Home Blog Page 40

கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: அழைப்பிதழ் கொடுத்து அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

0
Cobra First Single

Cobra First Single Track; கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: அழைப்பிதழ் கொடுத்து அறிவிப்பு வெளியிட்ட படக்குழு! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் சிராக் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கோப்ரா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயகக்த்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோப்ரா முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில், சியான் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் மணக்கோளத்தில் இருக்கின்றனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆம், மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும், பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியும் நடிக்கின்றனர். மதியழகன் மற்றும் பாவனா மேனன் திருமண நிச்சயதார்த்தம் என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3

குடும்பப்பாங்காக நடித்த அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளைதளங்கலில் திடீர் வைரல்

கோலிவுட்டில் விசாலின் துப்பரிவாளனில் அறிமுகமான அனு இம்மானுவேல் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளைதளங்கலில் வைரல் ஆகியுள்ளது. அத்தகைய படங்கள் பின்வருமாறு.

குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்த நடிகைகள் தீடீரென கவர்ச்சிக்கு தாவுவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதியது கிடையாது.

பட வாய்புகள் ஈர்க்கவும், தன்னை சினிமாத்துறையில் பிரபல படுத்தி கொள்வதற்கும் நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வாடிக்கை.

 

3

வட இந்தியாவில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

புதுடெல்லி: வெட்டுகிளிகளின் படை குர்கான் பகுதியில் உள்ள பயிர்களை சனிக்கிழமை நாசம் செய்தது. நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை “பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள் தாக்கக்கூடும்” என மஹேந்திரகார்க் என்ற மாவட்டத்தில் வெட்டுகிளிகளை பார்த்த பின் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதிக ஒலி எழுப்பும் வகையில் பாத்திரங்களை வைத்து கொள்ளுங்கள்

விட்டின் ஜென்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும் மற்றும் வெட்டுகிளிகள் தாக்கினால் அதிக ஒலி எழுப்பும் வகையில் பாத்திரங்களை வைத்து கொள்ளுமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.

இந்தியா வரலாற்றில் இல்லாத அளவிற்கு மோசமான வெட்டுகிளி தாக்குதல்களை தற்போது எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களான குஜராத், மராட்டியம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளை இது பாதித்து வருகின்றன.

60 புதிய பூச்சிக்கொல்லி தெளிப்பான்களை வாங்க உத்தரவு

இந்தியா தற்போது ஐந்து மாவட்டங்களில் உள்ள 399 இடங்களில் வெட்டுகிளி தாக்குதல்களை கட்டுபடுத்தி உள்ளது மற்றும் 60 புதிய பூச்சிக்கொல்லி தெளிப்பான்களை வாங்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.

55,542 ஹெக்டேரில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது

அதிகாரிகள் தீ அனைப்பு படை மற்றும் சிறப்பு வாகனங்களை பயண்படுத்தி 55,542 ஹெக்டேர் அளவிலான பயிர்களுக்கு மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பூச்சிக்கொல்லியை தெளித்துள்ளனர்.

3

விஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு?

0
Vishal Chakra Movie

Chakra Release On OTT; விஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு? விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்ரா படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சக்ரா டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் உருவாகி வரும் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்களைப் போன்று சக்ரா படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஓடிடி குழுவினர் சக்ரா படக்குழுவினரை அணுகியுள்ளனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பட்ஜெட் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சக்ரா படத்தை திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொல்லவும் செய்வோம்: செய்து காட்டிய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்!

0
JusticeForJeyarajAndFenix

JUSTICE FOR JEYARAJ AND FENIX; கொல்லவும் செய்வோம்: செய்து காட்டிய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்! காவல்துறை உங்கள் நண்பன், தேவைப்பட்டால் உங்களை கொல்லவும் செய்வோம் என்று செய்து காட்டிய காவல்துறையை சார்ந்த சிலர் தண்டிக்கப்பட வேண்டும் என்று காவல் துறை உங்கள் நண்பன் படக்குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சாத்தான்குள சம்பவம் குறித்து காவல்துறை உங்கள் நண்பன் படக்குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காவல்துறை உங்கள் நண்பன் படக்குவினர் தங்களுக்கு உரிய ஸ்டைலில் போஸ்டர் வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அதில், காவல்துறை உங்கள் நண்பன், தேவைப்பட்டால் உங்களை கொல்லவும் செய்வோம் என்று செய்து காட்டிய காவல்துறையை சார்ந்த சிலர் தண்டிக்கப்பட வேண்டும் என்று காவல் துறை உங்கள் நண்பன் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த போஸ்டரில், #JUSTICEFORJEYARAJANDFENIX என்று குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குநர் ஆர்டிஎம் இயக்கத்தில் மைம் கோபி, ரவீனா ரவி, சுரேஷ் ரவி ஆகியோர் பலர் நடிப்பில் காவல்துறை உங்கள் நண்பன் படம் உருவாகி வருகிறது. ஆதித்யா சூர்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

தனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு!

0
Thani Oruvan

Thani Oruvan 2; தனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு! தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனி ஒருவன்.

ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ஜெயம் ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

தனது நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், பூமி, ஜனகணமண ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அண்மையில், தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனி ஒருவன் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் அனைத்தையும் எழுதி முடித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

மேலும், தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொன்னியின் செல்வன், பூமி, ஜனகணமண ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா சூழல் சரியான பிறகு இந்தப் படங்களின் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

விஷாலின் அதிரடி ஆக்‌ஷனில் வெளிவரும் சக்ரா டிரைலர்!

0
Chakra Trailer

Chakra Trailer; கொரோனா பீதியிலும் வெளிவரும் சக்ரா டிரைலர்! நாடு முழுவதும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சக்ரா டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் உருவாகி வரும் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நயன்தாராவை விட மாளவிகா மோகனனுக்கு அதிக சம்பளமா?

0
Malavika Mohanan Salary

Malavika Mohanan Salary; நயன்தாராவை விட மாளவிகா மோகனனுக்கு அதிக சம்பளமா? நயன்தாராவை விட மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மாளவிகா மோகனன் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாளவிகா மோகனன், சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட.

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அதுவும், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது ஹீரோ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் மாளவிகா மோகனன் நடித்ததைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு குவிந்து வருகிறது. பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் ரவி உத்யவார் இயக்குகிறார். இவர், இதற்கு முன்னதாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக தற்போது சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்திற்காக மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி வரையில் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது நயன் தாராவின் சம்பளத்தை விட அதிகமாம்.

சினிமாவில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வரை பயணம் செய்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே ரூ.4 கோடி வரையில் மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில், மாளவிகா மோகனன் ரூ.5 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.

குறுகிய கால இடைவெளியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் மாளவிகா மோகனன் முதலிடம் பிடித்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

3

கேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா

0
கேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா

கேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று 150 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவனந்தபுரம்: கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருந்த நிலையில் நேற்று மீண்டும் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

கேரளாவில் நேற்று பதிவான புதிய 150 கொரோனா தொற்றுகளுடன் சேர்த்து இம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பாதிப்பு அடைந்தவர்களில் 91 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 48 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 11 பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

மாநிலத்தில் அதிகபட்சமாக பாலக்காட்டில் புதிதாக 23 பேருக்கும், ஆலப்பழாவில் 21 பேருக்கும், கோட்டயத்தில் 18 பேருக்கும் கொல்லத்தில் 16 பேருக்கும் கன்னூரில் 13 பேருக்கும்

எர்ணாகுளத்தில் 9 பேருக்கும், திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பாலக்காட்டில் அதிகபட்சமாக 237 பேருக்கும், மலப்புரத்தில் 191 பேருக்கும்,

கொல்லத்தில் 183 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 1,63,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2.397 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

 

3

இரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

0
இரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

இரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மாநிலத்தில் சென்னை தொடர்ந்து பாதிப்பு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 3,645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,956 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 46 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 1,358 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமனடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று புதிதாக 3,645 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானதால் இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 33,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியது. நேற்று முந்தினம் முதன் முறையாக 3000-ஐ தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 46 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 957 ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிக்கை வெளியாவுடனே அனைவரும் அவர் அவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் தொற்று இல்லாத மாவட்டங்களிலும் தொற்று பரவி வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,211 பேர் ஆண்கள், 1,434 பேர் பெண்கள் ஆவர்.

செங்கல்பட்டில் 232 பேருக்கும், மதுரையில் 190 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருவள்ளூரில் 177 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

3