Home Blog Page 44

லோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்!

0
Losliya Mariyanesan

Losliya; லோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்! லோஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதை ரசிகர்கள் 1yearoflosliyaism என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

லோஸ்லியா தமிழகத்திற்கு வந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லோஸ்லியா. இவர், கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஓவியாவைப் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான லோஸ்லியாவிற்கு தனியாக ஆர்மியும் உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், நடிகர் கவினை காதலித்தார். ஆனால், வெளியேறிய பிறகு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கிறார்.

நேற்று கவின் தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது, #1yearoflosliyaism  எஎன்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லோஸ்லியா பிரண்ட்ஷிப் மற்றும் மற்றொரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து லோஸ்லியாவின் மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கவர்ந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், லோஸ்லியாவிற்கு ஏற்றே பல பாடல்களை கவின் மற்றும் சாண்டி இருவரும் இணைந்து பாடினர். அப்போது அந்தப் பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜூன் 23 ஆம் தேதி லோஸ்லியா இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. இதன் காரணமாக, #1yearoflosliyaism என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

தல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? போனி கபூர் விளக்கம்!

0
Valimai Theatre Release

Thala Ajith Valimai Movie; தல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? தயாரிப்பாளார் போனி கபூர் விளக்கம்! தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அஜித்தின் வலிமை படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார்.

தல அஜித்தின் 60ஆவது படமாக உருவாகி வரும் தல60 படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைத்து படப்பிடிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில், தான் உலகத்தை ஆட்டி வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள், முதல் பெரிய பட்ஜெட் படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்று அனைத்து படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமலும், வேறு வழியில்லாமலும், எடுத்து முடிக்கப்பட்ட படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத போது, இனி வரும் படங்களும் இதே போன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டது.

அது, தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம், தல அஜித்தின் வலிமை ஆகிய படங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், தான் இது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து கூறுகையில், படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது தான் சிறந்த அனுபவத்தை தரும். எனது படங்களை பெரிய திரைக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வலிமை படத்தை திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும்.

எனது 40 ஆண்டுகால சினிமா பயணத்தில் திரையரங்கில் வெளியாகும் படம் தான் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்கிறது என்று பெருமையோடு கூறியுள்ளார்.

இதன் மூலம் தல அஜித்தின் வலிமை எப்போது வந்தாலும் அது திரையில் தான் வெளியிடப்படும் என்று தெளிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய்யை பளார் என்று அடித்தேன்: நடிகை அனுயா!

0
Anuya Beat Thalapathy Vijay In Nanban Movie

Thalapathy Vijay Nanban Movie; விஜய்யை பளார் என்று அடித்தேன்: நடிகை அனுயா! தளபதி விஜய்யை பளார் என்று அடித்ததாக நடிகை அனுயா பாக்வத் தெரிவித்துள்ளார்.

நண்பன் படத்தில் விஜய்யை பளார் என்று அடித்ததாக அனுயா கூறியுள்ளார்.

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பாக்வத். இப்படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எனினும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வந்த நண்பன் படத்தின் மூலம் அதிகளவில் பிரபலமானார். இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

நண்பன் படத்தில் இலியானாவிற்கு அக்கா கதாபாத்திரத்தில் சத்யராஜுக்கு மகளாக நடித்திருந்தார். மேலும், படத்தில், சுவேதா சந்தானமாக வரும் அனுயாவிற்கு பிரசவ நேரம். சரியான மழை, ஊரெங்கும் வெள்ளம். எந்த காரும், ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில், விஜய் தான் அனுயாவிற்கு பிரசவம் பார்க்க வேண்டிய நிலை வந்தது. அப்போது, விஜய்யை அடிப்பது போன்று காட்சி இருந்தது. அதை பற்றி அண்மையில் அனுயா குறிப்பிட்டிருந்தார்.

அந்த காட்சியின் படப்பிடிப்பின் போது நான் வளர்ந்து வரும் நடிகை. அப்படியிருக்கும் எப்படி தளபதி விஜய்யை அடிப்பது என்று யோசித்தேன். அதன் பிறகு இயக்குநர் ஷங்கர், தளபதி விஜய் என்று நினைக்க வேண்டாம்.

படத்தின் கதைப்படி பஞ்சவன் பாரி வேந்தன் என்று நினைத்துக் கொண்டு அடிங்க என்றார். அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு விஜய்யை பளார் என அடித்தேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் முழு கொரோனா ஊரடங்கு இன்று முதல் அமல்

மதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில்

சென்னை: மதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை விரிவுபடுத்தி, பரவை நகர பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் மதுரை கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்கள், மதுரை மேற்கு மற்றும்  திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் செவ்வாய் கிழமை(இன்று) முதல் இந்த மாத இறுதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தியது தமிழக அரசு.

தமிழகத்தில் ஒரே நாளில் 2710 புதிய கொரோனா தொற்றுகள்

ஒரே நாளில் 2710 புதிய கொரோனா தொற்றுகள் தமிழகத்தில் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த வெள்ளிக் கிழமை சென்னை உட்பட அதனை சுற்றிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கிறது.

6 நாட்களாக தொடர்ந்து 2000 மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள்

தமிழகத்தில் 6 நாட்களாக தொடர்ந்து 2000 மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் ஒவ்வொரு நாளும் உறுதியானது.

தமிழகத்தில் 37 புதிய கொரோனா உயிரிழப்புகள் திங்கள் அன்று பதிவானதை தொடர்ந்து இதுவரை 34,112 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திங்கள் அன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்தனர்.

சென்னையில் ஞாயிறு மட்டும் 1487 கொரோனா தொற்றுகள் 

தமிழகத்தில் சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது. இங்கு மட்டும் 42,752 கொரோனா தொற்று உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும்1487 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன.

3

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரிது வர்மாவிற்கு கல்யாணம்?

0
Ritu Varma Wedding

Ritu Varma Wedding; கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரிது வர்மாவிற்கு கல்யாணம்? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரிது வர்மாவிற்கு கல்யாணம் என்று தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

ரிது வர்மாவிற்கு திருமணம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. இந்தப் படத்தைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கலக்கலான ஜாலி த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 2 உருவாக இருப்பதாக இயக்குநர் அறிவித்திருந்தார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே ரிது வர்மா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் குறித்து ரிது வர்மா கூறுகையில்,

தனது பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், நான் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன். காதல் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

3

வைரலாகும் ராணாவின் திருமண சடங்கு புகைப்படம்!

0

Rana Wedding Ceremony; வைரலாகும் ராணாவின் திருமண சடங்கு புகைப்படம்! நடிகர் ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராணா டகுபதியின் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணா தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார். காதலியை அறிமுகம் செய்து வைத்த கையோடு நிச்சயம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், அது நிச்சயதார்த்தம் இல்லை என்றும், வெறும் பூ முடித்தல் விழா என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ராணாவின் திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள Taj Falaknuma அரண்மனையில் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Miheeka Bajaj Engagement

3

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: டுவிட்டரில் டிரெண்டாகும் 3YearsofAAA!

0
AAA Movie

Simbu; அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: டுவிட்டரில் டிரெண்டாகும் 3YearsofAAA! சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்து 3 ஆண்டுகளை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்ககூடியவர்.

இவரைப் பற்றிய காதல் கிசுகிசு ஏராளமாக வரும். அண்மையில், கூட இவருக்கும், கோடீஸ்வர பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், சிம்புவின் இந்த திருமணம் குறித்து அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது முற்றிலும் வதந்தி என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து 90 எம்.எல். என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படத்தின் வீடியோ அண்மையில் யூடியூப்பில் வெளியானது.

தற்போது, மஹா மற்றும் மாநாடு ஆகிய இரு படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், டுவிட்டரில், 3YearsofAAA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஆம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வந்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இந்தப் படத்தில் சிம்பு வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மதுரை மைக்கேல்/அஸ்வின் தாத்தா மற்றும் திக்கு சிவா ஆகிய ரோலில் நடித்திருந்தார். சிம்புவுடன் இணைந்து தமன்னா மற்றும் ஸ்ரேயா ஆகியோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், டுவிட்டரில், 3YearsofAAA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

வனிதாவின் டாட்டூ: அன்பின் சின்னமாக பதிக்கப்பட்ட புகைப்படம்!

0
Vanitha Tattoo

வனிதாவின் டாட்டூ: அன்பின் சின்னமாக பதிக்கப்பட்ட புகைப்படம்! வனிதா தனது கையில், வருங்கால கணவரின் பெயரை டாட்டூ குத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் பிரபலமான நடிகை வனிதா தனது கையில், வருங்கால கணவரான பீட்டர் பால் என்பவரது பெயரை டாட்டூ குத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதோடு, சர்ச்சையிலும் சிக்கினார்.

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றதோடு, தனது சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், பிக் பாஸ் வனிதா வேறு தற்போது இருக்கும் வனிதா வேறு என்று அனைவருக்கும் புரிய வைத்தார்.

இதையடுத்து, அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், தனது சமையல் குறிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தான் கடந்த 17 ஆம் தேதி வனிதா 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆம், பீட்டர் பால் என்பவருடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

வரும் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

கொரோனா தாக்குதல் காரணமாக மிகவும் எளிய முறையில், வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில், வனிதாவின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு முன்னதாக வனிதா தனது வருங்கால கணவர் பீட்டர் பாலின் டாட்டூவை தனது கையில் குத்தியுள்ளார். இதே போன்று பீட்டர் பாலும், வனிதாவின் டாட்டூவை கையில் குத்தியுள்ளார்.

கையில் குத்தியிருந்த டாட்டூவை புகைப்படம் எடுத்தவற்றை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, அன்பின் சின்னமாக பதிக்கப்பட்டது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனிதாவின் டாட்டூ என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

3

விஜய் பர்த்டே ஸ்பெஷல்: குழந்தைக்கு வெற்றிமாறன் – னு பேர் வச்ச ரசிகர்!

0
Thalapathy Fan Vetrimaaran

Thalapathy Vijay; விஜய் பர்த்டே ஸ்பெஷல்: குழந்தைக்கு வெற்றிமாறன் – னு பேர் வச்ச ரசிகர்! விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளில் தனது ஆண் குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டி அவரது ரசிகர் ஒருவர் தனது அன்பை வெளிக்காட்டியுள்ளார்.

தளபதி விஜய் நேற்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்தும், கேக் வெட்டியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தும் வந்தனர்.

அந்த வகையில், தற்போது தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஹரிஹரன் என்பவர் தனது ஆண் குழந்தைக்கு விஜய் நடித்த மெர்சல் படத்தின் கதாபாத்திரமான வெற்றிமாறன் என்ற பெயரை சூட்டி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய், வெற்றிமாறன், மாறன் மற்றும் வெற்றி ஆகிய 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் கதாபாத்திரம் மீது ஈர்ப்பு கொண்ட கீர்த்தி – ஹரிஹரன் தம்பதியினர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது குழந்தைக்கு வெற்றிமாறன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும், தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டு, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Birthday

3

அம்மன் தரிசனம்: வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பாள் அம்பகரத்தூர் பத்ர காளி!!!

0

அம்மன் தரிசனம்: வேண்டிய வரங்களை அள்ளி தரும் அம்பகரத்தூர் காளி. எதிரிகள் தொல்லை நீக்கும் சக்தி திருத்தலம். வெள்ளை ஆடை மட்டுமே அணியும் பத்ர காளி.

அசுரர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட அன்னை ஆதி சக்தி ஒவ்வொரு முறையும் புவியில் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவாள்.

அப்படிப்பட்ட அந்த அன்னை பத்ர காளியாக தோன்றி அசுர குலத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய சக்தி திருத்தலமே அம்பகரத்தூர் ஆகும்.

அம்பகரத்தூர் காளி வரலாறு

அம்பன், அம்பகரன் என்கின்ற இரு அரக்கர்கள் தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் துன்பறுத்தி வந்தனர். இதனால் தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

திருமாலும் அவர்களை இரட்சிக்க முடிவெடுத்தார். தமது தங்கையான காளி தேவியை அழைத்தார். அண்ணனும், தங்கையும் சேர்ந்து அசுர சகோதரர்களை வதம் செய்ய புறப்பட்டனர்.

திருமால் அந்தணன் வடிவம் கொண்டார். காளியோ அழகிய கன்னி உருவம் கொண்டாள். அசுர மாளிகை நெருங்கியதும் அழகிய பெண்ணை கண்டவுடன் அவர்களை சேவகர்கள் அசுர சகோதரர்கள் முன் நிறுத்தினர்.

அம்பனும் அம்பகரனும் அந்த பெண்ணின் மீது மோகம் கொண்டனர். அவளை அடைய இச்சை கொண்டனர்.

அம்பன் அவள் அருகில் நெருங்கியதும் கோர வடிவமாக மாறினாள். அவளின் உக்ர வடிவம் அனைவரையும் அச்சுறுத்தியது. மேலும் அன்னை வெளியிட்ட ஹூங்கார குரலால் அம்பன் அவ்விடமே மாண்டு போனான்.

இதனால் கோபம் கொண்ட அம்பகரன் அம்பிகையை தாக்க பல மாயா ரூபத்துடன் போரிட்டான். இறுதியாக காட்டெருமை வடிவம் கொண்டு போரிட்டான்.

அம்பிகை அவனை சாய்த்து திருப்பாதத்தை அவன் மீது ஊன்றி அவன் மார்பில் சூலத்தை பதித்தாள். சூலினியின் திரிசூலம் அவனை வேரோடு சாய்த்தது.

அம்பகரனை அழித்த அந்த இடமே அம்பகரத்தூர் என்றானது. மகிட ரூபம் கொண்ட அசுரனை அழித்த பத்ர காளியாய் அன்னை காட்சி அளிக்கிறாள்.

கோவிலின் அமைப்பு

அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய தொன்மை வாய்ந்த ஆலயம். ஆலயத்தின் தெற்கு பகுதியில் அம்பகரனை காலால் மிதித்து அவனை மார்பை சூலத்தால் பிளக்கும் திருக்காட்சியினை காணலாம். வடக்கே அம்பனை தன் வாளால் துண்டிக்கும் திருவுருவை காணலாம்.

எட்டு திருக்கரங்களுடன் சிவந்த திருமேனியுடன் குங்கும மணம் வீச அம்பகரனை இடக்காலில் மிதித்து வல காலை மடித்து வைத்து வெண்ணிற ஆடை உடுத்தி காட்சி தருகிறாள் அன்னை பத்ர காளி.

அம்பிகையின் முன் பலி பீடமும், மகிஷ பீடமும் உள்ளது. மேலும் காளீஸ்வரர் சன்னதியும், பெத்தணர் மற்றும் பேச்சியம்மன் சன்னதியும் அமைந்துள்ளது.

ஆலய திருவிழாக்கள்

வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் மகிஷ வதம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் மற்றும் தை மாத கடை செவ்வாய் ஏக தின லட்சார்சணை நடைபெறும்.

ஆடி மற்றும் தை கடைசி வெள்ளியில் ஆயிர கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கின்றனர். நவராத்ரி நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அள்ளி கொடுப்பாள் அம்பகரத்தூர் காளி!

எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள் இங்கே வந்து வேண்டி கொண்டால் போதும் எதிரிகளை வேரறுப்பாள் பத்ர காளி.

மாங்கல்ய பலம் பெருகவும், நல்ல கணவன் அமையவும் பெண்கள் இங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் நல்ல வாழ்வு கிடைக்கும்.

ஏவல், பில்லி, சூன்யம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும். வேண்டிய வரங்களை அள்ளி தரும் சக்தியாக அமர்ந்துள்ளார் அம்பகரத்தூர் பத்ர காளியம்மன்.

அனைவரும் அம்பகரத்தூர் சென்று அன்னையை தரிசித்து ஆனந்த நல்வாழ்வினை பெறுவோம்.

அமைவிடம்: புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பகரத்தூர் பத்ர காளி ஆலயம்.

நடைதிறப்பு: காலை 6 மணி முதல் 12 வரை, மாலை 5 முதல் 9 மணி வரை.

3