Home Blog Page 326

வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ்: மீண்டும் வந்துவிட்டது!

0
வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ்

வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் மீண்டும் அதன் வேலையைக்காட்ட ஆரம்பித்து விட்டது.

வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் என்றால் என்ன?

2016-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் கோல்ட் என்ற ஆப் மூலம் பலர் ஏமாற்றப்பட்டனர். இப்போதுள்ள ஜிபி, யோ வாட்ஸ்ஆப் போன்று அதுவும் ஒரு வாட்ஸ்ஆப் கிராக் செயலி.

ஒரே நேர்த்தில் 100 போட்டோ அனுப்ப இயலும். ஒருவருக்கு அனுப்பிய தகவலை 2 அல்லது 3 மணி நேரம் கழித்துக்கூட அழிக்கலாம்.

தீம், எமோஜி, ஸ்டிக்கர் மற்றும் பாண்ட் போன்ற பல்வேறு வசதிகள் இருப்பதாகக்கூறி வைரல் செய்யப்பட்டது.

இதை உண்மை என நம்பிய பலர், அந்த லிங்கை கிளிக்செய்து டவுன்லோட் செய்ய முயன்றனர். ஆனால் அந்த லிங்கில் அப்படி ஒரு செயலி இல்லை.

அந்த லிங்க், ஒரு தீய இணயத்திற்க்குள் சென்றது. Website Riddled with Malware என்ற வைரஸ் கிளிக் செய்தவர்கள் போனில் இன்ஸ்டால் ஆனது.

அந்த வைரஸ் இன்ஸ்டால் ஆனதே பலருக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் போனில் உள்ள தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி ஹக்கர்களுக்கு அனுப்பியுள்ளது.

போனை ரீசெட் அல்லது பார்மெட் செய்தே அந்த வைரசை அழிக்க முடிந்தது. பேராசையால் பலர், தங்கள் அந்தரங்கத் தகவல்களைக்கூட பறிகொடுத்தனர்.

மார்டீநெல்லி வீடியோ

மீண்டும் மார்டீநெல்லி என்ற பெயரில் வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் உலவுவதாக தகவல் பரவி வருகிறது.

‘மார்டீநெல்லி’ என்ற பெயரில் ஒரு வீடியோ பலரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வந்துள்ளதாம். அதைக் கிளிக் செய்தால், அது உங்கள் ஃபோனை  ஹேக் செய்துவிடுமாம்.

அதன்பிறகு உங்கள் ஃபோனை, யாராலும், சரிசெய்ய இயலாது எனக்கூறி அப்படி ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.

சொபோஸ் ஆன்டி வைரஸ் நிறுவனம் மறுப்பு

சொபோஸ் என்ற ஆன்டி வைரஸ் நிறுவனம் இதை மறுத்துள்ளது. மார்டீநெல்லி என்று ஒரு வீடியோவே இல்லை. அப்படி இருந்தாலும் வீடியோ மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் தகவலை திருட முடியாது எனக் கூறியுள்ளது.

வாட்ஸ்ஆப் பயனாளர்களை அச்சுறுத்தும் விதமாக புரளி பரப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் காவல்துறையும், அந்த வீடியோ போலி என உறுதி செய்துள்ளனர்.

போலி லிங்குகள் எப்படி பரவுகிறது?

இருப்பினும் வாட்ஸ்ஆப் கோல்ட் பாணியில் பல லிங்குகள் செயல்பட்டுக்கொண்டு தான் உள்ளன. இதை 25 பேருக்கு ஷேர் செய்தால், ஆப்பிள் ஃபோன் பரிசாகக் கிடைக்கும்.

paytm கேஷ்பேக், அமேசான் கூப்பன், இலவச ரீசார்ச் என ஆசை வார்த்தை கூறி போலி லிங்குகளைப் பரப்பி வருகின்றனர்.

அதில், நீங்கள் கொடுக்கும் தகவல்களைக் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று காசு பார்த்துவிடுவார்கள். உங்களுக்குத் தேவையில்லாத போன் கால்கள் வரத்துவங்கும்.

நிலம் வாங்குறீங்களா? ரத்தினக்கல் வாங்குறீங்களா? அதுஇது எனத் தொல்லை தரும் போன்கள் வரும்.

பணம் திருடும் கும்பல்

சில லிங்குகள் ஒரு ரூபாய்க்கு ஐபோன் எனக்கூறி உங்கள் அக்கவுண்ட் தகவல்களை வாங்கிக்கொண்டு, மொத்த பணத்தையும் உடனே திருடிவிடுவர்.

சிலர் ஆபாச வீடியோ லிங்க் எனக்கூறி உங்கள் தகவல்களைத் திருடுவர். மால்வேர்களை உங்கள் போனிற்கு அனுப்பிவிடுவார்கள்

இவற்றை எப்படித் தடுப்பது?

பொதுவாக இதுபோன்ற லிங்குகள் xxx என துவங்கும். நீங்கள் இதுவரை அறியாத இணையதள லிங்க் எனில் அனுப்பியவரிடம் அதைப்பற்றி முழுமையாக விசாரிக்கவும்.

நீங்கள் உபயோகப்படுத்தும் ப்ரவ்சர் பாதுகாப்பானதாக இருந்தால், உங்களை அந்த தளத்திற்கு அழைத்துச்செல்லாது.

10 பேருக்கு அனுப்பு, 20 பேருக்கு அனுப்பு ஐபோன் இலவசம்! இப்படி ஏதாவது, இலவசம் எனக் கூறினால் அந்த பக்கம் தலைவைத்துக்கூட பார்க்க வேண்டாம்.

பதிலுக்கு அனுப்பியவரை ஆத்திரம்தீர திட்டுங்கள். அப்பொழுதுதான் அந்த நபருக்கும் புத்தி வரும்.

தொடர்ந்து இவ்வாறு யாரவது அனுப்பினால், அவர்களைக் குழுவைவிட்டே ப்ளாக் செய்துவிடுங்கள்.

3

ட்ரம்ப்பின் மூர்க்க குணம்: சுவரினால் வந்த வினை?

0
ட்ரம்ப்பின் மூர்க்க குணம் #ShutdownStories

ட்ரம்ப்பின் மூர்க்க குணம்: சுவரினால் வந்த வினை?

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போதே, ‘மெக்சிக்கோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் கட்டுவேன்’ என வாக்குறுதிகொடுத்தார்.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம், அமெரிகாவிற்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நீங்கும். மர்ம நபர்கள் அமெரிக்காவிற்குள் ஊடுருவுவது தடுக்கப்படும்.

எனவே ட்ரம்ப், சுவரை கட்டியே தீரவேண்டும் என்ற முழு முனைப்புடன் உள்ளார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், கவர்மெண்டிற்கு செல்லவேண்டிய நிதியை முடக்கிவிட்டார். இதனால் அமெரிக்க அரசுப்பணிகள் முடங்கிப்போனது.

“கவர்ன்மென்ட் ஷட் டவுன்” என இது அழைக்கப்படுகிறது. இதுவரை மூன்று வாரங்களாக முடங்கிவிட்டது.

இதற்கு முன்னர், 1995-ம் ஆண்டு 22 நாட்கள் முடங்கியதே அமெரிக்க வரலாற்றின் அதிகபட்ச கவர்மெண்ட் ஷாட் டவுன். ஆனால், ட்ரம்ப் அந்த ரெக்கார்டையும் முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

முழு அரசும் முடங்கவில்லை என்றாலும், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக பல இடங்களில் துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை.

பல அரசு ஊழியர்கள் #ShutdownStories என்ற ஹேஸ்டாக்கில் சோகக் கதையை ட்விட்டரில் எழுதி வருகின்றனர்.

ட்ரம்ப்பின் இறுதியான முடிவு என்ன?

காங்கிரஸ்காரர்களை மீறி செயல்பட தயராக உள்ளார். அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சுவரைக் கட்டியே தீருவேன் என உறுதியாக கூறியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் சந்திப்பிற்குப்பின் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுவர் கட்டும் திட்டம் நிறைவேறும்வரை அமெரிக்க அரசு ஊழியர்களின் நிலை திண்டாட்டமே!

3

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்: சந்திர கிரகணம்

0
சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன் (Super Blood Wolf Moon) சந்திர கிரகணம். ஓநாய் நிலவு என்றால் என்ன? சூப்பர் ப்ளட் ப்ளூ மூன் பார்த்திருப்போம். அதென்ன சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன். புதுசா இருக்கே என அனைவரும் ஆச்சரியப்படலாம். சூப்பர்மூன் (Super Moon) என்றால் என்ன? வழக்கமான பவுர்ணமி நிலவைவிட, 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் அதிவெளிச்சமாகவும் இருக்கும். இதற்குப் பெயரே சூப்பர் மூன். ப்ளட் மூன் (Blood Moon) என்றால் என்ன? பவுர்ணமியின் போது, பூமி முழுமையாக நிலவை சூரியனிடம் இருந்து மறைக்கும். அதாவது, சூரியனுக்கும் நிலாவிற்கு இடையே பூமி வரும். அதையே சந்திரகிரகணம் என்கிறோம். அந்நிகழ்வின்போது நிலவு, பூமிக்கு அருகில் வரும்போது, புவியின் மேற்பரப்பில் உள்ள ஒளி நிலவில் பிரதிபளிக்கும். சிவப்பு நிறத்தை மட்டும் நிலவு உறிஞ்சி சிவப்பாக மாறிவிடும். எனவே, அதை ப்ளட் மூன் எனக் கூறியுள்ளனர். ப்ளூ மூன் (Blue Moon)என்றால் என்ன? ஒரே மாதத்தில், இரண்டு பௌர்ணமி ஏற்பட்டால் அதற்கு புளூ மூன் என்று பெயர். ஓநாய் மூன் (Wolf Moon) என்றால் என்ன? ஓநாய் மூன் என்பது வருடத்தின் முதல் பௌர்ணமி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிகழும் பௌர்ணமி. அமெரிக்க நாடுகளில் மட்டுமே இப்படி அழைக்கப்படுவது வழக்கம். முதல் பௌர்ணமியின்போது ஓநாய்கள் சப்தம் விண்ணைப் பிளக்குமாம். வெறித்தனமாக நிலவு வெளிச்சத்தில் வேட்டையாடுமாம். எனவே, வருடத்தின் முதல் முழுநிலவை ஓநாய் நிலவு என்று அழைக்கின்றனர். சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன் எப்போது நிகழும்: ஜனவரி 21-ம் தேதி ஏற்பட உள்ளது. ஜனவரி மாதத்தில் கிரகணம் ஏற்பட உள்ளது. பூமிக்கு அருகில் வரும், நிலவு சிவப்பாக மாறும். ஆனால் ஒரு முறை மட்டுமே நிகழும். எனவே, இதை சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சூப்பர் மூனை பார்க்கலாமா? இந்த முறை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவில் மட்டுமே முழுமையாக தெரியும். கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பகுதி நேர நிலவைப்பார்க்கலாம். இந்த சூப்பர் நிலவுக்குப் பிறகு, இரண்டு வருடத்திற்கு சந்திர கிரகணம் கிடையாது. அடுத்து 2021-லேயே சந்திர கிரகணம் ஏற்படுமாம். வெள்ளி, வியாழனின் காட்சி சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூனுக்கு அடுத்தநாள், ஜனவரி 22-ம் தேதி பொழுது விடியும் நேரத்தில், வெள்ளியும் வியாழனும் வெறும் கண்களுக்கு நன்றாக தெரியும். 2 டிகிரி இடைவெளியில் மிகவும் அருகருகே காட்சியளிக்க உள்ளது.

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன் (Super Blood Wolf Moon) சந்திர கிரகணம். ஓநாய் நிலவு என்றால் என்ன?

சூப்பர் ப்ளட் ப்ளூ மூன் பார்த்திருப்போம். அதென்ன சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன். புதுசா இருக்கே என அனைவரும் ஆச்சரியப்படலாம்.

சூப்பர்மூன் (Super Moon) என்றால் என்ன?

வழக்கமான பவுர்ணமி நிலவைவிட, 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் அதிவெளிச்சமாகவும் இருக்கும். இதற்குப் பெயரே சூப்பர் மூன்.

ப்ளட் மூன் (Blood Moon) என்றால் என்ன?

பவுர்ணமியின் போது, பூமி முழுமையாக நிலவை சூரியனிடம் இருந்து மறைக்கும். அதாவது, சூரியனுக்கும் நிலாவிற்கு இடையே பூமி வரும். அதையே சந்திரகிரகணம் என்கிறோம்.

அந்நிகழ்வின்போது நிலவு, பூமிக்கு அருகில் வரும்போது, புவியின் மேற்பரப்பில் உள்ள ஒளி நிலவில் பிரதிபளிக்கும். சிவப்பு நிறத்தை மட்டும் நிலவு உறிஞ்சி சிவப்பாக மாறிவிடும்.

எனவே, அதை ப்ளட் மூன் எனக் கூறுகின்றனர்.

ப்ளூ மூன் (Blue Moon)என்றால் என்ன?

ஒரே மாதத்தில், இரண்டு பௌர்ணமி ஏற்பட்டால் அதற்கு புளூ மூன் என்று பெயர்.

ஓநாய் மூன் (Wolf Moon) என்றால் என்ன?

ஓநாய் மூன் என்பது வருடத்தின் முதல் பௌர்ணமி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிகழும் பௌர்ணமி. அமெரிக்க நாடுகளில் மட்டுமே இப்படி அழைக்கப்படுவது வழக்கம்.

முதல் பௌர்ணமியின்போது ஓநாய்கள் சப்தம் விண்ணைப் பிளக்குமாம். வெறித்தனமாக நிலவு வெளிச்சத்தில் வேட்டையாடுமாம்.

எனவே, வருடத்தின் முதல் முழுநிலவை ஓநாய் நிலவு என்று அழைக்கின்றனர்.

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன் எப்போது நிகழும்?

ஜனவரி 21-ம் தேதி ஏற்பட உள்ளது. ஜனவரி மாதத்தில் கிரகணம் ஏற்பட உள்ளது. பூமிக்கு அருகில் வரும், நிலவு சிவப்பாக மாறும். ஆனால் ஒரு முறை மட்டுமே நிகழும்.

எனவே, இது ‘சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்’ என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் சூப்பர் மூனை பார்க்கலாமா?

இந்த முறை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்க நாடுகளில் மட்டுமே முழுமையாக தெரியும். கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பகுதி நேர நிலவைப்பார்க்கலாம்.

இந்த சூப்பர் நிலவுக்குப் பிறகு, இரண்டு வருடத்திற்கு சந்திர கிரகணம் கிடையாது. அடுத்து 2021-லேயே சந்திர கிரகணம் ஏற்படுமாம்.

வெள்ளி, வியாழனின் காட்சி

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூனுக்கு அடுத்தநாள், ஜனவரி 22-ம் தேதி பொழுது விடியும் நேரத்தில், வெள்ளியும் வியாழனும் வெறும் கண்களுக்கு நன்றாக தெரியும்.

2 டிகிரி இடைவெளியில் மிகவும் அருகருகே காட்சியளிக்க உள்ளது.

3

பூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?

0
பூமியைப் படைத்தவர்

பூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?

பூமியின் மிகப்பரந்த நிலப்பரப்பில், பல்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நமக்கு, பூமி மிகப்பெரிய பரப்பளவு. ஆனால், அண்டவெளியில் இருந்து பூமியைப்பார்த்தல் எறும்பைவிட பலமடங்கு சிறியதாக மாறிவிடும்.

இப்படிப்பட்ட பூமியைப் படைத்தது யார்? ஓவ்வொரு மதமும், ஒரு கடவுள் பெயரைச் சொல்லி பூமியைப் படைத்தவர் எனக் கூறுகின்றது.

எனவே அதற்குள் நாம் சொல்லவேண்டாம். அறிவியலின்படி பூமி எப்படி உருவானது எனப்பார்க்கலாம்.

தனிமங்களும் உயிர்களும்:

ஒரு மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன், நைட்ரஜன், எலும்பிற்க்கு தேவையான கால்சியம், ரத்ததிற்க்கு தேவையான இரும்புச்சத்து ஆகியவை அவசியம்.

கூடவே கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற தனிமங்களும்; உப்பில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களும் தேவை.

இத்தனிமங்களின்றி ஒரு திடமான, முழுமையான மனிதன் உருவாகமுடியாது. மேலும் தங்கம், வெள்ளி மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு தனிமங்களும் நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

பீரியாடிக் அட்டவணை (Periodic Table):

மேலே உள்ள அனைத்து தனிமங்களையும், வரிசைப்படுத்தி உருவாக்கப்பட்டதே பீரியாடிக் அட்டவணை.

பீரியாடிக் தனிமங்களின் குணங்களை ஆராய்ந்து, இவைதான் மனிதன் வாழ இனிதே உதவுகின்றன எனக் கண்டறியப்பட்டது.

இத்தனிமங்கள் பூமிக்கு எப்படி வந்தன? என்று ஆராய்ந்தபோதே சில உண்மைகள் புலப்பட்டது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் பட்டுள்ளது.

உலகம் உருவான வரலாறு:

சுமார், 1370 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. அப்போதைய பால்வெளி அண்டம் ஒரு பலூனைப்போல் விரிவடைந்து காணப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஹைட்ரஜன் 75 சதவீதமும், ஹீலியம் 25 சதவீதமும் மட்டுமே இருந்துள்ளது. இப்போதிருந்த எந்தக்கோள்களும், நட்சத்திரங்களும் அப்பொழுது தோன்றவில்லை.

நட்சத்திரம் தோன்றியது எப்படி?

ஹைட்ரஜனும் ஹீலியமும் இணைந்தே நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது. ஒருநாளே ஒருவருடமோ அல்ல, பல கோடிக்கணக்கான வருடங்களாக ஏற்பட்ட மாற்றம்.

ஹைட்ரஜனின் ஈர்ப்பு விசை:

ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்பு விசையினால், ஒன்றுடன் ஒன்று கலந்து முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவானது. இதுவே இந்த உலகின் மூதாதையர் கூட்டம்.

பலமடங்கு வெப்பத்தைக்கொண்ட இதில் ஹைட்ரஜன், ஹீலியம் இணையும்போது தோன்றிய ஆற்றலே ஒளி.

இவ்வாறு தொடர்ச்சியாக அணுச்சேர்க்கைகள் நடந்துள்ளது. இரண்டு ஹீலியம் இணைந்து ஒரு பெரிலியம் உருவாகியுள்ளது.

பெரிலியம் உடன் ஹீலியம் சேர்ந்து கார்பன் அணு உருவாகியுள்ளது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிர்மூச்சான ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளன.

இரண்டு கார்பன் இணைந்து ஒரு மெக்னீசியம் அணு உருவாகியுள்ளது. இப்படி பல்வேறு அணுச்சேர்க்கைகள் நடந்து பல தனிமங்கள் படிப்படியாக உருவாகியுள்ளன.

சூப்பர் நோவா (super nova):

ஓவ்வொரு நட்சத்திரங்களும், அதன் ஆயுட்காலம் முடிந்ததும் வெடித்துச் சிதறும். இதற்கு பெயரே சூப்பர்நோவா. சூப்பர்நோவாவை கண்களால் பார்த்தால், அவ்வளவு ரம்யமாக இருக்குமாம்.

முதன்முதலில் தோன்றிய மூதாதையர் நட்சத்திரங்கள், தன்னுடைய ஆயுட்காலம் முடிந்தபின் வெடித்துச் சிதறுகின்றது.

அப்பொழுது, அதிலிருந்த அனைத்துத் தனிமங்களும், ஒரு வாயுக்கூட்டம்போல் பரவி ஹைட்ரஜன் வாய்வுடன் கலந்துள்ளது.

இந்த சூப்பர்நோவா நிகழ்வின்போதே, யுரேனியம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற தனிமங்கள் உருவாகியனவாம்.

இப்படி பறந்து கிடக்கும் வாயுக்கூட்டத்திற்க்கு நெபுல்லா என்று பெயர்.

சூரியன் மற்றும் கோள்கள் உருவானது எப்படி?

ஹைட்ரஜன் தன்னுடைய ஈர்ப்பு விசையால், அதனுடைய அணுக்களை ஒவ்வொன்றாக இணைத்துப் புதிய நட்சத்திரத்தை உருவாக்கும்.

அப்படி உருவானதே சூரியன். சூரியனைச் சுற்றி தூசுகளும் பறைகளுமே முதலில் உருவாகியுள்ளன.

அந்தப் பாறைகள், சூரியனின் ஈர்ப்பு விசையால் அதைச்சுற்றி வரும்போது, ஒன்றுடன் ஒன்று பிணைந்து, மோதி “கோள்களாக” மாறியுள்ளன.

இப்பொழுதும் இந்தப் பாறை இணைப்பு நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. விண்கற்கள் எறிகல்லாக மாறி பூமியில் விழும் நிகழ்வே அது.

பல்லாயிரம் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, பிணைந்தால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்துபாருங்கள். அப்படி உருவானதே நம் பூமி.

3

பபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை!

0
பபுக் புயல்

பபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை! தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை; அந்தமான், மலேசியாவின் கதி?

பபுக் புயல் (Pabuk Cyclone) என்றால் என்ன?

Pabuk Meaning

ບຶກ (Lao)   –  giant, catfish (English) – பெரிய கெளுத்தி மீன்
ປາດຸກ (Lao) – catfish (English) – கெளுத்தி மீன்

பபுக் புயல், மேற்குப் பசிபிக்பெருங்கடலில் உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு பெயர் வைத்த நாடு, லாவோஸ். லாவோ மொழியில் பபுக் என்றால் பெரிய கெளுத்தி மீன் என்று அர்த்தம்.

பெயருக்கு ஏற்றார்போலே புயலின் சேட்டையும் அமைந்துள்ளது. கெளுத்தி மீன் குத்தினால் பாம்பு கொத்தியதைப்போல் இருக்கும், ஆனால் விஷம் இருக்காது. அதே போன்றே தாய்லாந்தின் ஒரு பகுதியைக் கலக்கி வருகின்றது.

பபுக் புயலால் பாதிக்கப்படும் நாடுகள்

தற்பொழுது தாய்லாந்து கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கனமழை பெய்துவருகின்றது.

இப்புயல் இன்று, வடக்கு மலேசியப் பகுதியைக் கடக்க உள்ளது. இருப்பினும் இப்புயலால் பெரிய ஆபத்து மலேசியாவிற்கு இருக்காது.

அங்கிருந்து 45 மைல் வேகத்தில் அந்தமானைச் சென்றடையும். 6-ம் தேதி அந்தமானை கடக்கும். இன்று இரவு மலேசியா எவ்வளவு பாதிக்கப்பட உள்ளது என்பதைப் பொறுத்தே அந்தமானின் பதிப்புகளை கணிக்க முடியும்.

தமிழகத்தை தாக்குமா?

இரண்டு நாட்கள் முன்புவரை இப்புயல் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பபுக்புயல் அந்தமான் தீவுடன் வலுவிழந்த நிலையில் பர்மா, தாய்லாந்து பகுதியை நோக்கிச்செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

இருப்பினும், தமிழக மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தமான் கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

3

சக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?

0
சக்தியின் கற்பழிப்பும்

சக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலைக்குபின், அனைவருக்கும் பரிட்சியமானவராக மாறினார் கௌசல்யா. கணவரின் கொலைக்குக் காரணமான, பெற்றோர்களைத் தூக்குமேடை ஏற்றினார்..

கொலைக்குக் கொலையே தீர்வாகாது எனினும் இதுபோன்ற தீர்ப்பு, வருங்காலத்தில் ஆணவக்கொலைகளைக் கட்டுப்படுத்தும் என பாராட்டப்பட்டது.

அதன்பின், அறக்கட்டளை பெண்ணியம் என தன்னுடைய பாதையை சமூக சீர்திருத்த பாதையாக மாற்றிக்கொண்டார் கௌசல்யா.

அப்பாதையில் சென்ற கௌசல்யா, சக்தி என்ற காமுகனின் வலையில் வீழ்ந்தார்.

சக்தி ஏமாற்றிய பெண்கள்

நிமிர் கலையகத்தில், கலை பயிலவரும் பெண்களை மடக்குவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார் சக்தி. அதன் தலைமை ஆசானே இவர் தான்.

நிமிர் கலையகத்தில் இருக்கும் பலபெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதில் ஒரு பெண்ணை கருவுறவைத்து கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார்.

வெளிநாட்டுப்பெண்ணை, ஸ்கைப் வீடியோகால் மூலம் காதல் வலையில் விழவைத்துள்ளார். பல திருநங்கைகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

கௌசல்யாவின் காதல் மயக்கம்

கௌசல்யாவும், சக்தியின் வலையில் வீழ்ந்தார். இதைத் தெரிந்துகொண்ட திருநங்கை ஒருவர், சக்தியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை கௌசல்யாவிற்கு அனுப்பியுள்ளார்.

சக்தியின் அனைத்து லீலைகளையும் தெரிந்துகொண்ட பின்பு… கௌசல்யா, திருங்கையிடம் சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

பதிவுத் திருமணம்

நான் ஏற்கனவே சக்தியைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டேன். எனவே, இந்த வீடியோவை யாரிடமும் காட்டவேண்டாம், இவ்விசயத்தையும் யாரிடமும் சொல்லவேண்டாம் எனக்கூறியுள்ளார்.

ஆனால், கௌசல்யா பதிவுத்திருமணம் செய்துகொண்டதாகக் கூறியது பொய். சக்தியைக் காப்பாற்றவே அப்படி கூறியுள்ளார்.

இரண்டாவது முறையும் காதலித்தவரை கரம்பிடிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்.

கௌசல்யாவின் தவறான முடிவால், காமுகன் கையில் சிக்கியதுடன் அவப்பெயரையும் வாங்கிக்கொண்டார்.

சக்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை

இத்தனை பெண்களை கற்பழித்த நபருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை “மைனர் குஞ்சு” காமெடியை நினைவு படுத்துகிறது.

இயக்கத்தைவிட்டு வெளியேற வேண்டுமாம். மூன்று மாதம் பறை இசைக்கக் கூடாதாம். மூன்று லட்சம் அபராதமாம்.

இந்தத் தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால், மூன்று மாதம் கழித்து மேல்முறையீடு செய்துகொள்ளலாமாம்.

இதற்குப் பெயர் தீர்ப்பா?

ஆணவப்படுகொலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்த கௌசல்யா, வேறுஒருவரை மீண்டும் மணக்கிறார். அதில் தவறில்லை.

ஆனால், அவன் ஒரு காமுகன் எனத்தெரிந்தும் அவன் செய்த தவறுகளை மறைத்தும் திருமணம் செய்துகொண்டுள்ளார்..

இவர் எப்படி சமூக சீர்திருத்தவாதியாவார்?

கௌசல்யா எடுத்த தவறான முடிவுகளால் சங்கர் இறந்தார். அடுத்து அவருடைய பெற்றோர்கள் இறந்தனர்.

தற்பொழுது, அவரே அவரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு காமுகனிடம் சிக்கியுள்ளார்.

பெற்றோருக்கு ஒரு நியாயம்? சக்திக்கு ஒரு நியாயமா?

நியமாகப் பார்த்தால், சங்கர் செய்த காரியங்களுக்கு அவரை வெறுத்து ஒதிக்கி இருக்கவேண்டும். இல்லையேல், நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கவேண்டும்.

கணவனைக் கொன்றவர்கள் எனப் பெற்றோரையே தூக்குமேடையில் ஏற்றியவர், சக்தியின் வீடியோவை மறைத்துவிடச் சொன்னதின் காரணம் என்ன?

இது தான் பகுத்தறிவோ?

இந்த சம்பவங்கள் அனைத்துமே, கௌசல்யா ஒரு சுயமுடிவு எடுக்கத் தெரியாத பெண் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அவரை இயக்கியவர்களே, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனரா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

காரணம், அன்று திருநங்கை விசயத்தை முகநூலில் அம்பலப்படுத்திய நபரை ஆர்.எஸ்.எஸ். என முத்திரை குத்தினர்.

இன்று அவர்களே, சக்தி தவறு செய்தது உண்மை எனக் குற்றத்தை உறுதிசெய்து தண்டனையும் வழங்கியுள்ளனர்.

இவர்கள் இயக்கத்தில், முன்பணம் செலுத்திவிட்டு “மைனர் குஞ்சு” பாணியில் ரேப் செய்து கொள்ளலாமா?

சாதியை ஒழிக்க நினைக்காமல், அதைவைத்து அரசியல் செய்பவர்களின் கையில் சிக்கினால் என்ன ஆவார்கள்? என்பதற்கு கெளசல்யாவே ஒரு உதாரணம்…

எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய கிளிக்செய்யவும் join

3

இரட்டைப்புயல்: இந்தியப் பழங்குடியினர் கதி?

0
இரட்டைப்புயல்

இரட்டைப்புயல்: இந்தியப் பழங்குடியினர் கதி என்ன?

பிஜி தீவு

பிஜி என்றொரு தீவை அதிகப்படியான இந்தியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தீவு பசிபிப் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இத்தீவு உள்ளது.

19 நூற்றாண்டில் பிரிட்டிஸ் அரசு, இந்தியர்களை அடிமைகளாக அழைத்துசென்றது. இந்த தீவில் உள்ள 40 சவீத மக்கள் இந்தியப் பழங்குடியின மக்கள்.

பிஜி தீவின் மொழி

ஹிந்தி பேசுவர் அதிகம். தமிழ், மலையாளம், தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை குறைவே. பிஜி தீவின் ஆட்சிமொழி ஆங்கிலம், ஹிந்தி, பிஜியன்.

பிசி இன மக்களே, அத்தீவின் பூர்வகுடி மக்கள். 19 நூற்றாண்டு, பிரிட்டிஸ் காலணி அத்தீவை கைப்பற்றியது பின்பே இந்தியர்கள் அங்கு குடிபெயர்ந்தனர்.

மோனா புயல் (Mona Cyclone)

தற்பொழுது, இத்தீவை மோனா புயல் தாக்கவுள்ளது. 130 கிலோமீட்டர் வேகத்தில் பிஜி தீவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. 6-ம் தேதி இப்புயல் பிஜி தீவை கடக்கவுள்ளது.

பிஜி தீவின் பரப்பளவைவிட, பலமடங்கு பெரிய புயலாக உருவெடுத்துள்ளது.

மோனா புயல் அர்த்தம் (Mona Cyclone Meaning)

மோனா என்ற வார்த்தை ஹிந்தியில் இருந்து உருவாகியுள்ளது. கிளறி, அமைதி என இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

பெயருக்கு ஏற்றார் போல், பிஜி தீவைக் கிளைக்குமா அல்லது அமைதியாக சென்றுவிடுமா எனப்பொறுத்திருந்து பார்க்கலாம்.

பென்னி புயல் (Cyclone Penny)

பென்னி புயல், ஆஸ்திரேலியாவைத் தாக்க உள்ளது. பென்னி என்றால் செம்பு நாணயம் (broonze coin) என்று பொருள். ஒலிம்பிக் போட்டியின்போது பென்னி என்ற ஆஸ்திரேலியா நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த நாணயத்தின் பெயரையே புயலுக்குச் சூட்டியுள்ளனர். மோனா மற்றும் பென்னி புயல்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கெனங்கா மற்றும் சிலிடா புயல் (Kenanka and Cilida)

இதேபோல், கடந்த மாதம் மடகாஸ்கர் அருகில் உள்ள மொரிசியஸ் தீவில், கெனங்கா மற்றும் சிலிடா என்ற இரு புயல்கள் உருவாகியது.

மிகவும் பலம்வாய்ந்த சிலிடா புயல், மொரிசியஸ் தீவை ஒட்டிச் சென்றதால், அத்தீவு ஆபத்தின் நூலிழையில் தப்பியது.

மொரிசியஸ் தீவின் ஆட்சி மொழி தமிழ். இங்கும் ஏராளமான தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜான் சீனாவ என்னடா பண்ணி வச்சிருக்க!

0
ஜான் சீனாவ

ஜான் சீனாவ என்னடா பண்ணி வச்சிருக்க!

WWE என்றாலே 90’s கிட்ஸ் குதுகலமாய் பார்ப்பது உண்டு. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை பே… என வாய்பிளந்து பார்த்த வரலாறு கூட உண்டு.

காரணம், நம்ம ஊரு குழாயடி சண்டைபோல், பெண்கள் வளையத்துக்குள் சண்டை இடுவார்கள். கொஞ்சம் ஆபாசம் வேறு அதிலடங்கும்.

இவை எல்லாமே சொல்லிவைத்து செய்வது என பல வருடங்களுக்கு பின்பே தெரிய வந்தது. WWF என்பது WWE என மாறியது முதல், உலக அளவில் ரசிகர்கள் வெகுவாக குறைய துவங்கிவிட்டனர்.

அண்டர்டேக்கர் செத்துசெத்துப் பிழைப்பதும், கெய்ன் கொடூர முகத்தை காட்டி மிரட்டுவதும், ரேண்டி ஆர்டன் சைக்கோ தனமாக அடிப்பது. ட்ரிப்பில் ஹெச் சுத்தியலுடன் வலம்வருவது என ஒவ்வொருவரும் ஒரு சிறப்புடன் வலம்வருவர்.

ஆனால் சமீபகாலமாக அந்த சுவாரஸ்யங்கள் ரஸ்லிங் போட்டியில் குறைந்துவிட்டன.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜான் சீனா, WWE வளையத்திற்குள் தோன்றினார். அவருடைய ரசிகர்களே அதை விரும்பவில்லை.

மொட்டை வெட்டுத் தலையுடன், you can’t see me என்ற வாசகத்துடன் கூடிய டீ-சர்ட்டுடன் அசத்தலாக வலம்வருவார்.

ஆனால், நேற்று அவர் தோன்றியவிதமோ வேறு. You Can’t Stop Me என்ற டீ-சர்ட்டுடன் மொக்கை ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்டார்.

பதினாறு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜான்சீனாவை, அவருடைய ரசிகர்களே ரசிக்கவில்லை. அவர் இப்படி தோன்றியதற்கு தோன்றாமலே இருந்திருக்கலாம்.

இதற்கு ஜான்சீனா பொறுப்பாக முடியாது. காரணம், இவை எல்லாமே ஒரு செட்டப்தான். இவர்கள் வீரர்கள் எனக்கூறிக்கொள்வதில்லை. WWE STAR அல்லது WWE ACTOR என்றுதான் கூறுவார்கள்.

அவர்களுக்கு அது ஒரு நாடக மேடை. ஸ்கிரிப்ட்டில் என்ன உள்ளதோ அதைத்தான் மேடையில் செய்வார்கள். அதனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை…

ஜான் சீனா மேடையில் பேசியதாவது:-

ஹாலிவுட் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், ரஸ்லிங் போட்டிகளை தொடர்ந்து கவனித்து கொண்டே இருப்பேன்.

தன்னுடைய ஹேர்ஸ்டைலை அவரே காலாய்த்து ஜோக் ஒன்றைச் சொன்னார். முன்னாள் காதலி நிக்கிபெல்லா உடன் நடந்த பிரிவை பற்றிப் பேசினார்.

மேலும், புத்தாண்டு என்பது சிறப்பான ஒன்று. நம்முடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கலாம். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடலாம் எனக் கூறினார்.

பெக்கி லிஞ்ச் கூறியதாவது:-

இந்த வருடத்தில், உன்னை விட்டுச்செல்லும் முதல் பெண், நிக்கி பெல்லா அல்ல. பத்தோடு பதினொன்னு, அத்தோடு அவளும் ஒன்னு என வேடிக்கையாகக் கூறினார்.

ஜான் சீனா மற்றும் பெக்கி லிஞ்ச் ( WWE diva) சேர்ந்து டேக்டீம் போட்டியில் அல்மஸ் மற்றும் செலினாவை எதிர்கொள்ள உள்ளனர்.

ஜான் சீனா ரீ என்ட்ரி குறித்து ரசிகர்களின் டிவிட்டர் கருத்து

  • நீ எல்லாம் வரலேனு இப்போ யார் அழுதா ( who cares).
  • வீட்டுக்கு போ. ஆகவேண்டிய வேலைய பாரு ( go home stay there). உன்னை விட சிறந்த இளமையான வீரர்கள் இப்போ வந்து விட்டார்கள்.

கொஞ்சம் ரஜினி மகளின் கல்யாண வீடியோவையும் பாத்துட்டு போங்களேன்.. காமெடி கலாட்டா…

3

சபரிமலைக்குள் பெண்கள்; போலீஸ் துப்பாக்கி சூடு

0
சபரிமலைக்குள் பெண்கள்

சபரிமலைக்குள் பெண்கள்; போலீஸ் துப்பாக்கி சூடு

ஆங்கில வருடப் பிறப்பான நேற்று, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பெண்கள், “சுவர் போராட்டம்” நடத்தினர். மொத்தம் 620 கிலோமீட்டர் தூரம், மனிதச்சங்கிலி போல் பெண்கள் வரிசைக்கட்டி நின்றனர்.

இப்போராட்டத்திற்கும், சபரிமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்; பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியுள்ளனர் எனவும் கேரள அரசு தெரிவித்தது.

ஆனால், இப்போராட்டம் முழுக்கமுழுக்க கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடைபெற்றது.

காசர்கோடு பகுதியில், போராட்டம் நடைபெற்ற இடத்தில், ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபட்டுள்ளது. முதலில், ரயில் தண்டவாளம் அருகிலிருந்த காய்ந்த புல்லிற்குத் தீவைத்துள்ளனர்.

பின்னர், பெண்கள் சுவரை நோக்கி கற்களையும் பாட்டில்களையும் வீசியுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே நீண்டநேரம் போராட்டம் நீடித்துள்ளது. இதனால், வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார், 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், 4 கம்யூனிஸ்ட் பெண்கள், ஒரு ஆர்.எஸ்.எஸ். நபர் கயமடைந்துள்ளார். கயமடைந்தவர்கள், மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இப்பரபரப்பு அடங்குவதற்குள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், இரண்டு பெண்கள் உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவர்கள் சிலதினங்களுக்குமுன், ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயற்சித்தவர்கள். ஐய்யப்ப பக்தர்கள் விரட்டியதால், அப்போது கோவிலுக்குள் நுழையமுடியவில்லை.

இன்று அதிகாலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. நுழைவாயில் வழியாக, இருமுடியுடன் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசிக்கவில்லை.

இத்தொடர் சம்பவத்தால், கேரளா முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.

எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3

விஸ்வாசம் ட்ரைலர் வாங்கியது போலி லைக்குகளா?

0
விஸ்வாசம் ட்ரைலர்

விஸ்வாசம் ட்ரைலர் வாங்கியது போலி லைக்குகளா?

யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் இதெல்லாம் அமெரிக்ககாரன் ஓனரா இருந்தாலும், அத எப்படி நமக்கு, சாதகமா பயன்படுத்தணும்னு நம்ம ஆளுங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

அஜித், விஜய் படத்தோட ட்ரைலர் மற்றும் டீசர் வெளியானதும், இருவருடைய ரசிகர்களும் செய்ற வேலைய நினைச்ச நமக்கே பிரமிப்பா இருக்கு.

யாரோட டீசர் அதிக லைக் வாங்குது, வியூஸ் வருதுங்கிற போட்டிதான் அது.

ஒரு வீடியோவ, திரும்பத்திரும்ப பாத்தா வியூஸ் அதிகமாகும். ஆனா ஒரு ஐடி மூலமா ஒரு லைக் மட்டும்தான போட முடியும்?

பின்ன எப்புடி அசால்டா, 1M (பத்து லட்சம்) லைக்ஸ் வருது.

உலக அளவுல பாப்புலரான ஹாலிவுட் படங்கள், ஹீரோக்களுக்குகூட 1M லைக்ஸ் வர்றது இல்ல.

எப்டி இவங்க டீசருக்கு மட்டும் இவ்ளோ லைக்ஸ் வருது. அவ்வளவு வெறித்தனமான பேன்ஸ் நடிகர் அஜித்துக்கும் விஜய்க்கும் உண்டா?

வீடியோவ பாக்குற எல்லாருமே லைக் பண்ணுறது கிடையாது. ஆனா லைக்ஸ் மட்டும் ஜல்லுன்னு வந்திடும்…

இங்கதான், இவங்களோட மூளை வேலை செய்யுது. யூடியூப்பில் உள்ள ஒரு வசதியை தங்களுக்குச் சாதகமா பயன்படுத்தி, லைக்ஸ் வர வக்கிறாங்க.

ஒரு ஈமெயில் ஐ.டி. மூலமா ஒரு யூடியூப் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம். ஆனா, ஒரு இமெயில் ஐ.டி. வச்சி… 50 பிரண்ட் யூடிப் சேனல் ஓபன் பண்ண முடியும்.

யூடியூப் அக்கவுண்ட் பர்சனல் யூஸ். சேனல் அக்கவுண்ட் பிசினஸ் யூஸ்.

இந்த சேனல் அக்கவுண்ட, ஐ.டி.யாவும் யூஸ் பண்ணலாம். சேனலாவும் யூஸ் பண்ணலாம்.

50 சேனல் கிரியேட் பண்ணி, அத வச்சி எந்த வீடியோவ லைக் பண்ணணுமோ அந்த வீடியோவ தனித்தனியா 50 லைக்ஸ் வர பண்ணலாம்.

ஒரு நபர் ஒரு ஈமெயில் ஐ.டி. மூலமா 50 சேனல் ஓபன் பண்ணலாம். அதே 10 ஈமெயில் ஐ.டி. மூலமா 500  சேனல் ஓபன் பண்ணி 500 லைக் பண்ண முடியும்.

அதே, 5000 பேர் 10 ஈமெயில் ஐ.டி. வச்சி 500 லைக்ஸ் பண்ணுன  2.5 மில்லியன்ஸ் லைக் கூட ஈசியா வாங்கிட முடியும்.

இப்போ புரியுதா எப்டி லைக்ஸ் வருதுன்னு.

ஆனா, இவங்கள விட ஷாருக்கான் ரசிகர்கள் ஒருபடி மேல போயிட்டாங்க. ஜீரோ படத்தோட ட்ரைலருக்கு 2M லைக்ஸ் வர வச்சிட்டாங்க…

மார்வல் தயாரிக்கும் படங்களோட ட்ரைலர் மட்டுமே 3 மில்லியன்ஸ் லைக்ஸ் வாங்குது. அதுக்கு அப்புறம் நம்ம நாட்டு ஹீரோக்கள் தான் வாங்குறாங்க.

அடுத்தமுறை மார்வல பீட் பண்ண ட்ரை பண்ணுங்க அஜித், விஜய் ரசிகர்களே…

கெட்ட வார்த்தையில திட்டுறதுக்கு பதிலா இந்த மாதிரி போட்டிகள் எவ்வளவோ மேல்..

இதே மூளைய, வேற சில விசயங்களுக்கும் பயன்படுத்துங்க… இந்தியாவை வல்லரசாக மாத்த என்ன பண்ண முடியும்னு யோசிங்க….

எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

3