Home Blog Page 38

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – சூர்யாவின் கண்டன அறிக்கை!

0
Suriya Sathankulam Issue

Suriya; அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம்! சாத்தான்குளம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ளா சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது: அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Suriya Statement

3

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18552 புதிய கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா தொற்று 5 இலட்சத்தை தாண்டியது

18552 புதிய கொரோனா தொற்றுகள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18552 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதை அடுத்து, நாட்டின் மொத்த கொரோனா தொற்று 5 இலட்சத்தை தாண்டியது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 5,08,953 ஆக உள்ளது.

குணமடைபவர்களின் எண்ணிக்கை 58.13% ஆக உள்ளது

இதில் 1,97,387 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,95,881 கொரோனா பாதிப்பாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைபவர்களின் எண்ணிக்கை 58.13% ஆக உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,685 ஆக உள்ளது.

மாராட்டியம் கொரோனாவால் தொடர்ந்து  முதலிடம்

மாராட்டியம் கொரோனாவால் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு 1,52,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 79,815 பேர் கொரோனாவிடமிருந்து குணமடைந்து உள்ளனர் மற்றும் 65,844 பேருக்கு இன்னும் பாதிப்பு இருக்கிறது. இம்மாநிலத்தில் இதுவரை 7,106 பேர் இந்நோயால் இறந்துள்ளனர்.

புதுடெல்லி கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடம்

புதுடெல்லி கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது இங்கு 77,240 பேர் இந்நோயால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 2,492 பேர் இம்மாநிலத்தில் கொரோனாவால் இறந்துள்ளனர் மற்றும் 47,091 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 27,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு மூன்றாம் இடம்

தமிழ்நாடு 74,622 கொரோனா தொற்றுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 957 பேர் இறந்துள்ளனர். 32,308 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் மற்றும் 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

உலக அளவில் கொரோனா தொற்று 9.4 மில்லியனை தாண்டியது

உலக அளவில் கொரோனா தொற்று 9.4 மில்லியனை தாண்டியது மற்றும் இறப்பு எண்ணிக்கை உலக சுகாதாத நிறுவனத்தின் படி 4,80,000 ஆக வெள்ளிகிழமை வரை உள்ளது.

உலக அளவில் அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் அமெரிக்கா 4.7 மில்லியன் தொற்றுகளுடன் முதல் இடத்திலும் மற்றும் பிரேசில் 1.1 மில்லியன் தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

3

தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு

0
தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 3-ஆவது நாளாக மாநிலத்தில் 3000-ஐ கடந்துள்ளது கொரோனா பாதிப்பு.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது.

நேற்று புதிதாக பதிவான 3,713 பேருடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரையில்லாத அளவாக தமிழகத்தில் ஒரே நாளில் 68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் தனியார் மற்றும் 45 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். நேற்று ஒரே நாளில் 2,737 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மாநிலத்தில் 44,094 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தற்போது 33,213 பேர் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 217 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93 பேருக்கும்,

திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 110 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

3

20 படங்கள்; 20 இயக்குநர்கள்: கார்த்தி படைத்த புதிய சாதனை!

0
20Films20DirectorsWithKarthi

Karthi; 20 படங்கள்; 20 இயக்குநர்கள்: கார்த்தி படைத்த புதிய சாதனை! நடிகர் கார்த்தியின் 17 வருட சினிமா வாழ்க்கையில், 20 படங்களில் நடித்துள்ளார். அந்த 20 படங்களையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

#20Films20DirectorsWithKarthi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.

படிப்பை முடித்த கையோடு ரூ.5000 சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு நியூயார்க் சென்று தொழில்துறை பொறியியல் படிப்பு படித்துள்ளார்.

இந்த படிப்பு படித்துக் கொண்டே இயக்குநர் படிப்பும் படித்துள்ளார். நியூயார்க்கிலேயே கிராபிக்ஸ் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார். இயக்குநருக்கான முதல் இரு பிரிவுகள் மட்டுமே படிதது முடித்துள்ளார்.

நான் எப்போதுமே சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி முதலில் இயக்குநர் மணி ரத்னத்தை சந்தித்து அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கார்த்தி உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படம் ஆய்த எழுத்து. அதன் பிறகு நடிக்கும் வாய்ப்பு வரவே பருத்திவீரன் படத்தில் நடித்தார்.

இதுதான் கார்த்தியின் முதல் படம். இயக்குநர் அமீர் இயக்கத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் பருத்திவீரன்.

இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, கார்த்தி அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு பெற்று தற்போது வரை 20 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தில் தொடங்கி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கோ, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா,

காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, தம்பி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில், பருத்திவீரன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் ஒரு நடிகர் தனது 20 படங்களில் வெவ்வேறு இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்று அது கார்த்தி மட்டுமே.

இதன் காரணமாக, டுவிட்டரில், #20Films20DirectorsWithKarthi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும்,

20 படங்கள், 20 இயக்குநர்கள், 17 வருடங்கள், 14 இசையமைப்பாளர்கள், 19 நடிகைகள், 23 தேசிய மற்றும் மாநில விருதுகளுக்கு பரிந்துரை, 6 விருதுகள், உதவி இயக்குநர் நடிகர் பின்னணி பாடகர், விவசாயிகளுக்கு என்று அறக்கட்டளை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#20Films20DirectorsWithKarthi
20 Movies
20 Directors
17 Years
14 Music Directors
19 Heroines
23 National and State Nominations
6 Awards
3 Professions( AD, Actor , Singer)
1 Foundation for farmer
1 Actor #Karthi
The Name is KARTHI SIVAKUMAR

3

மகனுடன் நடித்த விஜய் சேதுபதியின் சிந்துபாத்: #1YearOfSindhubaadh!

0
Sindhubaadh

Vijay Sethupathi Sindhubaadh; மகனுடன் நடித்த விஜய் சேதுபதியின் சிந்துபாத்: #1YearOfSindhubaadh! விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா உடன் இணைந்து நடித்த சிந்துபாத் படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகியுள்ளது.

சிந்துபாத் படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டுள்ளார். ரசிகர்களுக்கு என்றும் மதிப்பு கொடுக்கக் கூடியவர். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பு காட்டக்கூடியவர்.

ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினியால் மகாநடிகன் என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.

இவரது நடிப்பில் வந்த நானும் ரௌடி தான், சேதுபதி, பேட்ட, சூப்பர் டீலகஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அண்மையில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது. தற்போது கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், க/பெ.ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சிந்துபாத் படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ளது.

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோரது நடிப்பில் இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி திருடனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடையே ஓரளவு விமர்சனம் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும் போதுமான வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், ஹலோவில், #1YearOfSindhubaadh என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

வந்தேன் டா பால்க்காரன்: 28 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை!

0
28YearsOfAnnamalai

Annamalai; வந்தேன் டா பால்க்காரன்: 28 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை! ரஜினிகாந்த், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகளை கடந்துள்ளது.

ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, ரேகா, மனோரமா ஆகியோரது நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வந்த படம் அண்ணாமலை.

இந்தப் படம் கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாலிவுட் படமான Khudgarz படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுக்காரனாக வரும் அண்ணாமலையும், பணக்காரனாக வரும் சரத்பாபுவும் குழந்தை பருவம் முதல் நண்பர்கள்.

இவர்களது நட்பை பிரிக்கும் வகையில், சரத்பாபுவின் (அசோக்கின்) தந்தை ராதாரவி (கங்காதரன்) திட்டம் தீட்டி, அண்ணாமலை ரஜினியின் வீட்டை இடித்து நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் பணக்காரனாகும் ரஜினிகாந்த், உயர்கிறார்.

முதலில் அண்ணாமலை படத்தை இயக்குநர் வசந்த் இயக்க இருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணத்திற்காக அவரால் இந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதன்பின்னர் தான் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் படம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. இதன் காரணமாக போஸ்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் படம் வெளியாகி 175 நாட்கள் வரை ஓடியது. 1995 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் குவித்த படமாக அண்ணாமலை படம் திகழ்ந்தது. அதன் பிறகு வந்த ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை பட சாதனையை முறியடித்தது.

இந்த நிலையில், அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஹலோவில், #28YearsOfAnnamalai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

ஹலோவில் டிரெண்டாகும் GVPrakash சைந்தவி பாடல்கள் ஹேஷ்டேக்!

0
GV Prakash and Saindhavi Songs

GV Prakash Saindhavi Songs; ஹலோவில் டிரெண்டாகும் GVPrakash சைந்தவி பாடல்கள் ஹேஷ்டேக்! இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் இன்று தனது 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், GVPrakash சைந்தவி பாடல்கள், GVPrakash திருமண நாள் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

GVPrakash சைந்தவி பாடல்கள் ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

GVPrakash சைந்தவி இணைந்து ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷும் பின்னணி பாடகியான சைந்தவியும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில், இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது 7 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு சினிமா பிரபலங்களும், நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜிவியின் திருமண நாளை முன்னிட்டு ஹலோவில், ஜிவி பிரகாஷ் சைந்தவி இணைந்து பாடிய பாடல்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உதயம் என்.ஹெச்4, தலைவா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, தாண்டவம், சகுனி, பார்ட்டி, ராஜதந்திரம் என்று பல படங்களில் இணைந்து பாடல்கள் பாடியுள்ளனர்.

யாரோ இவன், யார் இந்த சாலை ஓரம், என்னாச்சு ஏதாச்சு, இரவாக நீ, இதயம் உன்னை தேடுதே, மனசெல்லாம் மழையே, உயிரின் உயிரே, நீ என்ன பேசுவாய், பெண் மேகம் போலவே என்று பல பாடல்களை ஜிவி பிரகாஷ் சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

3

இசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்!

0
GV Prakash Wedding Anniversary

GV Prakash Wedding Anniversary; இசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்! இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வெங்கடேஷ் மற்றும் பின்னணி பாடகி ரெஹானா தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவரது தாய்மாமா.

ஷங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. இவரது இசையில், சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடியுள்ளார்.

இது போன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதே போன்று, ஹரிஷ் ஜெயராஜ் இசையிலும் பாடல் பாடியுள்ளார். குறிப்பாக அந்நியன் மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், அங்காடி தெரு,

ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, சகுனி, பரதேசி, தாண்டவம், ராஜா ராணி, தலைவா, பென்சில், காக்கா முட்டை, விசாரணை, தெறி,

வாட்ச்மேன், 100% காதல், ஜெயில், சூரரைப் போற்று, ஐங்கரன், காதலிக்க யாருமில்லை, தலைவி என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதே போன்று, குசேலன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், புரூஷ் லீ, செம, சர்வம் தாளம் மாயம், குப்பத்து ராஜா, நாச்சியார்,

100% காதல் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி சைந்தவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சைந்தவி பின்னணி பாடகி. கர்நாடக இசை பயின்றுள்ளார்.

அந்நியன் படத்தில் வரும் அண்டக்காக்கா கொண்டக்காரி என்ற பாடலை இவர் பாடியுள்ளார். இது போன்று தமிழ் சினிமாவில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

அண்மையில், வெளியான பொன்மகள் வந்தாள் படத்தில் வரும் வானமே நான் என்ற பாடலை சைந்தவி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜிவிபிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் இன்று தங்களது 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

GVPrakash திருமண நாள்

3

கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல்

கொரோனா பரவலை தடுக்க

புதுடெல்லி/சென்னை:கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல் பின்வருமாறு.

செய்யவேண்டியது:

  • மூக்கு மற்றும் வாயை ஒருமுறை பயண்படுத்தக்கூடிய கைக்குட்டை அல்லது துணியால் செய்த கைக்குட்டையை கொண்டு மூடிக்கொள்வது.
  • சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கையை சுத்தமாக கழுவுதல்.
  • கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருத்தல்.
  • சளி, தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இருத்தல்.
  • சளி, தும்மல், காய்ச்சல் உள்ளவர்களை விட்டு ஒரு கை நீள அளவை விட அதிக தூர விலகலை கடைபிடித்தல்.
  • சரியான அளவில் தூக்கம் மற்றும் ஓய்வு எடுத்தல்.
  • அதிக அளவில் நீர் ஆகாரம் மற்றும் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.
  • காய்சல் போன்ற அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அனுகுதல்.

செய்யக்கூடாதது:

  • இரும்பல் மற்றும் தும்மலுக்கு பின் கழுவாத கைகளால் மூக்கு, வாய் அல்லது கண் போன்ற பகுதிகளை தொடுதல்.
  • வரவேற்கும் பொழுது கட்டிபிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கை குலுக்குதல் போன்ற செயல்களை செய்தல்.
  • பொது இடத்தில் எச்சில் துப்புதல்.
  • மருத்துவரை ஆலோசிக்காமல் மருத்துகளை உட்கொள்ளுதல்.
  • திறந்த இடங்களில் பயண்படுத்தப்பட்ட நாப்கின்ஸ் அல்லது ஒருமுறை பயண்படுத்தும் கைக்குட்டை போன்றவற்றை தூக்கிஎறிதல்.
  • பொதுஇடத்தில் மக்கள் அதிகம் பயண்படுத்தும் பகுதிகளை தொடுதல்(கதவுகள், கைப்பிடிகள்,..)
3

சாத்தான்குளம் சம்பவம்: டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் சனம் ஷெட்டி புகார்!

0
Sanam Shetty Comlpaint

Sanam Shetty; சாத்தான்குளம் சம்பவம்: டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் சனம் ஷெட்டி புகார்! சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு பலியான நிலையில், நடிகை சனம் ஷெட்டி டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சனம் ஷெட்டி டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இப்படத்தைத் தொடர்ந்து கதம் கதம், சவாரி, வால்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மஹா படத்திலும் நடித்து வருகிறார். இவரும், பிக் பாஸ் பிரபலமான தர்ஷனும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டெல்லி, மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, சனம் ஷெட்டி, டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அனைவரும் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Sanam Shetty Sathankulam issue

3