Home Blog Page 43

களமிறங்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழு: #AJITHLedDroneToFightCorona டிரெண்டிங்!

0
Thala Ajith Drone

Thala Ajith Dhaksha; களமிறங்கிய தல அஜித்தின் தக்‌ஷா குழு: #AJITHLedDroneToFightCorona டிரெண்டிங்! தல அஜித்தின் தக்‌ஷா குழு தனது ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அடிச்சு தூக்கும் முயற்சியில் தல அஜித்தின் தக்‌ஷா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கார், பைக் ரேஸ் என்று அனைத்திலும் கலக்கும் வல்லமை படைத்தவர். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், தக்‌ஷா குழு மூலமாக ட்ரோன் உருவாக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது இந்த தக்‌ஷா குழு புதிய முயற்சியில் ஈடுபட இருக்கிறது.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரையில் இந்த ஊரங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 866 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில், தற்போது தக்‌ஷா குழுவினர் ஈடுபட இருக்கின்றனர். ஆம், மருத்துவமனை உள்ளிட்ட மிக நெரிசலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு தல அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் முன் வந்துள்ளனர்.

இதன் காரணமாக #AJITHLedDroneToFightCorona என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே, தக்‌ஷா குழுவினர், கடந்த மார்ச் மாதம், 3 லட்சம் சதுர கிமீ பரப்பளவு சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமாக கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமி நாசினை தெளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மறுபடியும் தக்‌ஷா குழுவினர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Thala Ajith Dhaksha Drone

3

டுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு!

0
Shabana Fake Twitter Account

Sembaruthi Shabana Fake Id; டுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு! டுவிட்டரில் தனது பெயரில் போலி கணக்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செம்பருத்தி நடிகை ஷபானா ரசிகர்களை உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷபானா ரசிகர்களிடம் அது தனது டுவிட்டர் பக்கம் இல்லை என்று எச்சரித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஷபானா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவரோ, தளபதி விஜய்யின் தீவிர ரசிகை.

மேடை நிகழ்ச்சிகளில் தளபதி விஜய்யின் மாஸான டயலாக்கான உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும் இருக்க வேண்டும் என்று பேசி கை தட்டல்களை வாங்கியதோடு மேடையை தெறிக்க விட்டுள்ளார்.

தமிழ்நாட்டுல பேமஸ் ஜீ தமிழ், ஜீ தமிழில் பேமஸ் செம்பருத்தி, செம்பருத்திம்கு பேமஸ் ஷபானா என்று கூறும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

இவர், மலையாளத்தில் விஜயதசமி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, தமிழில், செம்பருத்து என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

செம்பருத்தி தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷபானா டிக் டாக் செய்து நிறைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷபானா தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வைத்து தனது பெயரில் நிறைய போலி கணக்குகள் வருவதாக கூறி ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

பொதுவாக சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சி தொடரிலோ பிரபலமாகிவிட்டாலே அவர்களது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு விடும். அதனாலேயே நிறைய பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து வெளியேறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டென்னிஸ் விளையாட்டில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிக்கை கொரோனா பாதித்தது

டென்னிஸ் விளையாட்டில்

டென்னிஸ் விளையாட்டின் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்னிஸ் வீரரான ஜோகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலீனா ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜோகோவிக் மற்றும் அவரது மொத்த குடும்பமும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது.

அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி

இதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் கொரோனாவிற்கான அறிகுறி அவரிடம் இருந்ததாக தெரியவில்லை.

சுய தனிமை படுத்தலில் இருக்கின்றனர்

இப்போது ஜோகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலீனா சுய தனிமை படுத்தலில் இருக்கின்றனர். 5 நாட்களுக்கு பிறகு தாங்கல் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போவதாக கூறியுள்ளனர்.

3

தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது

தென் ஆப்பிரிகாவில் கொரோனாவால்

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் 111 பேர் கொரோனாவால் இறந்தனர்.

இதுவரை 2,100 பேர் அந்நாட்டில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சோதனை முறையில் தடுப்பு மருந்து

கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை தென் ஆப்பிரிக்காவில் சோதனை முறையில் பயண்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் பங்கெடுக்க உள்ளதாக தெரிகிறது.

இதுவரை ஆப்பிரிக்காவில் 3,25,000 வைரஸ் தொற்றுகள்

ஆப்பிரிக்காவில் தற்போது 3,25,000 வைரஸ் தொற்றுகள் உள்ளன. அந்நாட்டுமக்களிடமிருந்து பொருளாதார அழுத்தம் ஏற்பட்டதால், அரசு ஊரடங்கை தளர்த்தி உள்ளது.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பற்றாகுறை அந்நாட்டில் பெரும் பிரச்சனையாக உருமாறியுள்ளது.

அடுத்த கொரோனா மையமாக ஆப்பிரிக்கா உருவாகும் ஆபத்து

தற்போது இருக்கும் நிலை நீடித்தால் உலகத்தின் அடுத்த கொரோனா மையமாக ஆப்பிரிக்கா உருவாகும் என்பது உறுதி.

3

காதல் குறித்து பேசி அழுத வனிதா!

0
Vanitha Love Marriage

Vanitha; காதல் குறித்து பேசி அழுத வனிதா! பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா தனது 3ஆவது காதல் திருமணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

வனிதா காதல் குறித்து பேசி அழுதுள்ளார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதோடு, சர்ச்சையிலும் சிக்கினார்.

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றதோடு, தனது சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், பிக் பாஸ் வனிதா வேறு தற்போது இருக்கும் வனிதா வேறு என்று அனைவருக்கும் புரிய வைத்தார்.

இதையடுத்து, அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், தனது சமையல் குறிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தான் கடந்த 17 ஆம் தேதி வனிதா 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆம், பீட்டர் பால் என்பவருடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

வரும் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தனது 3ஆவது திருமணத்திற்கு என்ன காரணம், காதல் எப்படி உருவானது என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: லாக்டவுன் காலத்தில் எனது யூடியூப் சேனலை பார்த்து கொண்ட பணியாளர்கள் இல்லாமல் நான் அவதிப்பட்டேன்.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் செய்து வந்த பீட்டர் பால் என்னுடன் நட்பாக இருந்தார். அனிமேஷன் வேலை செய்து வந்த அவர் என்னிடம் யூடியூப் சேனல் பற்றி கேட்டார்.

அது பற்றி நான் கூறிய போது ஓடி வந்து எனக்கு உதவினார். லாக்டவுன் காலத்தில் என்னிடம் வந்து காதல் புரோபோஷ் செய்தார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.

இந்த காதல் பற்றி அறிந்த எனது மகள் மிகவும் சந்தோஷப்பட்டாள். நாங்கள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் உங்களுக்கு என்று ஒரு துணை முக்கியம்.  இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று யோசித்து பேசினாள்.

மேலும், திருமண நாள் பற்றி எனது அம்மாவும் நானும் கலந்து பேசினோம். எனது கண்ணில் ஜூன் 27 ஆம் தேதி தான் தென்பட்டது. அந்த நாள் எனது அம்மா – அப்பாவின் திருமண நாள். அதே நாளில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பீட்டர் பாலிடம் கூறினேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார்.

எங்களது திருமணத்திற்கான மோதிரத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளோம். ஆனால், லாக்டவுன் என்பதால் டெல்லியிலிருந்து வரவில்லை. அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்றும் தெரியவில்லை. இப்படியாக தனது திருமணம் நடக்கப்போகிறது என்று கூறி அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது பெயரையும் வனிதா பீட்டர் என்று மாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பாலின் பெயரை கையில் டாட்டூ போட்டுள்ளார். இதே போன்று பீட்டர் பாலும், வனிதாவின் பெயரை கையில் டாட்டூ போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே! வைரலாகும் நடிகர்களின் பள்ளிக்கூட புகைப்படங்கள்!

0
Ajith School Photos

Tamil Actor and Actress School Photos; ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே! வைரலாகும் நடிகர்களின் பள்ளிக்கூட புகைப்படங்கள்! நடிகர்கள், நடிகைகளின் பள்ளிக்கூட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, சாய் பல்லவி, ஹன்சிகா என்று நடிகர்கள், நடிகைகளின் பள்ளிக்கூட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் தல அஜித், தளபதி விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், விக்ரம், விஜய் சேதுபதி என்று பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இதே போன்று முன்னணி நடிகைகளின் பட்டியலில் த்ரிஷா, ஹன்சிகா, நயன்தாரா, அமலா பால், சாய் பல்லவி, நஸ்ரியா நசீத் என்று பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகத்தையே தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. எப்போது திரையரங்கள் திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது.

அப்படியிருக்கும் போது மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் என்று உருவாக்கப்பட்டுள்ள புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்களின் பள்ளிக்கூட புகைப்படங்கள் ஹலோவில் வைரலாகி வருகிறது. நடிகர்கள், நடிகைகளின் பள்ளிக்கூட புகைப்படங்களை பதிவிட்டு, உங்களுக்குப் பிடித்த நடிகர்கள், நடிகைகள் யார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பள்ளிப் பருவத்தில் அனைவருமே சுட்டி தான். பள்ளியில் படிக்கும் போது சக மாணவியிடம் குறும்பு செய்யும் சுட்டியாக சாய் பல்லவி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களின் பள்ளிக்கூட புகைப்படங்களை பார்க்கும் போது, நாம் படித்த பள்ளியும், பள்ளி பருவமும் நமக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கும். ஏனென்றால், எனக்கும் அப்படி ஞாபகத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சமந்தாவுக்கு கொரோனாவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
Samantha Corona Virus

Samantha; சமந்தாவுக்கு கொரோனாவா? ரசிகர்கள் அதிர்ச்சி! சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமந்தா முத்தம் கொடுத்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த 2019 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யா, நாய்குட்டி, குடும்பம் என்று பொழுதை கழித்து வருகிறார். மேலும், தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆம், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது தோழியும், பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஷில்பா ரெட்டி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனால், சமந்தாவுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால், இது குறித்து சமந்தா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

அந்தியூர் காட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட காட்டெருமைகள் : ஈரோடு

காட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட காடெருமைகள்

ஈரோடு: அந்தியூர் காட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு காட்டெருமைகள் செவ்வாய்கிழமை இறந்த நிலையில் காணப்பட்டது. வனத்துறையை சார்ந்தவர்கள் வயது சம்பத்தப்பட்ட நோயால் அவை இறந்திருக்கக் கூடும் என தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணி

செவ்வாய்கிழமை அந்தியூர் காட்டு பகுதியை சேர்ந்த அதிகாரிகள், என்னமங்களம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

இறந்து கிடந்த காட்டெருமைகள் 

அப்போது இரண்டு காட்டெருமைகள் இறந்து கிடந்த காட்சியை கொல்லுபால் என்ற காட்டு பகுதியில் கண்டுள்ளனர்.

இந்திய காட்டெருமைகளின் சராசரி வாழ்நாள் 25 முதல் 30 வயது ஆகும். “இறந்த இரண்டு காட்டெருமைகளின் வயது 18 முதல் 20 இருக்கும்,” என அந்தியூர் வனக்காவலர்(FRO)  கே. உதிரசாமி தெரிவித்தார்.

விலங்குகள் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு

விலங்குகள் மருத்துவர் கே. அசோகனை தலைமையாக கொண்டு செயல்பட்ட மருத்துவர் குழு சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர்.

வயது முதிர்வினால் ஏற்பட்ட நோயினால் இறந்தன

“வயது முதிர்வினால் ஏற்பட்ட நோயினால் இரண்டு காட்டெருமைகளும் இறந்துள்ளது உடற்கூறு ஆய்வில் உறுதி செய்யப்பட்டது,” என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டெருமைகளின் உடல்கள் காட்டில் அடக்கம் செய்யப்பட்டன.

3

பிரபல டிக்-டாக் நட்சத்திரம் “இரவுடி பேபி சூர்யா” தற்கொலை முயற்சி

இரவுடி பேபி சூர்யா

ஆயிரக்கணக்கான இரசிகர்களை கொண்ட பிரபல டிக்-டாக் நட்சத்திரம் “இரவுடி பேபி சூர்யா” தற்கொலை முயற்சி.

இந்த டிக் டாக் பிரபலம் சூர்யா சமீபத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா சட்டப்படி வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைபடுத்தல் முகாமில் இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் தனிமைபடுத்தல் முகாமில் இருக்க வேண்டிய சூர்யா எப்படியோ தப்பித்து தன் சொந்த ஊரான திருப்பூர் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறையினர் “இரவுடி பேபி சூர்யா”வை கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர்.

இதற்கு மறுத்த சூர்யா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு டிக்-டாக் பயணாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

3