Home Blog Page 45

இன்னும் 30 நாள்: டுவிட்டரில் சிங்கம் சூர்யா டிரெண்டிங்!

0
Suriya Birthday

Suriya; இன்னும் 30 நாள்: டுவிட்டரில் சிங்கம் சூர்யா டிரெண்டிங்! நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில் சிங்கம் சூர்யா ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சூர்யாவின் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. எப்போதும், சமூக அக்கறை கொண்டவர். தனது அகரம் ஃபவுண்டேசன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார். மேலும், பல உதவிகளை செய்து வருகிறார்.

இவ்வளவு ஏன், தனது சொந்த செலவில் 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆம், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் பறக்கும் விமானத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

அந்த பாடல் வெளியீட்டிற்காக முதல் முறையாக இதுவரை விமானத்தில் சென்றிராத 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றிச் சென்று அழகு பார்த்துள்ளார். அதோடு, வெய்யோன் சில்லி என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், நேற்று டுவிட்டரில் சிங்கம் சூர்யா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.

இதில், சூர்யா நடித்த படங்களையும், பாடல்களையும் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இப்போதே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

July 23rd Suriya Birthday

3

கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு, 85 வயது முதியவர் காலமானார்: கோவா

கொரோனா பாதிப்பால் இறந்த

கோவா: 85 வயது முதியவர் கொரோனா பாதிப்பினால் திங்கள் கிழமை இறந்தார். இது அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு என சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.

சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்தவர்

இறந்தவர் வடக்கு கோவாவின் சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என ரானே தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் கொரோனாவால் இறந்த முதல் இறப்பு

“கோவாவின் சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்த 85 வயது முதியவர் கொரோனாவால் இறந்தார் என்பதை மிக்க சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்து கொள்கிறேன். இது இந்த மாநிலத்தில் கொரோனாவால் இறந்த முதல் இறப்பாகும்,” என ரானே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை வரை கோவா மாநிலத்தில் 818 கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 683 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

பூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரை நிகழ்ச்சி கொரோனாவினால் கட்டுபாடுகளுடன் இன்று நடக்கவிருக்கிறது

பூரி ஜகன்நாத்

புதுடெல்லி: ஜுன் 23 இல் நடக்கவிருக்கும் பூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்து உத்தரவு.

தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்ச்சியை நடத வேண்டும்

கோவில் நிர்வாகம், மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தகுந்த கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துமாறு கேட்டுக் கொண்டன.

ஜீன் 18 இல் இந்த ஆண்டு இரத யாத்திரையை கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததை அடுத்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் முறையீட்டில் தீர்ப்பு

மேல் முறையீட்டில் பல நூறு ஆண்டுகளாக இந்நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருவதால் கொரானாவை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்றி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.

பொதுவாக இந்த பூரி ஜகன்நாத் ரத யாத்திரையில் உலகில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொல்வது வழக்கமாகும்.

பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்படும்

இம்முறை கொரோனா பரவலால் வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பால் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் அல்லது பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

திருமணத்திற்கு தயாரான நடிகை: மாப்பிள்ளை இவர் தானாம்!

0
Niharika Konidela

திருமணத்திற்கு தயாரான நடிகை: மாப்பிள்ளை இவர் தானாம்! விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா கொனிடாலா தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நிஹாரிகா கொனிடாலா தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்த ஒரு நல்ல பாத்து சொல்றேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா கொனிடாலா.

இவர் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். நிஹாரிகாவும், தெலுங்கு நடிகர் பிரபாஸும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுத்தனர்.

இதையடுத்து, நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார். இந்த நிலையில், நிஹாரிகா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாப்பிள்ளையின் முகம் தெரியாதபடி அவரை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், மாப்பிள்ளையின் முகம் தெரியும்படியும், என்னுடையவர் என்றும் குறிப்பிட்டு தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

அவரது பெயர் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு. இவர், குண்டூரைச் சேர்ந்தவர். மேலும், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரைத் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

விரைவில், திருமண தேதியும் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிஹாரிகாவுக்கு நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தேவயானி 46ஆவது பிறந்தநாள்: ஹலோவில் டிரெண்டாகும் தேவயானி பாடல்கள்!

0
Devayani Birthday

தேவயானி 46ஆவது பிறந்தநாள் ஹலோவில் டிரெண்டாகும் தேவயானி பாடல்கள்! தேவயானி இன்று தனது 46ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்யைப் போன்று நடிகை தேவயானியும் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் நடிகை தேவயானி. இவரது இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ். இவரது தந்தை மங்களூரைச் சேர்ந்த ஜெயதேவ். தாயார், நெய்வேலியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள்.

தேவயானிக்கு நகுல் மற்றும் மயூர் என்று இரு சகோதரர்கள். தொட்டா சினுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, காதல் கோட்டை படத்தில் நடித்தார்.

இந்தப் படம் தேவயானிக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றுக் கொடுத்தது. மேலும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, பூமணி, சிவசக்தி, விவசாயி மகன், காதலி, பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்ய வம்சம், கிழக்கும் மேற்கும், மறுமலர்ச்சி, உதவிக்கு வரலாமா, ஸ்வர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், பூந்தோட்டம், செந்தூரம், என் உயிர் நீ தானே, புதுமை பித்தன், தொடரும், கும்மி பாட்டு, நீ வருவாய் என, பாட்டாளி, நிலவே முகம் காட்டு, சுயம்வரம், வல்லரசு, அப்பு, என்னம்மா கண்ணு, பாரதி, தெனாலி, கண்ணுக்கு கண்ணாக, ப்ரண்ட்ஸ், என் புருஷன் குழந்தை மாதிரி, விவரமான ஆளு, ஆனந்தம், விண்ணுக்கும் மண்ணுக்கும், நினைக்காத நாளில்லை, படை வீட்டு அம்மன், சகாப்தம், ஐந்தாம் படை, ஒரு நாள் வரும், கிரி, பீஷ்மர், காதலுடன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தேவயானி – ராஜகுமரன் தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரு மகள்கள் இருக்கின்றானர். இந்த நிலையில், நடிகை தேவயானி இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தேவயானியின் பிறந்தநாளான இன்று விஜய்யும் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கவின் தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயானியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில் தேவயானி பாடல்கள் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தேவயானியின் பாடல்கள், படங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

குட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து!

0
Keerthy Suresh Violin Video

Keerthy Suresh Violin Video; குட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் வயலினில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை வாசித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அவர் கேக் வெட்டினாரோ இல்லையோ அவரது சார்பில் ரசிகர்கள் கேக் வெட்டி விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிந்தனர்.

ரசிகர்களுடன் இணைந்து சினிமா பிரபலங்கள் அனைவரும் விஜய்க்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் வீடியோ வெளியிட்டு தங்களது அன்பையும், மரியாதையும் வெளிக்காட்டினர்.

அந்த வகையில், விஜய்யுடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் நடித்து கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் வயலின் வாழ்த்து என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த பென்குயின் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால், படத்தின் கதை என்னவோ பழசுதான். கொஞ்சம் மாற்றி த்ரில்லராக கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இது போன்று த்ரில்லர் கதை கொண்ட படங்கள் ஏராளமாக வெளியாகியிருக்கிறது.

அதில், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படம் குறிப்பிடத்தக்கது.

3

HBD Thalapathy Vijay: NonPareilThalaAJITH நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்!

0
Thala Ajith Twitter Trending

Thalapathy Vijay; விஜய் பிறந்தநாள்: நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்! விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டர் ஹேஷ்டேக்கில் தல அஜித்தின் பெயரை இடம்பெறச் செய்து ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.

விஜய் பிறந்தநாளில் தல அஜித்தின் ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

கோலிவுட் ரசிகர்களுக்கு இடையில் கடும் போட்டியாக நினைப்பவர்கள் தல, தளபதி ரசிகர்கள் தான். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் காலங்காலமாக நடந்து வருகிறது. அஜித் படம் திரைக்கு வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படமோ, பாடலோ, டீசர், டிரைலரோ வந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

ஆனால், விஜய்யோ, அஜித்தோ யாரும், அவர்களுக்குள் போட்டியாகவோ, எதிரியாகவோ நினைத்தது இல்லை. நினைப்பதும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக தான் கோட் சூட்டில் வந்ததாக விஜய் தெரிவித்தார். இதன் காரணமாக அப்போது நண்பர் அஜித் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று அஜித் ரசிகர்கள் தங்களது வேலையை காட்டியுள்ளனர். ஆம், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு டுவிட்டரிலும், ஹலோவிலும் நிறைய ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.

ஆனால், அதனையெல்லாம் முறியடிக்கும் வகையில், டுவிட்டர் டிரெண்டிங்கில் NonPareilThalaAJITH என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajith

3

குட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்!

0
Kutty Nayan Kutty Vicky

Nayanthara; குட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்! ஆப் மூலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் குட்டி பசங்களாக மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டி நயன் குட்டி விக்கி வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிதான் யாருக்கும் தெரியாது. ஏன் அவர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம்.

இது ஒரு புறம் இருக்க, நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில், நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வந்தது.

என்னது நயன் தாராவுக்கு கொரோனா என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில், இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், குட்டி நயன் குட்டி விக்கியாக இருக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஹலோவில் குட்டி நயன் குட்டி விக்கி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவைத் தொடர்ந்து, எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்ப்போம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்து விட்டது போல புகைப்படங்களை டிசைன் செய்த உங்களையும் அப்படித்தான் பார்க்கிறோம்.

ஹாய் நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம். மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் தான் இருக்கிறோம்.

உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் முட்டாள்தனமான ஜோக்குகள் ஆகியவற்றை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான அளவிற்கு வலிமையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Corona Virus

3

லடாக் எல்லை பிரச்சனை, இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு

இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில்

புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் லடாக் எல்லை கோட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனையை அடுத்து இருநாடுகளிலும் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு நடந்துவருகின்றன, என இராணுவ வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு

ஜீன் 6ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் இரண்டாம் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பாக இது கருதப்படுகிறது. அன்று நடந்த சந்திப்பின் போது எல்லை கோட்டின் பகுதிகளிலிருந்து கலைந்து மே 4 இல் இருந்த நிலைக்கு செல்ல சீனா சம்மதம் தெரிவித்திருந்ததாக தெரிகிறது.

இந்தியாவின் திட்ட அறிக்கைக்கு எந்த பதிலும் சீனர்களிடமிருந்து வந்ததாத தெரியவில்லை மற்றும் 10,000த்திற்கும் மேல் சீனா இராணுவத்தினரை குவித்து இருந்தது.

எல்லை கட்டுபாட்டு சட்டத்தை மாற்ற இந்தியா முயற்சி

இதை அடுத்து எல்லை கட்டுபாட்டு பகுதிகளில் அசாதாரண சூழல்களில் இராணுவத்தினர் ஆயுதங்கள் பயண்படுத்தும் படி, எல்லை கட்டுபாட்டு சட்டத்தை மாற்ற இந்தியா முயற்சித்து வருவதாக தெரிகிறது.

சீனா தரப்புடன் ஜுன் 6 இல் நடந்த சந்திப்பில், சீனா வாக்களித்தது போல் கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் எல்லை கோட்டின் மற்ற பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா தற்போதய சந்திப்பில் கேட்கும் என தெரிகிறது.

இந்தியாவின் லடாக் எல்லை அருகே சீனா அமைத்துவரும் வான்படை குறித்தும் இந்த சந்திப்பில் இந்திய தரப்பிலிருந்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த மாதம் முதலே சீனா மற்றும் இந்தியா எல்லையில் பதற்றம்

கடந்த மாதம் முதலே சீனா மற்றும் இந்தியா எல்லையில் நிலவும் பதற்றத்தை போக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

கடந்த வாரம் 20 இந்திய இராணுவத்தினர் உயிர்த்தியாகம்

இருப்பினும், கடந்த வாரம் 20 இந்திய இராணுவத்தினர், சீன படையினரின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் ஏற்பட்ட மோதலில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உயிரிழந்தனர்.

இந்த மோசமான நிகழ்வில் சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கக் கூடும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

3

என்னது நயன்தாராவுக்கு கொரோனாவா? ஷாக்கான விக்னேஷ் சிவன் டுவீட்!

0
Nayanthara Corona Virus

Nayanthara Corona Virus? என்னது நயன்தாராவுக்கு கொரோனா? ஷாக்கான விக்னேஷ் சிவன் டுவீட்! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவல் பற்றி விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது காதலியும், நடிகையுமான நயன் தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி அறிந்து ஷாக்கான காதலன் விக்னேஷ் சிவன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிதான் யாருக்கும் தெரியாது. ஏன் அவர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம்.

இது ஒரு புறம் இருக்க, நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்த நிலையில், நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வந்தது.

என்னது நயன் தாராவுக்கு கொரோனா என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில், இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தை முக தோற்றத்தில் இருப்பது போன்றும், நடனமாடுவது போன்றும் இருக்கும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவைத் தொடர்ந்து, எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்ப்போம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்து விட்டது போல புகைப்படங்களை டிசைன் செய்த உங்களையும் அப்படித்தான் பார்க்கிறோம்.

ஹாய் நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம். மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் தான் இருக்கிறோம்.

உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் முட்டாள்தனமான ஜோக்குகள் ஆகியவற்றை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான அளவிற்கு வலிமையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தற்போது நடிகர், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் தற்போது இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3