Home Blog Page 36

ஓடிடி தளத்தில் வெளியாகும் யோகி பாபுவின் புதிய படம்!

0
Cocktail Release On Zee5

Cocktail; ஓடிடி தளத்தில் வெளியாகும் யோகி பாபுவின் புதிய படம்! பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்களைப் போன்று யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் வெளியாக இருக்கிறது.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகிய படங்களைப் போன்று யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகயிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. நயன்தாராவை காதலிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

கூர்கா, தர்மபிரபு, ஜாம்பி என்று வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது டிக்கிலோனா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, பன்னிகுட்டி, கடைசி விவசாயி, டேனி, கன்னி ராசி, வெள்ளை யானை, காக்டெய்ல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் காக்டெய்ல். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், மனோபாலா, மைம் கோபி, சாமிநாதன், ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் காக்டெய்ல் என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடாமல், ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 10 ஆம் தேதி இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.

இதற்கு முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும், கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

திங்கள்கிழமை வெளியாகும் “தும்பி துள்ளல்” பாடல், சியான் விக்ரமின் “கோப்ரா” , இசை ஏ.ஆர். இரகுமான்

தும்பி துள்ளல்

சியான் விக்ரம் “கோப்ரா” என்ற தலைபில் புதிய படத்தில் நடித்து வருகிறார் மற்றும் அந்த படத்தில் அதிக வேடங்களில் அவர் வருவதாக தெரிகிறது. இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது முந்திய படங்களை இரசிகர்களை கவரும் விதத்தில் படைத்திருந்தார். இந்திலையில் “தும்பி துள்ளல்” என்ற தலைப்பில் “கோப்ரா” பட பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகி இரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகி இரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இந்த அறிவிப்பால் இரசிகர்கள் மத்தியில் “கோப்ரா” படத்திற்க்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏ.ஆர். இரகுமானால் இசை அமைக்கப்பட்ட ‘தும்பி துள்ளல்’

ஏ.ஆர். இரகுமானால் இசை அமைக்கப்பட்ட ‘தும்பி துள்ளல்’ வரும் ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இனையதளத்தில் வெளியிடப்படும் என இரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார் மற்றும் இது படத்தில் ஒரு திருமண நிகழ்வில் பங்குபெறும் பாடலாக இருக்கும் என எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் உள்ளது.

 

3

சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை

சேலம்: சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு. இதை முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நீதிபதிகளிடம் தெரிவிக்கப்படும்

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் இந்த செய்தி அடுத்த உயர் நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

சி.பி.ஐ யிடம் ஒப்படைப்போம்

“சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது நாங்கள் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இவ்வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைப்போம்,” என அவர் தெரிவித்தார்.

பி.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்

காவல் துறையின் தாக்குதல் குறித்தி எதையும் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பி.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மொபைல் கடை மூடுதல் குறித்த வழக்கில் கைதானார்கள். “ இருவரும் இறப்பதற்கு முன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார்கள்,” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

3

வைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பு புகைப்படங்கள்!

0
Mersal Movie

Thalapathy Vijay; வைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள்! தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெர்சல் பட படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மெர்சல்.

இந்தப் படத்தில் விஜய், வெற்றி மாறன், மாறன் மற்றும் வெற்றி என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

வெற்றி மாறன் மல்யுத்த வீரனாகவும், மாறன் டாக்டராகவும், வெற்றி மேஜிக்மேனாகவும் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆதலால், இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், தடையையும் மீறி மெர்சல் திரைக்கு வந்து ரூ.260 கோடிக்கும் அதிகமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது.

மெர்சல் ஆல்பம் 3 ஆண்டுகளைக் கடந்து யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போன்று சர்கார் படத்தின் ஹெச்டி புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

3

அய்யோ கரண்ட் பில் ஒரு லட்சமா? கொந்தளித்த நடிகை கார்த்திகா நாயர்!

0
Karthika Nair EB Bill

Karthika Nair; அய்யோ கரண்ட் பில் ஒரு லட்சமா? கொந்தளித்த நடிகை கார்த்திகா நாயர்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஒரு லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.

கரண்ட் பில் ஒரு லட்சம் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.

ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர், நடிகை ராதாவின் மகள்.

கோ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அண்ணக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வா டீல் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது.

அதன் பின் போடப்பட்ட மின் கட்டணம் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நடிகை கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னவிதமான மோசடியை மும்பையில், செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜூன் மாதம் மட்டும் மின் கட்டணம் ஒரு லட்சம் வந்துள்ளது. மும்பையில் இருக்கும் மற்றவர்களிடம் இருந்து இது போன்று புகார்கள் வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Karthika Nair Twitter

3

மரகதவள்ளி என்ற மேகி: 18 வருடங்கள் ஆன கமலின் பஞ்சதந்திரம்!

0
18YearsOfPanchatanthiram

Kamal Haasan Panchatanthiram; மரகதவள்ளி என்ற மேகி: 18 வருடங்கள் ஆன கமலின் பஞ்சதந்திரம்! கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படம் திரைக்கு வந்து இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கமல் நடித்த பஞ்சதந்திரம் திரைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திரைக்கு வந்த காமெடி படம் பஞ்சதந்திரம்.

முதலில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர், சிறிய பட்ஜெட் படம் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக தேவா மாற்றப்பட்டார்.

ஐந்து நண்பர்களுக்கு இடையில் நடக்கும் கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனக்கே உரிய ஸ்டைலில் காமெடியாக கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கனடாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 17 நாட்கள் கனடாவில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு லாஸ் ஏஞ்செல்ஸ் செல்வதற்காக டொரோண்டா விமான நிலையத்திற்கு கமல் ஹாசன் வந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கமல் ஹாசனிடம் தவறாக பேசியுள்ளார்.

இதையடுத்து, இருவருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று, தணிக்கைக்கு சென்ற போது இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தணிக்கைக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இடம்பெற்றிருந்த பாடல் நீக்கப்பட்டது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்த படம் பஞ்சதந்திரம். இந்த படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதன் காரணமாக ஹலோவில் 18YearsOfPanchatanthiram என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், PanchatanthiramScenes என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

3

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

0
Rajinikanth

Rajinikanth; ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரஜினி பேசியதாக கராத்தே தியாகராஜன் தகவல்! சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினரை ரஜினிகாந்த் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ் குடும்பத்தினரை ரஜினிகாந்த் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

3

கொரோனாவல் பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் சேவைகளை மட்டும் இயக்க தொடர்வண்டி துறை முடிவு

பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில்

சென்னை: மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா பரவி வரும் நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் சேவைகளை மட்டும் இயக்க தொடர்வண்டி துறை முடிவு செய்துள்ளது.

பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் விவரங்கள்

மாநில அரசிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில், தெற்கு இரயில்வே ஜூன் 29 முதல் திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி(விருத்தாசலம் வழி), திருச்சி – செங்கல்பட்டு- திருச்சி(மயிலாடுதுறை வழி), அரக்கோணம் – கோவை – அரக்கோணம், மதுரை – விழுப்புரம் – மதுரை, கோவை – காட்பாடி – கோவை, கோவை – மயிலாடுதுறை – கோவை மற்றும் திருச்சி – நாகர்கோவில் – திருச்சி தினசரி சிறப்பு தொடர்வண்டி ஆகிய இரயில் சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு தொகை திரும்ப வழங்கப்படும்

இரத்து செய்யப்பட்ட இரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் மற்றும் ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தானாகவே திரும்ப வங்கி கணக்கிற்கு தொகை வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக இரயில் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 6 மாதங்களுக்குள் தொகை திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

3

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி!

0

Director Hari; காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி! சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக 5 படங்கள் எடுத்ததற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ஹரி. இவரை போலீஸ் இயக்குநர் என்று அழைப்பதும் உண்டு.

இவரது பெரும்பாலான படங்களில் போலீஸ் கதைதான் முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த வகையில், சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என்று காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக 5 முக்கியமான படங்களை எடுத்துள்ளார்.

தற்போது அதற்கு வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஹரி தன் பங்கிற்கு ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் சம்பவம் போன்று இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது.

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையை இன்று களங்கப்படுத்தியுள்ளது.

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது: அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Hari Film Director

3