Home Blog Page 49

கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

0
கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2

கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு 2,விரைவில் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கமாலினி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இசையும் பெரிய அளவில் எதிரியை கண்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான 120 பக்க கதை ரெடி ஆகி விட்டதாக இயக்குனர் கௌதம்மேனன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய இரண்டு படங்களையும் முடித்து கொடுப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் கமர்சியல் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கமல்ஹாசனின் படங்களில் இருக்கும்.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் சிலர் கமலஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதில்லை எனவும்,

இன்னும் சிறிது காலத்திற்கு நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தலைவன் இருக்கின்றான், இந்தியன்2 படங்களை முடித்த கையேடு கண்டிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு-2 வில் நடிக்க உள்ளாராம்.

இருந்தாலும் படங்கள் ரிலீஸ் ஆனபிறகு தான் வேட்டையாடு விளையாடு 2 வில் நடிப்பார் என்பதால் கெளதம் மேனன் சற்று கவலையில் இருப்பதாக தெரிகிறது.

3

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

0
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது இவருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையாகும்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்த நிலையில் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

முதல்முறை மேற்கொள்ளப்பட்ட முடிவுகளில் negative என வந்தாலும் இவருக்கு தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இதனால் மீண்டும் பரிசோதனை செய்துகொண்டார்.

இரண்டாம் முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சத்யேந்திர ஜெய்ன் திங்களன்று இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாயன்று அவர் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன்”

என்று குறிப்பிட்டிருந்தார். ஞாயிறன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சத்யேந்திர ஜெய்னும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

3

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்தது

கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை: புதன்கிழமை தமிழ்நாட்டில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்தனர் மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்து 50,193 ஆக உள்ளது.

இன்று மட்டும் 2,174 கொரோனா தொற்றுகள்

இன்று மட்டும் 2,174 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.மொத்த கொரோனா இறப்பின் எண்ணிக்கை 576 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 1,276 தொற்றுகள்

சென்னையில் மட்டும் 1,276 தொற்றுகள் உறுதி. செங்கள்பட்டில் 162 தொற்றுகளும், காஞ்சிபுரத்தில் 61 தொற்றுகள் மற்றும் திருவள்ளூரில் 90 புதிய தொற்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அரியலூர், ஈரோடு, பெரம்பலூர் மற்றும் திருப்பூர் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்றுகள் உறுதி.

தமிழ்நாட்டிற்கு திரும்பிய 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்தும், 3 பேர் சிங்கப்பூரில் இருந்தும், மலேசியா மற்றும் குவைதிலிருந்து வந்த தலா இருவருக்கும் கொரோனா உறுதி.

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளனர்

இன்றைய நாள் முடிவில் 842 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 21,990 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3

இந்திய – சீனா எல்லை மோதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியீடு

china_india_border_issue

புதுடெல்லி:  இந்திய மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை  கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கும் மோதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது.

உயிரிழந்த 20 இந்திய இராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா இரங்கல்

சீன-இந்திய எல்லையில் நடந்த மோதலில் உயிரை தியாகம் செய்த 20 இந்திய இராணுவ வீரர்களுக்கு அமெரிக்க வெளியுரவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

மேலும் அந்த செய்தியில் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் ஆகியோர் சீன எல்லையில் உள்ள பிரச்சனை குறித்து ஜீன் 2 இல் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியை செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஜீ-7 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் சரி செய்ய அமெரிக்கா உதவும்

“சீனா மற்றும் இந்தியா எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலை அமைதியான முறையில் சரி செய்ய அமெரிக்கா உதவும்,” என புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வருடத்தில் மோசமான மோதல் இதுதான்

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே திங்கள் கிழமை நடந்த மோசமான மோதல் கடந்த 45 வருடத்தில் இதுதான் முதல் முறை என தெரிகிறது.

இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்களும், சீன தரப்பில் 43 இராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

3

“ஜீன் 21 2020தில் உலகம் அழியும்” என்ற செய்தியால் பீதி மற்றும் பரபரப்பு: மாயன் நாட்காட்டி

ஜீன் 21 2020தில் உலகம் அழியும்

இணையத்தில் பரவும் “ஜீன் 21 2020தில் உலகம் அழியும்” என்ற செய்தியால் பரபரப்பு. தென் அமெரிக்காவில் கி.மு 3000 வாக்கில் வாழ்ந்த தமிழர்களுடன் ஒப்பிட்டு பேசப்படும் மாயன் இனத்தினர் கணித்த மாயன் நாட்காட்டியில் 2012 வரை மட்டுமே நாட்கள் உள்ளது அதனால் 2012இல் உலகம் அழியும் என கருத்து நிலவியது ஆனால் அப்படி நடக்கவில்லை.

புதிய கணக்கின் படி 2020 தான் மாயன் நாட்காட்டி முடிவடையும் 2012 

தற்போது அந்த கணக்கு தவறு என்றும் ஜூலியன் நாட்காட்டியின் படி கணக்கு போட்டால் தற்போது உள்ள 2020 தான் மாயன் நாட்காட்டி முடிவடையும் 2012 என புதிதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி பீதியை கிளப்பி வருகிறது.

சூரிய கிரகனம்

அத்துடன் கொரோனா தொற்று உலகத்தை ஆட்டி படைத்துவரும் வேலையில் ஜூன் மாதம் சூரிய கிரகனம் நடைபெற இருப்பது போன்ற நிகழ்வுகளும் ஜூன் 21 இல் உலகம் அழியும் என்ற அச்சத்தை மக்களிடையே அதிகப்படுத்தி உள்ளது.

ஆனால் இணையதளவாசிகள் வழக்கம் போல் இந்த “ஜூன் 21 இல் உலகம் அழியும்” என்ற செய்தியை வைத்து மீம்ஸ் உருவாக்கி நகைச்சுவையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

3

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ்

0
உள்ளாடை இல்லாத போஸ்

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ். தனது 39 வயதில் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார் விமலா ராமன்.

தமிழ் சினிமாவில் ‘பொய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை விமலாராமன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் 2008-ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை படத்தில் சேரனுடன் இணைந்து நடித்து இருந்தார். 2019-ஆம் ஆண்டு வெளியான இருட்டு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழ் வெப்சீரிஸ் ஒன்றிலும் விமலா நடித்து வருகிறார். அதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ்

விமலா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் தனது அங்கங்கள் முழுவதும் தெரிவதைப் போல முரட்டுத்தனமான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 39 வயதிலும் கட்டுக்கோப்பாக தனது உடலை பாதுகாத்து வரும் விமலாராமன் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்.

 

3

தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

0
தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம்: லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணமடைந்தனர்.

உயிரிழந்த 3 பேரில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் தி.கே.பழனி இன்று உயிரிழந்துள்ளார்.

இரவு, பகல் என்றும் பாராமல் தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு நம் நாட்டின் பாதுகாப்பு பணியில் தம்மை அர்ப்பணித்து கொண்டு வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீர பழனி அவர்களின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டின் நலனுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி அவர்களது குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அன்னாரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

வீர மரணம் அடைந்த திரு பழனி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிதலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

3

கர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை என மோடியிடம் கோரிக்கை: எடியூரப்பா

will-request-pm-for-more-relaxations-in-karnataka-yediyurappa

பெங்களூரு : செவ்வாய் கிழமை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கர்நாடகத்திற்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் மற்றும்  கர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.

கர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை

“கர்நாடகத்திற்கு ஊரடங்கு தேவையில்லை, எங்களுக்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளி காட்சி உரையாடளில் எடியூரப்பா தெரிவிக்கப்போவதாக அறிவிப்பு.

செய்தியாளர்கள் சந்திப்பில்

செய்தியாளர்கள் சந்திப்பில், “ நான் பிரதமரிடம் மக்கள் வழக்கமான வாழ்கையை தொடரவும் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும் நடவடிக்கை தேவை என கோரிக்கை வைப்பேன்.” என தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மெட்ரோ தொடர்வண்டி, திரைஅரங்கங்கள், நீச்சல் குளம், போன்றவைகள் இன்னும் மூடிய நிலையில் உள்ளது.

முதல் மந்திரிகளுடன் காணொளி காட்சி

பிரதமர் மோடி பல்வேறு மாநில முதல் மந்திரிகளுடன் காணொளி காட்சியில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பங்கு பெற இருக்கிறார்.

கொரோனாவுக்கு எதிராக நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம்

“கொரோனாவுக்கு எதிராக நாங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் மற்றும் நாம் அனைவரும் சேர்ந்து கொரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்,” என எடியூரப்பா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்க ஏற்பாடு

மேலும் அரசு கர்நாடக மாநில விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கொரோனாவிற்கு எதிராக நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

3

ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 4 மாவட்டங்களில் ஊரடங்கு: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

4 மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு கொரோனா ஊரடங்கு 

மேலும் முதல்வர் தேசிய பேரிடர் சட்டம் 2005 இன் கீழ் கொரோனாவால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களாக கருதப்படும் 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு   அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நிபுனர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டு அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் மற்ற அமைச்சர்கள் அமைத்த நிபுனர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தின் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 46,504

திங்கள் அன்று தமிழ்நாட்டில் 1,843 கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தின் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உள்ளது.

சென்னையின் மொத்த தொற்று 33,244 ஆக உள்ளது

இதில் சென்னையில் மட்டும் 1,257 தொற்றுகள் திங்கள் கிழமை உறுதி செய்யப்பட்டு உள்ளன. சென்னையின் மொத்த தொற்று 33,244 ஆக உள்ளது.

மொத்த கொரோனா இறப்பு 479

திங்கட்கிழமை 44 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த கொரோனா இறப்பு 479 ஆக உள்ளது.

3

சீனா அத்துமீறல் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு

இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: லடாக்கில் கால்வன் என்ற பகுதியில் சீன மற்றும் இந்திய எல்லையில் இரு நாட்டு இராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் இந்தியாவின் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு.

இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு

“நேற்று இரவு லடாக்கில் எல்லையில் உள்ள கால்வன் என்ற பல்லத்தாக்கில் விரிவாக்க பணிகள் நடந்த வேலையில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையெ நடந்த மோசமான மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள். இந்திய தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்தனர். இருதரப்பிலிருந்தும் பதற்றத்தை குறைக்க உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்,” என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1975 ஆம் ஆண்டிற்கு பிறகு சீன-இந்திய எல்லையில் உயிரிழப்பு

முதல் முறையாக 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு சீன-இந்திய எல்லையில் உயிரிழப்பு நடந்திருப்பது தற்போதுதான் என தெரிவிக்கப்படுகிறது.

சீன தரப்பில் உயிரிழப்புகள் எவ்வளவு என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சீன வெளியுரவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியன் எல்லையில் எந்த உயிரிழப்பு சம்பவமும் நடந்ததாக தனக்கு தெரியாது என கூறினார்.

கடந்த ஐந்து வாரங்களாக கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையே பதற்றம் நிலவியதாக தெரிகிறது.

3