Home Blog Page 327

Moive Review Maari 2- பாகம் மூணையும் நா பாக்கணும்!

0
Moive Review Maari 2

Moive Review Maari 2 – மாரி 2 திரைவிமர்சனம் | பாகம் மூணையும் நா பாக்கணும்!

2018-ல் இறுதியாக பார்த்த படம் மாரி-2. ரிவியூ பண்ணுன அத்தனை பேரும், படத்தைக் கழுவிக்கழுவி ஊற்றினர். அதனால இந்தப் படத்துக்கு போகவே கூடாதுன்னு முடிவு பண்ணினோம்.

ஆனா விதி வலியது. நேத்து புல்லா பவர்கட். இந்தப் படத்துல தனுஷ், சாய்பல்லவி லவ் சீன் நல்ல இருக்கும். அப்புடின்னு ‘புளு சட்ட‘ சொன்னத நம்பி போனோம்.

பவர்கட் வேற, வீட்டுல சும்மா இருந்து சாவுறதுக்கு பதிலா; மாரி 2 படம் பாத்துட்டே சாவலாம்னு போயிட்டோம்.

அங்க போன, நல்ல இருந்த பிரேமம் பொண்ண, பிச்சக்காரி பொண்ணா மாத்திட்டானுவ… டே…. தகப்பா இந்த லவ்வு தான் உனக்கு நல்லா இருக்கா..

இது உனக்கே நியாயமா.. உன்ன நம்பி போனதுக்கு எவ்ளோ சிறப்பா செய்ய முடியுமோ செஞ்சிட்ட (புளு சட்ட)…

அப்புறம், மண்ட நெறைய கொண்ட வச்சிட்டு ஒரு வில்லன், படத்துல அவா ஒருத்..தாள்.. தான்…. பாக்க அழகா இருந்தா…. அவாளையும்… இடைவேளைக்கு அப்புறம் மொட்டையடிச்சி விட்டுட்டா…

கனா படம், தோல்வியால் துவண்டவனுக்கு 10 யானை பலம் குடுக்கும்னு சொன்னோம். அதே மாரி, மாரி-2 படம் பாத்துட்டு உயிரோட வந்துட்டா; வாழ்கையில எவ்ளோ தோல்வி வந்தாலும் தாங்குற சக்தி கிடைச்சிடும்.

மாரி படம் எவாலெல்லாம் நல்லா இல்லன்னு சொன்னாளோ; அவா வாயால, நல்ல இருக்குனு சொல்ல வப்போமுனு, மாரி 2 எடுத்து வச்சிருக்கா…

மாரி-2 நல்ல இல்லன்னு சொன்னா… மாரி-3 எடுத்து அதவிட மாரி-2 எவ்வளவோ மேல்னு சொல்ல வச்சிடுவாபோல…

எப்பா தனுசு, மாரி பட வெற்றிகாக பாலாஜி மோகனுக்கு தங்க சங்கிலி பண்ணி போட்ட.  மாரி 2-வுக்கு என்ன பிளாட்டினம் ஜெயினா…?

நீங்க கண்டிப்பா மாரி-3 எடுக்கணும். அதையும் நா பாக்கணும். அதுக்கு பின்ன, எவ்ளோ பெரிய மொக்கை படமா இருந்தாலும், அதப்பாக்குற சக்தி எனக்கு கிடைச்சிடும்.

மொத்தத்தில், 2018-ன் ***** மாரி படம்….

3

Movie Review Adanga Maru – அடங்கமறு திரைவிமர்சனம்

0
Movie Review Adanga Maru

Movie Review Adanga Maru – அடங்கமறு திரைவிமர்சனம்

அடங்கமறு வழக்கமான தமிழ்சினிமா படம். அதேவேளை, வழக்கமான ‘ஜெயம்ரவி’ படமும் கூட.

ஜெயம்ரவியின் சமூக அக்கறை, போலீஸ், துப்பறியும் திறன், விசித்திர தண்டனை, டைட்டில், காதல், சென்டிமென்ட் அனைத்தும் அப்படியே இந்தப் படத்திலும் உள்ளது.

சமீப காலமாக, புதிய இயக்குனர்களின் முதற்படம், டெக்னாலஜி விசயங்களை முன்வைத்தே எடுக்கப்படுகின்றன.

கார்த்திக் தங்கவேலின் முதல் படம் அடங்கமறு. இந்தப் படத்திலும் டெக்னாலஜியை முன்னிலைப்படுத்தியே திரைக்கதை அமைத்துள்ளார்.

டெக்னாலஜி, ஹாக்கிங் படங்கள் நிறையவே பார்த்துவிட்டதால், பெரிய பிரமிப்பு ஒன்றும் இல்லை. அதேவேளை எந்த இடத்திலும் தொய்வு இல்லை.

படம், அதிவேகமாகவோ குறைவாகவோ இல்லாமல் மிதமான வேகத்தில் ஆரம்பித்து, அதே வேகத்திலேயே முடிந்துவிடுகின்றது.

உயர் அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர்கள்  யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு அடங்கமறு. கோர்ட் மூலமே, தனி ஒருவனாகவோ எப்படியாயினும் தண்டனை வழங்கு.

இதுதான் படத்தின் ஒன்லைன், முழுலைன், முழுக்கதை, முன்னுரை மற்றும் முடிவுரை அனைத்துமே.

காதலுக்கும், கிளாமருக்கும் ராஷி கண்ணா. உண்மையான காதலுக்கு கில்மா அவசியமாம். இது புதுரக ஆட்டமாவுல இருக்கு….

கில்மா வேணும்னு, படம் பார்க்க வந்த ஜோடிகளை, வலுகட்டயமாக உசுப்பேற்றி விடுகிறார் ஜெயம் ரவி.

டைட்டானிக் காட்சியை மறைப்பது, அத நாலு டைம் பாத்துட்டேன்னு சின்ன பையன் சொல்லுறதும், எதார்த்த உண்மையாகிப்போனது. 2k கிட்ஸ் ராக்ஸ்…

அத்தனை கதாப்பாத்திரங்கள் இருந்தும் ஜெயம்ரவி மட்டுமே, படம் முழுவதிலும் தெரிகிறார்.

வரம்பு மீறாமல், இஷ்டத்திற்கு கதை எழுதாமல், முடிந்த அளவு லாஜிக் ஓட்டைகளைக் குறைத்து ஒரு தரமான படத்தைக் கொடுத்துள்ளார் கார்த்திக் தங்கவேல்.

ஆர்ட் ஒர்க் சிறப்பு. ஒரு சில படங்களில் கலை இயக்குனர்களுக்கு முக்கியதுவம் கிடைக்கும். லால்குடி இளையராஜா சிறப்பாக செய்துள்ளார்.

இசை வழக்கமான ஒன்றே. ரூபன் எடிட்டிங். சத்யசூரியனின் ஒளிப்பதிவு சிறப்பு. ஸ்டண்ட் சிவாவின் பங்கு சிறப்பு.

மொத்தத்தில், வழக்கமான ஜெயம்ரவி படம்.

3

காதலின் நிலையும்… ஹார்மோன்களின் வேலையும்…

0
காதலின் நிலையும்

காதலின் நிலையும்… ஹார்மோன்களின் வேலையும்…

வாழ்நாளில் ஒரு முறையாவது, கீழே உள்ள மூன்று நிலைகளைக் கடக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இளமைப்பருவதில் பூக்கும் காதல், இறுதி மூச்சுவரை நம்மனதின் ஏதாவது ஒரு மூலையில் இருந்துகொண்டே இருக்கும்.

பசியின்மை, தூக்கமின்மை, மறதி, பட்டாம்பூச்சி பறக்குதல் மற்றும் படபடப்பு ஏற்படுதல் இதற்கெல்லாம் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள்தான் காரணம்.

காதலுக்கு மூன்று நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எந்தநிலை எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதல்நிலை – காமம் (Lust):

நாம், பருவநிலையை அடையும் பொழுதோ அல்லது அதற்கு முன்னரோ, எதிர்பாலினத்தைக்கண்டு ஏற்படுவதே மோகம் அல்லது காமம். இதில், அவர்களின் தோற்றமும் செயலும் அடங்காது.

இதற்கு காரணம், இரண்டு ஹார்மோன்கள். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனும் செய்யும் வேலையே அது.

இந்த ஹார்மோன்கள்தான், உடல் உறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது. விந்தணு உற்பத்தியையும் அண்டப்பையையும் தூண்டி, உடலில் பலமாற்றங்களை ஏற்படுத்தும்.

முதல்நிலைக் காதல், கல்யாணம்வரை கூடச்சென்றதுண்டு. ஆர்வக்கோளாரில், மோகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு பிரிந்துபோன காதலே அதிகம்.

இரண்டாம் நிலை – ஈர்ப்பு  (Attraction):

எதிர்பாலினத்தின் தோற்றம், செயல், பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்த்து ஏற்படும். இது, இரண்டாம் நிலையைச் சேர்ந்தது.

இவர்களுக்குப் பசியின்மை, தூக்கமின்மை, மறதி மற்றும் படபடப்பு ஏற்படும். இதற்கு காரணம், அட்ரினலின் (Adrenaline) என்னும் ஹார்மோன்.

இவர்கள், காதலியையோ அல்லது காதலனையோ  நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும், ஒருவித காதல் மோகத்திலேயே இருப்பார்கள்.

அடிக்கடி சந்திக்க சொல்லும். தனிமையில் சந்திக்கச் சொல்லும். காதலி அல்லது காதலன் அருகில் இருந்தால் ஒரு இனம்புரியாத இன்பம் ஏற்படும். அதற்கு காரணம், டோபோமைன் (Dopamine) என்னும் ஹார்மோன்.

இந்த ஹார்மோன்தான் காமத்தின் உச்சநிலையை அடைய உதவும். சுயஇன்பம் காணும்போது, இறுதியாக ஏற்படும் இன்பம் டோபோமைன் சுரப்பதே காரணம்.

கனவில், நம் நினத்தவர்களுடன் நினைத்த விதமாக இருப்பது. அதுபோன்ற  கனவை வரவழைப்பது சோரடோனின் (Serotonin) எனும் ஹார்மோன்.

உங்களுக்குபிடித்தவர் நயன்தாராவோ அல்லது சாய்பல்லவியோ யாராக இருந்தாலும், நடுநிசியில் உங்கள் மண்டைக்குள் கனவுக்குதிரையை ஓடவிடுவது சொரடோனின் செய்யும் வேலை.

மூன்றாம் நிலை – பிணைப்பு (Attachment):

இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது பிணைப்பு எனக்கூறலாம்.

திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ, உடலால் ஏற்படும் நீங்காப் பிணைப்பு. ஒன்றாகவே வாழ்க்கை நடத்துவது. இந்த உறவுக்குக் காரணம், ஆக்ஷிடோசின் (Oxytocin) ஹார்மோன் .

குழந்தை பிறக்கும் சமயத்திலும் ஆக்ஷிடோசின் சுரக்கிறது. அதனால்தான் தாய்க்கும் சேய்க்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டாகிறது. எனவே, இதை தொட்டில் ஹார்மோன் எனவும் செல்லமாக அழைப்பார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி. எனக்கு நீ உனக்கு நான். இதுபோன்ற நீண்ட வருட  காதலுக்கு காரணம், வசோப்ரெஸ்ஸின் (Vasopressin)  ஹார்மோன்.

வசோப்ரெஸ்ஸின் செய்யும் வேலையால்தான், எவ்வளவு சண்டைகள் வந்தாலும் உடனே இணைந்துவிடுவார்கள். நீ இல்லாமல் நானில்லை என்ற நிலையை உருவாக்குவதும் இந்த ஹார்மோன்தான்.

காதலின் மூன்று நிலைகளும், மூன்று நிலைகளில் சுரக்கும், 7 வகை ஹார்மோன்களைப் பற்றி வேறேதும் சந்தேகமிருந்தால் கமெண்டில் கூறவும்… சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

இதில் நீங்கள் எந்தநிலை, உங்களுக்கு என்ன ஹார்மோன் அடிக்கடி சுரக்கிறது என்று தெரிந்துவிட்டது எனில் கமெண்டில் கூறவும்….

3

ரியல் கௌசல்யா, திலீப்குமார்: கனா கதாப்பாத்திரம்!

0
ரியல் கௌசல்யா நெல்சன் திலீப்குமார்

ரியல் கௌசல்யா (kowsalya murugesan), நெல்சன் திலீப்குமார் (nelson dilipkumar) கனா கதாப்பாத்திரங்கள் யார்?

கனா படத்தைப் பார்த்தவர்கள் மனதில், “யார் இந்த கௌசல்யா?” என்ற கேள்வி எழாமல் இருக்காது.

தமிழக விக்கெட் கீப்பர் ஒருவருக்கு கண்ணு போச்சா? இதுவரை எப்படி நமக்குத் தெரியம போச்சு!!!

இது ஒரு கற்பனைக்கதை. ஆனால், கற்பனை அல்ல. உண்மைகளை உல்ட்டாவாக்கிய திரைப்படம்.

படம் பார்த்த அனேகப்பேர், உண்மை என நம்பிவிட்டனர். அந்த அளவிற்கு ஆடியன்சை நம்பவைத்து, ‘கற்பனை பயோபிக்’ படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

உண்மையான கௌசல்யா முருகேசன் யார்?

அவருடைய உண்மையான பெயர், ‘முருகேசன் திக்கேஸ்வஷங்கர் திருஷ் காமினி’ (Murugesan Dickeshwashankar Thirush Kamini).

தந்தை பெயர் வாசுதேவன் பாஸ்கரன். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். அதன் காரணமாகவே காமினியும் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்தார்.

காமினியின் கதாப்பாத்திரத்தை உல்டாவாக மாற்றியே கௌசல்யா கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2013-ல் கலந்துகொண்ட முதல் உலகக்கோப்பைப் போட்டியில், சதமடித்த இந்திய வீராங்கனை ஆவார். சுழற்பந்து வீச்சாளரும் கூட. தற்பொழுது, இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்.

காமினி விலகியபின், 2017-ல் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் இறுதிப்போட்டியில் தோற்றது. இந்த அணியின் கோச் ரமேஷ் பவர்.

இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டுதான் கனா படத்தின் கதையை கற்பனையாக வடிவமைத்துள்ளார் அருண்ராஜா.

நெல்சன் திலீப்குமார் யார்?

சிவகார்த்திகேயன் நடித்த நெல்சன் திலீப்குமார் என்ற பெயர் அருண்ராஜாவின் நண்பர் பெயர். கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரின் பெயரையே சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரத்திற்கு சூட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன், எம்.எஸ்.தோனியின் சாயலிலேயே விளையாடுவார். அவரைப் போன்றே பவுலர்களுக்கு ஆலோசனை கூறுவார்.

2016-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியின்போது, டொனால்ட் வீசிய பந்து ஸ்டெம்பில் வேகமாகப்பட்டு, அதிலிருந்த பைல்ஸ் ஒன்று தோனியின் கண்ணைப் பதம் பார்க்கும்.

அக்காயத்துடனே, மங்கலான கண்ணுடனேயே தோனி விளையாடினார். மேலும், சர்வதேச போட்டியில் கண்களைப் பறிகொடுத்த விக்கெட்கீப்பர்கள் கிரேய்க் கீஸ்வெட்டரும் மார்க் பவுச்சரும் ஆவர்.

மார்க் பவுச்சர், நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடி பைல்ஸ் கண்ணில் பட்டு, கண்பார்வை இழந்தார். அத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

க்ரெய்க் கீஸ்வேட்டர் (Craig Kieswetter), நெல்சன் திலீப்குமாரை போன்றே ஒரே ஒரு சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர். பந்து, கெல்மெட்டிற்குள் புகுந்து கண்ணைத் தாக்கியதில் பார்வையிழந்தார்.

அதன்பிறகு க்ரெய்க் கீஸ்வேட்டர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒய்வுக்குப்பின், கோல்ப் வீரராக மாறினார். சிவகார்த்திகேயன் ஓய்வுக்குப்பின் கோச்சராக மாறுகிறார்.

தோனியையும் க்ரெய்க் கீஸ்வேட்டரையும் இணைத்தே நெல்சன் திலீப்குமார் கதாப்பாத்திரத்தை வடிமைத்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

3

Movie Review Kanaa – கனா திரைவிமர்சனம்

0
Movie Review Kanaa

Movie Review Kanaa – கனா திரைவிமர்சனம்

கிரிக்கெட் என்ன சோறு போடுமா? தண்ணியில்லன்னு கிரிக்கெட் டீம்ம ஓடவிட்ட ஊரு இந்த தமிழ்நாடு.

அப்படிப்பட்ட தமிழ்நாட்டு மக்களையே, கிரிக்கெட் பார்க்கவைத்து கண்ணீர் வடிக்க வைத்துவிட்டார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாடகராக உருவெடுத்தார். கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதியும் பாடியும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

ராஜாராணி, மான்கராத்தே படத்தில் காமெடி நடிகராக அவதாரமெடுத்தார். கனா படத்தின் மூலம் இயக்குனராக உருமாறியுள்ளார்.

சமீபமா, விளையாட்டு பற்றி எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப்படமும் அடங்கும்.

வாழ்க்கையில் தொடர் தோல்வியால் துவண்டுபோன ஒருவன், இப்படத்தைப் பார்த்தால் 10 யானை பலத்துடன் வெளிவருவான்.

அந்த அளவிற்கு, படம் நெடுகிலும் மோட்டிவேசன் காட்சிகளும் வசனங்களும் நிறைந்து உள்ளன.

ஒரு போட்டியில் சதமடித்துவிட்டு கண்ணைப்பறிகொடுத்த  திலீப்குமார் மற்றும் இந்தியப் பெண்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்த கௌசல்யா பற்றிய படம் இது.

கௌசல்யா விவசாயக்குடும்ப பின்னணி கொண்டவர். தமிழக வீராங்கனை கௌசல்யா, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார்.

நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன், கௌசல்யாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கௌசல்யாவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இணைத்துப் பார்வையாளர்கள் முகத்தில், சோகத்தைப் பீய்ச்சி அடிக்கிறார் இயக்குனர்.

சிவகார்த்திகேயன் என்ட்ரியில், இறுதிச்சுற்று மாதவன் நினைவில் வந்துபோகிறார். கௌசல்யா கதாப்பாத்திரம், சக்தே இந்தியாவை நினைவூட்டுகிறது. சத்யராஜ், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் நினைவூட்டுகிறார்.

ஐஸ்வர்யாவிற்கு இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்திருக்கலாம். கிராபிக்சை குறைத்து, ரியலைஸ்டிக் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பெண்களுக்கு இப்படம் மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. இனி, பெண்பிள்ளைகள் பற்றிய பெற்றோரின் மனநிலை மாறும்.

விவசாயம் என வியாபாரம் செய்யாமல், விவசாயிகளின் வலியை நடுமண்டையில் அணியடித்தார்போல் அழுத்தமாக கூறியுள்ளனர் .

படத்தின் மிக முக்கியத் தூண்கள் எடிட்டிங், இசை மற்றும் ஒளிப்பதிவு. இந்த மூவரும் சேர்ந்தால், சாதாரணக் காட்சிகளில் கூட ஹார்ட்பீட் எகிறுகிறது.

கைப்புள்ள அழக்கூடாது என மனதைத் தேற்றிக்கொண்டாலும், அதையும் மீறி மனது சோகமயமாகிறது.

எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவருக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கனா, கற்பனைச் சரித்திரம்.

3

ஹிப்னாஸிஸ் என்பது வசியக்கலை! அப்படியா?

0
ஹிப்னாஸிஸ்

ஹிப்னாஸிஸ் – ஹிப்னோசிஸ் (அறிதுயில் நிலை) என்பது வசியக்கலையா?

அறிதுயில் நிலை (Hypnosis) என்பது மனதின் ஆழ்ந்த ஓய்வு நிலை ஆகும். அறிதுயில் நிலையை பொதுவாக தன்னுணர்வு அற்ற நிலை அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று எண்ணுகிறார்கள். அது தவறு.

அறிதுயில் நிலையில் மனம் மிகவும் விழிப்பாக இருக்கும். அறிதுயில் வல்லுநர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், முறையான மற்றும் தெளிவான பதில்களை அளிக்க  மனம் தயாராக இருக்கும்.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு அதிகம் சினம் கொள்பவர்கள், அதிகம் பதட்டமடைபவர்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் இந்த சிகிச்சை மூலம் பயனடைவார்கள்.

அறிதுயில் நிலைக்குக் கொண்டு செல்லும் முறை

ஊசல் குண்டு, ஸ்பைரல் ரோல் வரைபடம், ட்ரக்ஸ் கொண்டு ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி அரிதுயில் நிலைக்குக் கொண்டு செல்லமுடியும்.

அந்நியன் படத்தில், விக்ரமை நாசர் ஒரு ஸ்பைரல் வரைபடத்தைப் பார்க்க வைத்து, ஆழ்மனதில் உள்ள நிகழ்வுகளை வெளிக்கொண்டு வருவார்.

இப்படித்தான் ஹிப்னோசிச வல்லுனர்களும் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி ஹிப்னோசிச நிலையை அடையவைக்கின்றனர்.

அனுபவம் வாயந்தவர்களால் மட்டுமே இதைச் செய்யமுடியும். அனைவராலும் ஒருவரை அறிதுயில் நிலையை அடையவைக்க முடியாது.

ஒருவரின் விருப்பமில்லாமல் ஹிப்னோசிசம் செய்ய முடியுமா?

ஒருவருடைய விருப்பமில்லாமல் அவரை, அறிதுயில் நிலைக்குக் கொண்டுசெல்வது கடினம். முடியாமலும் போகலாம்.

நரசிம்மா படத்தில் விஜயகாந்திடம் நடிகர் ராஜசேகர், உங்கள் ஆழ்மனதுக்குள் செல்லப்போகிறேன் எனக்கூறுவார். ரொம்ப ஆழத்திற்கு போகாத மூழ்கி செத்துடுவ என பதிலுக்கு விஜயகாந்த் கூறுவார்.

உண்மை கண்டறியும் சோதனை

குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும்போது, ட்ரக்ஸ் கொடுத்து உண்மைகளை வரவழைக்க முயற்சி நடக்கும்.

அவர்களுடைய மனவலிமையைப் பொருத்து, அறிதுயில் நிலையை அடையாமல் தவிர்க்கமுடியும் அல்லது போலியாக நடிக்க முடியும்.

ஆனால், பலர் மனப்பதற்றத்தால் அறிதுயில் நிலைக்குச் சென்று மாட்டிக்கொள்வார்கள்.  குழந்தைகளை எளிதாக அறிதுயில் நிலைக்கு கொண்டு செல்ல இயலும்.

அறிதுயில் நிலையின் மர்மங்கள் (myths) 

அறிதுயில் நிலையிலிருந்து விழித்தெழும்போது, நடந்த விஷயங்கள் நியாபகம் இருக்காது என்பது தவறான கருத்து. ஒருசில நிகழ்வுகளைத் தவிர அனைத்துமே நினைவில் இருக்கும்.

மறந்துபோன நினைவுகளை, நினைவில் கொண்டு வரலாம் என்பது தவறான கருத்து. ஒருவரின் மூளையில் பதிந்திருக்கும் நினைவுகளை மட்டுமே வெளிக்கொண்டு வரமுடியும்.

அறிதுயில் நிலைக்குச் செல்லுபவர்களுக்கு, உடல் ரீதியான பலம் அல்லது சக்தி கிடைக்கும் என்பது தவறான கருத்து.

ஹிப்னோசிஸ் என்பது வசியக்கலையா?

ஒருவகையில் இது அப்படி போன்றதுதான். ஆனால் வசியக்கலையல்ல. ஒருவரிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

சில சாமியார்கள் பெண்களை மயக்குவது இப்படித்தான். ஆனால் அது, அந்த இடத்துடன் முடிந்துவிடும். சுதாரித்துக்கொண்டால் எளிதில் தப்பிவிடலாம்.

வசியம் செய்பவரின் சொல்லுக்கெல்லாம் ஆடுவார்கள் என்பது தவறு. இருவரும் தனிமையில் இருக்கும்போது மட்டுமே நிகழ்த்த முடியும்.

பேய், சாத்தான் எனக்கூறி ஒருவித பயத்தை ஏற்படுத்தி தங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட வைப்பதே போலிச் சாமியார்களின் போலி வித்தை.

வசிய மருந்து, வசிய மூலிகை இதெல்லாம் ஒன்றும் கிடையாது. பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம்.

3

இரவு நேரப் பள்ளி, சோலார் பை, தனி மனிதப்புரட்சி!

0
இரவு நேரப் பள்ளி

இரவு நேரப் பள்ளி, சோலார் பை, தனி மனிதப்புரட்சி!

ரோகய்ல் வரிந்த் என்ற சமூக ஆர்வலரின் ஒரே நோக்கம் கஷ்டத்தில் இருக்கும் ஒருவேளை உணவுகூட கிடைக்காத குழந்தைக்கு கல்வி வழங்குவதே!

ஏறத்தாழ 23 மில்லியன் ஏழைக் குழந்தைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, அடிப்படைக் கல்விகூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதில் பலர், குழந்தைத் தொழிலாளர்களாக கூலி வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

2016-ம் ஆண்டு பாகிஸ்தானில், முதல் சோலார் பேக் பள்ளியை ரோகய்ல் வரிந்த் நிறுவினார். இது இரவில் மட்டுமே இயங்கி வந்தது.

ஏனெனில், பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்கள்.  பகலில் அனைவரும் வேலைக்குச் சென்று விடுவார்கள்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் போதிய மின்சார வசதிகளும் இல்லை. இதனால், சோலார் பேக் பள்ளியை இரவு நேரங்களில் இயக்கி அனைவருக்கும் கல்வி கொடுத்தார்.

பாகிஸ்தானில் 40% ஏழைக் குழந்தைகள், போதிய படிப்பு இல்லாமல் வேலைக்குச் செல்கின்றனர். மொத்த மக்கள்தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மின்சாரமின்றியே வாழ்கின்றனர்.

ரோகய்ல், 2015-ம் ஆண்டு சோலார் பேக்கை கண்டுபிடித்தார். அதை, ஒரு நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும் என எண்ணினார்.

அதற்காக, சோலார் பேக் ஒளியில் ஒரு பள்ளியைத் துவங்கிவிட்டார். இந்த சோலார் பேக் மூலம் கல்வி மட்டுமில்லாமல், இரவு நேரங்களில் மின்சாரமும் கிடைக்கிறது.

ஒரு சோலார் பேக், 12 குழந்தைகள் படிப்பதற்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுக்கிறது.

பணமாக யாரும் உதவி செய்ய வந்தால், ரோகய்ல் மறுத்துவிடுவார். பொருள் அல்லது உணவாக குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என விரும்புவார்.

அது மட்டுமில்லாமல், நவீன முறையிலான அனைத்து சோலார் கருவிகளையும் பயன்படுத்தி ரோகய்ல், இப்பள்ளியை நடத்தி வருகின்றார்.

10 சோலார் ஜெனரேட்டர், 30 சோலார் பல்ப் மற்றும் மின்விசிறிகளைக் கொண்டு பள்ளியை நடத்தி வருகின்றார்.

இதனால், குழந்தைகளும் பெற்றோர்களும் மிகவும் சந்தோசமடைந்துள்ளனர். குழந்தைகளின் கனவு நிறைவேறும் என்பது ரோகயிலின் நம்பிக்கை.

இப்பள்ளியை மேலும் விரிவடையச்செய்து அனைத்து குழந்தைகளுக்கும் தன்னால், கல்வி கொடுக்கமுடியும் எனக் கூறியுள்ளார்.

ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை ரோகய்ல் வரிந்த், தனி மனிதப்புரட்சியாக மாற்றியுள்ளார் .

3

4GB per day, ஆறு மாதம் இலவசம் – 5G வந்தாச்சு!!!

0
4GB per day aerovoyce

4GB per day, ஆறு மாதம் இலவசம் – 5G வந்தாச்சு!!!

கத்திபோயி வாலு வந்தது டும்.. டும்… டும்… என்ற கதையாகிவிட்டது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை.

2G, 3G அலைக்கற்றையின் உரிமத்தை வாங்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கொள்ளை லாபம் பார்த்தன.

ஜியோ வருகைக்குப்பின், மற்ற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்துவிட்டது. கிட்டதட்ட வாடிக்கையாளர்களின் சேவையைத் துண்டித்துவிடுவோம் எனக் கெஞ்சியும் மிரட்டியும் நஷ்டத்தை குறைத்து வருகின்றனர்.

ஏர்செல் என்ற ஒரு நிறுவனம் இருந்த சுவடே தெரியவில்லை. ஜியோ என்ற ஒரு நிறுவனம் உள்ளே நுழைந்ததற்கே, ஏனைய நிறுவனங்கள் மிரட்சியில் உள்ளனர்.

ஏரோ வாய்ஸ் 5G

ஏரோ வாய்ஸ் என்ற நிறுவனம் 5G சேவையைத் துவங்கிவிட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதமே இந்த நிறுவனம் துவங்கப்பட்டு விட்டது.

நடிகர் பிரசாந்த் துவக்கவிழாவில் கலந்துகொண்டு, துவக்கிவைத்தார். முதற்கட்டமாக சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் சோதனை ஓட்டம் நிகழ்த்தப்படும்.

2019-ல், 5G சேவைக்கான சிம் அட்டைகள் வழங்கப்பட உள்ளது. BSNL அலுவலகங்களிலேயே இதைப்பெற முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து 5G சேவையை வழங்க உள்ளது.

ஏரோவாய்ஸ் நிறுவனத்தின் வருகையை சமாளிக்கவே, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை வசூலித்து வருகின்றனவாம்.

அடுத்தவருடம் நிச்சயம் ஒருசில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏரோவாய்ஸ் ஆப்பர்

ஜியோ, ஆறுமாத காலம் அனைத்தையும் இலவசமாக வழங்கியதைப் போன்றே ஏரோ வாய்ஸ் நிறுவனமும் இலவச ஆப்பர்களை வழங்க உள்ளது.

4GB per day டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள், ஒரு நாளைக்கு 50 SMS-கள் இலவசமாக வழங்க உள்ளதாம்.

3

சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்!

0
சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர்

சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்! தெரியுமா உங்களுக்கு?

சிவ்நாராயின் சந்தர்பால், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரரும் ஆவார். மற்ற கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், சற்று வித்தியாசமாக தென்படுவார்.

நண்டு பாணியில் பேட்டிங் ஆடுவதில் வல்லவர். நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கும் ஜெயசூரியாவிற்கும் அடுத்து இவரே. ஆட்டமிழக்காமல் 1051 பந்துகள் தொடர்ந்து விளையாடிய ஒரே வீரர்.

கண்ணிற்கு கீழ் எப்பொழுதும் கருப்புநிற ஸ்டிக்கருடன் காணப்படுவார்.

சந்தர்பால், கருப்புநிற ஸ்டிக்கருடன் ஏன் வலம் வந்தார்?

கால்பந்து வீரர்கள், கருப்புநிற ஸ்டிக்கரைக் கண்ணிற்கு கீழ் ஒட்டிக்கொள்வது வழக்கம். அவர்களால் கூலிங்கிளாஸ் அணிந்து விளையாட முடியாது.

கிரிக்கெட் வீரர்கள், கூலிங்கிளாஸ் உபயோகிப்பது வழக்கம். ஆனால் சந்தர்பால், கால்பந்து வீரர்களைப் பேன்று கருப்புநிற ஸ்டிக்கர் (anti glare sticker) ஒட்டிக்கொள்வார்.

ஆண்டி கிளார் ஸ்டிக்கர், சூரிய ஒளியினால் கண் கூசுவதைத் தவிர்க்கும். மேலும், சூரிய ஒளியிலும் வெப்பத்திலுமிருந்து கண்ணின் புற வெளிப்பகுதியைப் பாதுகாக்கும்.

முல்லர் (mueller) என்ற பிராண்ட் ஸ்டிக்கரை மட்டுமே சந்தர்பால் ஒட்டிக்கொள்வார். ஒருவகையில் இதுவும் ஒரு விளம்பரமே (sponsorship).

ஸ்டிக்கருக்கு தடை

சில முன்னாள் வீரர்கள் இதை எதிர்த்தனர். இருந்தாலும், சந்தர்பால் தொடர்ச்சியாக உபயோகித்து வந்தார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், சந்தர்பால் பிராண்டெட் ஸ்டிக்கர் பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது.

ஆண்டி கிளார் ஸ்டிக்கர் மூலமும் வருவாய் ஈட்டமுடியும் என்பதே சந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்.

3

kadhal kavithai | காதல் கவிதை – WhatsApp Love Status

0
kadhal kavithai whatsapp status

kadhal kavithai | காதல் கவிதை – WhatsApp Love Status

இது போன்ற காதல் கவிதைகளுக்கு, எங்கள் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள். எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள். சுவாரஸ்யமான வீடியோக்களுக்கு எங்கள் யூடியூப் வலைதளத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

3