்றால், மாஸ், க்யூட், அமைதியான கதாபாத்திரம், வசூல் மன்னன், ரசிகர்களுக்கு நல்லவொரு சகோதரர், தனது அழகான முகத்தை வைத்துக் கொண்டு எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அண்ணனாக இருக்கிறார். எப்போது, அண்ணா அண்ணா என்றே ரசிகர்கள் தளபதி விஜய்யை அழைக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், ரசிகர்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார்.

தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்றும் அழைக்கின்றனர்.

அண்மையில், விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், அப்போது, தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டும்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுகொண்டார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட விஜய்யை வாழ்த்தியும், புகழ்ந்தும், #தளபதி_நாளைய_அதிபதி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், தளபதி விஜய் ரசிகர்கள் கேரளா போன்று நேர்மையாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும் தமிழ்நாடு செய்து, த

மிழகம் அதேபோல் அமைய வாங்கய்யா வாத்தியாரய்யா…வரவேற்க வந்தோம் ஐயா, உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா என்று வசனம் எழுதி போஸ்டர் அடித்து சுவரெங்கும் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் அப்போது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் திரையரங்குகள் திறந்த பிறகு வெளிவரும் என்று தெரிகிறது. மாஸ்டர் டிரைலர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Birthday Poster

3

தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்: சிவகார்த்திகேயன்!

0
Sivakarthikeyan

Sivakarthikeyan; தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்: சிவகார்த்திகேயன்! சாத்தான்குளம் சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கும் வகையில், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டப்படி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டினர்.

மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் சாத்தான்குளம் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் கொடூர சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

குற்றத்தின் பின்னணியில் உள்ள மிருகத்தனமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்காத வகையில், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை இருக்க வேண்டும்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு கிடைக்கும் நீதி நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

திடீர் என ‘பிகினி’ எனப்படும் ஆடை குறைப்பில் கவர்ச்சியாக தோன்றிய தமிழ்பட கதாநாயகிகள்

படத்தில் நடிக்கும் பொழுது கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க தயார் என கூறும் சில கதாநாயகிகள், சில படங்களில் தீடீர் என படத்திற்கு தேவைப்படாமலேயே கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதும் உண்டு. அது போன்ற ‘பிகினி’ எனப்படும் இரண்டு உடை மட்டும் அணிந்து வந்த கதாநாயகிளின் படங்கள் பின்வருமாறு..

இளய தளபதி விஜையின் ‘தமிழன்’ படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா(க்ளிக் செய்து பார்க்கவும்)

அருந்ததி படத்தில் நடிப்பால் கவர்ந்த அனுஷ்கா

மதராசப்பட்டிணம் எமி ஜாக்சன்

ஜீவாவின் முகமூடி பட கதாநாயகி பூஜா ஹெக்டே

பூஜா_ஹெட்டே

பிரபல கவர்ச்சி நடிகை நமீதா

பருத்திவீரன் படத்தில் நடித்த பிரியாமனி

தல படத்தில் குத்தாட்டம் போட்ட லஷ்மி ராய்

சூர்யாவின் படத்தில் கவர்ச்சி உடையில் தோன்றிய சமந்தா

சமந்தா

ரஜினியின் சிவாஜி படத்தின் கதாநாயகி ஸ்ரேயா

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் ஒரு பாடலில் பிகினி உடையில் ஓடி வரும் நயன்தாரா

 

3

துப்பாக்கியுடன் வந்த நபர்கள் பாகிஸ்தான் பங்கு சந்தை கட்டிடத்தை தாக்கினர்: கராச்சி

துப்பாக்கியுடன் வந்த
Police officers survey a damaged car at the site of an attack at the Pakistan Stock Exchange entrance in Karachi June 29, 2020. REUTERS/Akhtar Soomro

கராச்சி: பாகிஸ்தான் பங்கு சந்தை கட்டிடம் துப்பாக்கியுடன் வந்த நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய அந்த 4 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கையெரி குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றால் தாக்குதல்

அந்த கட்டிடத்தை துப்பாக்கியுடன் வந்தவர்கள் கையெரி குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றால் தாக்குதலுக்கு உள்ளாக்கினர். இந்த கட்டிடம் இருக்கும் பகுதி அதிக பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது மற்றும் அப்பகுதியில் வீடுகள் மற்றும் தலைமை அலுவலகங்கள் பல உள்ளன.

தாக்குதல் நடத்திய 4 பேரும் கொல்லப்பட்டனர்

“தாக்குதல் நடத்திய 4 பேரும் கொல்லப்பட்டனர், அவர்கள் அனைவரும் சில்வர் கொரோல்லா காரில் வந்தனர்,” என கராச்சியின் மூத்த காவல் துறை அதிகாரி குலாம் நபி மேமன் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இதயப்பகுதியாக கருதப்படும் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய நிதி நிறுவனங்கள் இருக்கும் இடமாக கராச்சி கருதப்படுகிறது.

3

டாப்ஸி மின் கட்டணம்: மும்பையில், மின் கட்டண கொள்ளை!

0
Taapsee EB Bill

Taapsee EB Bill; டாப்ஸி மின் கட்டணம்: மும்பையில், மின் கட்டண கொள்ளை! மும்பையில், அளவுக்கு அதிகமாக மின் கட்டவணம் வசூலிப்பதாக பிரபலங்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மும்பையில், மின் கட்டணம் அளவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், அளவுக்கு அதிகமாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை டாப்ஸி. வெள்ளாவி வைத்து வெளுத்தாங்களா என்று பாடல் பாடும் அளவிற்கு கொள்ளையழகு கொண்டுள்ளார்.

ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஜன கண மண என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மும்பையில், அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் மின் கட்டணம் குறித்து பிரபலங்கள் பலரும் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை டாப்ஸி மின் கட்டணம் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. இதனால், தற்போது 3 முதல் 4 மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் அளவிடப்பட்டு வருகிறது. ஆனால், கட்டணம் அளவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், மிகவும் அதிகப்படியான கட்டணம் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக நடிகை கார்த்திகா நாயர் தனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் வரையில், மின் கட்டணம் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

3