Home நிகழ்வுகள் இந்தியா Phethai cyclone – பெத்தாய் புயல்: ஆந்திரா ஸ்தம்பித்தது!

Phethai cyclone – பெத்தாய் புயல்: ஆந்திரா ஸ்தம்பித்தது!

663
0
phethai cyclone piety cyclone

Phethai cyclone: பெத்தாய் புயலால் ஆந்திரா ஸ்தம்பித்தது!

ஆந்திர மாநிலத்தில், பெத்தாய் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 ரயில்களுக்குமேல் ரத்து செய்யப்பட்டது. கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை.

இதனால் வெளியூர் செல்லமுடியாமல் ரயில் நிலையங்களிலேயே முடங்கிப்போயினர். பல இடங்களில் சாலைவழிப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

கிழக்கு கோதவரி மாவட்டத்தில், கட்ரெனிகோன என்ற இடத்திற்கு அருகில் புயல் கரையை கடந்தது. ஆனால், இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மழைப்பொழிவும் குறைந்த அளவே பெய்து வருகின்றது.

இமயமலைத்தொடர் காற்றின் ஈர்ப்பின் காரணமாக, புயல் சற்று வலுவிழந்த நிலையிலேயே கரையைக் கடப்பதால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை அறிக்கைகள் கூறியுள்ளது.

தமிழக கடற்கரையோரம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகுகள், புயல் காற்றின் வேகத்தில், பலத்த அலை ஏற்பட்டதால், ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.

தற்பொழுது பெத்தாய் புயல், கல்கத்தா மார்க்கமாக பர்மா வரை நீண்டு சென்று கொண்டிருக்கிறது.

Previous articleஷாடன் ப்ரைவ்டா: உங்களுக்கும் இந்த நோய் உண்டு! 
Next articleஆம்பிடெக்ஸ்டிரஸ்: இவர்களைப் பற்றித் தெரியுமா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here