Home Blog Page 42

பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்!

0
Joel Schumacher Passed Away

பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்! பேட்மேன் படங்களை இயக்கிய ஜோயல் ஸ்குமாச்சர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேட்மேன் பட இயக்குநர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேட்மேன் படங்களை இயக்கி உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோயல் ஸ்குமாச்சர் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்மேன் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் ஜோயல் ஸ்குமாச்சர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3

தமிழ்நாட்டில் 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன, 45 பேர் கொரோனாவால் இறந்தனர்

புதிய தொற்றுகள்

சென்னை: தமிழ்நாட்டில் வியாழன் 45 பேர் கொரோனாவால் இறந்தனர். 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக உள்ளது. மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 70,997 ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர் மற்றும் 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

1,834 தொற்றுகள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டன

இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,358 பேரில் 1,834 தொற்றுகள் சென்னையில் மட்டும் கண்டறியப்பட்டன. செங்கள்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கலில் 459 தொற்றுகள் கண்டறியப்பட்டன.

மதுரையில் 203 தொற்றுகளும், வேலூரில் 168 தொற்றுகளும் மற்றும் இராமனாதபுரத்தில் 140 தொற்றுகளும் வியாழன் உறுதி செய்யப்பட்டன.

29 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர்

கொரோனா பாதித்த 29 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர், 16 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர். இதில் 3 பேர் கூடுதலாக நோய்களை கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

3

10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுத தேவையில்லை, 12ஆம் வகுப்பிற்கு மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்

10ஆம் வகுப்பு மாணவர்கள்

புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) ஆகியவை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீதம் இருக்கும் தேர்வுகளை எழுத தேவையில்லை மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீதி தேர்வுகளை எழுதலாம் அல்லது முன்னர் எழுதிய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை பெறலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தன.

கொரோனா பரவல் இருப்பதால் தேர்வுகள் இரத்து

ஜீலை 1இல் இருந்து நடத்தவிருந்த தேர்வுகளை, கொரோனா பரவல் இருப்பதால் இரத்து செய்துள்ள அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE)  தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  எழுத வாய்ப்பு

விடுபட்ட தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

நிலைமை சீரான பிறகு 12ஆம் வகுப்பு தேர்வுகள் 

மேலும் கொரோனா நிலைமை சீரான பிறகு 12ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களின் பெயர் பட்டியல் ஜூலை 12 இல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களாக செயல்பட்டு வரும் நிலையில் அம்மாநில அரசுகள் தேர்வுகளை நடத்த முடியாமல் இருக்கின்றன.

3

ஈகோ மோதலில் ராஷ்மிகா – சாய் பல்லவி! SaiPallaviVsRashmika ஹேஷ்டேக் டிரெண்டிங்!

0
Rashmika Mandanna

Rashmika Mandanna; ஈகோ மோதலில் ராஷ்மிகா – சாய் பல்லவி! ஈகோ மோதல் காரணமாக நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாம் நிலை நடிகையாக இருப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

சாய் பல்லவி முன்னணி நடிகையாக இருப்பதால், பட வாய்ப்புகள் அவரையே தேடி செல்வதாக கூறப்படுகிறது.

திரைத்துறையில், மிகவும் பிரபலமான பரபரப்பான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு ராஷ்மிகா, பீஷ்மா, சுல்தான் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தனது க்யூட்டான எக்ஸ்பிரசன் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, கோலிவுட்டிலும் ராஷ்மிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். மற்ற நடிகைகளைப் போன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நானி நடிப்பில் உருவாகி வரும் ஷியாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகாவை அணுகியுள்ளனர். ஆனால், இந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளாராம்.

காரணம், இரண்டு பெண் கதாபாத்திரங்களை இந்தப் படம் கொண்டுள்ளதாம். மேலும், முதல் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறாராம். ஆகையால், தான் இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

அதாவது 2ம் நிலை ஹீரோயினாக நடிப்பதற்கு ராஷ்மிகா மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது பெரும்பாலான படங்களில் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்படுவதால், ராஷ்மிகா மந்தனா இந்த முடிவு எடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதன் விளைவாக, ராஷ்மிகா மந்தனா மற்றும் சாய் பல்லவி இருவரும் ஈகோ மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதையடுத்து, ஹலோவில் SaiPallaviVsRashmika என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

2021 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிடுவோம்: அமெரிக்கா

2021 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை

நியுயார்க்: பிரிட்டன், சீனா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உல்க நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து வரும் நிலையில், நாங்கள் 2021 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிடுவோம் என அமெரிக்காவின் முன்னனி தொற்று நோய் நிபுனர் டி. ஆண்டனி ஃபாசி தெரிவித்தார்.

இலட்சக்கணக்கில் மருந்துகளை கேட்டுள்ள பணக்கார நாடுகள்

குறிப்பிட்ட பணக்கார நாடுகள் ஏற்கனவே இந்த மருந்தை தங்களிடம் இலட்சக்கணக்கில் கேட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

உதாரனத்திற்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவைற்கான மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுவரும் ஆஸ்ட்ராசெனேகா(AstraZeneca) என்னும் நிறுவனத்தை எதிர் நோக்கியுள்ளன.

ஆஸ்ட்ராசெனேகா நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்த ஆஸ்ட்ராசெனேகா நிறுவனம் இந்தியாவின் சீரம் கழகத்தில் 1 பில்லியன் அளவிற்கு தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

தடுப்பூசிகளுக்கான வழிகாட்டுதல்கள் உலக சுகாதார நிறுவனத்தால் வகுக்கப்படும் என தெரிகிறது.

3

நயன்தாராவை தவிர வேறு நடிகை இல்லை: பிரபல இயக்குநர் ஓபன் டாக்!

0
Aramm Nayanthara

Aramm 2: Nayanthara; நயன்தாராவை தவிர வேறு நடிகை இல்லை: பிரபல இயக்குநர் ஓபன் டாக்! நயன்தாராவைத் தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

அறம் 2 படத்தை நயன்தாராவை வைத்து தான் இயக்குவேன் என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த படம் அறம்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி என்ற கதபாத்திரத்தில் கலெக்டராக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அறம்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கப் போராடும் மாவட்ட ஆட்சியரின் கதை தான் இந்தப் படம். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, அறம் 2 எடுக்க தன்னை தயார்படுத்தி வருவதாக இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார். இந்த நிலையில், அறம் 2 படத்தின் நயன் தாராவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு நயன் தாரா மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால், தான் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து இயக்குநர் கோபி நயினார் கூறுகையில், அறம் 2 படத்திற்காக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லை.

நயன்தாராவைத் தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து அறம் 2 படத்தை இயக்கமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

அஜித்தின் ஐடியா வைரல்: அஜித்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கார்த்திக்!

0
Thala Ajith Dhaksha Drone

Thala Ajith Dhaksha Drone; அஜித்தின் ஐடியா வைரல்: அஜித்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கார்த்திக்! கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.

தல அஜித்துக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கார், பைக் ரேஸ் என்று அனைத்திலும் கலக்கும் வல்லமை படைத்தவர். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், தக்‌ஷா குழு மூலமாக ட்ரோன் உருவாக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது இந்த தக்‌ஷா குழு புதிய முயற்சியில் ஈடுபட இருக்கிறது.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரையில் இந்த ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 866 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில், தற்போது தக்‌ஷா குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.

ஆம், மருத்துவமனை உள்ளிட்ட மிக நெரிசலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தல அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் முன் வந்துள்ளனர். இதன் காரணமாக #AJITHLedDroneToFightCorona என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே, தக்‌ஷா குழுவினர், கடந்த மார்ச் மாதம், 3 லட்சம் சதுர கிமீ பரப்பளவு சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமாக கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமி நாசினை தெளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மறுபடியும் தக்‌ஷா குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனாவை ஒழிப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு டாக்டர் கார்த்திக் (LIT Skills Learning) நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஹலோவில் அஜித்தின் ஐடியா வைரல் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்!

0
Vanitha Son VijaySriHari

Thalapathy Vijay Vanitha Son Birthday; தளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்! நடிகை வனிதாவின் மகன் தளபதி விஜய்யுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. இவர், பிரபல நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள்.

சந்திரலேகா படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். எனினும், எந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து, சினிமாவில் இருந்து விலகினார்.

இதையடுத்து, கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் பீட்டர் பால் என்ற இயக்குநரை 3ஆவதாக காதல் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வனிதா – பீட்டர் பால் ஆகியோரது திருமணம் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வைத்து நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வனிதா வாழ்த்து தெரிவித்தார். அதோடு, விஜய்யின் 21 ஆவது பிறந்தநாளின் போது சந்திரலேகா படப்பிடிப்பு நடந்ததாகவும் அங்கு வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தற்போது தனது மகன ஸ்ரீஹரியுடன் தளபதி விஜய் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்ஸ்ரீஹரி முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்!

0
Danny Movie

Danny Release On Z5; ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்! வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷின் படங்களைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், திரைக்கு வர இருந்த கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான படங்கள் முடங்கியுள்ளன.

இதில், தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது.

எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரியாத போது, புதிய படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அந்த வகையில், ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி என்ற படம் நேரடியாக ஜி5 தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழ்நாட்டில் புதன் கிழமை மட்டும் 2,865 கொரோனா தொற்றுகள்

கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் புதன் கிழமை மட்டும் 2,865 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 67,468 ஆக உள்ளது.

புதன் கிழமை 33 பேர் கொரோனாவால் இறந்ததை அடுத்து மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 866 ஆக உள்ளது.

தமிழ் நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 28,836 ஆக உள்ளது.

1,654 புதிய தொற்றுகளுடன் சென்னை முதலிடம்

1,654 புதிய தொற்றுகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. செங்கல்பட்டு(131), காஞ்சிபுரம்(66), திருவள்ளூர்(87), ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேர்ந்து 284 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.

மதுரையின் ஊரடங்கு முதல் நாளில் 97 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன மற்றும் அங்கு கொரோனா தொற்று 1,000த்தையும் தாண்டி 1,073 ஆக உள்ளது.

மற்ற மாவட்டங்களில் கொரோனா

நாகபட்டிணத்தில் 62 தொற்றுகளும், சேலத்தில் 55 தொற்றுகளும், திருச்சியில் 75 தொற்றுகளும், வேலூரில் 51 தொற்றுகளும் மற்றும் திருவண்ணாமலையில் 54 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டன.

3