500 கோடி செலவில் திருமணம்; பெங்களூர் அமைச்சரின் ஆடம்பர ஆட்டம்
பெங்களூருவில் இருக்கும் அரண்மனை மைதானாத்தில் பெங்களூர் அமைச்சர் ராமுவின் மகளுக்கு 9 நாட்களாக மொத்தம் 500 கோடி செல்வில் திருமணம் நடைபெற்றது.
பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய இந்த திருமணம் 9 நாட்களாக ஆடலும் பாடலுமாக மொத்தம் 500 கோடி செலவில் திருமணத்தை முடித்தனர்.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சரும் பெல்லாரி ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பருமான ராமுலுவின் மகள் ரஷ்மிகாவுக்கும், பெல்லாரி சுரங்க அதிபர் ரவிகுமாரின் மகன் லலித் சஞ்சீவ் ரெட்டிக்கும் சில மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்கு வந்த முக்கிய அரசியல் புள்ளிகள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அசோகா, சுரேஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.