Home Blog Page 39

லிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

0
Vanitha Wedding

Vanitha Peter Paul Wedding; லிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்! வனிதா மற்றும் பீட்டர் பால் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் 3ஆவது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில், வனிதாவின் மகள்களாக ஜோவிகா மற்றும் ஜெயந்திகா இருவரும் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது, வனிதா பீட்டர் பால் இருவரும் ஒருவருக்கொருவர் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

3

சக்ரா டிரைலர்: வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது!

0
Chakra Movie Trailer

Chakra Trailer; சக்ரா டிரைலர்: கண்ணுக்கு தெரியாத வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது! விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா டிரைலர் வெளியாகியுள்ளது.

விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சக்ரா. இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சக்ரா டிரைலரில் கூறியிருப்பதாவது: மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தி வங்கியில் கொள்ளையடிக்கும் வங்கி கொள்ளையரை விட சைபர் ஹேக்கர் ஒன்றுமில்லை.

அவர்களது முயற்சி திருட்டு மற்றும் கொள்ளை. சுதந்திர தினம் என்று கூட பார்க்காமல் சென்னையைச் சுற்றிலும் 49 வீடுகளில் மர்ம கும்பல் தங்களது கைவரிசையை காட்டி கொள்ளையடித்துள்ளனர்.

அதில், ஒருவீடு ராணுவ அதிகாரி நாசரின் வீடு, அவரது வீட்டில் இருந்த அசோக சக்ரா விருதை மர்ப கும்பல் கொள்ளையடித்து சென்றுவிடுகிறது.

மற்ற வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீஸ் அதிகாரி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

ராணுவ அதிகாரி வீடு என்பதால், அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு கும்பலை பிடிக்கும் விஷால் படையெடுக்கிறார்.

ஒரு நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க ஒரு தேசிய பாதுகாப்பு குழு செய்யும் ஆராய்ச்சியை விட, ஒரு சராசரி மனிதனின் தேவைகளையும், அவனது ஆசைகளையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி செய்யும் ஆராய்ச்சி தான் அதிகமா?

நிச்சயமாக நாம் தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் நமது கண்ணுக்கே தெரியமாட்டான். இப்போது தான் சீண்டி விட்டிருக்கிறேன். இந்த கேம் பிகின்ஸ் நவ்.

இறுதியாக, கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமல்ல, வைரஸ் நெட்வொர்க்கும் ஆபத்தானது தான் என்று தேடப்படும் கிரிமினல் கூறுவது போன்று இந்த சக்ரா டிரைலர் முடிகிறது.

படத்தில், நாசரின் மகனாக விஷால் நடித்திருப்பார் என்று தெரிகிறது. நாசரின் இறப்புக்குப் பிறகு அவரது வேலையில் விஷால் சேர்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் சக்ரா படம்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் ட்ரெண்டிங் #JusticeForJayarajanandBennicks

#JusticeForJayarajanandBennicks

சென்னை: சாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் வெள்ளிக்கிழமை அனைவராலும் பேசப்பட்டது. #JusticeForJayarajanandBennicks என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. கொரோனா காலத்தில் காவல் துறையின் இந்த கொடூரத் தாக்குதல் குறித்து பொதுமக்கள் அதிருப்தி.

காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை

மாநில அரசு இச்சம்பவத்திற்கு பொருப்பானவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.

#JusticeForJayarajanandBennicks

#JusticeForJayarajanandBennicks என்னும் ஹாஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. மேலும் இது உலக அளவில் முதல் 30 டிரெண்டிங்கில் வந்துள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கருத்து

சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த சம்பவம் குறித்து விவாதித்து வருகின்றனர்.

இந்த சாத்தான் குளம் சம்பவம் அமெரிக்காவில் ஜியார்ஜ் ஃப்லோய்ட் என்பவர் காவல் துறையால் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

3

தொடர்ந்து 21 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

தொடர்ந்து 21 ஆவது நாளாக

தொடர்ந்து 21 ஆவது நாளாக டீசல் விலை 21 பைசா மற்றும் பெட்ரோல் விலை 25 பைசா லிட்டருக்கு உயர்ந்தது.

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இரண்டும் தற்போது லிட்டருக்கு ₹80 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் பின்வருமாறு

புதுடெல்லி: பெட்ரோல்->₹80.38 டீசல்->₹80.40

குர்கான்: பெட்ரோல்->₹78.38 டீசல்->₹72.68

மும்பை: பெட்ரோல்->₹87.16 டீசல்->₹78.72

சென்னை: பெட்ரோல்->₹83.62 டீசல்->₹77.65

ஹைதராபாத்: பெட்ரோல்->₹83.43 டீசல்->₹78.57

பெங்களூரு: பெட்ரோல்->₹82.99 டீசல்->₹76.46

மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபாடு.

3

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதிப்பால் இறந்தார்

தனியார் தொலைக்காட்சியில்

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதித்து இருந்த நிலையில் சனிக்கிழமை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தவர்

வேல்முருகனுக்கு வயது 40 மற்றும் அவர் ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல்

“15 நாட்கள் சிகிச்சையில் இருந்த வேல்முருகனின் இறப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா பாதித்த மக்களுக்கு உதவுபவர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்பட ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் இறப்பிற்கு இறங்கல் தெரிவித்து பேசிய பா.ம.க நிறுவனர் எஸ். இராமதாஸ் மற்றும் அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் ஊடக துரையில் பணிபுரியும் அனைவரும் கூடுதல் கவனமாக இருக்கும்படி தெரிவித்தனர்.

3

49 வீட்ல திருடிய கும்பல்: வலைவீசி தேடும் விஷால்: சக்ரா டிரைலர் வெளியீடு!

0
Chakra Trailer Released

Chakra Trailer; 49 வீட்ல திருடிய கும்பல்: வலைவீசி தேடும் விஷால்: சக்ரா டிரைலர் வெளியீடு! விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலின் சக்ரா படத்தின் டிரைலரை ஆர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சக்ரா டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்ரா டிரைலரில், அடையாறு பகுதியில் 7 வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. பெசண்ட் நகர் பகுதியில் 13 வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த சென்னை அலறிக்கொண்டிருக்கிறது.

மற்ற வீடுகளில் கொள்ளையடித்தது கூட பரவாயில்லை. ஆனால், குறிப்பிட்ட இந்த வீட்டில் இருந்த ராணுவத்தில் கொடுக்கப்படும் மிகப்பெரிய விருதான அசோக சக்ராவையே கொள்ளையடித்துச் சென்ற கொள்ளை கும்பலை தேடி வரும் விஷாலின் கதைதான் சக்ரா.

இதில், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும், விஷால் இராணுவ அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமல்ல, வயர்லெஸ் நெட்வொர்க்கும் ஆபத்தானது தான்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். Coming Soon என்று சக்ரா டிரைலர் முடிக்கப்பட்டுள்ளது.

 

3

லிப் டூ லிப் கிஸ் உடன் களைகட்டிய திருமணம்: கிறிஸ்துவ முறைப்படி நடந்த வனிதா மேரேஜ்!

0
Vanitha Peter Paul Wedding

Vanitha Peter Paul Wedding; லிப் டூ லிப் கிஸ் உடன் களைகட்டிய திருமணம்: கிறிஸ்துவ முறைப்படி நடந்த வனிதா மேரேஜ்! வனிதா பீட்டர் பால் திருமணம் இன்று கிறிஸ்துவ முறைப்படி மிகவும் சிறப்பாக கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்துள்ளது.

லிப் டூ லிப் கிஸ் உடன் வனிதா பீட்டர் பால் திருமணம் களைகட்டியுள்ளது. வனிதாவின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதோடு, சர்ச்சையிலும் சிக்கினார்.

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றதோடு, தனது சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், பிக் பாஸ் வனிதா வேறு தற்போது இருக்கும் வனிதா வேறு என்று அனைவருக்கும் புரிய வைத்தார்.

இதையடுத்து, அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், தனது சமையல் குறிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வனிதா அறிவித்தார்.

அவர் அறிவித்தபடியே இன்று வனிதா – பீட்டர் பால் திருமணம் மிகவும் எளிமையாக கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில், வனிதாவின் மகள்கள் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருமணத்தின் போது வனிதா வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தார். திருமணத்தைத் தொடர்ந்து வனிதாவிற்கு பீட்டர் பால் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

தொடர்ந்து இருவரும் கேக் வெட்டி தங்களது திருமணத்தை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

வனிதாவின் திருமணத்திற்கு அவரது அம்மா மஞ்சுளா வைர மோதிர பரிசாக அளித்துள்ளார். அந்த மோதிரத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வனிதா விஜயகுமார் இல்லை. இனிமேல், வனிதா பீட்டர் பால். ஆம், இது குறித்து அவரே கூறியிருந்தார்.

பீட்டர் பாலை 3ஆவது திருமணம் செய்து கொண்ட வனிதாவிற்கு பிரபலங்கள், நண்பர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஹலோவில் வனிதா திருமணம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Vanitha Marriage

3

மாஸ்டர் டீசர் விரைவில்: வைரலாகும் போஸ்டர்!

0
Master Teaser

Master Teaser; மாஸ்டர் டீசர் விரைவில்: வைரலாகும் போஸ்டர்! தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், பிரேம், நாசர், பிரிகிதா, பூவையார், ரமேஷ் திலக், ரம்யா சுப்பிரமணியன், தீனா, கௌரி கிஷான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், மாஸ்டர் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மாஸ்டர் எப்போது, திரைக்கு வரும் என்று யாருக்குமே தெரியாத. இந்த நிலையில், மாஸ்டர் டீசர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாஸ்டர் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

Sathankulam: எந்தவொரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது: பிரியங்கா சோப்ரா!

0

Priyanka Chopra; எந்த ஒரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது: பிரியங்கா சோப்ரா! சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டரில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கேள்விப்பட்ட விஷயம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திகிறது. என்ன குற்றம் செய்திருந்தாலும், எந்தவொரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது.

மேலும், இதன் பிறகு அவர்களது குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரன் ஷிகர் தவான் கூறுகையில், தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மீது மிருகத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி திகிலுறச் செய்தது.

அந்த குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்க நாம் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Priyanka Chopra Tweet Sathankulam Issue

3

9 வருடங்களுக்குப் பிறகு வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள்!

0
Vijay Sethupathi Unseen Pictures

Vijay Sethupathi; 9 வருடங்களுக்குப் பிறகு வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள்! கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறுகிய கால இடைவெளியில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் கொண்டவர். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பு காட்டக்கூடியவர்.

ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினியால் மகாநடிகன் என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.

இவரது நடிப்பில் வந்த நானும் ரௌடி தான், சேதுபதி, பேட்ட, சூப்பர் டீலகஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அண்மையில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது. தற்போது கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், க/பெ.ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதன் காரணமாக விஜய் சேதுபதி ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi

3