கோவை: மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணியை தலைமையாக கொண்டு செயல்படும் குழு, அவினாசி சாலையில் உள்ள தேக்கலூர் சோதை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை தீவிர பரிசோதனை செய்தனர்.
16 வாகனங்கள் பரிமுதல்
இதில் தனியார் பேருந்து உட்பட 16 வாகனங்களை ஊரடங்கு சட்டத்தை மீறியதர்காக பறிமுதல் செய்தனர்.
“கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவுளை யாரும் மீறாமல் கண்டிப்புடன் கண்கானித்து வருகிறோம். மாவட்டங்களுக்கு இடையேயான சோதனை சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். தேக்கலூர் சோதனை சாவடியில் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் இரத்த மாதிரிகளை சேகரிக்க மருத்துவர்கள் குழுவை நியமித்து இருக்கிறோம்,” என ராஜாமணி தெரிவித்தார்.
60 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்த பேருந்து
திருப்பூரிலிருந்து 60 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்த ஒரு தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யும்படி காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்.
9 பேரை அழைத்து வந்த ஆம்னி வேன் ஓட்டுனர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
விமானம், தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக வரும் மக்கள்
அதிக மக்கள் விமானம், தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக கோவைக்கு வந்தவண்ணம் உள்ளனர் என ராஜாமணி தெரிவித்தார்.
ஈ-பாஸை சோதனை செய்யும் பொழுது கவனத்துடன் செயல்படும் படி காவல் துறை ஆணையர் காவல்களை அறிவுறுத்தினார்.
இன்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் வேலையில். இந்தி மற்றும் தமிழ் நடிகைகளில் பலர் யோகா செய்து தங்களது உடலையும் மனதையும் மெருகேற்றி வருகின்றனர். நடிகைகளின் யோகா புகைப்படங்கள் கீழே.
நடிகர் விஜய்யின் நண்பன் பட கதாநாயகி இலியானா யோகா செய்யும் புகைப்படங்கள்.
இலியானா யோகா
யோகாவிற்கென்று தனி காணொளி பதிவு வெளியிட்டு தனது உடல் கட்டு பராமரிப்பின் இரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகை ஷில்பா செட்டியின் யோகா புகைப்படங்கள்.
ஷில்பா செட்டியின் யோகா
“கன்னித்தீவு பொண்ணா” பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை நீது சந்திரா யோகா செய்து உடலமைப்பை சரிசெய்யும் புகைப்படங்கள்.
“கன்னித்தீவு பொண்ணா” நீது சந்திரா யோகா
இப்படி பல தரப்பட்ட நடிகர் மற்றும் நடிகையர்கள் யோகா பழகி தங்களின் உடல் நலத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். இதை போல் நாமும் யோகா கற்று ஆரோக்கியமாக வாழ்வோம். அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துக்கள்.
பொங்கலுக்கும் இல்லையென்றால் அடுத்து OTT ரிலீஸ் தான்-மாஸ்டர் அப்டேட். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.
பொதுமுடக்கத்தால் தியேட்டர் மற்றும் மால்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பொன்மகள் வந்தாள், பென்குயின் உட்டிட்ட திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டன.
முன்னணி நடிகரான விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாளன்று திரையிடப்படும் என முடிவு செய்யப்பட நிலையில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு காரணமாக செயல்படுத்த முடியவில்லை.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவெடுத்து சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளனர் படக்குழுவினர். தியேட்டரில் முன்பு போல் கூட்டம் இருக்காது.
இதனால் மீண்டும் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகும் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டால் உடனடியாக OTT தளத்தில் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யும் பொங்கலுக்கு பிறகு பட வெளியீடு தள்ளி சென்றால் சரியாக இருக்காது என்பதால் அதன்பிறகு OTT தளங்களில் வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இதனால் தற்போது அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் 200 கோடிக்கும் மேல் பேரம் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அம்மாங்கிறது உறவு மட்டுமில்ல’-பென்குயின் திரைவிமர்சனம். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசானில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள பென்குயின் திரைப்படத்தின் விமர்சனம் இதோ.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மேமாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி OTT தளத்தில் நேரடியாக திரையிடப்பட்டது.
முன்னணி இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் இந்த திரைப்படத்தை திரையிட்டது. இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் திரைப்படமும் இன்று அமேசானில் நேரடியாக திரையிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாஸ்டர் அத்வைத், மதி, நித்ய கிருபா, மதம்பட்டி ரங்கராஜ், ஹரிணி, தேஜன்க், முரளி, ஐஸ்வர்யா ரமணி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பென்குயின் திரைப்படத்தில் பொன்மகள் வந்தாள் போலவே குழந்தை கடத்தல் தாய்மை உணர்வு முதலியவை பொதுவாகவே உள்ளன. Iruppi
கதையின் கரு மற்றும் கதையின் இறுதி என்பது முற்றிலும் மாறுபட்டு கதைக்கு சற்று வலிமை சேர்ந்துள்ளன. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் கதைக்கு கூடுதல் வலிமை.
திரைப்படத்தில் வரும் மலைப்பகுதி, குலுமை, குழந்தை கடத்தல், காட்டுப்பகுதி, ஆகியவை பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
கதை :
நிறைமாத கர்ப்பிணியான ரிதம் கவலையுடன் இருக்கிறார். அவ்வப்போது தனது கடந்தகால நினைவுகள் கனவுகளாக அவளை துரத்துகின்றன.
ரிதம் (கீர்த்தி சுரேஷ்), ரகு (லிங்கா) இருவரின் 3 வயது மதிக்கத்தக்க மகன் அஜய் (மாஸ்டர் அத்வைத்) பள்ளியில் விளையாடி கொண்டிருக்கிறான்.
அப்போது சார்லி சாப்ளின் உருவத்தில் யாரோ ஒருவர் அழைத்து சென்றதாக அவனது வகுப்பு தோழி ரிதமிடம் கூறுகிறாள். குழந்தையை தேடி அலைகிறாள்.
அருகில் உள்ள ஏரிக்கரை முழுவதும் போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையின் துணிகள் பள்ளி பை மட்டும் கிடைக்கின்றன.
இதன் பின்னால் ரிதம் ரகு இருவரும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காமல் ஒரு கட்டத்தில் அஜய் இறந்துவிட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதை துளியும் நம்பாத அஜய்யின் தாய் தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கிறாள். தன் மகனின் நினைவில் அழுதுகொண்டே இருக்கிறார்.
இதனால் கணவன் குழந்தை இப்படி ஆனதற்கு ரிதமை காரணம் காட்டி சண்டையிட்டு இருவரும் பிரிகின்றனர்.
இதன்பின்னர் ரிதமை உன்னை இருக்கும் மனநிலையிலேயே நான் ஏற்றுக்கொள்கிறேன் என கௌதம் திருமணம் செய்துகொள்கிறார். அதன் பின்னரும் தன் குழந்தையை தேடுவதை ரிதம் நிறுத்தவில்லை.
ஒரு நாள் தன் குழந்தை காணாமல் போன ஏரி அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் கிடக்கிறாள் ரிதம். அங்கு அந்த சார்லி சாப்ளின் உருவத்தை பார்க்கிறாள்.
அந்த உருவம் ஒருவரை கொலை செய்வதையும் பார்க்கிறாள். இதன்பின்னர் இதேமுறையில் மேலும் ஒரு குழந்தை கடத்தப்படுவது தெரிந்து மீண்டும் ஏரிக்கு செல்கிறாள்.
செல்லும் வழியில் தனது கார் முன்பாக குழந்தை ஒன்று வந்து நிற்பதை பார்த்து அதிர்ந்து தனது காரை சுதாரித்து நிறுத்துகிறாள்.
அருகில் சென்று பார்க்கையில் அது தனது மகன் என அறிந்து அதிர்ந்து அழுகிறாள். 6 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த குழந்தை பேசவில்லை, தன்னை அடையாளம் காணவில்லை என அறிகிறாள்.
யார் எதற்க்காக கடத்தினார்கள்? எண் குழைந்தையை என்ன செய்தார்கள்? ஏன் இப்படி? என்ற கேள்விகளோடு தனது விடை காணும் பயணத்தை தயிரியத்துடன் நடக்கிறாள்.
பல முடிச்சுகளுடன் விறுவிறுப்பாக செல்லும் கதையில் இறுதியில் சுவாரசியம் கலந்து காட்டப்பட்டுள்ளது. இறுதிவரை சுவாரசியம் குறையாமல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் பென்குயின் உண்மையில் தாய்மையின் வலிமையை சொல்லும் படம். அம்மாங்கிறது உறவு மட்டுமில்ல. அது ATTITUDE என ரிதம் கடைசியாக சொல்லும் பொது ஒவ்வொரு தாயின் மனதை பிரதிபலித்திருக்கிறார்.
தந்தையின் அன்புக்கு இணையில்லை இவ்வுலகில். தாய்மை பெண்மை மட்டும் அதிக அளவில் போற்றி பேசப்படும் சமையத்தில் தந்தையர்களுக்கென ஒரு சிறப்பான நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர்களை கெளரவிப்பதற்காக தந்தையர் தினம் கொண்டாப்பகிறது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தந்தையர்களை போற்றும் விதமாக இந்த தந்தையாய் தினம் துவக்கப்பட்டது. அன்னையர் தினம் போன்று தந்தை தினமும் சிறப்பு மிக்கதாகவே கருதப்படுகிறது.
இந்த நாளில் உலகம் முழுவதும் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் சார்ந்த நிகழ்வுகள் என கொண்டாடி மகிழ்வர்.
உலக தந்தையர் தினமான இன்று அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தங்கள் தந்தையருக்கு தெரிவித்து மகிழ்கின்றனர். இன்று ஒரு நாள் மட்டுமில்லாது தாய் தந்தையரின் இறுதி நாள் வரை அவர்களை கவனித்துக்கொள்வது முக்கியம்.
முதியோர் இல்லங்கள் பெருமளவில் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் இதுபோன்ற குண்டங்களில் மட்டும் இன்றி உண்மையில் வாழ்வில் தங்களின் தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
ஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 56,845 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 32,186 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று புதிதாக உறுதியான 2,396 பேரில் 2,332 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 64 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள்.
இதுவரை 704 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நேற்று செங்கல்பட்டில் 180 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும், மதுரையில் 90 பேருக்கும், ராமநாதபுரத்தில் 48 பேருக்கும்,
ராணிப்பேட்டையில் 67 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேருக்கும், திருவண்ணாமலையில் 125 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும் நேற்று சுகாதாரத்துறை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
கோவை: கோவையில் கிராஸ்கட் சாலையில் உள்ள ஜுவல்லரி கடை சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. வியாழன் சென்னையில் இருந்து அனுமதியின்றி கோவை வந்த 30 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அந்த கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் நடவடிக்கை.
சென்னையில் இருந்து வந்த வேலை ஆட்கள்
அந்த குறிப்பிட்ட ஜுவல்லரி நிர்வாகம் சென்னையில் இருந்து வந்த வேலை ஆட்களை 14 நாட்கள் தனிமை படுத்தவில்லை மற்றும் அவர்களின் வருகை குறித்து சுகாதாரத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கொரோனா பரிசோதனை செய்யாமல் வேலையில் அமர்த்தப்பட்டனர்
அந்த வேலை ஆட்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். “அந்த பகுதியில் இருந்த ஒருவரால் சென்னையில் இருந்து 30 பேர் வந்து கொரோனா பரிசோதனை செய்யப்படாமல் மறு நாளே வேலையில் அமர்த்தப்பட்ட தகவலை கொடுக்கப்பட்டது,” என வட்டாச்சியர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
சனிக்கிழமை கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சனிக்கிழமை அதிகாரிகள் வந்த பொழுது அந்த கட்டிடத்தில் சென்னையிலிருந்து வந்த 30 பேரும் வேலையில் இருந்ததால் உடனடியாக ஜிவல்லரி இருந்த கட்டிடத்தை சீல் வைத்தனர் மற்றும் அனைத்து வேலை ஆட்களையும் பரிசோதனை செய்ய துவங்கினர்.
எப்படி கோவை வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் கண்டுபிடித்து
அந்த 30 பேரும் சென்னையில் இருந்து எல்லைகளில் யாரிடமும் சிக்காமல் எப்படி கோவை வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
ரிஷிகள்: வெற்றியை பெற்று தரும் விஸ்வாமித்ர மகரிஷி ஆலயம். இராம இலட்சுமணருடன் விஸ்வாமித்ர மகரிஷி யாகம் செய்த தலம். சூட்சும ரூபத்தில் விஸ்வாமித்ர மகரிஷி தவம் புரியும் விஜயாபதி.
சப்த ரிஷிகளில் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற சத்திரிய குலத்தில் பிறந்த ஒரே ரிஷி விஸ்வாமித்ர மகரிஷி ஆவார்.
விஸ்வாமித்ர மகரிஷி இராம இலட்சுமணரின் காவலுடன் யாகம் செய்து தம் சக்திகளை திரும்ப பெற்று தாடகை வதத்தால் இராம இலட்சுமணருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலமே விஜயாபதி ஆகும்.
தமிழகத்தில் விஸ்வாமித்ர க்ஷேத்திரம்
கௌசிகன் என்ற அரசனாக பிறந்து. நாட்டை துறந்து உலக மக்கள் நலனுக்காக தவமியற்றி பல சக்திகளை பெற்று விஸ்வாமித்ரர் என்ற திருநாமம் கொண்டார்.
விஸ்வம்+மித்ரன் = விஸ்வாமித்ரன் என்றால் அகில உலகதிற்கும் நண்பன் என்று பொருள்படும்.
தன்னலம் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தாம் பெற்ற சக்திகளை தன்னை நாடி வரும் மக்களுக்கு வாரி வழங்கிய மகரிஷியே விஸ்வாமித்ரர் ஆவார்.
மந்திரங்களில் உயர்ந்த மந்திரமான காயத்ரி மந்திரத்தை உலகிற்கு அளித்த மகான் விஸ்வாமித்ரரே ஆவார்.
தாம் இழந்த தவ வலிமையை மீட்க விஜயாபதியில் சிறப்பு யாகம் செய்தார். யாகதிற்கு தடை ஏற்படுத்த தாடகை என்ற அரக்கி இருந்த இடம் ஆதலால், தாடகையை வதைக்க இராம இலட்சுமணருடன் யாகம் செய்ய சென்றார்.
தாடகையை இராம இலட்சுமணர் வதைத்து விட்டனர். இதனால் இராம இலட்சுமணருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை நீக்க விஜயாபதியில் சிறப்பான யாகம் நடத்தினார்.
தில்லை வனமாக இருந்த இந்த இடத்தில் தில்லை காளியை காவலுக்காக பிரதிட்டை செய்தனர். பின் சிறப்பு யாகத்தை நடத்தி அதில் வெற்றி பெற்றார் மகரிஷி.
மகாலிங்க மூர்த்தியும் அன்னை அகிலாண்டேஸ்வரியும் தோன்றி விஸ்வாமித்ரர் இழந்த தவ பலனையும், பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்.
விஜயம்+பதி = விஜயாபதி. விஜயம் என்றால் வெற்றி, பதி என்றால் இடம். விஸ்வாமித்ரருக்கு தவத்தில் வெற்றியை வழங்கிய இடம் ஆதலால் விஜயாபதி எனப் பெயர்ப் பெற்றது.
விஜயாபதி ஆலய அமைப்பு
விஜயாபதி கடற்கரையில் அமைந்த ஊர் ஆகும். ஊர் எல்லையில் இலங்கையை பார்த்தவாரு தில்லை காளி சன்னதி அமைந்துள்ளது.
மகாலிங்க சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உள்ளது. மகாலிங்க சுவாமியை பார்த்த வாரு தனி கோவிலில் விஸ்வாமித்ர மகரிஷி தவ கோலத்தில் காட்சி தருகிறார்.
யாக குண்ட விநாயகர் தனி சன்னதியில் காட்சி தருகிறார். தல விருட்சமாக தில்லை மரம் விளங்குகிறது.
ஒவ்வொரு மாதம் அனுஷ நட்சத்திர தினமும், பௌர்ணமி மற்றும் அமாவாசை திதியிலும் விஸ்வாமித்ர மகரிஷிக்கு சிறப்பு யாகம் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
விஸ்வாமித்ரர் யாகம் செய்த பெரிய யாக குண்டமும் இங்கே அமையப் பெற்றுள்ளது. விஸ்வாமித்ரரும் இராம இலட்சுமணரும் நீராடிய விஸ்வாமித்ர தீர்த்த கட்டம் அமைந்துள்ளது.
இன்றளவும் விஸ்வாமித்ர மகரிஷி சூட்சும வடிவில் இங்கே இருந்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். சாநித்யம் நிறைந்த அற்புதமான ஆலயம்.
வெற்றியை தரும் விஜயாபதி
வாழ்வில் தோல்வியை சந்தித்தவர்கள், தொழிலில் முடக்கம் ஏற்பட்டவர்கள், பித்ரு தோஷம் உள்ளவர்கள். இங்கே வந்து பித்ரு தர்பணம் செய்ய தோஷம் நீங்கும்.
குடும்பத்தில் பிறந்த கன்னி பெண்களால் சாபம் உள்ளவர்கள் ஒரு முறை இத்தலத்திற்கு சென்று வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பித்ரு தர்பணம் செய்ய உகந்த இடமாக இந்த விஜயாபதி விளங்குகிறது. இங்கே விஸ்வாமித்ர கட்டத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதல் அனைத்து நவ கிரக தோஷங்களும் நீங்கும். சிறந்த நவ கிரக பரிகார தலமாகும்.
பலா மற்றும் அதிபலா மந்திரத்தை விஸ்வாமித்ரர் இராமனுக்கு உபதேசித்த இடம் இதுவே ஆகும். குரு தீட்சை பெறுபவர்கள் இங்கே வந்து நவ கலச யாகம் செய்து. கடலில் நீராடி தோஷங்களை போக்கிக் கொண்டு தீட்சை பெறலாம்.
இங்கே நடத்தப்படும் நவ கலச யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பல்வேறு பிரபலங்கள் இங்கே வந்து நவ கலச பூஜை செய்து வெற்றியை பெற்றுள்ளனர் என்று கூறுகின்றர்.
மக்கள் குறைகளை கேட்டு அவர்களின் கஷ்டத்தை உடனே போக்கும் தாராள மனப்பான்மை கொண்ட ஒரே ரிஷி பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் மட்டுமே ஆவார்.
அனைவரும் விஜயாபதி சென்று பிரம்மரிஷி விஸ்வாமித்ர மகரிஷியை வணங்கி வாழ்வில் வெற்றிகளை பெற்று நற்கதி அடைவோம்.
அமைவிடம்: திருச்செந்தூர் to கன்னியாகுமரி சாலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ளது விஜயாபதி.
நடைதிறப்பு: காலை 7 முதல் 12 வரை மற்றும் மாலை 4 முதல் 8 மணி வரை.
மும்பை: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உலகத்தின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
அம்பானியின் சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்வு
ரிலையன்ஸ் தொழிற் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு பங்கின் விலை ₹. 1,738 என அதிகரித்ததை அடுத்து அம்பானியின் சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது.
₹.11.52 இலட்சம் கோடி மதிப்புடைய முதல் இந்திய நிறுவனம்
வெள்ளிக் கிழமை முடிவில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவம்(RIL) 150 பில்லியன் டாலர் அல்லது ₹.11.52 இலட்சம் கோடி மதிப்புடைய முதல் இந்திய நிறுவனம் என்ற நிலையை பெற்றது.
அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் முதலிடம்
அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து உலக பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
பில்கேட்ஸ் இரண்டாம் இடம்
அவரை தொடர்ந்து பில்கேட்ஸ் 109 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
சென்னை: நடிகர் இரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை தொலைபேசியில் தெரிவித்தது கடலூரின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எனவும் அவர் கற்கும் திறனில் குறைபாடு உடையவர் என்பதும் காவல் துறை தெரிவித்தனர்.
காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்
வியாழக்கிழமை அந்த தொலைபேசி அழைப்பு வந்த உடனேயே காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரஜினிகாந்தின் வீட்டை நோக்கி விரைந்தனர்.
கொரோனா பரவல் இருப்பதால் ஆரம்பத்தில் நடிகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அக்குழுவை அவ்வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு அந்த தொலைபேசி செய்தி பொய் என தெரியவந்தது.
கடலூரின் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு சிறுவன்
அந்த தொலைபேசி எண்ணின் முகவரியை கண்டுபிடித்த காவல் துறை அது கடலூரின் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு சிறுவன் என தெரியவந்தது.
அச்சிறுவனது தந்தை மன்னிக்குமாறு காணொளி வெளியீடு
மேலும் அந்த சிறுவன் கற்றல் குறைபாடு உடையவர் என தெரியவந்தது. இதற்கிடையில் அச்சிறுவனது தந்தை தனது மகனின் இச்செயலை மன்னிக்குமாறு நடிகரிடம் வேண்டுதல் விடுக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டார்.