Home Blog Page 46

பிக் பாஸ் கவின் பர்த்டே டுடே!

0
Kavin Birthday Today

Kavin Birthday; பிக் பாஸ் கவின் பர்த்டே டுடே! சரவணன் மீனாட்சி வேட்டையனாக வலம் வந்த நடிகர் கவின் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் கவின் பிறந்தநாள் இன்று.

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின்.

இந்த தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான பீட்சா என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படத்தில் கவினின் கதாபாத்திரம் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை.

இதையடுத்து, தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையனாக வலம் வந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தில் நடித்தார். அதன் பிறகு சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், 94 ஆவது நாளில் குடும்பத்தில் நிலவிய பிரச்சனை காரணமாக போட்டியிலிருந்து ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் வெளியேறினார்.

இந்நிகழ்ச்சியில் லோஸ்லியாவை காதலித்தார். ஆரம்பம் முதலில் நடிகை அபிராமி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோரை காதலித்து வந்த கவின், இறுதியில், ஒரே ஒருவரான லோஸ்லியாவை காதலித்தார். அவருக்கு என்று தனியாக பாடல்களையும் பாடி அசத்தினார்.

லோஸ்லியா – கவின் காதலுக்கு லோஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் பிரிந்து விடலாம் என்று எண்ணினர். ஆனாலும், அப்படி எதுவும் இல்லாமல், இருவரும் ஒருவரையொருர் புரிந்து கொண்டு காதலித்து வந்தனர்.

இறுதியில், கவின் போட்டியிலிருந்து வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் லோஸ்லியா கதறி அழுதார்.

தற்போது அவர்களுக்கு இடையில் காதல் இருக்கிறதா? இல்லையா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கின்றனர்.

லோஸ்லியா, ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் ஆர்ஜூன் ஆகியோருடன் இணைந்து ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார்.

கவின், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர் உடன் இணைந்து லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வீட்டில் இருந்த கவின், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதிகளவில் முடியுடனும், தாடியுடனும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கவின் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் கவினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கவின் டாக்டர் படத்தில் துணை இயக்குநராக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

3

பிரபலங்கள், ரசிகர்கள் கொண்டாடிய விஜய் பிறந்தநாள்!

0
Thalapathy Birthday

Vijay Birthday Wishes; பிரபலங்கள், ரசிகர்கள் கொண்டாடிய விஜய் பிறந்தநாள்! தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் இணைந்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் தங்களுக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தளபதி விஜய். ஆனால், என்ன இந்தப் படம் சிறப்புத் தோற்றமாக அமைந்துள்ளது. தொடர்ந்து குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவரை ஹீரோவாக்கியதே அவரது அப்பா எஸ்..சந்திரசேகர்.

விஜய் நடித்த 64 படங்களில் கிட்டத்தட்ட 15 படங்களில் எஸ்..சந்திரசேகர் இயக்கத்திலேயே நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது தளபதி66 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி, கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களை விட விஜய் பிறந்தநாளை சினிமா பிரபலங்கள் சூப்பராக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், பெங்களூரில் உள்ள தமிழ் பசங்க அணியினர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 200 பேருக்கு உணவு பொருட்களை வழங்கியுள்ளனர்.

எடிட்டர் ரூபன்

விஜய் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் எங்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

சந்தீப் கிஷான்

எனக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் சிறந்த மனிதர்களில் ஒருவரான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை திரையில் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் உயர்வாக நினைக்கிறேன்.

என்னுள் இருக்கும் குழந்தை தனத்தை அப்படியே உயிருடன் இருக்க வைத்ததற்கு உங்களுக்கு நன்றி என்றார்.

ராஷ்மிகா மந்தனா

ஹேப்பி பர்த்டே டூ விஜய் சார் என்று கூறியதோடு கார்ட்டூன் படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

துல்கர் சல்மான்

ஹேப்பி பர்த்டே தளபதி விஜய்!! இந்த பிறந்த நாள் சிறந்ததாக இருக்க வாழ்த்துக்கள் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திவ்யதர்ஷினி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். உடல் ஆரோக்கியத்தோடு இருக்கவும், வாழ்க்கை வெற்றியானதாக இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்

ஹேப்பி பர்த்டே டியர் தளபதி என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் மறக்க முடியாத நினைவு. உங்களுடன் பயணித்த ஒவ்வொரு நாளும், என்னால் மறக்க முடியாத அண்ணா. அதற்காக உங்களுக்கு நன்றி. ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா. லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

ஹேப்பி பர்த்டே தளபதி விஜய்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹேப்பி பர்த்டே தளபதி விஜய் சார்

மஞ்சிமா மோகன்

ஹேப்பி பர்த்டே விஜய் சார்.

பிரசன்னா

உங்களது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா.

அர்ச்சனா கல்பாத்தி

லோகேஷ் கனகராஜூக்கு நன்றி. நாங்கள் மாஸ்டர் பட பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். ஹேப்பி பர்த்டே விஜய் சார்நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும், மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் ஒரு சிறந்த ஆண்டாக இந்த வருடம் இருக்கும் என்று நம்புகிறேன்.

அட்லி

என்னோட அண்ணா..என்னோட தளபதி. நீங்கள் இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை. என்னை விட அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன், மதிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

கௌரி ஜி கிஷான்

ஹேப்பி பர்த்டே விஜய் சார். உங்களுடன் இணைந்து நடித்துள்ளேன் என்று நினைக்கும் போது இப்பவும் என்னால் நம்பவே முடியவில்லை.

வரலட்சுமி சரத்குமார்

ஹேப்பி பர்த்டே தளபதி. நீண்ட நாள் வாழவும், வலிமையோடு இருக்கவும், தொடர்ந்து எங்களை மகிழ்விக்கவும் வாழ்த்துக்கள். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் தளபதி என்று குறிப்பிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

மிகவும் கூலான மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்ட நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேப்பி பர்த்டே விஜய் சார்.

அனிருத் ரவிச்சந்திரன்

ஹேப்பி பர்த்டே டியர் தளபதி விஜய் சார். மாஸ்டர் படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனு

வருடம் வருடம் உங்களுக்கு போன் மற்றும் டுவிட்டர் வாயிலாக வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் எனக்கு சிறந்த வருடம். ஏனென்றால், மாஸ்டர் படத்தில் உங்களுடன் இணைந்து நடித்துள்ளேன்.

அதோடு, உங்களது மனதில் எனக்கும் இடம் இருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு முறை எனது சகோதரர் என்று இல்லை. எப்போதும் எனது சகோதரர் விஜய் அண்ணா உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா

அனைவரும் இன்று வாழ்த்து கூறிய நிலையில், ஆண்ட்ரியா மட்டும் ஒருபடி மேல் சென்று கடந்த 13 ஆம் தேதியே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூரி

ஹேப்பி பர்த்டே தளபதி விஜய் அண்ணே என்று பதிவிட்டுள்ளார்.

விஷால்

ஹேப்பி பர்த்டே டியர் விஜய் பிரதர். இன்றைய பிறந்தாள் உங்களுக்கு ஒரு அற்புதமான பிறந்தநாள். இனி வரும் காலங்கள் நீங்கள் எப்போது எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் மகேந்திரன்

ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா. நீங்கள் தான் எனக்கும் இளைய தலைமுறையினருக்கும் சிறந்த உத்வேகம். நான் உங்களுடன் இணைந்து நடித்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன்.

மாஸ்டருக்காக வெறித்தனமா வெயிட்டிங். லவ் யூ…. என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த சினிமா பிரபலங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bangalore Tamil Pasanga Vijay 46th Birthday

3

யோகா என்பது உலக மனிதநேயத்திற்கு இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த பரிசு: அமித் ஷா

யோகா என்பது

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா உலக யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் மற்றும் யோகா என்பது உலக மனிதநேயத்திற்கு இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த பரிசு என தெரிவித்தார்.

யோகா ஒரு சமநிலை படுத்தும் ஊடகம்

மேலும் அவர் தெரிவிக்கையில், யோகா என்பது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டும் அல்லாது மனம் மற்றும் உடல், வேலை மற்றும் எண்ணங்கள், மேலும் மனிதர்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றை சமநிலை படுத்தும் ஊடகமாக இருக்கிறது என தெரிவித்தார்.

மனிதநேயத்திற்கு இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த பரிசு

“யோகா என்பது ஒட்டு மொத்த மனிதநேயத்திற்கு இந்தியா கொடுத்த தனித்துவம் வாய்ந்த பரிசு. உலகம் தற்போது யோகாவை தத்தெடுத்துள்ளது, பிரதமர் மோடியின் அயராத உழைப்பால் உலகம் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும் யோகாவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

3

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: புதிய சாதனை படைத்த தளபதி!

0
Thalapathy Vijay Birthday Hashtag

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: புதிய சாதனை படைத்த தளபதி! விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே டேக் அதிவேகமாக 6 மில்லியன் டுவீட்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே ஹேஷ்டேக் HBDTHALAPATHYVijay டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிகில்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இன்றுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இன்று விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாஸ்டர் டிரைலரும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனினும், அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், மாஸ்டர் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பர்த்டே ஹேஷ்டேக் HBDTHALAPATHYVijay டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஆம், உருவாக்கப்பட்ட 3 மணிநேரம் 10 நிமிடத்தில் 6 மில்லியன் டுவீட்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது வரை 7.5 மில்லியன் டுவீட்ஸ் வரை கடந்துள்ளது. இன்னும், அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் என்றாலே கோலிவுட்டில் சாதனையை உருவாக்குபவர் என்றும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட சாதனையை முறியடிப்பவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவரை கோலிவுட் கிங் என்றும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மாஸ்டர் நியூ போஸ்டர் வெளியீடு!

0
Master Poster

Master New Poster; விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மாஸ்டர் நியூ போட்டோ வெளியீடு! விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிகில்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இன்றுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இன்று விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாஸ்டர் டிரைலரும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், தான் மாஸ்டர் படக்குழுவினர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டரில், விஜய் தனது சட்டை காலரை பிடிப்பது போன்றும், மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

நம்பர் ஒன் இடத்தில் தளபதி: ஹலோவில் டிரெண்டான ஹேஷ்டேக்குகள்!

0
En Uyir Thalapathy

HBD Thalapathy Vijay; நம்பர் ஒன் இடத்தில் தளபதி: ஹலோவில் டிரெண்டான ஹேஷ்டேக்குகள்! விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில், ThalapathyVIJAYBdayBash, HBDThalapathyVijay, EnUyirThalapathy, ThalapathyBirthdayPoster, VijayPhotos, விஜய்யும் நானும் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

விஜய், ஹலோவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அட்லி, ஆர்யா, நிவேதா பெத்துராஜ், லோகேஷ் கனகராஜ், பிரேம் குமார், ரத்ன குமார், இயக்குநர் பாண்டிராஜ், நடராஜ், அர்ச்சனா கல்பாத்தி, ஹேமா ருக்மணி, சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சதீஷ் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படக்குழுவினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தளபதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரிலும், ஹலோவிலும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

ஹலோவில் நம்பர் ஒன் இடத்தையும் விஜய்யும் இன்று பிடித்துள்ளார். ஹலோவில், ThalapathyVIJAYBdayBash, HBDThalapathyVijay, EnUyirThalapathy, ThalapathyBirthdayPoster, VijayPhotos, விஜய்யும் நானும் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

டுவிட்டரில், HBDTHALPATHYVijay, HBD Thalaivaa ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

கொரோனா காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்று இதுவரை அறிவிக்கவில்லை. மாஸ்டர் டிரைலருக்காகவும் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இன்று வெளியிடப்படும் என்று ஆவலுடன் இருந்தனர். ஆனால், விஜய்யின் பிறந்தநாளான இன்றும் மாஸ்டர் டிரைலர் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விரைவில், இது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி66 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

இன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும்

0
இன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும்

இன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து 18 வது நாளாக 1000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 2,532 ஆக பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை பலனின்றி நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 53 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 41,172 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 31,401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

3

என்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்!

0
HBD Thalapathy Vijay

Vijay Birthday Today; என்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு என்னோட அண்ணா, என்னோட தளபதி என்றெல்லாம் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தளபதி விஜய். ஆனால், என்ன இந்தப் படம் சிறப்புத் தோற்றமாக அமைந்துள்ளது. தொடர்ந்து குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவரை ஹீரோவாக்கியதே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய் நடித்த 64 படங்களில் கிட்டத்தட்ட 15 படங்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலேயே நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது தளபதி66 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி, கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களை விட விஜய் பிறந்தநாளை சினிமா பிரபலங்கள் சூப்பராக கொண்டாடி வருகின்றனர்.

ஆம், விஜய் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனக்கு உங்களுடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றும், என்னோட அண்ணா, என்னோட தளபதி என்றும், ஹேப்பி பர்த்டே தளபதி என்றும், ஹேப்பி பர்த்டே டியர் தளபதி என்றும் பல்வேறு விதமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

தளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்!

0
HBD Thalapathy Vijay

Thalapathy Vijay Birthday; தளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உலகளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். எப்போதும், அண்ணா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஒவ்வொருவரது இதயங்களிலும் குடி கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

இவரது நடிப்பில் வரும் படங்கள் பெரும்பாலும் குழந்தைகள், பெண்களை மையப்படுத்தியே இருக்கும் என்பதால், குழந்தைகள், பெண்களுக்கு பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார்.

விஜய்க்கு ஏதாவது ஒன்று என்றால் ஒட்டு மொத்த உலகமே ஒன்று கூடும் நிலை வரும் என்பதற்கு உதாரணம் நெய்வேலி படப்பிடிப்பு சம்பவம்.

ஆம், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு ரசிகர்கள் வந்து விஜய்யை பார்த்துச் சென்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விஜய்க்கும், அவர் நடிக்கும் படங்களுக்கும் அரசியல் கட்சிகளால் நிறைய பிரச்சனைகள் வந்த பிறகு தான் படமே திரைக்கு வருகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்படியெல்லாம் பல தடைகளுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வரும் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெறுகிறது. இந்த நிலையில், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் வைத்திருந்த நிலையில், தற்போது ஏகப்பட்ட டுவிட்டர் ஹேஷ்டேக், ஹலோ ஹேஷ்டேக் உருவாக்கி தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மாஸ்டர் படக்குழுவினர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் டிரைலருக்காகவும் விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

ஆனால், என்ன, மாஸ்டர் டிரைலர் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது.

எனினும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை வெளியிட்டு தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3

ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் தீவிர கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது

வெறிச்சோடி காணப்பட்டது

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் சிறிதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி

பால் வினியோகம், மருந்துவமனை, மருந்துகடை, அவசர ஊர்தி, இறுதி ஊர்வல ஊர்தி போன்றவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வாடகை மகிழுந்து, ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. எனினும் மருத்துவ அவசரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன.

280 சோதனை சாவடிகளிலும் காவலர்கள் நிறுத்தம்

நகரத்தின் 280 சோதனை சாவடிகளிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்க ஓட்டிகளையும் சோதனை செய்தனர்.

முக்கிய சாலைகள் மூடப்பட்டன

ஜி.எஸ்.டி சாலை, சர்தார் படேல் சாலை, காமராஜர் சாலை, ஈவிஆர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஜி.என்.டி சாலை, வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலை மற்றும் மற்ற சில சாலைகளும் மூடப்பட்டன.

வர்த்தக இடங்கள் மூடல்

வர்த்தக மையங்களான தியாகராச நகர், பாண்டி பசார், ரிச்சி ஸ்டிரீட், கொத்தவால் சாவடி மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்கள் முற்றிலும் மூடப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

அண்ணா வளைவில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

12 நாட்கள் தீவிர கொரோனா ஊரடங்கு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் 12 நாட்கள் தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

3