Deprecated: ltrim(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-content/plugins/wp-seo-multilingual/classes/class-wpml-wpseo-redirection.php on line 24 தமிழ் செய்திகள் | தமிழ் News | Blog | Page 5 of 335 | Mr Puyal
Master50Days ஹாஸ்டாக் ட்ரெண்ட்டாகி உள்ளது. மாஸ்டர் படம் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடுவதால் #Master50Days ஹாஸ்டாக் உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகி உள்ளது.
மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13-ம் தேதி பொங்கலுக்கு முன் தினம் திரையரங்கில் வெளியானது. அடுத்த 15 நாளில் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியானது.
இருப்பினும் மாஸ்டர் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு மக்கள் திரையரங்கு பக்கம் வருவதில்லை என கருத்துநிலவி வந்தது.
மாஸ்டர் படம் மூலம் மீண்டும் தியேட்டருக்கு மக்கள் வருகை அதிகரித்து உள்ளது. நீண்ட மாதங்களுக்குப்பிறகு மாஸ்டர் படம் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டு உள்ளது.
மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
லத்வியன் ஓப்பன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். வேதாந்த் நண்பர் சஜன் பிரகாஷ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
மகன் பதக்கத்துடன் உள்ள புகைப்படத்தை மாதவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர்கள் பிரதீப், பீட்டர், சதீஷ், முருகேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள “பிரண்ட்ஷிப்” படத்தைப் பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன் முறையாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இருவரும் இணைந்து இயக்குகியுள்ளனர்.
ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இங்கு உள்ளது. என்னால் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. இது பாஜ்ஜியின் காவியம். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என பதிவு செய்து உள்ளார்.
தளபதி65 படம் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே (Pooja Hegde) முதன் முதலில் அறிமுகமான படம் முகமூடி. அந்தப்படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழ் படங்களில் பூஜா ஹெக்டே நடிப்பதில்லை.
முதல்படம் தோல்வியடைந்தாலும் விடாமல் முயன்ற பூஜா ஹெடேவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் அல வைகுந்தபுர்ரமுலூ (Ala Vaikunthapurramuloo).
30 வயதை தொட்ட பூஜா ஹெக்டே, வைகுண்டபுரம் படம் மூலம் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். கைவசம் நான்கு படங்கள் உள்ளன.
முட்ட பொம்மா பாடல் மூலம் உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். தற்பொழுது தளபதி65 படத்தில் பூஜா ஹெட்டேவை நடிக்க படக்குழு அணுகியதாகவும், அதில் நடிக்க பூஜா 3.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டேவிற்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் மார்க்கெட் இருப்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் கோவாவில் ரகசியத் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேமம் படம் மூலம் புகழ்பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அனுபமா குறித்து மீண்டும் வதந்திகள் பரவியுள்ளது. பும்ரா தனக்கு நல்ல நண்பர், காதல் எல்லாம் ஒன்றும் இல்லை என ஏற்கனவே அனுபமா மறுத்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விடுவிக்கப்பட்டு உள்ளார். பும்ரா, நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதால் போட்டியிலிருந்து விலகியதாக வதந்திகள் பரவியது.
இதற்கு வசதியாக அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விடுமுறையில் உள்ளதாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் குஜராத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.
அந்த இடம் பும்ராவின் அஹமதாபாத் வீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இருவரும் மீண்டும் கிசுகிசுவில் சிக்கியுள்ளனர். இந்த முறை ரகசியக் கல்யாணம் வரை கிசிகிசுக்கள் கிளம்பிவிட்டன.
நெல்சன் திலீப்குமார் இயக்கம் விஜய்யின் 65-வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்திற்கு தளபதி65 என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சன்பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க பெரும் தொகையாக ரூ. 3.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளது.
ஆனால் பூஜா ஹெக்டே, பாலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் பாப்புலர் என்பதால் அவரையே இறுதி செய்துவிட்டது படக்குழு. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து ‘தளபதி 65’ படத்திற்கும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத வேண்டும் என அனிருத் மற்றும் நெல்சன் கேட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அனேகமாக இந்தப்பாடலை விஜய் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பை துவங்குவது என படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் வெளியானது எனக்கே தெரியாது என படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கிதுரை இப்படத்தை தயாரித்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் மார்ச் 4-ம் தேதி வெளியானது. இந்த டீசர் வெளியானது எனக்கே தெரியாது நான் 45 நிமிடங்கள் கழித்தே டீசரை பார்த்தேன்.
இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய, நான் கட் செய்த டீசர் என்னிடம் இருக்கிறது.
டப்பிங், RR, DI பணிகள் முடியாமல் அப்படியே ராவாக உள்ளது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் பற்றி கேட்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
வெங்கட கிருஷ்ணாவிற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் முதல் படம். அறிமுக படத்திலேயே தயாரிப்பு தரப்போடு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பிடம் இருந்து கார் ஒன்றை பரிசாக பெற்றார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படாமல் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
ஓரே ஒரு சஸ்பென்ஸ், மொத்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கு கனக்கச்சிதமாக திரைக்கதை அமைத்து இருந்தார் தேசிங்கு பெரியசாமி.
சமீபத்தில் தான் இவர் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்தது வேறு யாரும் இல்லை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நிரஞ்சனி அகத்தியன் தான்.
படத்தில் நிரஞ்சனியின் ஜோடியாக ரக்ஷன் நடித்திருப்பார். அவர் காரணம் இல்லாமல் நடிக்கவில்லை. ரக்ஷனுக்கும், தேசிங்கிற்கும் ஓரளவு உருவ ஒற்றுமையுண்டு.
இதன் காரணமாகவே ரக்ஷனை நடிக்க வைத்தார். நிஜக்காதலை கொஞ்சம் படத்திலும் வைத்து அழகு பார்த்துள்ளார் தேசிங்கு பெரியசாமி.
தேசிங்கு பெரியசாமி மற்றும் நிரஞ்சனா அகத்தியன் இருவரும் தயாரிப்பாளர் மனதை கொள்ளையடித்ததால் இருவருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஆண்டோ ஜோசப்.
அடுத்த படத்திற்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டார் போல. சூப்பர் ஸ்டார் ரஜினியே ஒரு கதை ரெடி பண்ணச்சொல்லி போன் பண்ணியாச்சு. அப்புறம் என்ன? ஓரே ஜமாய் தான்!!
வசந்த பஞ்சமி என்றால் என்ன? சரஸ்வதி பூஜை ஏன் இன்று செய்ய வேண்டும்? Vasant Panchami saraswati puja 2021 muhurta and saraswathi pujai mantra.
வசந்த பஞ்சமி எனப்படுவது தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை பஞ்சமி திதியே வசந்த பஞ்சமி எனப்படுகிறது.
வசந்த பஞ்சமியானது வட மாநிலங்களில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதனை கொண்டாடுகின்றனர்.
வசந்த காலமே “அனைத்து காலங்களின் ராஜா” (King of all seasons) எனப்படுகிறது.
வடமாநிலங்களில் இந்த நாளை ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக கொண்டாடுகின்றனர். வசந்த பஞ்சமியிலிருந்து நாற்பதாம் நாள் ஹோலி பண்டிகை வரும்.
வசந்த பஞ்சமியன்று வானில் பட்டங்களை விட்டு விளையாடி வசந்த காலத்தை வடக்கே உள்ள நகரங்களில் வரவேற்கின்றனர்.
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, அசாம், வங்காளம், சிக்கிம், பஞ்சாப், மகாராட்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டிஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி கொண்டாடுகின்றனர்.
தென்னகத்தில் ஆந்திராவில் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். நேபாளம், மேற்கு வங்கம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
சரஸ்வதி ஜெயந்தி விழா
பிரம்ம பத்தினி என்று சொல்லப்படுகின்ற முப்பெரும் தேவியருள் ஒருவரான சரஸ்வதி தேவி அவதரித்த நாளே மகர மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி ஆகும். இதனை “வசந்த பஞ்சமி” மற்றும் “சரஸ்வதி ஜெயந்தி” விழாவாக கொண்டாடுகின்றனர்.
வாக் தேவி என்று சொல்லப்படுகின்ற சரஸ்வதி தேவி வாக்கு வன்மை, கல்வி, கலை, ஞானம், அறிவு, புத்தி கூர்மை, நல்லொழுக்கம், ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அதிதேவதை ஆவாள். இவளை வணங்குவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் வளரும்.
சரஸ்வதி தேவியின் தோற்றம்
சரஸ்வதி தூய்மையே வடிவானவள். வெந்நிற ஆடை உடுத்தி, வெள்ளை தாமரையில் அமர்திருப்பவள், கையில் ஞானத்தின் அம்சமாக வீணை, ஜெப மாலை, ஏட்டு சுவடி வைத்திருப்பவள். இவரின் வாகனம் அன்ன பறவை ஆகும்.
சதா சர்வ காலமும் பிரம்மா இவள் மீட்டும் வீணை ஓசையைக் கேட்டு கொண்ட தன்னுடைய ஸ்ருஷ்டி தொழிலை செய்து வருகிறார். பிரம்மா சரஸ்வதிக்கு தமது நாவில் இடம் அளித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
சரஸ்வதியின் வேறுப் பெயர்கள்
வாக்தேவி, பாரதி, கலை செல்வி, ஞானவாகினி, கலைமகள், பிராஹ்மி, காயத்ரி, சாரதா, பூரவாகினி, சாவித்ரி, சகலகலாவல்லி, இசை மடந்தை, பாமகள், நாமகள், பனுவலாட்டி, வாணி, வேதா, கலைவாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
சரஸ்வதி இந்து மதம் மட்டுமன்றி புத்தம் மற்றும் சமண மதங்களில் பூஜிக்கப்படுகிறார்.
புத்த சமயத்தில் மகா சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, வஜ்ர வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி என்று ஐந்து பெயர்களில் பூஜிக்கப்படுகிறார்.
சமண சமயத்தில் ஸ்ருதி தேவி, வாக் தேவி, ஜின வாணி, ஜின ஐஸ்வர்யா என்ற பெயர்களில் பூஜிக்கின்றனர்.
வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை
வட மாநிலங்களில் வசந்த பஞ்சமியானது சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகின்றனர். மஞ்சள் சரஸ்வதிக்கு உகந்த நிறமாக கருதி மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற சாதங்கள், மஞ்சள் நிற இனிப்பு வகைகளை சரஸ்வதிக்கு சமர்பித்து பூஜைகள் செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு அட்சராபியாசம், வித்யாரம்பம் முதலியவை இந்நாளில் செய்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
வீட்டில் சரஸ்வதி பூஜை
வசந்த பஞ்சமி நாளில் வீட்டில் அதிகாலை நீராடி, மஞ்சள் நிற ஆடை உடுத்தி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபட வேண்டும்.
குழந்தைகள் அனைவரும் புத்தகங்களை வைத்து பூஜித்து பின் வரும் ஸ்லோகத்தை சொல்லலாம்.
“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா”
“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள் இங்கு வாரா திடர்”
இந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். சரஸ்வதி அந்தாதி மற்றும் சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யலாம்.
2021-இல் வசந்த பஞ்சமி
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி அவதரித்த இந்த நல்ல நாளில் முடிந்தால் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம் சென்று அல்லது அருகில் உள்ள கோவில்களில் உள்ள சரஸ்வதியை சென்று வணங்கலாம். இயலாதவர்கள் வீட்டில் இருந்த படி சரஸ்வதி தேவியைப் பூஜிக்கலாம்.
கல்வி கற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரஸ்வதி தேவியை இத்தினத்தில் வழிப்பட்டு எல்லா வளமும், கல்வி செல்வமும் பெற்று வாழ்வில் உயர்வோம்.
ஒவ்வொரு முறையும் இந்த தினம் வரும் பொழுது இந்த காலாச்சாரம் எப்படி எந்த நாட்டில் தோன்றியது என்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம் Valentine’s Day History பற்றி விரிவாகப் இப்பதிவில் காண்போம்.
ஏன் பிப்ரவரி 14-யை வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கிறார்கள்? காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? யார் அந்த வேலண்டைன்? அவருக்கும் காதலர்களுக்கு என்ன சம்பந்தம்?
வேலண்டைன் என்பவர் யார்? (Valentine Priest)
கிபி 270-ஆம் ஆண்டு காலங்களில் வேலண்டைன் என்னும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் போர் வீரர்களுக்கு அவர்கள் விருப்படும் பெண்ணுடன் ரகசியத் திருமணம் செய்து வைத்தார்.
அப்பொழுது ஆட்சியில் இருந்த ரோம் மன்னர் இரண்டாம் கிளாடியஸ் பெண்களுடன் சேராமல் இருக்கும் வீரர்கள் அதிக சுறுசுறுப்பாக தெளிவாகவும் இருப்பதாக நினைத்து அனைவரையும் பிரித்து வைத்தாராம்.
இந்த நேரத்தில் பாதிரியார் வேலண்டைன் செய்த காரியம் தெரிந்து அவரை மரணதண்டனை கொடுத்து சிறையில் அடைத்தாராம் கிளாடியஸ் மன்னர்.
வேலண்டைன் தன்னை பார்க்க வந்த ஜெயிலர் மகளை விரும்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், “ஃப்ரம் யுவர் வேலண்டைன் (from your valentine)” என்று எழுதி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவே காதலர் தினத்திற்கு முதன்மை காரணமாக இருக்கலாம். இதனாலே இது வேலண்டைன் டே என்று அழைக்கிறார்கள்.
இது போன்று இன்னும் சில வரலாற்று நிகழ்வுகளும் காதலர் தின தோற்றதிற்கு சான்றாக அமைகிறது.
லூபேர்களியா (Lupercalia)
ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான லுபேர்களியா பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொண்டாடப்படும்.
வசந்த காலத்தை வரவேற்கவும் கல்யாணமான ஜோடிகள் தங்களுக்கு குழந்தை தரிக்கவும் கொண்டாடும் பண்டிகை இது. பிப்ரவரி அப்பொழுது ஒரு காதல் மாதமாகவே கடைபிடிக்கப்பட்டது.
ஐந்தாம் நூற்றாண்டில் போப் முதலாம் கேளாசியஸ் இதற்கு வேலண்டைன்ஸ் டே என்று பெயர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
Valentine’s Day Popular
1500-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கடிதங்களாகப் பகிரப்பட்டது. 1700-கள் அதற்கு மேல் வர்த்தக கவிதைகளுடன் பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் சந்தைக்கு வர ஆரம்பித்தன.
அதன் பிறகு அமெரிக்கா, யூரோப்பா மற்றும் ஆசியா என ஒவ்வொரு கண்டங்களாக இந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.
2012-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 200 மில்லியன் ரோஜாப் பூக்கள் விற்பனையானது என்று தெரிவித்துள்ளனர். 40 மில்லியன் ஹார்ட் ஷேப் சாக்லேட் பாக்ஸ்கள் விற்பனையாகியுள்ளது.
இப்பொழுது 2020-ல் அதிகம் டிஜிட்டல் மயமானதால் மாற்றங்கள் பல வந்திருக்கலாம். என்ன இருந்தாலும் காதலர் தினம் Valentine’s Day ஒரு கமர்ஷியல் விடுமுறை தான்.