Home Blog Page 328

கூகிள் சர்ச்: ஒரு லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி

0
கூகிள் சர்ச்

கூகிள் சர்ச் செய்த பெண்மணி ஒருவர், ஒரு லட்சம் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள சீமபுரி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், இணையதளச் சேமிப்பு (E-Wallet) பிரச்சனைகளுக்காக புகார் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொள்ள நினைத்துள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றி கூகிள் வலைத்தளத்தில் தேடியுள்ளார். கூகிள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிபோல் பேசிய நபரிடம், சேமிப்பு கணக்கு விவரங்களைக் கூறியுள்ளார். அடுத்த நிமிடமே, அவருடைய கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காணமல்போய் உள்ளது.

அந்தப்பெண்ணிடம் பேசிய நபர் போலியானவர் என உண்மையான நிறுவனத்தைத் தொடர்புகொண்ட பிறகே தெரியவந்துள்ளது.

கூகிளில் உள்ள அனைத்துத் தகவல்களும் சரியா?

கூகிளில் உள்ள தகவல்கள் அனைத்துமே உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இல்லை. கூகிள் பயனர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களைப் பதிவுசெய்ய முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு வங்கியைப் பற்றி கூகிளில் தேடினால் புகைப்படம், வரைபடம் (Map), தொலைப்பேசி எண், இணையதள முகவரி, அலுவலக முகவரி என அனைத்தையுமே காட்டும்.

அதில் உள்ள முகவரி தவறாக இருந்தாலோ, தொலைப்பேசி எண் செயல்படாமல் இருந்தாலோ, யார் வேண்டுமானாலும் தவறு என புகார் தெரிவிக்கலாம்.

மேலும், அந்த வங்கியின் சரியான தொலைப்பேசி எண் அல்லது முகவரி தெரியும் என்றால், அதையும் பதிவு செய்யமுடியும்.

இந்த வசதியைத்தான், அந்த மர்ம ஆசாமி தவறாக பயன்படுத்தியுள்ளான். வங்கி இணையதள முகவரியை போலியாக கொடுத்து, அதன் மூலம் உள்ளே நுழைபர்வர்களை வங்கி அதிகாரிபோல் நடித்து பணம் பறித்துள்ளான்.

இது யாருடைய தவறு?

கூகிள், இதைப்பற்றி கேள்விப்பட்டு தங்களுடைய தவறு என ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், யார் வேண்டுமானாலும் தொழில் முகவரிகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து வருகின்றது. அந்த வசதியை நிறுத்த இயலாது எனவும் கூறியுள்ளது.

கூகிள் சர்ச் கூறும் பெரும்பாலான விசயங்கள் சரியாக இருந்தாலும், சில தவறான விசயங்களும் இடம் பெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.

எல்லா வங்கிகளுமே, வங்கிக் கணக்கு விபரத்தை யாரிடமும் கூற வேண்டாம் என பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

முக்கியமாக வங்கி அதிகாரிகள், பாஸ்வேர்ட் விவரங்களை கேட்க மாட்டார்கள் எனக்  கூறியுள்ளது. அப்படியே கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இணைய அறிவு குறைவாக உள்ளவர்கள், நேரடியாக வங்கிகளுக்கே சென்று பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சிறந்தது.

மேலும், வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் எது எனத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

முக்கியமாக, புகார்கள் தெரிவிக்க வேண்டுமானால் நேரடியாக வங்கிகளுக்கே சென்று தெரிவிப்பது மிகவும் சிறந்தது.

நேரம் விரையமாகும் என நினைத்தால், தவறான நபர்களிடம் பணத்தைப் பறிகொடுக்கும் சூழல் உருவாகலாம்.

3

ஆம்பிடெக்ஸ்டிரஸ்: இவர்களைப் பற்றித் தெரியுமா?

0
ஆம்பிடெக்ஸ்டிரஸ் (Ambidextrous)

ஆம்பிடெக்ஸ்டிரஸ் (Ambidextrous) : இவர்களைப் பற்றித் தெரியுமா?

இரண்டு கைகளையும் ஒரே திறனோடு பயன்படுத்துபவர்களை ‘ஆம்பிடெக்ஸ்டிரஸ்’ (Ambidextrous) என்று அழைப்பார்கள்.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 1% மட்டுமே இத்திறமை படைத்தவர்கள் உள்ளனர்.

இத்தகைய திறன் படைத்தவர்கள், தினமும் தங்களது வலது மற்றும் இடது மூளையை ஒரே நேரத்தில் இயக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

லியோனார்டோ டா வின்சி , பென் பிராங்க்ளின் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பல பிரபலங்கள்  இத்தகைய திறன் படைத்தவர்களே!

ஆம்பிடெக்ஸ்டிரஸ் திறன் பிறவியிலேயே இருக்குமா?

இவர்கள் பிறக்கும்போதே இத்தகைய ஆற்றலுடன் பிறப்பதில்லை. தொடர்ந்து இரண்டு மூளைகளையும் இயக்கிப் பழகுவதன் மூலமே இந்நிலையை அடைகின்றனர்.

மனித மூளை இரண்டு பிரிவுகளால் ஆனது. வலதுபுறம் உள்ள மூளை இடது பக்க உறுப்புகளையும், இடதுபுறம் உள்ள மூளை வலதுபக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்தும்.

கோவிலில் தீபம் காட்டிக்கொண்டே மணி அடிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள் இந்த திறன் படைத்தவர்களே.

சாதாரணமானவர், மத்தளம் வாசிக்க முயன்றால், முடியாது. காரணம், இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் இயக்க முடியாது.

அதுவே, பழக்கப்படுத்திக் கொண்டே இருந்தால் எளிதாக மத்தளம் வாசிக்க முடியும். இதற்கு காரணம், ஒரே நேரத்தில் இருபக்க மூளையும் வேலை செய்வதே ஆகும்.

வீன வந்தினி பள்ளிக்கூடம்:

இப்பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிங்க்றவுளி என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு, ஆம்பிடெக்ஸ்டிரஸ் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

வீன வந்தினி பள்ளியின் நிறுவனர் முன்னாள் ராணுவ வீரர் V.P. ஷர்மா. இவர், இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பண்டிட் ராஜேந்திர பிரசாத், அவர்களின் திறனை பார்த்து வியந்துள்ளார்.

காரணம், ராஜேந்திர பிரசாத் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் இயக்கும் திறன் கொண்டவர். அதன் பிறகே இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

பள்ளியின் சிறப்பு

எல்லாப் பள்ளிகளைப் பேன்றே வீன வந்தினி பள்ளியும் இயங்கும். மற்ற பள்ளிகளில் உள்ள படங்களே இங்கும் நடத்தப்படும்.

ஒரு வகுப்பு 45 நிமிடம் நடைபெறும். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 15 நிமிடம், மாணவர்கள் கட்டாயம் இரண்டு கைகளிலும் எழுத வேண்டும்.

மேலும், ஒரே நேரத்தில் 6 மொழிகளை எழுத மற்றும் பேச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சியின் மூலம், இரண்டு வெவ்வேறு மொழிகளை ஒரே நேரத்தில், இரண்டு கைகளில் எழுதுகின்றனர்.

சாதாரண மாணவர்கள் ஒரு தேர்வை 3 மணி நேரம் எழுதுகின்றனர். சிலருக்கு 3 மணி நேரம் கூட போதாது. ஆனால்,  ஆம்பிடெக்ஸ்டிரஸ் ஒரு தேர்வை ஒண்டரை மணி நேரத்தில் முடிக்கும் திறன் பெற்றவர்கள்.

தென்கொரியாவுக்கு பயிற்சி

தென்கொரியா ஆராய்ச்சியாளர்கள், தங்கள் நாடுகளிலும்  ஆம்பிடெக்ஸ்டிரஸ்களை அதிக அளவு உருவாக்க, இந்தப் பள்ளியில் பயன்படுத்தப்படும் சில எளிய வழிமுறைகளை  அறிந்து சென்றுள்ளனர்.

ஆம்பிடெக்ஸ்டிரஸ்கள் அதிபுத்திசாலிகளா?

இவர்கள் மற்ற மாணவர்களைப் பேன்றே அறிவு படைத்தவர்கள். சக மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இவர்களும் எடுக்கின்றனர். ஆம்பிடெக்ஸ்டிரஸ் என்றால் புத்திசாலிகள் என்று பொருள் அல்ல.

சாதாரணமானவர்களைக் காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள். இசைக்கருவி, ஓவியம், சிலம்பம், அறுவை சிகிச்சை மற்றும் வாள்வீச்சு போன்ற கலைகளில் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.

3

Phethai cyclone – பெத்தாய் புயல்: ஆந்திரா ஸ்தம்பித்தது!

0
phethai cyclone piety cyclone

Phethai cyclone: பெத்தாய் புயலால் ஆந்திரா ஸ்தம்பித்தது!

ஆந்திர மாநிலத்தில், பெத்தாய் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 ரயில்களுக்குமேல் ரத்து செய்யப்பட்டது. கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை.

இதனால் வெளியூர் செல்லமுடியாமல் ரயில் நிலையங்களிலேயே முடங்கிப்போயினர். பல இடங்களில் சாலைவழிப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

கிழக்கு கோதவரி மாவட்டத்தில், கட்ரெனிகோன என்ற இடத்திற்கு அருகில் புயல் கரையை கடந்தது. ஆனால், இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மழைப்பொழிவும் குறைந்த அளவே பெய்து வருகின்றது.

இமயமலைத்தொடர் காற்றின் ஈர்ப்பின் காரணமாக, புயல் சற்று வலுவிழந்த நிலையிலேயே கரையைக் கடப்பதால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை அறிக்கைகள் கூறியுள்ளது.

தமிழக கடற்கரையோரம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகுகள், புயல் காற்றின் வேகத்தில், பலத்த அலை ஏற்பட்டதால், ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.

தற்பொழுது பெத்தாய் புயல், கல்கத்தா மார்க்கமாக பர்மா வரை நீண்டு சென்று கொண்டிருக்கிறது.

3

ஷாடன் ப்ரைவ்டா: உங்களுக்கும் இந்த நோய் உண்டு! 

0
ஷாடன் ப்ரைவ்டா tamil

ஷாடன் ப்ரைவ்டா (schadenfreude): உங்களுக்கும் இந்த நோய் உண்டு!

பிறரின் தோல்வி அல்லது துரதிஷ்டத்தைக் கண்டு சந்தோசப்படுவது. பொதுவாக இந்த ஒரு நிகழ்வு, எல்லோரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

நமக்குப் பிடிக்காதவர்கள், நம்முடன் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என நமக்குப் பிடிக்காதவர்களின் தோல்வியைப் பார்த்து ஆனந்தக் களிப்படைவோம்.

பிறர் துன்பம் கண்டு மகிழ்தல். ஒரே வார்த்தையில் சொன்னால் ‘ஷாடன்ப்ரைவ்டா’. ஜெர்மானிய மொழியில் ஒற்றைச் சொல் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியில் இச்சொல், நம்பிக்கைத் துரோகத்திற்கு நிகராகக் கருதப்படுகின்றது.

மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்வது என்பதை அந்நாட்டு மக்கள், பெரிய துரோகமாகக் கருதுகின்றனர்.

மனிதர்களிடம் இருக்கும் மிகவும் கொடூரமான மற்றும் மட்டமான செயல்களில் ஒன்று இந்த ஷாடன் ப்ரைவ்டா. இது ஒரு வகையான மன நோய் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு வயதான பெண், மாணவன், குடிகாரன் மற்றும் தொழிலதிபர். இந்த நான்கு நபர்களைப் பற்றி விளக்கிய கோப்புகளை மக்கள் பார்வைக்கு வைத்தனர். அதில் முதல் மூவரைப் பற்றி நல்ல கருத்துக்கள் இடம் பெற்றது.

ஆனால், தொழிலதிபரை மட்டும் இழிவுபடுத்திச் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தொழிலதிபரை பற்றிய கோப்புகளை மக்கள் பார்க்கும்போது, அனைவரது முகத்திலும் அப்படி ஒரு மலர்ச்சி.

நம்மவர்களுக்கு புரியும்படி சொன்னால், அஜித் படம் நன்றாக ஓடவில்லை என்றால், அது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. விஜய் படம் நன்றாக ஓடவில்லை என்றால், அது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

இதைத்தான் Schadenfreude (ஷாடன் ப்ரைவ்டா) என்று கூறுகின்றனர். சுய மதிப்பு (Self Esteem) யாருக்குக் குறைவாக உள்ளதோ? அவர்கள் மற்றவர்களின் தோல்வியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.

ஏன்? இப்படி ஒரு இழிவான எண்ணம் அனைவரிடமும் உள்ளது என ஆராய்ந்தபோது, பரிணாம அடிப்படையிலேயே இப்படி ஒரு குணம் அனைவரிடமும் உள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு கூட, ஷாடன்ப்ரைவ்டா உள்ளதாம்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனக் கூறுவதைபோல், ஷாடன் ப்ரைடாவால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே அதை ஒழிக்க முடியும்.

3

பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்: குழப்புவது யார்?

0
பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்

பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்: மக்களைக் குழப்புவது யார்?

புயல்களை கணிப்பது என்பதே பெரும் குழப்பம். வானிலை வல்லுனர்களே, புயல் சரியாகக் கரையைக்கடக்கும்  இடத்தை, கடைசி நிமிடத்தில்தான் உறுதி செய்கின்றனர்.

தற்பொழுது, புயலுக்கு வைத்த பெயரை உச்சரிப்பதில் கூட மக்களைக் குழப்புகின்றனர். ஒருவர் பெத்தாய் புயல் என்கின்றார். இன்னொருவர் பெய்ட்டி புயல் எனப் பேட்டி கொடுக்கின்றார்.

தாய்லாந்து நாடு, புயலுக்கு வைத்த பெயர் பெத்தாய் புயல் (Phethai Cyclone). Phethai, இந்த வார்த்தையின் உச்சரிப்பு பேத்தாய் அல்லது பெத்தாய். ஆனால், தமிழக வானிலை மையம் புதிதாக ஒரு பெயரை சூட்டியுள்ளது.

இந்திய வானிலை மையம் Phethai cyclone என உறுதி செய்துள்ளது. விக்கிபீடியா அதே பெயரை உறுதி செய்துள்ளது. கூகுள் அதே பெயரை உறுதி செய்துள்ளது. ஆனால் தமிழக வானிலை அதிகாரிகள் சிலர் மட்டும் பெய்ட்டி எனக்கூறியுள்ளனர்.

piety என்றால் பக்தி என்று அர்த்தம். piety puyal என அறிவித்தவர் மிகவும் பக்திமானாக இருக்கலாம். பெய்ட்டி என்ற வார்த்தை, லத்தின் மொழியைச் சேர்ந்தது. அதை எப்படி தாய்லாந்து பயன்படுத்தியது எனத்தெரியவில்லை.

ஒரு பெயரையே தவறாக உச்சரிப்பவர்களின் வானிலை அறிக்கை சரியாக இருக்குமா? யார், புயலைப் பற்றி முதலில் கணித்துச் சொல்வது என்ற அதிகாரப் போட்டியில், புயலின் பெயரையே தவறாக உச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சென்னைக்கு அருகில் இருந்த பெத்தாய் புயல், ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரை நோக்கி இடம் பெயர்ந்துகொண்டு உள்ளது. தமிழகத்திற்கு இந்தப் புயலால் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

3

Movie Review Thuppakki Munai | துப்பாக்கி முனை

1
Movie Review Thuppakki Munai

Movie Review Thuppakki Munai | துப்பாக்கி முனை திரை விமர்சனம்

துப்பாக்கி முனை, விக்ரம் பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்தியாவின் கடைக்கோடி முனையான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனையில் எடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபுவா?

விக்ரம்பிரபு ஆரம்ப காலகட்டத்தில், நடிப்பே வரவில்லையென்றாலும் கதைத்தேர்வு நன்றாக இருக்கும். ஆனால் வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா இந்த படத்துக்கு அப்புறம் வேற லெவல்.

விக்ரம் பிரபுவின் படம் என்றாலே, ஒருவித பயத்துடன் தியேட்டருக்கு போக வேண்டிய நிலை. ரிவியூ போடணும், நம்மள நம்புற நாலு ஜீவனுங்க, எக்குத்தப்பா படத்துக்குப்போயி மாட்டிக்க கூடாதுல. (இத படிக்கிற நீங்க தான் அந்த நாலு ஜீவன்)

படம் ஆரம்பிச்சு டைட்டில் போட்டதும், மியூசிக் டேரடக்கரு போட்ட மியூசிக்க கேட்டதும், அள்ளுவுட்ருச்சு. (இவர நிறைய புகழ வேண்டி இருக்கு, கடைசியா பாத்துக்கலாம்).

ஒருவித கனத்த இதயத்தோட படம் பார்க்க ஆரம்பித்தேன். காக்க காக்க சூர்யா ரேஞ்சுக்கு ஒரு பிளாஷ்பேக்குடன் விக்ரம் பிரபு என்ட்ரி. ரைட்டு, சைத்தான்  சிவாஜி பேரன் ரூபத்துல வந்துட்டான்னு மனச தேத்திக்கிட்டேன்.

இயக்குனரின் ஆளுமை

படம் ஆரம்பிச்சு 15-வது நிமிஷத்துல, இது விக்ரம்பிரபு படம் இல்லடா… என்னோட படம். அப்டின்னு படம் முழுவதிலும் ஆளுமை செலுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.

போலீஸ் படம் எடுப்பது முக்கியமில்லை, ரசிக்கும் படியாக எடுக்கணும். அந்த வகையில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.

பட்ஜெட் சிக்கனம்

நிறைய காட்சிகளில் பட்ஜெட் சிக்கனத்தை பார்க்க முடிந்தது. கொடுத்த பட்ஜெட்டில் நாலு ரோடு… ரெண்டு பங்களா… ஒரு பீச் என சிக்கனமாக படத்தை இயக்கியுள்ளார் தினேஷ் செல்வராஜ்.

என்னய்யா தாடி இது?

ஆரம்பத்தில், விக்ரம் பிரபுவின் தாடியை பார்த்ததும் சிரிப்பாக இருந்தது. பிளாஷ் பேக் முடிந்தபின், இளநரைத் தோற்றம் சிறப்பு. மாறுபட்ட முக அமைப்பு. ரசிக்கும்படியான ஸ்டைலாக மாறிப்போனது.

சிவாஜி வம்சத்துல வந்துட்டு இன்னும் நடிப்புல முழுசா தேறலைனாலும், முந்தைய படங்களைக் காட்டிலும் நல்ல இம்ப்ரூவ்மென்ட். இதே மாதிரி ஒழுங்கான கதைத்தேர்வு இருந்தா கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்டலாம்.

என்னதான் நல்ல இயக்குனரா இருந்தாலும், அத கெடுக்குறதுக்குனே நாலு பேரு இருப்பாங்க. நாலு பைட்டு, நாலு சாங்கு, கொஞ்சமா ரொமான்சு. இதெல்லாம் வச்சே ஆகணும் குதிப்பாங்க. இதுலவும் அப்படித்தான் நடந்திருக்கு.

கருவேப்பிலை ஹன்சிகா

இந்த படத்துல ஹன்சிகாவ தூக்கிட்டு, அவங்க சம்பள பணத்துல இன்னும் வலுவான திரைக்கதையை அமைச்சிருந்தா, துப்பாக்கி படத்துக்கு இணையாவே பேசப்பட்டு இருக்கும்.

ஹன்சிகா ரோலும் வேஸ்ட், கால் சீட்டும் வேஸ்ட். ஹன்சிகாவ கொஞ்சம் அழகாவே காட்டிருந்தாரு, சினிமோட்டோகிராப்பர் ரசமதி. பட், படத்துல சொல்லுற அளவு ரோல் இல்லியே. கொத்தமல்லி, கருவேப்பிலை ஹன்சிகாவா மாறிட்டாங்க.

வீண் செலவு

மற்ற நடிகர்களிடமும் நடிப்பில் எதார்த்தம் குறைந்து இருந்தது. ஷூட்டிங் சீக்கிரம் முடிக்க வேண்டும் என பல காட்சிகள் அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிந்தது.

ரேப் காட்சிகளில் ஓவர் எக்ஸ்பிரசன். கற்பழித்தவர்கள் கைகள் ஒழுங்காக கட்டப்படவில்லை. கிளைமேக்ஸில் அவ்வளவு பெரிய சண்டைக்காட்சி தேவையே இல்லை. இப்படி இன்னும் சில உள்ளன…

க்ளைமேக்ஸ்

விக்ரம் பிரபுவுக்கு கையில விரல்கள் இல்ல. அது என்ன காரணம்கிறதே தெரியல. கிளைமேக்ஸ் மெசேஜ் சிறப்பு. ரெண்டு.. மூணு… என கிளைமேக்ஸ் நீண்டு கொண்டே இருக்கு.

ஆடியன்ஸ்கு எது புடிக்குதோ… அத கிளைமேக்சா பிக்ஸ் பண்ணிக்க சொல்லிட்டாரு போல டைரக்டர்.

எனக்குப் பிடிச்ச கிளைமேக்ஸ் புல்லட்டை கையில கொடுத்து, துவண்டுபோகும் நேரத்தில இத பார்ன்னு சொல்றது. என்னையே பூஸ்ட் பண்ணுன மாதிரி உணர்ந்தேன்.

இசையமைப்பாளரை புகழும் நேரம்

காப்பியடிக்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில், எல்.வி.முத்துகணேஷ் ஒருபடி மேல். காப்பியடிக்கும் இசையமைப்பாளரின் இசையவே காப்பி அடிக்கிறதுல கில்லாடி.

இம்மார்டல் இசை ஆல்பத்தை காப்பியடிச்சி அனிருத், கத்தி படத்துல தீம் மியூசிக்கா வச்சிருப்பாரு. முத்து கணேஷ், அத படம் புல்லா போட்டு வச்சிருக்காரு.

முத்துகணேஷ், காப்பி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க, கொஞ்சம் இன்டர்நேசனல் ஆல்பத்துல இருந்து உருவுங்க. அப்போ தான், குட்டி இசைப் புயல் அனிரூத்துக்கு டப்பு கொடுக்க முடியும்.

படத்தின் தூண்

எடிட்டர் புவன் சீனிவாசன் மற்றும் கேமராமேன் ரசமதி இருவரும் படத்தின் முக்கியத் தூண். இயக்குனரின் தவறுகளை பல இடங்களில் மறைத்து காட்சிகளை ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக, வேல ராமமூர்த்தி ஸ்லோமோசனில் திரும்பும் காட்சி.

மொத்தத்தில் துப்பாக்கி முனை, தவறுகளின் தடுப்பு முனை.

3

ரஜினியிடம் இல்லை, விஜய்சேதுபதியிடம் இருக்கு!

0
ரஜினியிடம் இல்லை

ரஜினியிடம் இல்லை, விஜய்சேதுபதியிடம் இருக்கு!

ரஜினிகாந்த், விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். சொந்தப் படம் எடுக்க வேண்டாம். நிறைய பட்ஜெட் செலவு செய்ய வேண்டாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

ரஜினியின் ஆலோசனைப்படி, விஜய்சேதுபதி படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டுவிட்டார். இதனால் எஸ்.பி.ஜனநாதன் படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ரஜினி, விஜய்சேதுபதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. பத்திரிக்கையாளர்களை எப்படி எதிர்கொள்வது? என விஜய்சேதுபதியிடம் கற்கவேண்டும்.

ரஜினியின் அரசியல் எதிர்காலத்திற்கு, முதல் தகுதி இதுவும் ஒன்று. சமீபகாலமாக, செய்தித் தொலைக்காட்சிகள் பெருகிய வண்ணம் உள்ளன. இதனால் டி.ஆர்.பி. போட்டி ஏற்பட்டுள்ளது.

இவர்களிடம் எக்குத்தப்பாக பேசி சிக்கிக்கொண்டால், அன்றைக்கு அந்த நபர் பலியாடு. ரஜினி, பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் எசக்குபிசக்காக எதையாவது பேசி மாட்டிக்கொள்கின்றார்.

அதேநேரத்தில், சமீபத்தில் விஜய்சேதுபதி, பத்திரிக்கையாளர் ஒருவரை லாவகமாக எதிர்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியிடம், வாயை புடுங்க வேண்டும் என அந்தப் பத்திரிக்கையாளர் முறை தவறி நடந்துகொள்கின்றார். அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொண்ட விஜய்சேதுபதி, அவேசப்பட்டு வார்த்தைகளைவிடாமல் லாவகமாக சமாளிக்கின்றார்.

ரஜினி மட்டுமல்ல பல அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கப் பயப்படுகின்றனர். காரணம், அவர்களிடம் சொல்வதற்கு விஷயம் இல்லை. விஷயம் இருந்தாலும், பேசுவதற்கு தைரியம் இல்லை.

ஒரு சிலர், பேச வேண்டும் என எதையாவது பேசி மாட்டிக்கொள்வார்கள். அதேபோல், பத்திரிக்கையாளர்களின் தாக்குதல் கேள்விகளால் ஆத்திரம்கொள்வார்கள்.

பிரபலங்களாக மாறிவிட்டால், பத்திரிக்கையாளர்களை சமாளிக்கும் பக்குவம் வேண்டும். இல்லையெனில், நடுநிலை ஊடகங்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளும், டி.ஆர்.பி. பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்ள நேரிடும்.

3

10 ஓவர், 10 விக்கெட், 11 ரன்: இது ரெக்ஸ் வேட்டை!

0
10 ஓவர்

10 ஓவர், 10 விக்கெட், 11 ரன்: இது ரெக்ஸ் வேட்டை!

சமீப காலமாக, இந்தியக் கிரிக்கெட் அணி உலக அளவில், எதிரணியினரை துவம்சம் செய்து வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டு, 90 சதவீத இந்தியர்களின் உயிர் மூச்சாகிவிட்டது.

தேசிய போட்டிகள் மட்டுமல்ல, மாநில போட்டிகளிலும் அதிரடிகளுக்குப் பஞ்சமில்லை. டெஸ்ட் போட்டிகள் என்றால், இந்திய இளம் வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று.

ஒரே இன்னிங்சில் 1000 ரன்களைக் கடந்தார் மும்பையை சேர்ந்த பிரணாவ் தனவாடே. ஒரே போட்டியில், 556 ரன்களைக் குவித்தார் பிரியான்ஷு மோலியா (14 வயது).

தற்பொழுது, பவுலிங்கில் இந்திய இளம் வீரர் ஒருவர் அசத்தியுள்ளார். மொத்த அணியின் விக்கெட்டுகளையும், ஒத்தை ஆளாக வேட்டையாடியுள்ளார்.

மணிப்பூரை சேர்ந்த ரெக்ஸ் ராஜ்குமார் (18 வயது) என்ற வீரர், இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். கூச் பெஹர் கப் போட்டியில், ஆந்திராவுக்கு எதிராக நடந்த விளையாட்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ரெக்ஸ் ராஜ்குமார் வீசியது 9.5 ஓவர்கள். விட்டுக்கொடுத்தது வெறும் 11 ரன்கள் மட்டுமே. பறித்தது 10 விக்கெட்டுகள். 5 போல்ட். 3 கேட்ச். 2 எல்பிடபிள்யூ. (மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட)

ரெக்ஸ் ராஜ்குமாரின் வேட்டையை பார்த்து சகவீரர்களே திக்குமுக்காடி உள்ளனர். இப்படி பலே பலே வீரர்களை கண்டு, பிபிசிஐயும் சற்று கலக்கத்தில் உள்ளது.

எதிர்காலத்தில், தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது மிகுந்த சவாலாக இருக்கும் என பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கருதியுள்ளனர்.

3

ரஜினியின் சிதம்பர ரகசியம்: ரஜினிக்கு தெரியுமா?

0
ரஜினியின் சிதம்பர ரகசியம்

ரஜினியின் சிதம்பர ரகசியம்: ரஜினிக்கு தெரியுமா?

ரஜினியின் பேட்ட: சன் பிக்சர்ஸ் மேஜிக் எங்கே?

பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானபோது, சன்பிக்சர் மேஜிக் எங்கே என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டோம்.

சமீப காலமாக, ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். கபாலி மற்றும் காலா படங்களின் கதாப்பாத்திரம் அப்படி அமைந்துவிட்டது.

கபாலி படத்தின் பிளாஸ்பேக் ரஜினியை ரசித்தவர்களை விட, முதுமையான ரஜினியை ரசித்தவர்கள் மிகவும் குறைவு.

ரஜினியின் முதிய வயது தோற்றதை சிலர் பாராட்டினாலும், அதேபோன்ற தோற்றத்தில் காலா படத்தில் நடித்தார். காலா படம் படுதோல்வி.

காலா படத்தை, டிவியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை கூட குறைவுதான். ரஜினியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேகத்தையும், துடிப்பையும் தான்.

2.ஒ மற்றும் பேட்ட படங்கள் அதை நன்கு வெளிக்காட்டியுள்ளது. பழைய ரஜினியை திரையில் பார்பதையே அவருடைய ரசிகர்களும், மக்களும் விரும்புகின்றனர்.

அதேவேளையில், தற்பொழுதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்றபடி நடிப்பதே சிறந்தது. லிங்கா படத்தின் தோல்வியே அதற்கு உதாரணம்.

ரஜினிக்காக படம் ஓடும் என்பதைவிட, ரஜினியின் வேகத்திற்காக படம் ஓடுகிறது என்பதே ரஜினியின் சிதம்பர ரகசியம்.

2.ஒ படம் மற்றும் பேட்ட படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு ரஜினிக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ரஜினியின் சிதம்பர ரகசியமும் அதுதான்.

தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்பதே பலரின் விருப்பம். இன்னும் அவரால் பழைய வேகத்தில் நடிக்க முடியும், அதை முதலில் அவர் நம்ப வேண்டும்.

3

அடுத்த பிரதமர்? பிரச்சனை முடியவில்லை..!

0
அடுத்த பிரதமர்

அடுத்த பிரதமர்? பிரச்சனை முடியவில்லை..! இனிமேல் தான் ஆரம்பம்.

ஐந்து மாநில தேர்தலில் பாஜக சரிவு. பண மதிப்பிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, அதிகார துஸ்பிரயோகம் இப்படி காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

எவ்வளவு தான் மத அரசியல் செய்தாலும், மதங்களையும் மீறிய நடுநிலை மக்கள் அதிகம் உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மோடியின் கோட்டை சரிவை நோக்கிச்செல்கிறது. அதே நேரத்தில் அடுத்த பிரதமர் யார்? என எதிர்பார்ப்புகள் எழத்துவங்கி விட்டது.

சில கட்சித்தலைவர்கள் அடுத்த துணைப்பிரதமர் என கானாக்கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டனர். நடக்குமா?

இந்த தேர்தல் வெற்றியின் மூலம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என இப்பொழுதே முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. ராகுல்காந்தி சரியானவரா?

ராகுல்காந்தி பிரதமர் பதவிக்கு சரியானவரா? என்பதைவிட, அடுத்த கட்டத் தலைவர்கள் இல்லை என்பதே உண்மை.

இத்தனை வருட இந்திய அரசியலில் பாஜக, காங்கிரஸ் தவிர தேசிய அளவில் வேறு எந்தக்கட்சியும் எழுச்சி பெறவில்லை.

அப்படியே எழுச்சி பெற நினைத்தாலும், குட்டிக்கட்சிகளே அதற்கு முட்டுக்கட்டையிடுகின்றனர்.

ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்திவிட்டு, அந்தக் கட்சியை விரட்ட வேண்டும் என மீண்டும் ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைப்போம்.

பிறகு, அந்தக் கட்சியை விரட்டவேண்டும் என மீண்டும் தூக்கியெறிந்த பழைய கட்சியின் கையில் ஆட்சியை ஒப்படைப்போம். வாழையடி வாழையாய் தொடரும் வழக்கம்.

பாஜக தோல்வி என்பதைவிட, அடுத்து வரப்போவது யார்? என்பதில் தான் இந்தியாவின் தலையெழுத்து அடங்கியுள்ளது.

புதிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கலாம் எனும் புரட்சி வெடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.. அதுவரை, இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கதை தான்.

3