Home Blog Page 30

கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

பொன் மாணிக்கவேல்

கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், சிலை கடத்தல்களில் ஈடுபட்ட பல அரசியல்வாதிகளையும் மற்றும் பெரும்புள்ளிகளையும் தனது நேர்மையான செயல்பாடுகளால் பயமுறுத்தி வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் தொடர்பான வழக்குகள்

ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன்மாணிக்கவேல் அவர்கள் கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டு பணிபுரிய நியமிக்கப்பட்டார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிஓய்வு பெற்றவர்.

நேர்மையான அதிகாரியாக திகழும் பொன்மாணிக்கவேல்

இந்தியாவின் நேர்மையான அதிகாரியாக கருதப்படும் இவர், காவல் துறையில் வளர்ந்து வருபவர்களுக்கு முன் உதாரமாக திகழ்கிறார். கடத்தப்பட்ட பல சிலைகளை மீட்ட இவர் பாரபட்சமின்றி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கவனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் கடவுளிடம் வேண்டிவருகின்றனர்.

3

பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்!

0
Elizabeth Helen

Elizabeth Helen; பெண் இன்ஸ்பெக்டரை நீக்க வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்! பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும் என்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் துணை கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பீட்டர் பால் – வனிதா திருமணம் குறித்து விசாரிக்கும் பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும் என்று எலிசபெத் ஹெலன் சென்னை துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால், அதன் பிறகு நடித்த எந்தப் படமும் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவகாரத்து செய்தார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும், கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் எலிசபெத் ஹெலன், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரில் சரியான விசாரணை நடத்தவில்லை என்றும், பெண் இன்ஸ்பெக்டரை மாற்றி, வேறு இன்ஸ்பெக்டரை விசாரணைக்கு அனுமதித்தால் தனக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியை பார்வையிட்டு, இராணு வீரர்களுடன் உரையாற்றினார்

லடாக் பகுதியை பார்வையிட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியை பார்வையிட்டு, இந்திய இராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார்.

கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள இடம் நிமு

இராணுவ தலைமை அதிகாரிகள் பிபின் ராவத் மற்றும் எம்.எம். நாராவானே ஆகியோருடன் பிரதமர் மோடி இராணுவத்தினர் இருக்கும் கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் இமாலயத்தில் இருக்கும் நிமு என்ற இடத்திற்கு உலங்கு வானூர்தியில் சென்றார்.

சீனாவுடனான மோதலில் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம்

இந்த திடீர் பயணத்தில் அங்குள்ள இராணுவ வீரர்களிடம் கடந்த ஜூன் 15 இல் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் குறித்து உரையாற்றினார்.

திருக்குறளை சுட்டி காட்டிய மோடி

அவ்வாறு உரையாற்றும் பொழுது “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” என்ற படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை சுட்டி காட்டி அதற்கு இந்தியில் விளக்கம் அளித்து பேசினார்.

மேலும் அந்த உரையாடலில் கிருஷ்ணரிடம் உள்ள புல்லாங்குழலை பற்றியும் சுதர்சன சக்கரத்தை பற்றியும் சுட்டி காட்டி பேசினார்.

3

7 வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக 26 வயது நபர் கைது: புதுக்கோட்டை

குழந்தையை கற்பழித்து கொலை

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கோவிலில் பூ விற்கும் 26 வயது நபர் வியாழக்கிழமை 7 வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை எஸ்.பி பி.வி.அருண் சக்திகுமார் தெரிவிக்கையில், குற்றவாளி இராஜாவால் சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளார் மற்றும் இதனை இராஜா ஒப்பு கொண்டுள்ளான் என கூறினார்.

அச்சிறுமிக்கு இனிப்புகள் வழங்கிவந்துள்ள குற்றவாளி இராஜா

கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி  அவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருக்கிறார் மற்றும் காளி கோயில் இருக்கும் இடத்தில் அடிக்கடி விளையாடி வந்துள்ளார். குற்றம் சாட்டபட்ட நபர் கோயிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அச்சிறுமிக்கு இனிப்புகள் வழங்கி வந்துள்ளான்.

இந்நிலையில் செவ்வாய் கிழமை அவர் குடித்திருந்த நிலையில் வந்து அந்த பெண் குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து, கொன்று குளத்திற்கு அருகில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல் துறையில் புகார் தெரிவித்த பெற்றோர் 

இந்நிலையில் செவ்வாய் மதியம் முதல் அப்பெண்குழந்தையை காணாததால் குழந்தையின் பெற்றோர் எம்பை காவல் துறையில் புகார் தெரிவித்தனர். காவல் துறை தேடுதலுக்கு பின்னர் புதர்களுக்கு இடையில் காயங்களுடன் அக்குழந்தையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன அன்று குழந்தை இராஜாவுடன் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இராஜாவை கைது செய்து விசாரித்த பொழுது அவன் குற்றங்களை ஒப்புகொண்டதாக காவல் துறை எஸ்.பி. தெரிவித்தார்.

குற்றவாளி இராஜா மீது போஸ்கோ உள்ளிட்ட  பிரிவுகளில் வழக்கு

கைது செய்யப்பட்ட இராஜா இ.பீ.கோ பிரிவுகள் 376,302,364 மற்றும் 201 இன் படி வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார் மற்றும் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம் போஸ்கோ(POSCO) சட்டமும் குற்றவாளி மீது பாய்ந்தது.

அரசியல் தலைவர்கள் சிறுமி கொலை சம்பவம் குறித்து கண்டனம்

சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

3

இந்தியாவின் புதிய கொரோனா தொற்று ஒரே நாளில் 22,045 அதிகரிப்பு, தமிழகத்தில் 1 இலட்சத்தை நெருங்கும் கொரோனா

புதிய கொரோனா

வியாழக்கிழமை இந்தியாவின் புதிய கொரோனா தொற்று ஒரே நாளில் 22,045 எண்ணிக்கை அதிகரிப்பு. முந்தய நாள் புதிய கொரோனா எண்ணிக்கை 20,060 ஆக இருந்தது.

மராட்டியம் முதலிடம், தமிழகம் இரண்டாம் இடம்

மராட்டியம் 6,330 புதிய தொற்றுகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 4,343 புதிய தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் வியாழக்கிழமை 379 பேர் கொரோனாவால் இறப்பு

வியாழக்கிழமை மட்டும் 379 பேர் இந்தியாவில் கொரோனாவால் இறந்தனர். இதை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,000 த்தை கடந்தது.

தமிழ்நாட்டில் 1,00,000 த்தை நெருங்கும் கொரோனா தொற்று 

டெல்லியில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 92,000 ஆக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,000 த்தை நெருங்குகிறது.

24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 57 பேர் கொரோனாவால் இறந்தனர்

தற்போது தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 98,392 ஆக உள்ளது. இதில் 41,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 57 பேர் கொரோனாவால் இறந்தனர்.

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது.

3

தொடர்ந்து பலி கேட்கும் மின்னல், பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்

மின்னல் தாக்கி

பாட்னா: தொடர்ந்து பலி கேட்கும் மின்னல். பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். இதில் பாட்னாவின் கிராமப் பகுதியை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழப்பு இது மூன்றாவது முறை

இந்த வாரத்தில் மட்டும் மின்னல் தாக்கி உயிர் இழப்புகள் ஏற்படுவது பீகாரில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன் ஜூன் 25ஆம் தேதி, 22 மாவட்டங்களை சேர்ந்த 92 பேர் மின்னல் தாக்கி இறந்தனர், ஜூன் 30 ஆம் தேதி, 5 மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் வழங்கப்படும்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். வானிலை கொந்தளிப்புடன் உள்ளதால் மக்களை தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் படி அவர் மேலும் அறிவுறுத்தினார்.

3

அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து!

0
S A Chandrasekhar Birthday Today

S A Chandrasekhar; அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து! தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விஜய் ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். தனது மகன் தளபதி விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தவரும் இவரே.

அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, சாதிக்கொரு நீதி, நெஞ்சில் துணிவிருந்தால், சாட்சி, குடும்பம், நீதியின் மறுபக்கம் என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 70 படங்கள் வரை இயக்கியுள்ளார். இதில், பெரும்பாலான படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். மேலும், படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விஜய் ரசிகர்கள், பிரபலங்கள் என்று அனைவரும் டுவிட்டர் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தனது பிறந்தநாளுகு வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வரவேண்டாம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா காரணமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு செல்வீர்கள்.

ஆனால் இந்த ஆண்டு கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது.

அனைவருமே கஷ்டத்தில் இருக்கிறோம். ஆகையால், உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஆதலால், இந்த வருடம் யாரும் வர வேண்டாம்.

உங்களது குடும்பத்தினருக்கு நீங்கள் ரொம்பவே முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை இறந்த நிலையில் காணப்பட்டது: கோவை

யானை இறந்த நிலையில்

கோவை: வியாழக்கிழமை காலையில் கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது.

18 முதல் 20 வயது மதிப்புடைய பெண்யானை

விளை நிலத்திற்கு அருகில் 18 முதல் 20 வயது மதிப்புடைய பெண்யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது. இதை அடுத்து உழவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

காதில் காயங்கள்

இறந்த யானையில் இடது காதில் காயங்கள் இருந்தது ஆனால் இறந்தற்கான சரியான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவு

கோவை மாவட்ட வன அலுவலகர் டி. வெங்கடேஷ் மற்றும் வனத்துறை விலங்குகள் நல மருத்துவர் டாக்டர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த ஆண்டு மட்டும் 13 யானைகள் இறந்துள்ளன

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 13 யானைகள் இறந்த நிலையில் கோவை மாவட்ட காட்டு பகுதிகளில் காணப்பட்டுள்ளன.

3

சாத்தான்குளம், காவல் துறை கட்டுப்பாட்டில் தந்தை – மகன் இறப்பு சம்பவம், துணை ஆய்வாளர் உட்பட காவலர்கள் மீது சிபி-சிஐடி வழக்கு

சாத்தான்குளம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் சிபி-சிஐடி காவல் துறை புதன்கிழமை சாத்தான்குளம், தந்தை பி.ஜெயராஜ் மற்றும் மகன் ஜெ.பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை கட்டுபாட்டில் இறந்தது தொடர்பாக துணை காவல் ஆய்வாளர் இரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

பிரிவு 302இன் கீழ் 6 பேர் மீது வழக்கு

மேலும் ஆறு பேர் மீது இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 302இன் கீழ் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி: இறந்தவர்களின் உறவினர்கள்

இது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உறவினர்கள் தெரிவித்தனர். குற்றத்திற்குரிய அனைவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி சிறையை பார்வையிட்ட சிபி-சிஐடி காவல்துறையினர்

டி.எஸ்.பி சரவணகுமார் தலைமையிலான குழு பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் சாகும் தருவாயில் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி சிறையை பார்வையிட்டனர்.

காணொளி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள்

புதன்கிழமை மாலை பென்னிக்ஸின் நண்பர்கள் அந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை  சிபி-சிஐடி காவல்துறையிடம் பகிர்ந்தனர்.

3

என் அப்பா குடிகாரர்: வனிதா பொய் சொல்கிறார்: பீட்டர் பால் மகன்!

0
Peter Paul Son

Peter Paul Son; என் அப்பா குடிகாரர்: வனிதா பொய் சொல்கிறார்: பீட்டர் பால் மகன்! எனது அப்பா ஒரு குடிகாரர் என்றும், வனிதா கூறுவது பொய் என்றும் பீட்டர் பாலின் மகன் கூறியுள்ளார்.

எனது அப்பா ஒரு குடிகாரர் என்று பீட்டர் பால் மகன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால், அதன் பிறகு நடித்த எந்தப் படமும் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது. திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து எலிசபெத் ஹெலன் கூறுகையில், பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக இரு முறை போதை மீட்பு மையத்தில் அவரை சேர்த்திருந்தோம்.

இதற்கு முன்னதாக பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். சரியான வருமானமும் இருக்காது. தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட நினைத்துவிட்டார். அவருக்கு இது பத்தோடு பதினொன்னு போலத்தான் என்று கூறியுள்ளார்.

மேலும், எனது மகனின் படிப்புக்காகதான் நான் அவரை விட்டு விலகினேன். அதன் பிறகு எனது அம்மா வீட்டில் இருந்தேன்.

தற்போது பீட்டர் பால் திருமணம் குறித்து அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இப்போத் எனது மகள் அப்பா இல்லையே என்று வருத்தப்படுகிறாள்.

எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், எனது குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதா தனது பீட்டர் பால் குடிகாரர் இல்லை என்றும் திருமணத்தின் போது ஒயிட் ஒயின் மட்டுமே குடித்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து பீட்டர் பாலின் மகன் கூறுகையில், எனது அப்பா குடிப்பழக்கம் காரணமாக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், ஆனால், மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்கும் போது கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கும், மற்றொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதாகவும் அப்பா, அம்மாவிடம் கூறியதால் தான் இருவரும் பிரிந்தாக பீட்டர் பால் மகன் தெரிவித்துள்ளார்.

எனது அப்பாவிற்கு திருமணம் என்று கேள்விபட்டபோது எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

அவர் எங்கு வேலை பார்த்தாலும், அங்குள்ள பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார் என்று பீட்டர் பால் மகன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3