பேட்ட படத்தின் பேனர்கள் கிழிப்பு: அஜித் ரசிகர்கள் வெறிச்செயல்
விஸ்வாசம், பேட்ட இரு திரைப்படங்களும் இன்று வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதியே படம் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் டீசர் வெளியீடு முதலே மோதலைத் துவங்கிவிட்டனர்.
பேட்ட படத்தின் டீசரில், ரஜினியின் வசனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே விஸ்வாசம் டீசர் வெளியிடப்பட்டது.
தியேட்டர்களைப் பிடிப்பதில் போட்டி, ரசிகர் காட்சி திரையிடுவதில் போட்டி என அடிதடி ரகளையுடனேயே இரு படங்களும் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடில் உள்ள ரோகினி திரையரங்கில் விஸ்வாசம் படம் அதிகாலைக்காட்சி திரையிடப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் பேட்டபடத்தின் பேனர்களைக் கிழித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் இரவு 2 மணி முதலே காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றது. இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பிரபல திரையரங்கில் கண்டுகழித்துள்ளார்.
தனுஷ், ரஜினியின் பாபா முத்திரையைக் காட்டியபடி பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பேட்ட படத்திற்கு ரசிகர்கள் அளித்த உற்சாகமான வரவேற்பை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.