Home சினிமா கோலிவுட் சூர்யாவின் பிறந்தநாளை போஸ்டரை வெளியிடும் சுரேஷ் ரெய்னா!

சூர்யாவின் பிறந்தநாளை போஸ்டரை வெளியிடும் சுரேஷ் ரெய்னா!

469
0
Suresh Raina Releasing Suriya Birthday Poster

Suriya Birthday Poster; சூர்யாவின் பிறந்தநாளை போஸ்டரை வெளியிடும் சுரேஷ் ரெய்னா! நாளை 23 ஆம் தேதி சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது பிறந்தநாள் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட இருக்கிறார்.

சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட புதிய போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெளியிடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நாளை 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் காமென் டிபி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நாளை அவரது பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

மேலும், #HappyBirthdaySuriya என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இந்த டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SooraraiPottru டுவிட்டர் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுகத்தில் கேக் தடவி பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு: வைரல் வீடியோ!
Next articleநிதின் – ஷாலினி நிச்சயதார்த்தம்: வரும் 26ல் கல்யாணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here