Home Blog Page 37

புல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

0
Shraddha Srinath Bike Video

Shraddha Srinath Bike Video; புல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்! நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டும் போது கீழே விழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் புல்லட் ஓட்டும் போது கீழே விழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, கே-13, காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. அப்போதுதான் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தில், நடித்து, ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுவும் தைரியமான ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். நேற்று சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அவர் பைக் ஓட்டும் வீடியோ. தான் பைக் ஓட்டுவதற்கு பழகி வரும் நிலையில், ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று கூறி ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்வளவு வெயிட்டா இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

இதில், கொடுமை என்னவென்றால், அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த போது என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.

புல்லட்டுக்கு எந்த சேதாரமும் ஆகவில்லை என்று தான் அனைவரும் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஹலோவில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் வீடியோ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Shraddha Srinath

3

தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி!

0
Dhananjayan Brother Passed Away

Dhananjayan; தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி! பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் தனஞ்செயன். இவரது மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தயாரிப்பாளர் தனஞ்செயனின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களில் தனது மூத்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சகோதரரின் குடும்பத்திற்கு சிகிச்சை அளிக்க உதவி செய்த தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆகியோருக்கு தனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றாமல் இருக்கவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

0
கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு. விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 18 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: நேற்று விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குக்கு 18 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 -ஆக உயர்ந்துள்ளது. 18 மாத குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நீர்பெருந்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் (18 மாதங்கள்) ஹேமந்த் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26. 6 .2020 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பிறகு குழந்தைக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சொத்தை முடிவுகள் வருவதற்குள் குழந்தை நேற்றிரவு இறந்துவிட்டது. இதன்பின்னர் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் சொந்த ஊர்க்கு சென்று குழந்தையின் உடலை எரித்து விட்டனர். இதன் பின்னர் தான் கொரோனா பரிசோதை முடிவு பாசிடிவ் என்று வந்துள்ளது. தற்போது குழந்தையின் பெற்றோர் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3

பீட்டர் பாலின் மீது முதல் மனைவி புகார்: அதிர்ச்சியில் வனிதா!

0
Peter Paul First Wife Complaint

Peter Paul First Wife Complaint; பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார்! வனிதா 3ஆவதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் முதல் மனைவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.

வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று கிறிஸ்துவ முறைப்படி மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில், வனிதாவின் மகள்களாக ஜோவிகா மற்றும் ஜெயந்திகா இருவரும் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில், பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் 3ஆவது கணவர் பீட்டர் பால் தனது முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யவில்லை என்று அவரது முதல் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

பீட்டர் பால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது வனிதாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் 3ஆவது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி புகார் அளித்ததன் காரணமாக ஹலோவில் பீட்டர் பால் மனைவி புகார் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

ஹலோவில் டிரெண்டாகும் HarishKalyanBdayCDP: வைரலாகும் ஹரிஷ் கல்யாண் எழுதிய கவிதை!

0
HarishKalyanBdayCDP

HarishKalyanBdayCDP; ஹலோவில் டிரெண்டாகும் HarishKalyanBdayCDP: வைரலாகும் ஹரிஷ் கல்யாண் எழுதிய கவிதை! ஹரிஷ் கல்யாண் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், HarishKalyanBdayCDP என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஹரிஷ் கல்யாணின் ஆசை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.

இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.

தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். இதன் காரணமாக HarishKalyanBdayCDP என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அதோடு, ஹரிஷ் கல்யாணின் ஆசை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஆசையை கவிதையாக எழுதியுள்ளார்.

இப்போது இருக்கிற இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னால், இருக்க பிடிக்கவில்லை. எனக்க பறக்க வேண்டும். அந்த நட்சத்திரங்களை தொட வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.

நான் உயரமாக பறந்து நட்சத்திரங்களை தொட வேண்டும்

ஆத்மாத்மாக பாடவேண்டும்

உங்களது முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும்

இயற்கையை கட்டியணைத்து அழ வேண்டும்

ஒரு பழத்தை எடுக்க வேண்டும்

அதனை சேமிக்க வேண்டும்

ஓ கடவுளே

என் இதயங்களை அவிழ்த்துவிட்டு, என்னை விடுவிக்க வேண்டும்

இந்த குழப்பத்தை நான் வெறுக்கிறேன்

நீங்கள் என்னை கேட்கிறீர்களா? என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

யூடியூப்பில் நம்பர் ஒன் இடத்தில் விஷாலின் சக்ரா டிரைலர்!

0
Chakra Trailer

Chakra Trailer; யூடியூப்பில் நம்பர் ஒன் இடத்தில் விஷாலின் சக்ரா டிரைலர்! விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் யூடியூப்பில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சக்ரா. இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சக்ரா டிரைலரில் கூறியிருப்பதாவது: மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தி வங்கியில் கொள்ளையடிக்கும் வங்கி கொள்ளையரை விட சைபர் ஹேக்கர் ஒன்றுமில்லை.

அவர்களது முயற்சி திருட்டு மற்றும் கொள்ளை. சுதந்திர தினம் என்று கூட பார்க்காமல் சென்னையைச் சுற்றிலும் 49 வீடுகளில் மர்ம கும்பல் தங்களது கைவரிசையை காட்டி கொள்ளையடித்துள்ளனர்.

அதில், ஒருவீடு ராணுவ அதிகாரி நாசரின் வீடு, அவரது வீட்டில் இருந்த அசோக சக்ரா விருதை மர்ப கும்பல் கொள்ளையடித்து சென்றுவிடுகிறது.

மற்ற வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீஸ் அதிகாரி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ராணுவ அதிகாரி வீடு என்பதால், அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு கும்பலை பிடிக்கும் விஷால் படையெடுக்கிறார்.

ஒரு நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க ஒரு தேசிய பாதுகாப்பு குழு செய்யும் ஆராய்ச்சியை விட, ஒரு சராசரி மனிதனின் தேவைகளையும், அவனது ஆசைகளையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி செய்யும் ஆராய்ச்சி தான் அதிகமா?

நிச்சயமாக நாம் தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் நமது கண்ணுக்கே தெரியமாட்டான். இப்போது தான் சீண்டி விட்டிருக்கிறேன். இந்த கேம் பிகின்ஸ் நவ்.

இறுதியாக, கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமல்ல, வைரஸ் நெட்வொர்க்கும் ஆபத்தானது தான் என்று தேடப்படும் கிரிமினல் கூறுவது போன்று இந்த சக்ரா டிரைலர் முடிகிறது.

படத்தில், நாசரின் மகனாக விஷால் நடித்திருப்பார் என்று தெரிகிறது. நாசரின் இறப்புக்குப் பிறகு அவரது வேலையில் விஷால் சேர்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் சக்ரா படம்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சக்ரா டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் யூடியூப்பில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

நேற்று வெளியான சக்ரா டிரைலரை 12 மில்லியன் பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். மேலும், 97 ஆயிரம் பேர் லைக்ஸும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹலோவில் டிரெண்டாகும் VJSMassLook: வைரலாகும் புகைப்படங்கள்!

0
VJS Mass Look

Vijay Sethupathi; 9 வருடங்களுக்குப் பிறகு வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள்! கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறுகிய கால இடைவெளியில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் கொண்டவர். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பு காட்டக்கூடியவர்.

ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினியால் மகாநடிகன் என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.

இவரது நடிப்பில் வந்த நானும் ரௌடி தான், சேதுபதி, பேட்ட, சூப்பர் டீலகஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அண்மையில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது. தற்போது கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், க/பெ.ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதன் காரணமாக VJSMassLook ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

3

எனக்கு பறக்க வேண்டும்: ஹரிஷ் கல்யாணின் ஆசை: வைரலாகும் கவிதை!

0
Harish Kalyan

Harish Kalyan; ஹரிஷ் கல்யாணின் ஆசை: வைரலாகும் கவிதை! நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ஆசையை கவிதையாக எழுதியுள்ளார். தற்போது இந்த கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாணின் ஆசை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.

இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.

தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஹலோவில் ஹரிஷ் கல்யாணின் ஆசை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஆசையை கவிதையாக எழுதியுள்ளார்.

இப்போது இருக்கிற இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னால், இருக்க பிடிக்கவில்லை. எனக்கு பறக்க வேண்டும். அந்த நட்சத்திரங்களை தொட வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.

நான் உயரமாக பறந்து நட்சத்திரங்களை தொட வேண்டும்

ஆத்மாத்மாக பாடவேண்டும்

உங்களது முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும்

இயற்கையை கட்டியணைத்து அழ வேண்டும்

ஒரு பழத்தை எடுக்க வேண்டும்

அதனை சேமிக்க வேண்டும்

ஓ கடவுளே

என் இதயங்களை அவிழ்த்துவிட்டு, என்னை விடுவிக்க வேண்டும்

இந்த குழப்பத்தை நான் வெறுக்கிறேன்

நீங்கள் என்னை கேட்கிறீர்களா? என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Oh Lord My God,
I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later….
Oh Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos
Do u hear me !
-Harish

3

தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு: கர்நாடகா துணை முதல்வர்!

0
Ajith Dhaksha Team

Ajith Dhaksha Team; தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு: கர்நாடகா துணை முதல்வர்! தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கார், பைக் ரேஸ் என்று அனைத்திலும் கலக்கும் வல்லமை படைத்தவர். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், தக்‌ஷா குழு மூலமாக ட்ரோன் உருவாக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது இந்த தக்‌ஷா குழு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரையில் இந்த ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூலை மாதத்திலும் லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில், தற்போது தக்‌ஷா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம், மருத்துவமனை உள்ளிட்ட மிக குறுகலான, நெரிசலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தல அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் முன் வந்துள்ளனர். இதன் காரணமாக #AJITHLedDroneToFightCorona என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் அண்மையில், டிரெண்டானது.

ஏற்கனவே, தக்‌ஷா குழுவினர், கடந்த மார்ச் மாதம், 3 லட்சம் சதுர கிமீ பரப்பளவு சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமாக கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமி நாசினை தெளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மறுபடியும் தக்‌ஷா குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தல அஜித்தின் தக்‌ஷாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அஜித்தின் அறிவுறுத்தலின் படி, ட்ரோன்கள் மூலம் பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், பல நிறுவனங்கள் நல்ல பல விஷயங்களுடம் வருகின்றன. தற்போது இன்று முற்றிலும் கொரோனாவை ஒழிப்பதற்கு அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழகம், தக்‌ஷா, சுகர்தனா ஆகியோர் முன்வந்துள்ளனர்.

அவர்களுக்கு எனது மனதார பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக ஹலோவில் அஜித்தின் ஐடியா வைரல் என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

3

Master Karaoke; மாஸ்டர் கரோக்கி: குட்டி ஸ்டோரி Karaoke Version வெளியீடு!

0
Master Kutty Story Karaoke

Master Kutty Story Karaoke; மாஸ்டர் கரோக்கி: குட்டி ஸ்டோரி Karaoke Version வெளியீடு! தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலின் மாஸ்டர் கரோக்கி Karaoke Version வெளியாகியுள்ளது.

குட்டி ஸ்டோரி பாடலின் மாஸ்டர் கரோக்கி Karaoke Version வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், பிரேம், நாசர், பிரிகிதா, பூவையார், ரமேஷ் திலக், ரம்யா சுப்பிரமணியன், தீனா, கௌரி கிஷான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், மாஸ்டர் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மாஸ்டர் எப்போது, திரைக்கு வரும் என்று யாருக்குமே தெரியாத நிலையில், மாஸ்டர் டீசர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாஸ்டர் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல், அந்த கண்ண பாத்தாக்கா ஆகிய பாடல்களின் கரோக்கி வெர்ஷன் வெளியாகியுள்ளது.

ஆம், மாஸ்டர் கரோக்கி குட்டி ஸ்டோரி Karaoke Version வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரோக்கி என்றால், ஒரு பாடலின் வரிகள் இல்லாமல் அதன் இசைத்தொகுப்பை மட்டுமே ஒலிப்பதும், அந்த பாடல் வரிகள் யாவும் சரியான நேரத்தில் திரையில் ஒளிபரப்பு செய்யப்படுவது ஆகும்.

அந்த வகையில் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடல் வெறும் மியூசிக் மற்றும் பாடல் வரிகளோடு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3