Home Blog Page 29

டுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்!

0
Thala 50th Birthday

Thala Ajith 50th Birthday; டுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்! தல அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருக்கிறது என்று கூறும் டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி தல ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

கடந்த மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, தற்போது டுவிட்டரில் அடுத்த பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருக்கிறது என்று கூறும் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னுக்கு வந்தவர்.

தல என்றாலே தன்னம்பிக்கை லட்சியம். தொடர்ந்து, ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது, வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூருக்கு தல அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது 49 ஆவது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், கட் அவுட், போஸ்டர்கள் ஆகியவை வேண்டாம் என்றும் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இந்த நிலையில், அஜித்தின் 49 ஆவது பிறந்தநாள் முடிந்து, 65 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், 50 ஆவது பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருப்பதாக கூறி டுவிட்டரில், VersatileStarAjithBdayIn300D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிச்சாமி

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 12 ஆம்

மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி ஜூலை 12 வரை நீட்டிப்பு

ஜூன் முதல் ஜுலை 5 வரை மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த முழு கொரோனா ஊரடங்கு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவர மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி ஜூலை 12 வரை நீட்டிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சி உட்பட நான்கு பகுதிகளில் முழு ஊரடங்கு

இந்த முழு கொரோனா ஊரடங்கு மதுரை மாநகராட்சி, பரவை நகர பஞ்சாயத், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும், முக கவசம் அணியவும்

இவ்விடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் கட்டுபாட்டு பகுதிகள் அதிகாரிகளால் தொடர் கண்கானிப்பில் இருக்கும். மக்கள் அனைவரும் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும், முக கவசம் கட்டாயம் அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவை இல்லாமல் மக்கள் வெளியில் சுற்ற வேண்டாம்

சமூக விலகல் கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும் மற்றும் தேவை இல்லாமல் மக்கள் வெளியில் சுற்றுவதை தவிற்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3

80’s Billa 90′ Basha 2K Kala பேட்டையோட ஒரே ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடல் வெளியீடு!

0
Friendship First Single

Superstar Anthem Lyric Video; 80’s Billa 90′ Basha 2K Kala மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடல் வெளியீடு! பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப். இந்தப் படத்தின், மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இதே போன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இதுவே லோஸ்லியாவின் முதல் படம்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டிஎம் உதய குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு வரிகளும் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையிலும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் பாராட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக #SuperStarAnthem என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

தழிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்தது: சென்னை

கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை

சென்னை: தமிழ்நாட்டின் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 118 நாட்கள் கடந்து வெள்ளிக்கிழமை தழிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்தது. வெள்ளிக்கிழமை புதிய கொரோனா தொற்றின் எண்ணிக்கை 4,329 ஆக இருந்தது.

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,02,721

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,02,721ஐ கடந்தது மற்றும் 42,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைதல் சதவிகிதம் 57% ஆக உள்ளது.

வெள்ளிகிழமை  64 பேர் கொரோனாவால் இறந்தனர்

இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஐ தொட்டது. வெள்ளிகிழமை அன்று மட்டும் 64 பேர் கொரோனாவால் இறந்தனர். மராட்டியத்தை அடுத்து 1 இலட்சம் கொரோனா தொற்றுகளை கடந்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.

வெள்ளிகிழமை சென்னையில் மட்டும் 2,082 புதிய கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் சென்னை கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வெள்ளிகிழமை உறுதி செய்யப்பட்ட 2,082 புதிய கொரோனா தொற்றுகளுடன் சேர்த்து மொத்த தொற்று எண்ணிக்கை சென்னையில் 64,689 ஆக உள்ளது.

3

SuperStar Anthem:பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் சூப்பர் ஸ்டார் ஆந்தம் வெளியீடு!

0
Superstar Anthem Lyrical Video

Friendship First Single; பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் சூப்பர் ஸ்டார் ஆந்தம் வெளியீடு! லோஸ்லியா, ஹர்பஜன் சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லோஸ்லியா. இவர், பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இது லோஸ்லியாவின் முதல் படம்.

இந்தப் படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அர்ஜூன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இணைந்து இயக்கியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப். இந்தப் படத்திற்கு டி எம் உதய குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்று தொடங்கும் இந்தப் பாடல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டர், #SuperStarAnthem என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சிம்பு தனது குரலில் இந்தப் பாடலை பாடியுள்ளார். சூப்பர்ஸ்டார் ஆந்தம் என்ற பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். இவர், ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பொண்ண பெத்தவன் பயப்படுற மாதிரி, தப்பு செய்றவனும் பயப்படனும்: கவின் ஆவேசம்!

0
Kavin Tweet jayapriya issue

Kavin; பொண்ண பெத்தவன் பயப்படுற மாதிரி, தப்பு செய்றவனும் பயப்படனும்: கவின் ஆவேசம்! நடிகரும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின், அறந்தாங்கி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் கவின் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமான நடிகர் கவின் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல.

நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானா. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் செய்து பதிவு செய்துள்ளார்

தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kavin Twitter

3

ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

0
Ramya Pandian Photoshoot

ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்! ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன் ஜொலிக்கும் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்து 3 நிகழ்ச்சிகளையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31 ஆம் தேதி வரையில் 6ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்ப எப்படியும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆகும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பிறகு தான் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, இந்நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.

ஆகையில், விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், #RamyaPandian என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தையும், அவரது ஸ்டைலிஷான புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், டுவிட்டரில் 1,40,000 பாலோயர்ஸை கடந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சிவி குமாரின் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

இதனை அவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணங்களுக்காக ரம்யா பாண்டியனின் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கண்ணாலேயே பேசிய காதல் படம்: சுப்ரமணியபுரம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு!

0
12YearsOfSubramaniapuram

Subramaniapuram; கண்ணாலேயே பேசிய காதல் படம்: சுப்ரமணியபுரம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு! நடிகர் ஜெய் மற்றும் சசிகுமார் ஆகியோரது நடிப்பில் வந்த சுப்ரமணியபுரம் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சுப்ரமணியபுரம் படம் திரைக்கு வந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சசிகுமார் இயக்கி, தயாரித்து நடித்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியான படம் சுப்ரமணியபுரம்.

இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார்.

மதுரையில் உள்ள சுப்ரமணியபுரம் பகுதியைச் சுற்றி நடந்த சம்பவம் தான் இந்தப் படம்.

சசிகுமார், ஜெய் மற்றும் கஞ்சா கருப்பு மூவரும் நண்பர்கள். எப்போதும் சண்டை சச்சரவு என்று அடிக்கடி சிறைக்கு சென்று வரும் மைனர்கள். இவர்களை தனது அரசியல் அடாவடிக்கு பயன்படுத்திக் கொள்கிறார் சசிகுமார்.

சராசரி இளைஞர்களின் வாழ்க்கை திடீரென்று வன்முறையின் கொடூர பாதையில் வளைய, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும், துரோகங்களும் தான் படத்தின் கதை.

பெல்ஸ் பேண்ட் என்று தொடங்கி, பழைய 10 ரூபாய் நோட்டு, சில்வர் பெயிண்ட் பஸ் என்று 1980 ஆம் ஆண்டுகளில் நடந்தவற்றை எடுத்துக்காட்டியுள்ளார்.

வன்முறை கலவரத்துக்கு நடுவில் ஜெய் மற்றும் ஸ்வாதியின் காதலை பார்வையாலேயே சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசிகுமார்.

இந்தப் படத்தில் வரும் கண்கள் இருண்டால் என்ற பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக டுவிட்டரில், #12YearsOfSubramaniapuram என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தின் புகைப்படங்களை #12YearsOfSubramaniapuram இந்த ஹேஷ்டேக் வாயிலாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆரவாரத்தோடு வந்து தெறிக்கவிட்ட வாத்தி கம்மிங்: யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ்!

0
Vaathi Coming 60M Views

Vaathi Coming 60M Views; ஆரவாரத்தோடு வந்து தெறிக்கவிட்ட வாத்தி கம்மிங்: யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ்! தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் 60 மில்லியன் வியூஸ் வரை யூடியூப்பில் பெற்றுள்ளது. இன்னும் 3 மில்லியன் வியூஸ் பெற்றால் குட்டி ஸ்டோரியின் 63 மில்லியன் வியூஸ் சாதனையை முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும், சாந்தனு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, பிரேம், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

இதைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி வெளியாகவில்லை.

இதே போன்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மேலும், அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 63 மில்லியன் வியூஸ் பெற்றது.

இந்த நிலையில், தற்போது வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இன்னும் 3 மில்லியன் வியூஸ் பெற்றால், குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாத்தி கம்மிங் 60 மில்லியன் வியூஸ் பெற்றதைத் தொடர்ந்து, டுவிட்டரில் Vaathi Coming என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் டான்ஸ் ஆடிய வீடியோவை வாத்தி கம்மிங் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அண்மையில், மாஸ்டர் பாடலின் கரோக்கி வெர்ஷன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா?

0
Tamannaah Anchor

Tamannaah Anchor; தொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா? முன்னணி நடிகையான தமன்னா டாக் ஷோ ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

நடிகை தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆக்‌ஷன். தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஒரு டாக் ஷோ ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தொடங்கியுள்ள ஆஹா என்ற ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவை நடத்த இருக்கிறார்.

இந்த டாக் ஷோவை அல்லு அர்ஜூன் மற்றும் தமன்னா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமன்னாவிற்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூ.7 லட்சம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3