#KKRvsCSK இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரரான லின் சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கினார்.
அவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 2 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராணா சற்று கை கொடுத்தார். பத்து ஓவர் முடிவில் 79 ரன்கள் எடுத்து கொல்கத்தா சற்று மந்தமான ஸ்கோரையே எட்டியது.
பதினோராவது ஓவரை வீசிய தாஹிர் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றினார். திடீரென லின் விஸ்வரூபம் எடுக்க ஜடேஜாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்கவிட்டார்.
மீண்டும் பௌலிங் செய்த தாஹிர் லின் 82, உத்தப்பா 0, ரஸல் 10 என கொல்கத்தாவின் முக்கிய விக்கெட்டுகளை மளமளவென சரித்தார்.
இதனால் ரன் அடிக்க வேண்டிய முக்கிய நேரத்தில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
தாகூரின் சூழலில் சிக்கி கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சின்னாபின்னமாகினர். சீக்கிரமே அவுட் ஆகியதால் பேட்டை ஓங்கி அடித்து கொலைவெறியுடன் வெளியேறினார் ரஸல்.
நீண்ட நேரம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய தினேஷ் கார்த்திக் 18, கில் 15 ரன்களில் அவுட் ஆகினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொலைவெறியுடன் பெவிலியன் திரும்பிய ரஸல் பவுலிங்கில் அசத்துவாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ரஸலின் முதல் ஓவரை டுபிளசிஸ் காட்டு காட்டு எனக் காட்டினார். தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் விரட்டினர்.
அந்த ஓவரிலேயே கால் சுளுக்கியது. இதுதான் சாக்கு என ரஸல் அதோடு மைதானத்தைவிட்டு ஓடிவிட்டார்.
எல்லா அணியையும் பயமுறுத்திய ரஸலின் வாலை ஓட்ட நறுக்கி அனுப்பிவிட்டனர் சிஎஸ்கே அணியினர்.
இந்தப் போட்டியிலும் வாட்சன் ஓப்பனிங் பேட்ஸ்மேன். வழக்கம் போலவே அவுட். இருப்பினும் சுரேஷ் ரெய்னாவின் எழுச்சி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்துவிட்டது.
வழக்கம் போல 10 ஓவர்களிலேயே ஆட்டத்தை தோனி கையில் கொடுத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டிவிட்டனர்.
சுனில் நரேன் ஓவரில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தோனி எதிர்பாராத விதமாக எல்பிடபுள்யூ ஆகிவிட்டார்.
அவ்வளவுதான் மேட்ச் அம்பேல் என நினைத்த ரசிகர்களுக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. ஜடேஜா ஏதோ ஒரு பக்கம் சுற்ற பந்து தானாக பேட்டில் பட்டு பவுண்டரியில் விழுந்த வண்ணம் இருந்தது.
கொல்கத்தா பவுலர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஷாருக்கான் மூஞ்சி தொங்கிப்போச்சு. ரெய்னா ஒரு பக்கம் அதிரடி காட்ட சத்தமே இல்லாமல் யுத்தமே இல்லாமல் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டது.
19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா 58, ஜடேஜா 31 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.