சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை தெரிவிக்கையில் “தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்”, என தெரிவித்தார்.
கடவுளுக்கு தான் தெரியும்
“நாங்கள் வைரஸ்ஸை தடுப்பதிலும் மற்றும் மக்களை காப்பாற்றுவதிலும் ஈடுபட்டுள்ளோம். இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மருத்துவ நிபுணர்கள் கூறுவதை நாங்கள் அமல் படுத்தி வருகிறோம். இந்த வைரஸ் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை மற்றும் தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்,” என பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்
கொரோனா வைரஸ்ஸை ஒழிப்பதில் எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என முதலமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.
சென்னையை விட்டு மக்கள் கண்டிப்பாக வெளியேரக்கூடாது
“சென்னையை விட்டு மக்கள் கண்டிப்பாக வெளியேரக்கூடாது,” என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
21/06/2020: நாளை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா? யார் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்? எந்த வேண்டிய காரியங்கள் மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்?
நாளைய தினம் சார்வாரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி 21-06-2020 ஞாயிற்றுக்கிழமையில் சூரிய கிரகணம் ஆனது வருகின்றது.
விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சி அமைந்திருந்தாலும் இயற்கையில் நடைபெறும் மாற்றங்களை எவராலும் தடுக்க இயலாது. ஆனால் நடைபெற போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அவர்கள் கணித்து கூறியுள்ளனர். அதன் படி நாளை நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தின் பலன்களை பார்ப்போம்.
சூரிய கிரகணம் கால வரையறை
ஆரம்ப காலம் – காலை 10 மணி 15 நிமிடம்
மத்திம காலம் – நண்பகல் 12 மணி 2 நிமிடம்
முடிவு காலம் – மதியம் 01 மணி 42 நிமிடம்
இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஏறக்குறைய 40% மட்டுமே தெரியும். சென்னையில் 35% கிரகணம் தெரியும். இந்திய அளவில் இராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானா மாநிலத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும்.
இந்த கிரகண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மனித உடலை பாதிக்கும் எனவே தான் உணவு உண்ணுதல், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதல், வெறும் கண்ணால் சூரியனை பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
கிரகண காலத்தில் பல்வேறு கோவில்கள் நடைசாற்றப்படும். சில கோவில்களில் நடை திறந்து இருக்கும் சிறப்பு யாகங்கள் மற்றும் கிரகண முடிவில் தீர்த்த வாரிகள் நடைபெறும்.
கிரகண காலத்தில் செய்யும் மந்திர ஜெபம் பல மடங்கு பலன்களை தரும். எனவே அவரவருக்கு தெரிந்த இறைவனின் நாமத்தை, மந்திரத்தை ஜெபிப்பது நல்ல பலன்களை தரும்.
வீட்டில் அனைவரும் கிரகணத்திற்கு முன்பே உணவு அருந்தி விட வேண்டும். அனைத்து உணவு பதார்த்தங்கள், தானியம், தண்ணீரில் தர்பை போட்டு வைக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்தவுடன் நீராடி, வீட்டினை மெழுகி விட்டு பின் பித்ருகளுக்கு தர்பணம் செய்யலாம். நீர் கரைகளில் அமர்ந்து ஜபம் செய்ய, தர்பணம் செய்ய இன்னமும் பலன்களை தரும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்
ரோகிணி, மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, சுவாதி, திருவாதிரை, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் நிவர்த்தி ஆனதும் தவறாமல் நீராடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
அனைவரும் இறைவனின் திருநாமத்தை கிரகண காலத்தில் ஜெபித்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்வோம்.
சென்னை: தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும் அவரின் கீழ் வேலை பார்க்கும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வியாழக் கிழமை இரவு வரை “நான் நலமாக இருக்கிறேன்,” என கூறிவந்துள்ளார். ஆனால், வெள்ளிக்கிழமை கே. பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருபவர்
இதனால் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை நகரத்தின் கொரோனா தடுப்பு ஒருங்கினைத்தல் மற்றும் நிவாரனம் சம்பந்த பட்ட பணிகளை கவனித்து வரும் 6 அமைச்சர்களில் அன்பழகனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அடையார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களை கவனித்துவருபவர்.
விஜயபாஸ்கர் உட்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை
விஜயபாஸ்கர் உட்பட சில பேர் இவருடன் மீளாய்வு கூட்டங்களில் பங்கெடுத்தவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மதுரை: மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த தலா ஒரு காவல் துறையினருக்கு கொரோனா இருப்பது வெள்ளி கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரை பெண் காவலருக்கு கொரோனா
மதுரையை சேர்ந்த 31 வயதுடைய பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு படையில் (BDDS) வேலை பார்த்து வந்தவர் என தெரிகிறது.
இவர் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 ஆவது காவலர் ஆவார்.
தூத்துகுடி சிறப்பு துணை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று
தூத்துகுடி மாவட்டத்தில் இரல் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு துணை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் இது 6 ஆவது தொற்றாக கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காவலரின் மனைவி மற்றும் உறவினர்களை பரிசோதனை செய்ததில் இவரது மனைவிக்கும் அதே காவல் நிலையத்தை சேர்ந்தமற்ற 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மணிப்பூரில் கவிழப்போகிறதா பா.ஜ.க அரசு? மணிப்பூரில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கூறியுள்ளது. இதனால் அங்கு பா.ஜ.க அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கவுஹாத்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதனால் அங்கு பா.ஜ.க கட்சியின் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
மணிப்பூர் சட்டமன்றம் மொத்தமாக 60 உறுப்பினர்களை கொண்டது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் 21 எம்.எல்.ஏ-க்களை பெற்றிருந்த பா.ஜ.க கட்சி சிறுகட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியிலிருந்து ப்ரென் சிங் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
தற்போது பா.ஜ.க-விற்கு அளித்துவந்த ஆதரவை 9 எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றுள்ளனர். இதனை அடுத்து 28 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இக்கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.எஃப் அல்லது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ள இந்த அணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டணிக்கு முன்னர் மமுதல்வர் ஓக்ரம் இபோதி சிங் தலைவராக இருந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கூறியுள்ளார். விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரியுள்ளார்.
இதனால் தற்போது அங்கு ஆளும் பா.ஜ.க அரசு தனது பதவியர் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓக்ரம் இபோதி சிங், பா.ஜ.க, எஸ்.பி.எஃப், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, கவுஹாத்தி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மணிப்பூர், manipur, today’s news, latest news, corona news, b.j.p, s.p.f, gauhathi, thinamul congress party, congress party,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,141 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னை: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவராகள் எண்ணிக்கை 2,141 ஆக பதிவானதால் இதுவென்றால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 23,065 பேர் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 26,736 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று நோய் தொற்று உறுதியான 2,141 பேரில் மொத்தம் 1,280 பேர் ஆண்கள், 861 பேர் பெண்கள் ஆவர்.
கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் 45 அரசு மற்றும் 36 தனியார் ஆய்வுமையங்கள் என மொத்தம் 81 மையங்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகுன்றன.
நேற்று ஒரே நாளில் 1,017 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28,641 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 49 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 625 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,373 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு 115, காஞ்சிபுரம் 55, திருவள்ளூர் 123, என புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: வியாழக்கிழமை பா.மா.க கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவ முறையை பயண்படுத்துமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தியது.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா பாதித்த 160 பேரை 5 நாட்களில் குணப்படுத்திய நிகழ்வை சுட்டிகாட்டி தமிழக அரசிடம் இந்த கோரிக்கையை பா.மா.க வின் அன்புமணி இராமதாஸ் வைத்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
சித்த மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையை தொடங்க சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை தங்களிடம் தருமாறு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அரசிடம் கேட்டுக்கொண்டது.
பன்றி காய்ச்சலை காய்ச்சலை தடுத்த கப சுரக் குடிநீர்
2009இல் பன்றி காய்ச்சலை கட்டு படுத்த சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்த கப சுரக் குடிநீர் பெரிதும் உதவியது.
டெங்கு காய்ச்சலை தடுத்த நில வேம்பு குடிநீர்
அது போல் 2012இல் டெங்கு காய்ச்சலை தடுக்க இந்த நிறுவனம் தயாரித்த நில வேம்பு குடிநீரை பயண்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் அறிவுறுத்தினார்.
சித்த மருத்துவ நிறுவனத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
கொரோனா பரவலை கட்டுபடுத்த “தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் கோரிக்கையை அரசு புறக்கனிக்காமல் கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டும்”, என மேலும் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டார்.
சென்னை: வெள்ளி முதல் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடைபிடிக்கும் படி தலைமை செயலர் கே. சண்முகம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
வெளியில் சுற்றுபவர்கள் 144 சட்டப்பிரிவில் கைது
இந்த ஊரடங்கு நாட்களில் வெளியில் சுற்றுபவர்கள் 144 சட்டப்பிரிவில் கைது செய்யப்படுவர் மற்றும் சுற்றுபவர்களது வாகனங்கள் பரிமுதல் செய்யப்படும் என காவல் துறை தெரிவித்தது.
மளிகை வாங்க 2 கி.மீ சுற்றளவு மட்டுமே வெளியில் அனுமதி
மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க 2 கி.மீ சுற்றளவு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும்.
உணவகங்களில் உணவுகளை வாங்கி செல்ல காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அனுமதி வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
ஜூன் 21 மற்றும் ஜீன் 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் வினியோகம், மருந்துவமனை, மருந்துகடை, அவசர ஊர்தி, இறுதி ஊர்வல ஊர்தி போன்றவை மட்டும் அனுமதி.
ஆட்டோ மற்றும் வாடகை மகிழுந்துகள் மருத்துவ அவசரத்திற்கு மட்டும் பயண்படுத்தலாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
Petta 2; ரஜினியின் பேட்ட 2 ஆம் பாகமா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்! ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
பேட்ட வெளியான போது, பேட்ட 2 ஆம் பாகம் குறித்து பலரும் தன்னிடம் கேட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன், சசிகுமார் ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவதாரம் எடுத்தார். மேலும், இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் உருவாவது பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், படம் எடுக்கும் போது பேட்ட படத்தின் 2 ஆம் பாகம் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.
ஆனால், படம் வெளியான பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் 2 ஆம் பாகத்திற்கு இருந்த சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை நினைக்கும் போதே சுவாரஸ்யமாக இருந்தது.
என்னிடம் பேட்ட 2 ஆம் பாகம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் பேட்ட படம் இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைகள் கொடுத்தார்கள்.
சமூக வலைதளங்கள் மூலம் பேட்ட 2 பற்றி ஐடியாவும் சிலர் கொடுத்தார்கள். ஆனால், இப்போதைக்கு பேட்ட 2 படத்திற்கான கதை இல்லை. எதிர்காலத்தில் அது நடக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.