Home சினிமா கோலிவுட் Dim Dip Trailer Audio Launch; டிம் டிப் படத்தின் டிரைலர், இசை வெளியீடு!

Dim Dip Trailer Audio Launch; டிம் டிப் படத்தின் டிரைலர், இசை வெளியீடு!

460
0
Dim Dip Trailer Audio Launch

Dim Dip Trailer Audio Launch டிம் டிப் டிரைலர் இசை வெளியீடு!

டிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் மோனிஷ்குமார் மற்றும் சஞ்சனா சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டிம் டிப்.

டிம் டிப் (Dim Dip) படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், தயாரிப்பாளர் மருத்துவர் தணிகா செல்லம், பெரைரா ஆகியோர் நடித்துள்ளனர்.

டிம் டிப் படத்தின் தயாரிப்பாளரான தணிகா செல்லம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவியும் ஒரு மருத்துவர். தனது இரு மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்து வருகிறார்.

Dim Dip Trailer Audio Launch

க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய டிம் டிப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று நடந்தது.

இதில், படக்குழுவினருடன் ஜாக்குவார் தங்கம் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் தணிகா செல்லம், தான் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதகாவும், ரஜினியைப் போன்று தனக்கும் ஆதரவு தரவேண்டும்.

தொடர்ந்து தமிழில் அதிக படங்களை எடுக்க ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரசிகர்களை கவர்ச்சிப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

Dim Dip Promo Song

டிம் டிப் படத்தின் புரோமோ சாங் டிரெண்டாகி வருகிறது. இறுதியில், ஜெய்ஹிந்த் டிம் டிப், ஜெய்ஹிந்த் டிம் டிம், ஜெய்ஹிந்த் டிம் டிப் என்று நகைச்சுவையும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சஞ்சனா சிங் பேசினார். படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு மனைவியாக நடித்துள்ள நிலையில், விழாவில் பேசும் போது பாக்யராஜ்க்கு மனைவியாக நடித்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

இதைக்கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாக்யராஜ் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றார். பிறகு தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், கர்நாடகாவில் தமிழர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள். தமிழர்களை வாழவிடுங்கள்.

தமிழ் பேனர்களை கிழிக்காதீர்கள். தண்ணீர் கொடுப்பதற்கு அறிவுறுத்துங்கள் என்று தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அடுத்தடுத்து படக்குழுவினர் பலரும் பேசினர். இறுதியாக சிறப்பு விருந்தினர், பாக்யராஜ் பேசினார்.

விழா மேடையின் போது நடிகரின் பெற்றோரையும் அழைத்து சிறப்பு செய்வது என்பது பெருமையான விஷயம். அதனை டிம் டிப் படக்குழுவினர் செய்துள்ளனர்.

தயாரிப்பாளர் நகைச்சுவை உணர்வோடு பேசினார். வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடுதான். உங்களையும் வாழ வைக்கும்.

காமெடி நடிகர் சார்லிக்கு இன்று பிறந்த நாள்

நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், நான் ஒரு உண்மையைச் சொகிறேன். மைசூரில் எனது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பள்ளி விடுமுறை.

எனது மனைவி பூர்ணிமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு மைசூருக்கு வருவதாக கூறினார்.

நானும் சரி என்று கூறியதைத் தொடந்து அவரும், குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே கலவரம் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

எனது கார் டிரைவர் அவர்களை அழைப்பதற்கு அங்கு சென்றிருந்தார். ஆனால், தமிழ்நாடு வாகனம் என்பதால், வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், அதையெல்லாம் கடந்து ஒரு வழியாக எங்கெங்கோ சென்று அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.

அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராசைய்யா என்பவர் எனது மனைவி, குழந்தைகளைக் கண்டதும், அவரது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார்.

முதலில் எங்களை யார் என்று கேட்காமல் தான் இடம் கொடுத்தார். அதன் பிறகு பாக்யராஜ் மனைவி என்று தெரிந்து கொண்டார்.

அவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் பெயர் ராசைய்யா. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் எனது மனைவியையும், குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்துவந்தனர்.

மனிதநேயமும், மனிதாபிமானமும் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் கலவரம் இருக்காது என்று குறிப்பிட்டார்.

இறுதியில் படத்தைப் பற்றி பேசுகையில், டிம் டிப் (Dim Dip Trailer Audio Launch) படத்தில் சஞ்சனா சிங் மற்றும் மோனிஷ் இருவரும் வரும் பெட்ரூம் பாடல் காட்சியில், இருவருமே அப்படியே அமைதியாகவே இருக்கிறார்கள்.

ஏன், என்று தெரியவில்லை. அவர்களிடம் கெமிஸ்டரி வரவில்லை. அந்த நேரத்தில் அப்படி இப்படி என்று இருந்திருக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஹீரோதான் கிளாமர், கவர்ச்சி வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Valimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு மனைவியாக நடித்த சஞ்சனா சிங், ஏன் ஹீரோவுடன் டான்ஸ் ஆடுகிறார். ஒன்னுமே புரியவில்லையே என்றார். அதான் சார் த்ரில்லர் என்றனர்.

இறுதியில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு கு கார்த்தில் பாடல் வரிகள் அமைத்துள்ளார். ஹமரா சிவி, ஆதிப் மற்றும் கு கார்த்திக் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்தே படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்சி நீரஜா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தணிகாச்சலம் (தணிகா செல்லம்) படத்தை தயாரித்துள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous article500 கோடி செலவில் திருமணம்; பெங்களூர் அமைச்சரின் ஆடம்பர ஆட்டம்
Next articleபெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்; நாசாவின் மார்ஸ் 2020ன் புதிய பெயர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here