Home Blog Page 329

அதற்குள் நடக்கும் மர்மம் – கலோரி 2

0
அதற்குள் நடக்கும் மர்மம்

அதற்குள் நடக்கும் மர்மம். கலோரி என்றால் என்ன? ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை சென்ற பாகத்தில் பார்த்தோம்.

தண்ணீருக்கும் கலோரிக்கும் என்ன சம்பந்தம்? தண்ணீர் குடிப்பதால் ஏன் உடலில் கழிவுகள் தேங்குகிறது? இரைப்பைக்குள் அப்படி என்ன மர்மம் நிகழ்கின்றது? என்பதைப் பற்றி இந்த பாகத்தில் பார்ப்போம்.

ஒரு ஆசிட் பாட்டிலை கொண்டு, கழிவறையை சுத்தம் செய்யலாம். தண்ணீர் கலக்காமல் ஆசிட்டை ஊற்றும்போது, அதிகப்படியான கறைகளை நீக்கும்.

அதே ஆசிட் பாட்டிலில் தண்ணீர் கலந்து பயன்படுத்தும்போது, ஆசிட்டின் வீரியம் குறைந்துவிடும். அழுக்கும் குறைந்த அளவே நீக்கப்பட்டு இருக்கும். இதே போன்று தான் நம் வயிற்றில் உள்ள அமிலமும் வேலை செய்யும்.

நம் இரைப்பையில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு போன்றவை உள்ளது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் மற்றும் ரெனின் சேர்ந்த கலவையாகும்.

இந்த வேதியல் பெயர்கள், கூடுதல் பொதுஅறிவு விஷயத்திற்காக கொடுத்துள்ளோம். இந்த இரைப்பை அமிலம் (Gastric acid), நாம் சாப்பிடும் உணவை செரிக்கவைக்கும் முக்கிய வேலையைச் செய்கிறது.

இரைப்பை அமிலங்களுக்கு, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை கொல்லும் ஆற்றல் உள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் வாந்தியெடுத்தால், வாந்தியெடுத்த தரைப்பகுதி அரிக்கப்பட்டு இருக்கும்.

அந்த அளவிற்கு வீரியம் கொண்ட அமிலங்கள், இரைப்பையில் சுரக்கப்படுகின்றன. இதனுடன் தண்ணீர் சேரும்போது, அதனுடைய வீரியம் குறைகின்றது. இதனால் உணவை செரிக்கவைக்கத் தாமதமாகின்றது.

இதனால் தான் சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பின் அரைமணி நேரம் தண்ணீர் அருந்தக்கூடாது எனக்கூறுகின்றனர். ஒருவேளை தவிர்க்க முடியாத நேரத்தில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரை மட்டும் அருந்துவது நல்லது.

தண்ணீரை அதிக அளவு அருந்துவதால், இரைப்பையில் என்ன மாதிரியான மர்மங்கள் நிகழ்கின்றது என அடுத்த பாகத்தில் பார்ப்போம். மேலும் எந்த உணவிற்கு எவ்வளவு கலோரி எனப்பார்க்கலாம்.

கலோரி பாகம்-1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம் – கலோரி 1

3

Movie Review – Evanukku Engeyo Matcham Irukku

0
Movie Review

Movie Review – Evanukku Engeyo Matcham Irukku. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு திரைவிமர்சனம்.

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு?

படத்தோட ட்ரைலரே படம் எப்படி இருக்கப்போகுதுன்னு புட்டுபுட்டு வச்சுருச்சு. சமீபத்துல வந்த ‘இருட்டு அறைக்குள் முரட்டு குத்து’ படமும் இதே பாணில ட்ரைலர் விட்டு தாறுமாறா ஓடிச்சி.

அதே வரிசைல, EEMI படத்தோட ட்ரைலர் விட்டாங்க. அதே எதிர்பார்ப்புல படத்துக்கு போனோ, மொத்த படத்துல இருந்த சீன் ட்ரைலர்லவே இருக்கு. படத்துல புதுசா எதுவும் இல்ல.

இந்த படத்த பாக்குறதுக்கு VIU, YOUTUBE, AMAZON, NETFLIX இந்த ஆப்ல வர வெப்சீரியஸ் எவ்வளவோ மேல். இப்போலாம் B கிரேடு படங்கள் ஆன்லைன்லவே எக்கசக்கமா வெளியிடுறாங்க.

வெப் சீரியஸ் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நேரத்துல ரெண்டு பிட்டு, மூணு குத்து சாங்கு, நாலு காமெடின்னு எடுத்து வச்சிருக்காங்க.

இத பாக்க தியேட்டர் எதுக்கு மொபைல் போதாதா. ஒரு பாதி இருட்டு அறைக்குள் முரட்டுக்குத்து. இன்னொரு பாதி நானும் ரவுடி தான்.

முழுசா பி கிரேட் படமும் இல்ல. முழுசான காமெடி படமும் இல்ல. பேமிலி வர்றதுக்கும் வேல இல்ல. இந்த படத்தோட மைனஸ் வெந்தும் வேகாமையும் எடுத்து வச்சது தான்.

அதுக்கு காரணம், முழுசா பிட்டு படமா எடுத்து வச்சா.. மார்கெட் அவுட் ஆயிரும். அதனால இத கொஞ்சம், அத கொஞ்சம்னு பாத்து பாத்து தடவிருக்காறு ஹீரோ விமல். அதுக்காக ஆண்டி வரைக்குமா இறங்குவீங்க.

ஆஷ்னா ஜவேரிக்கு வெப்ஸ் சீரியஸ்ல நல்ல எதிர்காலம் இருக்கு. இனி தமிழ் படத்துல ஐட்டம் சாங் வாய்ப்பு கிடைச்சா தான் உண்டு.

இந்த படத்தோட நீளத்த 1:45 நிமிஷமா குறைச்சி பல காட்சிகள வெட்டியிருந்தா கூட ஒரு படமா வந்திருக்கும். இத ஒரே இயக்குனர் தான் இயக்குனதானு கூட டவுட்டா இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு ரகமா இருக்கு.

மொத்ததுல இந்த படத்துல நடிச்ச யாரும் நடிச்ச மாதிரியே இல்ல.

3

Phethai Puyal பேத்தாய் புயல் பெயர் எப்படி வந்தது?

0
phethai puyal பேத்தாய் புயல்

Phethai Puyal (Phethai cyclone) – பேத்தாய் புயல் (பெய்ட்டி புயல்) பெயர் எப்படி வந்தது?

கஜா புயலை தொடர்ந்து பேத்தாய் (பெத்தாய்) புயல் தமிழகத்திற்குள் நுழைய உள்ளது. Gaja puyal என்றால் என்ன? கஜா என புயலுக்கு பெயர் வைத்த நாடு இலங்கை. கஜா என்ற பெயர் புத்திசத்தை தழுவியது.

கஜா என்ற சொல் சம்ஸ்கிருத வார்த்தை. கஜா என்றால் யானை. இந்து மற்றும் புத்த மதங்களில் பயன்படுத்தக்கூடிய வார்த்தை. எனவே இப்பெயரை இலங்கை அரசு தேர்வு செய்தது.

வெறும் கஜாவாக வராமல், மதம் பிடித்த கஜாவாக டெல்டா மாவட்டங்களை பதம் பார்த்துவிட்டது. பெயருக்கு ஏற்றார்போல் தென்னை மரங்களை வேரோடு பிடிங்கியெறிந்து விட்டது. புயலுக்கு ஏற்ற பெயர் பொருத்தம்.

கஜாவின் பாதிப்பிலிருந்தே இன்னும் முழுமையாக மீளாத தமிழகம், பேத்தாய் புயலை (Phethai Puyal) சந்திக்கவுள்ளது. இப்புயலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என டெல்டா மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

பேத்தாய் புயல், தாய்லாந்து நாடு வைத்த பெயர். பேத்தாய் என்றால் தாய் மொழியில், இருண்ட எனப் பொருள். வானம் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என அர்த்தம்.

பேத்தாய் என்றால் zircon கற்களை குறிக்கும். ஜிர்கான் கற்கள் சிவப்பு, பழுப்பு, மஞ்சள், பச்சை, சாம்பல் நிறம் மற்றும் நிறமற்ற கண்ணாடி போன்று காணப்படும். மொத்தத்தில் பார்ப்பதற்கு இருண்ட மேகம் போன்று காட்சி அளிக்கும்.

எனவேதான் தாய்லாந்து இப்பெயரை சூட்டியுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல், வெறும் மேக மூட்டத்துடன் காணப்பட்டால் தமிழகம் தப்பிக்கும். ஜிர்கான் கற்களை மோதிரத்தில் பதித்தும் அணிவார்கள்.

ஆனால், சில ஊடகங்கள் பேத்தாய் புயலை, பெய்ட்டி புயல் என தவறாக உச்சரிப்பு செய்துள்ளது. பேத்தாய் அல்லது பெத்தாய் புயல் எனச் சொல்லுவதே சரியான வார்த்தை ஆகும்.

Phethai means zircon stones. Zircon stones are available in red, yellow, green, Ash and seems like transparent glass as well.

They use zircon stones in rings too.

Thailand country named phethai for this upcoming cyclone. It means darkness. It meant to being a dark sky flooded with clouds.

எங்களுடைய செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும். பேஸ்புக், வாட்ஸ்ஆப் சமூக வலைதளங்களில் சேர் செய்யவும்.

3

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம் – கலோரி 1

0
தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம்

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம். தண்ணீர் அருந்துவதால் தொப்பை பெருத்துக்கொண்டே போவது பற்றித் தெரியுமா?

தொப்பை எதனால் வருகின்றது?

ஒருவர் வேலை செய்யாமல் இருப்பதால் தொப்பை வருகின்றது என சொல்வது மிகப்பெரிய தவறு. ஒருவர் வேலை செய்யாமல் இருப்பது மட்டுமே காரணம் அல்ல.

வயலில் இறங்கி கடுமையாக  வேலை செய்பவர்களுக்கு கூடத் தொப்பை உள்ளது. கட்டுமானத் தொழிலாளிகள் பலருக்கும் தொப்பை உள்ளது. கடினமாக வேலை செய்தாலும் தொப்பை வரும்.

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், நாம் உடலுக்குத் தேவையான கலோரியை விட அதிகமான கலோரியை உள்ளே செலுத்துவது தான். கலோரி என்பதன் தமிழ் பெயர் கனலி.

கலோரி என்றால் என்ன?

ஆரம்ப காலங்களில் வெப்பம் மற்றும் ஆற்றலை அளக்க கலோரி என்ற அலகு பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது ஜூல் என்னும் அலகால் வெப்பம் அளவிடப்படுகிறது.

உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றலை அளக்க மட்டுமே கலோரி அல்லது கனலி என்ற அலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

7,700 கலோரி ஒரு கிலோ உடல் எடைக்குச் சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் 9,000 அல்லது 10,000 கலோரி ஒரு கிலோ எடைக்குச் சமம் எனக்கூறியுள்ளனர். இது உடல் பருமனுக்கு ஏற்றவாறு மாறும்.

ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி

50 கிலோ எடையுள்ள மனிதன் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால், அவனுக்கு ஒரு நாளைக்கு 1700 கலோரி வெப்பம் தேவைப்படும்.  அதே நபர், கடினமாக வேலை செய்தால் 6,500 கலோரி வெப்ப ஆற்றல் தேவைப்படும்.

உடலுக்குத் தேவையான ஆற்றல் என்பது வயதைப் பொருத்தும், உடல் பருமனை பொருத்தும் மாறுபடும். ஒருவர் தனக்குத் தேவையான அளவை விட அதிகம் சாப்பிடுவது உடல் பருமன் அதிகரிக்கும்.

ஒருவர் தனக்குத் தேவையான அளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும். இதற்கு தண்ணீர் ஒருவகைக் காரணம். எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் ஒருவகைக் காரணம்.

அது ஏன், எப்படி என அடுத்த பாகத்தில் பார்ப்போம். கோழி இறைச்சியில் எவ்வளவு கலோரி உள்ளது? பாலில் எவ்வளவு கலோரி உள்ளது?

மேலும், நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது? எந்த வகை உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும்? என அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அதற்குள் நடக்கும் மர்மம் – கலோரி 2

3

அந்த வார்த்தைகளின் அர்த்தம் பற்றித் தெரியுமா?

0
அந்த வார்த்தைகளின் அர்த்தம்

அந்த வார்த்தைகளின் அர்த்தம் பற்றித் தெரியுமா?

ஒரு ஆங்கில வார்த்தைக்கு, 430 அர்த்தங்கள் உள்ளது. பல நூறு அர்த்தங்களை கொண்ட ஆங்கில வார்த்தைகள் நிறைய உள்ளன.

1928-ன் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி பதிப்பு மற்றும் கின்னஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு, அதிக அர்த்தங்களை கொண்ட முதல் பத்து ஆங்கில வார்த்தைகளை கீழே வரிசைப் படுத்தியுள்ளோம்.

10. Strike (ஸ்ட்ரைக்): 250 அர்த்தங்கள்

hit, slap, smack, beat, thrash, spank, thump, thwack, punch, cuff, crack, swat, knock, pummel, pound, batter, pelt, welt, assault

அடி, அறை, வேலைநிறுத்தம் இப்படி 250 அர்த்தங்களை உள்ளடக்கியது.

9. Fall (ஃபால்): 264 அர்த்தங்கள்

drop, drop down, plummet, descend, come down, go down, plunge, sink, dive, nosedive, tumble, pitch.

தொங்கு, இலையுதிர் காலம், விழு என 264 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.

8. Put (புட்): 268 அர்த்தங்கள்

place, set, put down, set down, lay, lay down, deposit, situate, position, settle, leave, stow, prop, lean, plant, pose.

வை, எடு, போடு என்று 268 அர்த்தங்கள் வரை கொண்ட இந்த ஆங்கில வார்த்தை எட்டாவது இடத்தில் உள்ளது.

7. Turn (டர்ன்): 288 அர்த்தங்கள்

go round, revolve, rotate, spin, go round and round, go round in circles, roll, circle, wheel, whirl, twirl, gyrate, swivel, spiral, pivot.

முறை, திருப்பம், சுழற்சி, கலகம் என்று 288 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.

6.  Get (கெட்): 289 அர்த்தங்கள்

acquire, obtain, come by, come to have, come into possession of, receive, gain, earn, win, come into, come in for, take possession of, take receipt of, be given.

பெறு, கிடைக்கும், அடைதல், வெற்றி, ஆட்கொள்ளுதல் என்று 289 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.

5. Stand (ஸ்டாண்ட்): 334 அர்த்தங்கள்

be on one’s feet, be upright, be erect, be vertical, rise, rise to one’s feet, get to one’s feet, get up, straighten up, pick oneself up, find one’s feet, be upstanding

நில், நிறு, நிலையான என்று 334 அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ஸ்டாண்ட்.

4. Take (டேக்): 343 அர்த்தங்கள்

lay hold of, take hold of, get hold of, get into one’s hands, grasp, grip, clasp, clutch, grab, extract, quote, cite, excerpt, derive, abstract, reproduce, copy, cull, choose.

எடு, ஏற்றுக்கொள், அகப்படுத்து, உணவாகக்கொள், மேற்கொள்தல் என்று 343 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.

3. Go (கோ): 368 அர்த்தங்கள்

move, proceed, make one’s way, advance, progress, pass, walk, wend one’s way, travel, journey, repair, remove, retire

செல், கட, முன்னேறு, புறப்படு என்று 368 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. அதிக அர்த்தம் கொண்ட வார்த்தை பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. Run (ரன்): 396 அர்த்தங்கள்

sprint, race, dart, rush, dash, hasten, hurry, scurry, scuttle, scamper, hare, bolt, bound, fly, gallop, career, charge, pound, shoot, hurtle, speed, streak, whizz, zoom, sweep, go like lightning, go hell for leather, go like the wind, flash, double

ஓட்டம், செல், இயக்கு என 396 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. அதிக அர்த்தம் கொண்ட வார்த்தை பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. Set (செட்): 430 அர்த்தங்கள்

put, place, put down, lay, lay down, deposit, position, settle, station, leave, stow, prop, lean, stand, plant, pose, dispose, informal stick, dump, bung, park, plonk, plump, pop

தொகுப்பு, கும்பல், பொருத்து, நாடக அரங்கம், அமைப்பு என்று 430 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. இது ஆங்கில வார்த்தைகளிலேயே, அதிக அர்த்தங்களை உள்ளடக்கிய வார்த்தை.

அதிக அர்த்தம் கொண்ட அந்த வார்த்தைகளின் அர்த்தம் பற்றி தற்பொழுது அறிந்து கொண்டிருப்பீர்கள். மீண்டும் மற்றொரு பதிவில் உரையாடுவோம்.

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் வாட்ஸ்ஆப்குழுவில் இணையுங்கள். join whatsapp group

3

ராமர் பிள்ளையின் மரண வாக்குமூல வீடியோ!

0
ராமர் பிள்ளையின்

 

ராமர் பிள்ளையின் மரண வாக்குமூலம் என்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ராமர் பிள்ளை, நீண்ட நாட்களாக மூலிகை எரிபொருள் கண்டுபிடித்துள்ளேன் என மீடியா முன்பு தோன்றிக்கொண்டே இருந்தார்.

இவருடைய கண்டுபிடிப்பை வெளிக்கொண்டு வரவேண்டும் என லெட்ஸ் மேக் என்ஜினியரிங் சிம்பிள் என்ற குழு முயன்றது.

அவர்களுக்கு சோதனை செய்து காட்டும்போது, ராமர்பிள்ளை ஏமாற்றுவதை கண்டுபிடித்தனர். அதை ஆதாரத்துடன் வீடியோவாகவும் வெளியிட்டனர்.

அதன் பின்னரும் மீடியா முன் தோன்றிய ராமர் பிள்ளை, தன்னுடைய கண்டுபிடிப்பு உண்மை எனக்கூறினார். சீமான் தலைமையில் கண்டிப்பாக வெளியிடுவேன் எனவும் கூறினார்.

LMES குழுவின் நேரடி சவாலிற்கு தயார் என அதிரடியாக அறிவித்தார். ராமர் பிள்ளை இல்லை, இனி ராமர் என அழையுங்கள் எனச் சொன்னார்.

தற்பொழுது யூடியூப் வலைத்தளைத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கும், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் தன்னுடைய கருணை மனு என வீடியோவில் பேசியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன் இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் ரகசியச் சந்திப்பு நடந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ராமர் பிள்ளை தொடர்ந்து குழப்பவாதியாகவே உள்ளார்.

யாரோ ஒரு நபரிடம் மூலிகை எரிபொருள் கண்டுபிடித்துள்ளேன் எனக்கூறி பண மோசடி செய்துள்ளார்.

அந்த நபரிடம் இருந்து தப்பிக்கவே, அரசியல் பிரபலங்களை தெரியும் எனக்கூறி ஏமாற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

 

3

போலி என்கவுண்டர்: சிக்குவாரா நரேந்திர மோடி?

0
போலி என்கவுண்டர்

போலி என்கவுண்டர்: சிக்குவாரா நரேந்திர மோடி? உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி.

2002 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் 22 என்கவுண்டர்கள் நடந்தது. இதில் ஒரு சமுதாய மக்கள் கொல்லப்பட்டனர். அனைவரும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காரணம் கூறப்பட்டது.

அக்காலகட்டத்தில், குஜராத்தின் பிரதமராக பதவி வகித்தவர் நரேந்திர மோடி. போலி என்கவுண்டர் செய்யப்பட்ட 22 பேரில், பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அப்பாவிகள் எனவும், அரசியல் லாபத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை, 2007-ல் பி.ஜி.வர்கீஸ் மற்றும் ஜாவித் அக்தர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தனர். 2012-ல் முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அந்தக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த வழக்கால் மோடிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், மோடி பிரதமராக பதவி வகிக்கும்போது, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது பலரால் பாராட்டப்பட்டுள்ளது.

3

நெல் ஜெயராமன் இல்லையேல், தமிழன் கதி?

0
நெல் ஜெயராமன் செய்த மகத்தான தொண்டுதாது வருட பஞ்சம் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்

நெல் ஜெயராமன் இல்லையேல், தமிழன் கதி? தாது வருட பஞ்சம் பற்றி தெரியுமா? ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு!

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஆனால் இந்தியாவில் விவசாயம் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. டெல்லியில் சமீபத்தில் நடந்த இந்திய விவசாயிகளின் ஊர்வலமே அதற்குச் சான்று.

தாது வருட பஞ்சம்

உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. யானை வைத்துப் போர் அடித்தவன் தமிழன். 1876-78-ல் தஞ்சை மக்களேகூட சோற்றுக்கு கையேந்தும் நிலை வந்தது.

தெனிந்தியாவில் ஆரம்பித்த தாது வருடப் பஞ்சம், வட இந்தியா வரை தலைவிரித்து ஆடியது. பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில். இப்பஞ்சத்தில் மாண்டவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1 கோடி மக்கள்.

காரணம், மழை இல்லை என்பது ஒரு புறம். பஞ்சத்தையும் பொருட்படுத்தாமல் பிரிட்டிஸ் அரசு, நெல் மணிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. இதனால், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

விதைக்க வைத்திருந்த நெல்லை சமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் தமிழன். எறும்பு வலைகளை வெட்டி, அதில் இருந்த நெல் மணிகளை உண்டவர்களும் உண்டு.

மலைமருந்தனின் கும்மிப்பாட்டே அதற்கு சான்று.

வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை
விற்கவும் கையில் இல்லாமல் கடன்
கேட்ட இடத்தில் கிடைக்காமல் சிலர்
கெஞ்சி இரக்கிறார் பாருங்கடி

எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம் தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி

குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே
ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி

அடுத்த வருடம் மழை வந்தாலும், விதைக்க நெல் இல்லை. பஞ்சத்திற்கு மேல் பஞ்சம். ஒரு அரசு முறையாக விவசாயத்தை பாதுகாக்கவில்லை எனில், பஞ்சத்தில் அடிபட்டு மாள்வது உறுதி.

ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு

அப்போது புரியும், நெல் ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு. அவர் மீட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் ஏராளம். கடைக்கோடி விவசாயியை தேடிச்சந்தித்துப் பல நெல் மணி ரகங்கள் அழிந்துபோகாமல் மீட்டெடுத்தார்.

அவர் அப்படி செய்யவில்லையெனில், இன்று பாதிக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் மணிகள் காணாமலே போயிருக்கும். மீண்டும் ஒரு பஞ்சம் வந்தால், மரபணு மாற்றப்பட்ட பயிரை நம்பி மாள்வது உறுதி.

நெல் மணிகளுக்காக அயலவர்களிடம் கையேந்தும் நிலை உருவாகும். இப்பொழுதும் முறையாக சேமிக்கும் திட்டம் இல்லை. விவசாயிகள் மட்டுமே, தனிப்பட்ட முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருகின்றனர்.

அரசு பெரும்பாலும் பாரம்பரிய நெல் உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை. குறைந்த நாட்களில் அறுவடை செய்யும் அயல்நாட்டு நெல் ரகங்களே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு விவசாயியும் நெல் ஜெயராமனாக மாறினால் மட்டுமே உணவிற்காக அடிமையாவதை தடுக்க முடியும்.

3

கதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!

0
கதிகலங்கும் மல்லையா

கதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!

மிஸ்டர் புயல் இணையதளத்தில், ‘விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு‘ என்கின்ற தலைப்பில், கடந்த செப்டம்பர்  மாதம் ஒரு செய்தி வெளியிட்டோம்.

 விஜய் மல்லையாவின் டுவீட், அந்த செய்தியை நூறு சதவீதம் உறுதி செய்துவிட்டது.

“I see the quick media narrative about my extradition decision. That is separate and will take its own legal course. The most important point is public money and I am offering to pay 100% back. I humbly request the Banks and Government to take it. If payback refused, WHY ?

விஜய் மல்லையா பணத்தை திருப்பித்தர தயாராக உள்ளார். இந்தியாவை விட்டு செல்லும் முன்பே இதைத்தான் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திலும், பாஜக தலைவர்களிடமும் பலமுறை முறையிட்டுள்ளார்.

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில், பிரிட்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. அந்தத் தீர்ப்பை நினைத்து கதிகலங்கியே மல்லையா, டிவிட்டரில் கதறியுள்ளார்.

விஜய் மல்லையா 20000 கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும், பாஜக அதை வாங்க தயாராக இல்லை. பாஜகவின் குறிக்கோள் மல்லையாவை சிறையில் அடைப்பது தான்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், மல்லையாவை சிறையில் அடைப்பதின் மூலம், பாஜக இழந்த செல்வாக்கை மீட்டுவிடலாம் என பல மாதங்கள் முன்பே திட்டம் தீட்டிவிட்டது.

இதன் காரணமாகவே, மல்லையா கடந்த சில மாதங்கள் முன்பு, சொகுசு வசதிகளுடன் சிறை வேண்டும் என பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

அதாவது, இந்தியாவிடம் இருந்து தப்ப முடியாது என முன்பே தெரிந்துகொண்டு விட்டார். நாடாளுமன்ற தேர்தலிற்கு பின்பு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தப்பிவிடலாம் என நினைத்தார்.

பாஜக அரசு, விஜய் மல்லையா என்ற அஸ்திரத்தை வைத்துதான் அரியணையை பிடிக்க முடிவு செய்துள்ளது. எனவே விஜய் மல்லையா, வெகுவிரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய் மல்லையா, பாஜகவின் பலி ஆடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

3

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?

0
ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை? ஆரா என்றால் என்ன? பறவை இறப்பது எதனால்? பிஃப்த் போர்ஸ் நெகட்டிவ் எனர்ச்சி

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை? ஆரா என்றால் என்ன? பறவை இறப்பது எதனால்? பிஃப்த் போர்ஸ் – நெகட்டிவ் எனர்ச்சி இது உண்மையா? 2.0  படம் சொல்வது என்ன?

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?

2.0 படத்தின் பிரமாண்டத்தை கண்டு இந்திய சினிமாவே மெய்சிலிர்த்துபோய் உள்ளது. அதே நேரத்தில் படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துகளும் பேசப்பட்டு வருகின்றது.

பிஃப்த் போர்ஸ் (Fifth Force), ஆரா (Aura), பாசிட்டிவ் நெகட்டிவ், செல்போன் கதிர்வீச்சு இந்த நான்கு விஷயங்களுமே ஒன்றுடன் ஒன்று முரண் பட்டுள்ளது.

2.0 சயின்ஸ் பிக்சன் மற்றும் பேண்டசி திரைப்படம். அதாவது அறிவியல் பூர்வமான கற்பனைக் கதை. உண்மையில் கற்பனைக்கதை. ஆனால் படத்தில் அறிவியல் இல்லை.

ஆரா என்றால் என்ன?

வசீகரன் ஆராவை பற்றி விளக்கும்போது, உடலை சுற்றி ஆவி உள்ள காட்சிகள் இடம்பெறும்.

கிரில்லியன் கேமரா வழியே பார்த்தால், ஆரா தெரியும் எனக் கூறி சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடந்தது. அந்தக் கேமராவில் பார்க்கும்போது ஒரு மர்ம உருவம் மனித உடலுடன் காணப்பட்டது.

நம் உடலின் வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதத்தில் எந்த அளவிற்கு விரிந்து உள்ளதோ? அந்த அளவிற்கு, ஒரு பெரிய உருவம் நம்மை சுற்றி உள்ளது போன்று காணப்படும். அதைத் தான் தவறாக ஆரா எனக்கூறுகின்றனர் என நிரூபிக்கப்பட்டது.

நம் செல்போனில் கூட, பாடி சென்சார் (body sensor) என்ற ஒன்று உள்ளது. நம் வெப்பநிலையை வைத்து நாம் அருகில் உள்ளோமா? இல்லையா? எனக் கண்டறியும். இதைத்தான் சங்கர் ஆரா எனக்கூறி குழப்பிவிட்டுள்ளார்.

பிஃப்த் போர்ஸ்

புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான நியூக்ளியர், வலுவிழந்த நியூக்ளியர் இந்த நான்கு விசைகள் புவியில் செயல்படுகிறது. இதற்கு அப்பாற்பட்ட கண்ணிற்குப் புலப்படாத விசையை பிஃப்த் போர்ஸ் எனக்கூறுவார்கள்.

இதன் மூலம் தான் செல்போன் பறக்கிறது. அதாவது பக்ஷிராஜன் ஆவி பறக்க வைக்கிறது. ஆவி எனக்கூறினால் இது ஒரு பேய் படம் எனக்கூறிவிடுவார்கள். அதற்குத்தான் சுற்றிவளைத்து மூக்கை தொட்டுள்ளார் ஷங்கர்.

நெகட்டிவ் எனர்ச்சி

பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜி. இதில் பாசிட்டிவ் எனர்சியை மட்டும் விண்வெளிக்கு அனுப்புகின்றார்களாம். வேற்றுகிரகத்தில் உள்ள பாசிட்டிவ் வைப்ரேசனை இது அடையாளம் காணுமாம்.

இருப்பதிலேயே பெரும்குழப்பம் இது தான். வேற்றுகிரகத்தில் ஒரு இனம் இருந்தால், அது நம்மைவிட பலம் வாய்ந்ததாக இருக்குமா? அல்லது பலம் குறைந்து இருக்குமா? என ஒரு அய்யம் உள்ளது.

அதையும் மீறி, பூமியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ காட்சியுடன் ஒரு சேட்டிலைட் எப்பொழுதோ அனுப்பப்பட்டுவிட்டது.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் இருந்தால், அந்த சேட்டிலைட் மூலம் பூமி என்ற ஒரு கோள் இருப்பதை அறிந்துகொள்வார்கள்.

வேற்றுகிரகவாசிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எப்படித் தெரியும். அதேபோன்று தான் இந்தப் பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜியும். இரண்டும் ஒரே சமயத்தில் உணரக்கூடிய ஒன்று. தனித்தனியாக இதைப் பிரிப்பது என்பது முடியாத ஒன்று.

செல்போன் கதிர்வீச்சு

செல்போன் கதிர்வீச்சு மூலம் பறவை இறந்துள்ளது. ஆம் என்பதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை. இல்லை என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. சமீபத்தில் ஒரு 5G வீடியோ வைரலானது. அது போலி எனப் பின்பு தெரியவந்தது.

அது போன்றுதான் செல்போன் கதிர்வீச்சும். இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. இதில் கார்பரேட் குறுக்கிட வேலையில்லை.

ஏதாவது, ஒரு நாட்டிலாவது உண்மை என நிருபிக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. இருக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் என எங்கும் சொல்லவில்லை.

மேலும் பறவை இறப்பதற்கு கதிர்வீச்சு மட்டுமே காரணம் எனச்சொல்வது மிகப்பெரிய முட்டாள் தனம்.

பறவை இறப்பது எதனால்?

பறவை செல்போன் கோபுரங்கள் மீது மோதி இறக்கின்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதாவது, குறைந்த ஒளியில் அல்லது இரவில் பறவைகள், கண் தெரியாமல் செல்போன் கோபுரங்கள் மீது மோதி இறந்துள்ளது.

விமானத்தில் கூட பறவைகள் மோதி இறக்கின்றன. அதனால் தான் விமானத்திற்கு வெள்ளை நிறம் அடிக்கப்படுகின்றது. கண்ணாடி கட்டிடங்களில் கூட மோதி இறக்கின்றன.

மேலும், சிட்டுக்குருவி என்ற இனம் மனிதனோடு, மனிதன் வசிக்கும் வீட்டிலேயே கூடு கட்டி வாழ்ந்த இனம்.

திடிரென மனிதன் அடுக்குமாடி வீடுகளை எழுப்பியதும் குருவிகளின் இருப்பிடம் கேள்விக் குறியாகின்றது?

சிட்டுக்குருவிகள் காடுகளில் வசிக்கும்போது, கழுகு போன்ற பெரிய பறவைகளுக்கு இரையாக வேண்டிய சூழலும் உருவாகின்றது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த தானியம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இறந்த புழுக்களை உண்பது கூட ஒருவகை காரணங்களே!

புவி வெப்பமயமாதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மனிதனே ஊட்டி, சிம்லா என இருப்பிடத்தை மற்ற நினைக்கும்போது, பறவை மட்டும் அதே இடத்தில் வாழுமா?

இந்த உலகில் பறவை ஒன்றே சுதந்திர விலங்கு. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்கும்.

இயற்கை சீற்றங்களை முன்பே கண்டறிந்து, இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் குணமும் கொண்டது.

எனவே, 2.0 படம் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை விளக்கவே இந்தப் பதிவு.

எங்கள் செய்திகளைப்பற்றி கருத்துச்சொல்ல விரும்பினால் கீழே கமெண்ட் செய்யவும். எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும் Join WhatsApp

3