Home Blog Page 28

கொரோனாவுக்கு பலியான தெலுங்கு தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ்!

0
Pokuri Rama Rao

Pokuri Rama Rao; கொரோனாவுக்கு பலியான தெலுங்கு தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ்! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெலுங்கு பட தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 6 ஆவது முறையாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர், ரணம், நேட்டி பாரதம், அம்மாயிகோசம், இன்ஸ்பெக்டர் பிரதாப் என்று பல படங்களை தயாரித்துள்ளார்.

பொக்கூரி ராமா ராவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலும் இருந்துள்ளது.

இதையடுத்து, கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன்னதாக பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் பாலிவுட் பட தயரிப்பாளர் அனில் கபூர் ஆகியோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது: யுவன் சங்கர் ராஜா!

0
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja Suicide Plan; எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது: யுவன் சங்கர் ராஜா! முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர், மாஸ் நடிகர்களின் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது தல அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதியின் மாமனிதன், ஜெயம் ரவியின் பூமி, ஜன கண மண, சிம்புவின் மாநாடு என்று பல படங்கள் அவரது கைவசம் இருக்கிறது.

அண்மையில், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன?

நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். தொடர்ந்து, யுவன் என்ற தனது பெயரையும் அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா விஜய் நடிக்கும் தளபதி65 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கடந்த, 2003 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது மீண்டும் விஜய் உடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

3

யூடியூப்பில் 4 மில்லியன் வியூஸ் வரையில் பெற்ற கோப்ரா தும்பி துள்ளல் பாடல்!

0
Cobra Thumbi Thullal

Thumbi Thullal Song Lyric; யூடியூப்பில் 4 மில்லியன் வியூஸ் வரையில் பெற்ற கோப்ரா தும்பி துள்ளல் பாடல்! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி யூடியூப்பில் 4 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

கோப்ரா தும்பி துள்ளல் பாடல் வெளியாகி 4 மில்லியன் வியூஸ் வரையில் பெற்றுள்ளது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி யூடியூப்பில் 4 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இந்தப் பாடல் வெளியாகி 7 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது 4 மில்லியனுக்கும் அதிகமாகவே வியூஸ் பெற்றுள்ளது. ஆதலால், #4MViewsForThumbiThullal என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thumbi Thullal Song Lyric

3

கொரோனாவால் பாதிப்படைந்த தலைமை காவலர் மரணம் : விருதுநகர்

தலைமை காவலர்

மதுரை: கொரோனாவால் பாதிப்படைந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார்.

தென்மாவட்டங்களில் கொரோனாவால் இறந்த முதல் காவலர்

தென்மாவட்டங்களில் கொரோனாவால் இறந்த முதல் காவல் அதிகாரியாக இவர் கருதப்படுகிறார்.

கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இராஜபாளயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு மற்றப்பட்டார்.

பின்னர், மீண்டும் இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மரணம்

இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 3ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து இவர் பணிபுரிந்த காவல் நிலையம் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

3

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு: சிங்கம் 2 வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு!

0
Singam 2

Singam 2 Suriya; ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு: சிங்கம் 2 வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு! சூர்யா நடித்த சிங்கம் 2 படம் திரைக்கு வந்து இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சிங்கம் 2 படம் திரைக்கு வந்து இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில், சூர்யா, ஹன்சிகா மோத்வானி, அனுஷ்கா ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி திரைக்கு வந்த படம் சிங்கம் 2.

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்தது.

கிட்டத்தட்ட ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.122 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று விக்கிப்பீடியாக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில், என்சிசி மாஸ்டராக பணியாற்றி வரும் சூர்யா ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக வந்து நாட்டில் நடக்கும் கள்ளக்கடத்தில் மாஃபியாவை வேறோடு களையெடுக்கும் கதையே சிங்கம் 2.

தமிழில் உருவாக்கப்பட்ட சிங்கம் 2 தெலுங்கில் யமுடு 2 என்ற டைட்டிலிலும், ஹிந்தியில், மெயின் ஹூன் சூர்யா என்ற டைட்டிலிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சிங்கம் 2 படத்தில் இடம்பெற்ற வாலே வாலே, அச்சமின்றி, புரியவில்லை, சிங்கம் டான்ஸ், விதை போல, கண்ணுக்குள்ளே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக டுவிட்டரில், #7YearsOfMassiveHitSingam2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும், சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, #SooraraiPottru மற்றும் #SudhaKongara ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா பர்த்டே டுடே!

0
Sudha Kongara Birthday Today

Sudha Kongara: சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா பர்த்டே டுடே! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சுதா கொங்கரா பிறந்தநாள் இன்று (Happy Birthday Sudha Kongara).

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணும் அளவுதான்.

அவர்களில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டுள்ளார் பெண் இயக்குநர் சுதா கொங்கரா.

கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தார் சுதா கொங்கரா (31).

மெட்ராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.

படித்து முடித்த சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் கிட்டத்தட்ட 7 வருடம் உதவி இயக்குநராகவே இருந்துள்ளார்.

முதன் முதலில் தமிழில் துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், பூர்ணா, பூனம் பாஜ்வா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

நண்பர்களுக்கு இடையில் மோதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் புரோடக்‌ஷன் பணியின் போது, பாக்ஸிங் தொடர்பான கதையை எழுதியுள்ளார். அப்போதே படத்திற்கு இறுதிச் சுற்று என்று டைட்டில் வைத்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இறுதிச் சுற்று படத்தில் நடிப்பதற்கு மாதவனை அணுகியுள்ளார்.

மாதவன் மற்றும் சுதா கொங்கரா இருவருக்கும் நல்ல புரிதல் இருந்துள்ளது. இருவருமே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

எப்படியென்றால், மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக சுதா கொங்கரா இருந்த போது மாதவன் நடித்துள்ளார்.

துரோகி படத்தைத் தொடர்ந்து இறுதிச் சுற்று படத்தை இயக்கினார். இப்படம் ஹிந்தியில் Saala Khadoos என்ற டைட்டிலில் வெளியானது.

இறுதிச் சுற்று படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

இறுதிச் சுற்று படத்தை தெலுங்கில் குரு என்ற டைட்டிலில் ரீமேக் செய்துள்ளார்.

துரோகி மற்றும் இறுதிச் சுற்று படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சுதா கொங்கராவின் அவரது அர்ப்பணிப்பு படக்குழுவினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இதுவரை வெளியாகவில்லை.

இயக்குநரைத் தொடர்ந்து ஒரு நடிகையாகவும் திகழ்ந்துள்ளார். ஆம், பிரசன்னா நடிப்பில் வந்த கண்ட நாள் முதல் படத்தில் கல்லூரி பேராசிரியை என்ற ரோலில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சுதா கொங்கராவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே சுதா கொங்கரா மேடம்….

3

ஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு?

0
Teddy OTT Release

Teddy OTT Release; ஆர்யா – சாயிஷாவின் டெடி ஓடிடி தளத்தில் வெளியீடு? ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் மற்றும் பென்குயின் ஆகிய படங்களைப் போன்று டெடி படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இளம் காதல் ஜோடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தின் மூலம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில், டெடி படத்தின் மூலம் ஆர்யா – சாயிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் டெடி (Teddy). இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், பிக் பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால், நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் கருணாகரன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Teddy First Look) வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா சாயிஷாவின் திருமண நாளை முன்னிட்டு டெடி டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் குறித்து சக்தி சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் டெடி (Teddy) பியர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவே டெடி பியர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெடி பியர் சண்டையிடும் ஒரு கதாபாத்திரமாக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆதால், இந்தப் படத்தின் மூலம் டெடி பியர் அதிகளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், அண்மையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் வெளியாகியது. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்கே நகர், லாக்கப், காக்டெய்ல், டேனி ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது ஆர்யா – சாயிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் டெடி படமும் ஓடிடி தளத்திலேயே வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓடிடி தளத்திலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3

தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்!

0
Bomb Threat To Vijay House

Vijay Bomb Threat; தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் கோலிவுட்! தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். இவரது 64ஆவது படமாக மாஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது பேசிய அந்த மர்ம நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், இது வெறும் மிரட்டல் தான் என்றும் தெரியவந்தது.

இதன் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர். உடனடியாக அந்த மர்ம நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இது போன்று வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் சம்பவம் கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகர்களை அதிர்ச்சியடைச் செய்து வருகிறது.

3

கோலிவுட்டின் கிங் தளபதி விஜய்: #VijayTheMasterOfKw!

0
Vijay Kollywood King

Thalapathy Vijay Kollywood King; கோலிவுட்டின் கிங் மாஸ்டர் விஜய்: #VijayTheMasterOfKw! தளபதி விஜய் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்து வரும் நிலையில், தற்போது VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் என்று கூறும் VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றிருப்பவர் தளபதி விஜய். ரஜினி, கமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும், சாம்ராட் என்றும், கோலிவுட் கிங் என்றும் சோஷியல் மீடியா கிங் என்றும், டிஆர்பி கிங் என்றும் அழைக்கின்றனர்.

விஜய் என்றால், மாஸ், க்யூட், அமைதியான கதாபாத்திரம், வசூல் மன்னன், ரசிகர்களுக்கு நல்லவொரு சகோதரர், தனது அழகான முகத்தை வைத்துக் கொண்டு எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அண்ணனாக இருக்கிறார். எப்போது, அண்ணா அண்ணா என்றே ரசிகர்கள் தளபதி விஜய்யை அழைக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், ரசிகர்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார்.

தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்றும் அழைக்கின்றனர்.

அண்மையில், விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், அப்போது, தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டும்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுகொண்டார்.

விஜய் நடித்த தெறி, சர்கார், மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், #VijayTheMasterOfKw என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தற்போது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், விஜய் தான் கோலிவுட் மாஸ்டர் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கவர்ச்சி நடிகை நமீதா பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம்

நமீதா பா.ஜ.க

சென்னை: நடிகை நமீதா பா.ஜ.க வில் இணைந்து 8 மாதங்கள் கழித்து தற்போது பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழிசையால்  நீக்கப்பட்ட பிக்பாஸ் காயத்திரி மீண்டும் சேர்ப்பு

பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனால் நீக்கப்பட்ட பிக்பாஸ் நடிகை காயத்திரி ரகுராமன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு கலாச்சார அமைப்பிற்கு தலைமை பொறுப்பில் அமர்தப்பட்டுள்ளார்.

இராதா இரவிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை

கடந்த 8 மாதங்களுக்கு முன் நமீதாவுடன் பா.ஜ.க வில் இணைந்த நடிகர் இராதா இரவிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

சர்ச்சையில் சிக்கிய நடிகர் இராதா இரவி

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால் நடிகர் இராதா இரவி இதற்கு முன் இருந்த தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3