திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கோவிலில் பூ விற்கும் 26 வயது நபர் வியாழக்கிழமை 7 வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை எஸ்.பி பி.வி.அருண் சக்திகுமார் தெரிவிக்கையில், குற்றவாளி இராஜாவால் சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளார் மற்றும் இதனை இராஜா ஒப்பு கொண்டுள்ளான் என கூறினார்.
அச்சிறுமிக்கு இனிப்புகள் வழங்கிவந்துள்ள குற்றவாளி இராஜா
கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி அவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருக்கிறார் மற்றும் காளி கோயில் இருக்கும் இடத்தில் அடிக்கடி விளையாடி வந்துள்ளார். குற்றம் சாட்டபட்ட நபர் கோயிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அச்சிறுமிக்கு இனிப்புகள் வழங்கி வந்துள்ளான்.
இந்நிலையில் செவ்வாய் கிழமை அவர் குடித்திருந்த நிலையில் வந்து அந்த பெண் குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து, கொன்று குளத்திற்கு அருகில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல் துறையில் புகார் தெரிவித்த பெற்றோர்
இந்நிலையில் செவ்வாய் மதியம் முதல் அப்பெண்குழந்தையை காணாததால் குழந்தையின் பெற்றோர் எம்பை காவல் துறையில் புகார் தெரிவித்தனர். காவல் துறை தேடுதலுக்கு பின்னர் புதர்களுக்கு இடையில் காயங்களுடன் அக்குழந்தையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன அன்று குழந்தை இராஜாவுடன் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இராஜாவை கைது செய்து விசாரித்த பொழுது அவன் குற்றங்களை ஒப்புகொண்டதாக காவல் துறை எஸ்.பி. தெரிவித்தார்.
குற்றவாளி இராஜா மீது போஸ்கோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
கைது செய்யப்பட்ட இராஜா இ.பீ.கோ பிரிவுகள் 376,302,364 மற்றும் 201 இன் படி வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார் மற்றும் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம் போஸ்கோ(POSCO) சட்டமும் குற்றவாளி மீது பாய்ந்தது.
அரசியல் தலைவர்கள் சிறுமி கொலை சம்பவம் குறித்து கண்டனம்
சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.