புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நிறுத்தம், விமான போக்குவரத்து துறை அறிவிப்பு. சரக்கு விமானங்கள் சில நாடுகளுக்கு அடுத்த மாதம் இயக்கப்படலாம் என தெரிகிறது.
சர்வதேச பயணிகள் விமானங்கள் தடை ஜூலை 15 வரை தொடரும்
அந்த அறிவிப்பில்: “திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவற்றுக்கு ஜூலை 15 வரை தடை தொடரும். இருப்பினும் விமான போக்குவரத்தின் இயக்குனரால் அனுமதி பெற்ற சர்வதேச சரக்கு விமானங்கள் சில பாதைகளில் அனுமதிக்கப்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை மார்ச் 22 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வந்தே மாதரம் திட்டத்தின் படி மீட்கப்பட்டுவரும் இந்தியர்கள்
இருப்பினும் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் வந்தே மாதரத்தின்(VBM) படி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மே 6 முதல் செயல் பாட்டில் உள்ளது.
#27YearsOfUzhaippali: 27 ஆண்டுகளை கடந்த ரஜினியின் உழைப்பாளி! ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகளை கடந்துள்ளது.
ரஜினிகாந்த், ரோஜா ஆகியோரது நடிப்பில் வந்த உழைப்பாளி படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ரோஜா, கவுண்டமனி ஆகியோரது நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஹூன் 26 ஆம் தேதி திரைக்கு வந்த படம் உழைப்பாளி.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உழைப்பாளியாக நடித்திருந்தார். முதலில் ஹீரோயினாக நடிகை கஸ்தூரி நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், பின்னர் ரோஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெறும் 58 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தமாமா விஜயா தயாரிப்பு நிறுவனம் நன்றாகவே விளம்பரம் செய்தது. அப்படி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆன நிலையில், ஹலோவில் #27YearsOfUzhaippali என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் துறை கட்டுபாட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தில் ₹45 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பணம் வழங்கும் கடிதத்தை இறந்த பி. ஜெயராஜ் மற்றும் ஜே. பென்னிக்ஸ் ஆகியோரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.
தி.மு.க சார்பில் ₹25 இலட்சம்
தி.மு.க வை சேர்ந்தவரும் மற்றும் தூத்துக்குடியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன கனிமொழி கருணாநிதி, இந்த ₹.25 இலட்சத்திற்கான காசோலையை தி.மு.க தலைவர் அறிவித்த படி இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் ₹20 இலட்சம்
பிறகு, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி ₹.20 இலட்சத்தினை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.
இத்தகைய சம்பவத்தில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம்
காவல் துறை கட்டுபாட்டில் இருந்தவர்கள் இறந்த சம்பவம் குறித்து கனிமொழி, இத்தகைய சம்பவம் நடப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இந்நிலை மாறவேண்டும் எனவும் “இனி எந்த குடும்பத்திற்கும் இத்தகைய நிலை வரக்கூடாது” எனவும் தெரிவித்தார்.
அரசு பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கை அரசு எடுக்கும்
கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில் “இது மாதிரியான சம்பவம் நடக்கும் பொழுது, அரசு பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கை அரசு எடுக்கும்,” என தெரிவித்தார்.
மேலும் இத்தகைய அரிதான சம்பவத்தால் அனைத்து காவலர்களை குறை கூற முடியாது. “சென்னை மற்றும் கோவை காவல் நிலையங்கள் தேசிய விருதுகளை வாங்கியுள்ளன” என மேலும் அவர் தெரிவித்தார்.
Sathankulam: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்: பிரபலங்கள் கருத்து! சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாந்தனு
போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். இது விசாரணை இல்லை. இது கொலை. சட்டம் எல்லாவற்றிகும் மேலாக இருந்தால், இது தான் நமது சக்தியை காட்ட வேண்டிய நேரம்.
ஜெயம் ரவி
சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ்
சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது? இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுல்யா ரவி
முற்றிலும் மனிதாபிமானமற்றது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக நமது சக்தியை காட்ட வேண்டிய நேரம் இது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கௌதம் கார்த்திக்
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது போலீசார் மிருகத்தனத்தை காட்டியுள்ளனர். இது கொடூரத்தின் உச்சம்.
இது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியை நிலைநிறுத்தும் நல்ல மற்றும் நேர்மையான காவல்துறையினரின் வேலை அல்ல. இது சீருடையில் உள்ள காட்டுமிராட்டித்தனமான குற்றவாளிகளின் வேலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது வழக்கில் தாமதமின்றி சட்டம் அதன் கடமையைச் செய்து குற்றவாளிகளை தண்டிப்பதை காணலாமா?
ஒரு போதும் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. ஒரு குடும்பம் தங்களுக்கு பிடித்தமானவர்களை இழந்துவிட்டது. தாமதமான நீதி மறுக்கப்படுகிறது.
வரலட்சுமி சரத்குமார்
சாத்தான்குளம் போலீசாரால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசாரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் இல்லை. ஒட்டு மொத்த காவல்துறையையும் குறை சொல்ல முடியாது. ஆனால், அந்த 2 காட்டுமிராண்டித்தனமான போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
ஹன்சிகா மோத்வானி
ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறுவதற்கு பதிலாக அந்த 2 காட்டுமிராண்டித்தனமான போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகையால் அந்த 2 கொடூர போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுஜித்ரா
தமிழ் பேச தெரியாத அனைவருக்கும் சாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று தெரியும். அப்பாவியான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சீரியல் கில்லரான 2 போலீஸ் அதிகாரிகளால் அடித்தே கொல்லப்பட்டனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு நீதி கிடைக்க வேண்டும். கொடூர கொலைகார போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.
Editor Jeyachandran Passed Away; கேப்டன் பிரபாகரன் படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்! விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என்று 150 படங்களுக்கு மேல் படத்திகுப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
சினிமா படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் வந்த ஊமை விழிகள் படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜெயச்சந்திரன். இவரை தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்து வைத்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து, உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், உரிமை கீதம், புதுப்பாடகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 150 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், ஜெயச்சந்திரன் தனது மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் மடிப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரனின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஜெயச்சந்திரனுக்கு தேவி என்ற மனைவியும், அருள் முருகன், பாலமுருகன் என்ற 2 மகள்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jayam Ravi; சாத்தான்குளம் கொடூரம்: சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை: ஜெயம் ரவி காட்டம்! சாத்தான்குளத்தில் நடந்த கொடூர சம்பவம் குறித்து நடிகர் ஜெயம் ரவி காட்டமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டத்தை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என்றும், மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் என்று சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ஜெயம் ரவி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது? இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enthiran Poster; எந்திரன் ரஜினி உண்மையை சொன்ன ஒளிப்பதிவாளர்: வைரலாகும் எந்திரன் புகைப்படம்! கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த எந்திரன் புகைப்படத்தில் ரஜினிகாந்த் கையில் ரோஸ் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எந்திரன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த ரோபோ படம் எந்திரன். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வசீகரனாகவும், சிட்டியாகவும் நடித்திருந்தார்.
எந்திரன் படம் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது. எந்திரன் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானது. அதனை அனைவரும் கிராபிக்ஸ் என்று கூறினர்.
இந்த நிலையில், இது குறித்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் கூறுகையில், ரஜினிகாந்த் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியானது.
அதனை பலரும் கிராபிக்ஸ் என்று கூறினர். உண்மையில், அது கிராபிக்ஸ் இல்லை. உண்மையான புகைப்படம். ரஜினிகாந்த் அந்த புகைப்படத்திற்காக பலமணிநேரம் அதற்காக ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்ட எடுத்த புகைப்படம் என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து 2.0 படமும் (எந்திரன் 2) வெளியானது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்னா/லக்னோ: வியாழக்கிழமை இரண்டு மாநிலங்களில் மின்னல்களால் 31 மாவட்டங்களில் ஏற்பட்ட தொடர் தாக்குதலில் 107 பேர் பலி. பீகாரில் 83 பேரும் மற்றும் உத்திரபிரதேசத்தில் 24 பேரும் பலியாகியுள்ளனர்.
அடுத்த 72 மணிநேரங்களில் அதிக மின்னல்கள்
இதற்கிடையில் அடுத்த 72 மணிநேரங்களில் அதிக மின்னல்கள் தோன்றயிருப்பதால் மக்கள் வீட்டினுள் இருக்கும் படி இரு மாநில மக்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது.
குடும்பத்திற்கு தலா ₹4 இலட்சம் நிவாரணம் அரசு அறிவித்தது
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் உத்திரபிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மின்னல் தாக்குதலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் போதிய தற்காப்புடன் பாதுகாப்பாக இருக்குமாறு நிதிஷ் குமார் மக்களை கேட்டுக்கொண்டார்.
Sathankulam Issue; சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்! சாத்தான்குளம் சம்பவம் குறித்து சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் கூறுகையில், சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது? இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நடிகர் ஜெயம் ரவி கூறுகையில், சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Aramm 2: Keerthy Suresh; நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? அறம் 2 அப்டேட்! அறம் படத்தின் 2 ஆம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறம் 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த படம் அறம்.
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி என்ற கதபாத்திரத்தில் கலெக்டராக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அறம்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கப் போராடும் மாவட்ட ஆட்சியரின் கதை தான் இந்தப் படம். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதையடுத்து, அறம் 2 எடுக்க தன்னை தயார்படுத்தி வருவதாக இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார். இந்த நிலையில், அறம் 2 படத்தின் நயன் தாராவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால், தான் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அறம் 2 படத்தில் வேறு எந்த நடிகையையும் நடிக்க வைக்க விரும்பவில்லை. நயன்தாராவைத் தான் நடிக்க வைக்க இருப்பதாக இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.